To search this blog
Tuesday, March 24, 2026
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் ~ Triplicane
Sri Vayalali Manalan entering Thiruvaali – 2024
Sri Vayalali Manalan entering
Thiruvaali – 2024
https://youtu.be/aNTRc9IUnhI
Allikkeni arulicheyal goshti at Thavana uthsava bungalow.
Allikkeni arulicheyal goshti at Thavana uthsava bungalow.
Can you imagine how old this pic could be ??
Monday, March 23, 2026
Nachiyar thirukolam ~ மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை !!
மிதிலையில்
வளர்ந்த சீதாபிராட்டி மிக மிக அழகானவர். ‘மதனற்கும்
எழுத ஒண்ணாச் சீதை’ என்கிறார் கம்பர். ஓவியக்கலையில்
மிக தேர்ச்சி பெற்ற மன்மதனால்கூடச் சீதையின்
அழகை ஓவியமாகத் தீட்டமுடியாதாம்.
ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து,
‘அவயவம் அமைக்கும் தன்மை யாது?’
எனத் திகைக்கும் அல்லால்,
மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதையைத் தருதலாலே,
திருமகள் இருந்த செய்ய போது எனப் பொலிந்து தோன்றும்,
பொன் மதில், மிதிலை புக்கார்
கம்ப நாட்டாழ்வார் வரிகளில் : மன்மதன் உலகத்தவர் அனைவரது அழகையும் வரையறுத்து உணர்ந்தவன்; ஆண் பெண்களாகிய மக்களின் மனத்திலே தோன்றியுள்ளவன்: தனக்கு வடிவம் இல்லாமல் இருந்தும் ஐந்து அம்புகளைக் கொண்டு மூவுலகையும் தன்வயப்படுத்தும் திறமை பெற்றுள்ளான் இத்தகைய இயல்புடைய அம்மன்மதன் எல்லையில்லாத பேரழகு உடைய சீதையின் உருவத்தைத் தானே சித்திரத்தில் அமைக்கக் கருதினான்; அதற்கு வண்ணப் பொருள் அமுதமேயெனத் தீர்மானித்து. அந்த அமுதத்திலே எழுதுகோலைத் தோய்த்து எடுத்து எழுதத் தொடங்கினாலும் அவளது அழகை முழுமையாக எழுத முடியாமல் திகைப்பானேயல்லாமல் அச் சீதையின் அழகை அவனால் சரியாக எழுத முடியாதாம்.
நிற்க
! நீங்கள் இங்கே செவிப்பது சீதாபிராட்டி அல்ல
! வடிவழகனான ஸ்ரீ ராமபிரான், திருவல்லிக்கேணியில்
இன்று நாச்சியார் திருக்கோலத்தில் அருள் பாலித்த அழகு இங்கே
The God of Love Manmatha (cupid) is known to be the Best known Artist ever in the world for Paintings and creating sculptures etc., Kambar says that even Manmatha cannot properly bring out the beauty of Seetha Piratti.
Here it is not Sita but Sree Ramapiran himself – Nachiyar
thirukkola avasaram at Thiruvallikkeni on day 5 of Sri Rama Navami Uthsavam
today
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
23.3.2026
Sri Prahlada of Sri Vyasaraja Mutt on kuthirai vahanam .
Triplicane is a seat of religions.....here is
Sri Prahlada of Sri Vyasaraja Mutt on kuthirai
vahanam .
Sri R Sanjeevi is the priest !
Thiruvallikkeni Thiruther Yali bommaigal !
யாளி எனப்படும் தொன்ம உயிரினம்.
இதற்கு, சிங்கமுகமும்,
யானையின் துதிக்கையும் உண்டு.
Yali is an oft repeated motif in Indian art,
widely used in south Indian sculpture. It has the face of the Lion and teh trump of the Elephant and considered more powerful than both.
Yali
bommais on Thiruvallikkeni thiruther getting readied !!!
gurutara ravi vamsha Rama! kOdaNDa Rama !!
RAmA dasharatha RAmA nija satya kAmA namO namO kAkutsa RAmA
sharadi bandhana RAmA pAvana rakSaka rAmA
gurutara ravi vamsha Rama! kOdaNDa Rama !!
Tallapaka
Annamacharya keerthana
Sree Ramachandra Murthi @ Thiruvallikkeni divyadesam
Sunday, March 22, 2026
Sri Ramar Garuda vahanam - gopura vasal darsanam @ Thiruvallikkeni
Sri
Ramar Garuda vahanam - gopura vasal darsanam @ Thiruvallikkeni
: https://youtu.be/jJ_e1PatPWg
Saturday, March 21, 2026
Sree Ramar Garuda Sevai 2026 ~ thirukkudaigal
Thiruvallikkeni
Sri Ramapiran Garuda sevai 2026
Thirukudaigal
kainkaryabaragal
எம்பெருமான்
திருவீதி புறப்பாட்டிற்கு அழகு சேர்ப்பன :
அழகான சாற்றுப்படி, மணம் கமழும் பூமாலைகள்,
திருவாபரணங்கள், வஸ்திரங்கள், வாகனங்கள், திருக்குடைகள். .. ... ...
*வாகன பட்டறை
மீது திருக்குடைகளை ஏற்றி இறக்குதல் மிக மிக கடினமான கைங்கர்யம்*.
இன்று 21.3.2026 காலை திருவல்லிக்கேணி ஸ்ரீராமபிரான் கருட சேவை - திருக்குடைகள் கைங்கர்யம் செய்யும் இளைஞர்கள். : https://youtube.com/shorts/J-8k_qU3rWw
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.3.2026
Friday, March 20, 2026
Sree Rama Navami day 2 2026 - பணி அரங்கப் பெரும் பாயற் பரஞ்சுடர்
'பிணி அரங்க, வினை அகல, பெருங் காலம் தவம் பேணி, -
மணி
அரங்கு நெடு முடியாய்!-மலர் அயனே வழிபட்டு,
பணி
அரங்கப் பெரும் பாயற் பரஞ் சுடரை யாம் காண,
அணி
அரங்கம் தந்தானை அறியாதார், அறியாதார்!
கம்பராமாயணம் : பாலகாண்டம்
இந்தப் பாடல், விசுவாமித்திர முனிவர் சனக மன்னனிடம் இராம இலக்குவர்களின் சிறப்பைக் கூறுவதாகும். நோய்கள், வினைகள் நீங்கப் பலகாலம் தவமிருந்து, திருவரங்கச் செல்வனை வணங்கி, அந்தப் பரஞ்சோதியை தரிசித்த புண்ணிய சீலர்களை அறியாதவர்கள், உண்மையான ஞானம் இல்லாதவர்கள் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.
நவரத்தினங்கள்
பதிக்கப்பட்ட அழகிய முடியை உடைய சனக மன்னனே! நோய்கள் அகலவும், தீவினைகள் ஒழியவும்,
நீண்ட காலம் தவம் புரிந்து, மலர் மீது வீற்றிருக்கும் பிரம்மனால் வழிபடப்பட்டு, ஆதிசேஷன்
என்னும் பாற்கடலில் பாயும் பரஞ்சோதியாகிய ஸ்ரீரங்கநாதனை நாம் தரிசிக்கும்படி, இந்த
அழகிய ஸ்ரீரங்கத்தை நமக்குத் தந்தவனை (இராமனை) அறியாதவர்கள், உண்மையில் அறியாதவர்களே
ஆவர்.
Sree Ramachandra murthi accompanied by Seethapiratti and Ilayavan
Lakshmanan coming out of the main entrance at Thiruvallikkeni Sri Parthasarathi
Swami thirukkovil on day 2 of Sree Rama Navami Uthsavam 2026
adiyen Srinivasadhasan
Raja Mannargudi Sengamalam 2025
அழகி
நீ பேரழகி ! அழகான கண்ணழகி
அம்மா
நீ காலழகி; ஆத்தா நீ காதழகி;
ஆர்ப்பரிக்கும்
சிகையழகி -
Ramp walk
! Mannargudi Azhagi Sengamalam (don’t miss her hair-style)
: https://youtube.com/shorts/DYnH9iz3MDg
Thursday, March 19, 2026
Ugadi Subhakankshalu 2026 ఉగాది శుభాకాంక్షలు : Sree Rama Navami Uthsavam 2026
ஸ்ரீ ராம நவமி உத்சவம் - Ugadi Subhakankshalu 2026
ఉగాది శుభాకాంక్షలు
“Ugadi
Subhakankshalu” - Today (19.3.2026) is Ugadi Panchanga
Sravanam – birth of Telugu new year when the panchangam is
read in Temples . .. .. today is also day 1 of
Sree Rama Navami Uthsavam at Thiruvallikkeni &
other divyadesangal.
Yugādi, is the New Year's
Day for the people of the Deccan region of India. The name Yugadi or Ugadi is
derived from the Sanskrit words yuga (age) and ādi (beginning): "the
beginning of a new age". In Temples on the occasion of Ugadi ‘panchangam’
will be read. It is also celebrated as Gudi Padwa, Ugadi and Cheti
Chand inv arious places. Gudi Padwa is celebrated by Marathi speaking
people; Ugadi is celebrated in Karnataka and Andhra Pradesh; . Cheti Chand is
the festival of the Sindhi community. In Maharashtra, Gudi Padwa has the
legend that it on this day Lord Rama returned victorious to Ayodhya.
Ugadi 2026, celebrated today,
marks the beginning of the Telugu Shaka Samvat 1948 in AP and Telangana.
Falling on a Thursday, it is considered exceptionally auspicious, signifying growth
and wisdom, often highlighted by special Panchanga Sravanam (almanac reading),
Ugadi Pachadi preparation, house decorations, and the beginning of new
ventures. The upcoming Telugu New Year
starting in 2026 is named Sri Parabhava Nama Samvatsaram. Parabhava is the 40th year. It will officially
begin on the day of Ugadi, which falls on Thursday, 19 March 2026; the year
that passed by was Sri Vishwavasu Nama
Samvatsaram.
In Andhra, Ugadi pachhadi
is a delicacy made on the occasion and shared with all. It is a specific
mixture of six tastes – with neem buds; jaggery; green chilli/pepper; salt;
tamarind; unripened mango being its ingredients. Sweet, sour, salty, pungent, bitter, and
spicy — reminiscent of the six flavours of Ugadi Pachadi, which symbolise the
diverse experiences of life.
At Thiruvallikkeni divaydesam, from
today on, it is 9 days of Sree Ramanavami Uthsavam. The Thiruvavathara
Mahothsvam of Lord Rama is Sree Ramanavami.
மன்னுபுகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்த சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீ ராமபிரானின் திருவவதார மகோத்சவம் ஸ்ரீராம நவமி. அனைத்து உத்தம குணங்களும் நிரம்பிய அற்புத யுக புருஷன் ஸ்ரீராமபிரான். “இராமன்” என்ற திருநாமத்திற்கு, “ஸ்வேச்சயா ரமணீய வபுர்வஹன்வா தாசரதி ராம” என்று சங்கரர் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையில் (394-வது நாமத்திற்கு) விளக்கியுள்ளார். இதன் பொருள், “மனதைக் கவரும் திவ்யமான ரூபத்தைத் தன்னிச்சையாலே எடுக்கவல்ல தசரத புத்திரனாகிய இராமன்” என்பதாகும். “இந்த புண்ணிய பாரத தேசத்தில் இமயம் முதல் குமரி முதல் எல்லா பிராந்தியங்களில், மக்கள் அனைவரும் “மரியாதா புருஷோத்தம் ராம்” என்று இராகவனை விரும்பி அழைப்பர். இராகவன் தருமத்தின் வழியே நடந்து தருமம் காத்தவன். அந்த இராமபிரான் சத்யம் காக்க இப்புவியில் அவதரித்தான்.
ஒரு காலத்தில், தீவுகளுடன்
கூடிய மொத்த பூமியைப் பிரஜாபதிகள் {குடிமுதல்வர்கள்} தொடங்கி பல ஜயசீலர்களும் {வெற்றியாளர்களும்}
ஆண்டனர். சகரன் என்ற பெயரைக் கொண்டவன் அறுபதாயிரம் புத்ரர்கள் சூழப் போரிடப்
புறப்பட்டு பெருங்கடலை ஆழமாக்கினான். இத்தகைய மஹாத்மாக்கள் தோன்றியதும்,
இக்ஷ்வாகு என்ற பெயரைக் கொண்டதுமான ராஜவம்சத்திலேயே உயர்வாக மதிக்கப்படும் இந்த ராமாயணம்
தோன்றியது. தனதானியங்களில் செழித்ததும், மகிழ்ச்சி நிறைந்ததும், பெரியதுமான ஒரு
மஹாஜனபதம், சரயு தீரத்தின் அருகில் கோசலம் என்ற பெயரில் அமைந்திருந்த அயோத்தி மாநகரம்,
இது மானவேந்திரனான மனுவால் கட்டப்பட்டது. புகழும் செழிப்பும்
நிறைந்ததும், நன்கு வகுக்கப்பட்ட மஹாபதங்களை {நெடுஞ்சாலைகளைக்} கொண்டதுமான அந்த மஹாபுரி,
பனிரெண்டு யோஜனைகள் நீளமும், மூன்று யோஜனைகள் அகலமும் கொண்டதாக இருந்ததாம்.
அந்த புண்ணிய பூமியில்
வசித்தவர்கள் - அனைவரும் தர்மசீலர்களாகவும், நல்ல தற்கட்டுப்பாட்டையும், நல்ல
பண்பையும், நல்ல ஒழுக்கத்தையும் கொண்டவர்களாகவும், தன்னிறைவு அடைந்தவர்களாகவும், மஹரிஷிகளைப்
போன்றவர்களாகவும், மாசற்றவர்களாகவும் இருந்தனர். அங்கே முழு நிறைவின்றி
உணவை உண்பவனும், ஈகை குணம் இல்லாதவனும், அங்க ஆபரணங்களாலும், தோள் வளைகளாலும் அலங்கரிக்கப்படாதவனும்,
இதயமற்றவனுமான எவனும் அங்கே காணப்படவில்லை. வேள்வி நெருப்புகளை மூட்டாதவனும்,
யஜ்ஞங்களைச் செய்யாதவனும், அற்ப வாழ்வு வாழ்பவனும், கள்வனும், முறையற்ற கலவியில் பிறந்தவனுமான
எவனும் அந்த அயோத்தியில் இல்லவே இல்லை. வேதம் பயிலும் தியான சீலர்க
கோட்பாட்டுடன் கூடிய மேன்மக்களும் தங்கள் செயல்களை வழுவறச் செய்து வந்தார்கள்.
அங்கே நாத்திகர்களோ, பொய்யர்களோ, சாத்திரங்கேளாதவர்களோ, பொறாமையுள்ளவர்களோ, சக்தியற்றவர்களோ,
கல்வி கல்லாதவர்களோ ஒருவரும் காணப்படவில்லை.
அந்த தேசத்தை ஆண்ட தசரத
சக்கரவர்த்தி, பல யாகங்களை சிறப்புற நடத்திட, வேள்வி நெருப்பில் இருந்து
ஒப்பற்ற பிரகாசத்துடனும், மஹாவீரியத்துடனும், மஹாபலத்துடனும் கூடிய மஹாபூதமானவன் {யஜ்ஞ
புருஷன்} வெளிப்பட்டு சூரியனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டதும், தழலின் நாவுகளைப்
போலப் பிரகாசிப்பதும், புடம்போட்ட பொன்னாலானதும், வெள்ளி மூடியால் மறைக்கப்பட்டதும்,
திவ்ய பாயஸத்தால் நிறைந்ததும், மாயாமயமானதுமான ஒரு பாத்திரத்தைத் மன்னனுக்கு
அருளினார். மஹீபதியின் உத்தம ஸ்திரீகள், அந்த உத்தம பாயஸத்தைப் பருகி,
விரைவில் கர்ப்பந்தரித்தனர். [இராமாயண
காதை - திரு அருட்செல்வப்பேரரசன் எழுத்துகளில் இருந்து]
வால்மீகி முனிவர்,
நாரதரிடம், மிக மிக சிறந்த நல்லொழுக்கமுடைய மனிதன் உலகில் உண்மையில் வாழ்கிறாரா
என்ற கேள்வியுடன் பால காண்டம் துவங்குகிறது. நாரதர், இராமனின் குணநலன்கள், உடல் அமைப்புகள்,
இராமனின் கதையைச் சுருக்கமாக வால்மீகி முனிவருக்கு விளக்குகிறார். பின்னர் இராமகாதையை எழுதிய வால்மீகி முனிவர், தனது ஆசிரமத்தில் வாழும்
சீதையின் பிள்ளைகளான லவன் மற்றும் குசனுக்கு எடுத்துரைக்கிறார். தமிழ்
இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பிய நூல்களுள் ஒன்று கம்ப ராமாயணம்.
கம்பர், அடிப்படையில் அறமும், சமயமும் காப்பியத்தின் பொருளாக கொண்டு இந்நூலை
அமைந்துள்ளார். மனிதர் யாவருக்கும் பயன் தரும் ஒழுக்க முறைகளையும் பண்பாட்டினையும்
குறிக்கோளினையும் ஆட்சிச் சிறப்பினையும் விளக்கும் அருமையான இலக்கியமாகத் திகழும் சிறப்புடையது
கம்பராமாயணமாகும்.
Here
are some photos of Sree Ramapiran purappadu during Sree Rama Navami Uthsavam of
2025
adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
Wednesday, March 18, 2026
Thiruvallikkeni arulicheyal goshti ~ Panguni Amavasai purappadu
Today 18.3.2026 is Panguni Amavasai – on top is photo of Thiruvallikkeni arulicheyal goshti taken today at North Tank Sq St – near the Hanuman temple inside Kairavini pushkarini.
Below collaged is a pic taken on Panguni Amavasai 2024 with goshti
at almost same place [the angle and proximity of camera are different though !]
Tuesday, March 17, 2026
Thiruputkuzhi Hanumantha vahanam purappadu
Thiruputkuzhi Sri Vijayaraghava Perumal
Brahmothsavam 2019 – Hanumantha vahanam
Periyazhvar thirumozhi goshti
https://youtube.com/shorts/1hgmPl8Bndw
Monday, March 16, 2026
new Prapannapakai for Swami Doddachar @ Thirukadigai divyadesam
14.3.2026
was Masi Uthiradam – the birth anniversary of Chandamarutham Swami
Doddayacharyar.
ஸ்வாமி
முதலியாண்டான் திருவம்சத்தில் கந்தாடைநாயனுக்கு
மாசி உத்திராட நக்ஷத்திரத்தில் தேவராஜகுரு
என்கிற ஸ்வாமி தொட்டையாச்சார்யார் திருவவதாரம் செய்தார். நமது சம்பிரதாயத்தின் தூண்
ஸ்ரீ உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் ஸ்வாமி
(ஸ்ரீ மஹாசார்யர்) 1543ம் ஆண்டு அவதரித்தார். இவர் திருவேங்கடவரின் அம்சமாக அவதரித்ததால்,
“ஸ்ரீநிவாஸ மஹாகுரு””மஹார்யர்” என்று போற்றப்படுகிறார்.
தொட்டாச்சார்யார்
ஸ்வாமி பஞ்ச விஜய கிரந்தங்கள் பண்ணி அருளினார். சோளஸிம்ஹபுரம் எனும் திருக்கடிகை; தில்லை
திருச்சித்திரகூடம் போன்ற பல திவ்யதேசங்களில் கைங்கர்யம் செய்து, நிர்மாண புணருத்தாரணங்கள்
செய்வித்தார்.
நம்
ஸ்வாமியின்
தனியன் :
வாதூல ஸ்ரீனிவாஸார்ய தனயம் வினயாதிகம்
ப்ரஜ்ஞாநிதிம் ப்ரபத்யேஹம் ஸ்ரீனிவாஸ மஹாகுரும்
!!
திருக்கடிகை எனும் சோளஸிம்ஹபுரம் [சோளிங்கர்] திவ்யதேசத்தில் நம் ஆச்சார்யருக்கு சந்நிதியும் அர்ச்சை திருமேனியும் அழகுற அமைந்துள்ளன.
இவ்வருஷ திருநட்சத்திரத்தன்று, ஸ்ரீ உ. வே. கோயில் கந்தாடை சண்ட மாருதம் தொட்டயாச்சார்ய ஸ்வாமி திருமாளிகை , [ஸ்ரீ உ. வே. கோ க ச பெரியப்பங்கார் ஸ்வாமி திருமாளிகை] சோளஸிம்ஹபுரம் – சார்பாக ஸ்ரீ உ. வே. கோயில் கந்தாடை சண்ட மாருதம் ஸ்ரீ உ. வே. கோ.க.ச யோகந்ருஸிம்ஹ ஸ்வாமி (வர்த்தமான ஸ்வாமி) மஹார்யருக்கு புதிய பிரபன்னபாகை, சமர்ப்பித்தார். புதிய திருவாபரணத்துடன் நமது ஆச்சார்யரின் புகைப்படம் இங்கே.
நம் ஸ்வாமியின் வாழி திருநாமம் இங்கே :
மாசி உத்திராடத்தில் வந்துதித்தான் வாழியே
மாசில் புகழ் பெரியப்பன் மகிழ்ந்த மைந்தன் வாழியே
தேசெங்கும் பரவாதிசயம் படைத்தான் வாழியே
தரிசனத்தை உத்தரித்து தெளிவித்தான் வாழியே
ஆசில் எதிராசர் நிகரான குரு வாழியே
ஐந்து விஷயங்களும் அருளினான் வாழியே
தூசில் வாதுல குலம் துலங்க
வந்தோன் வாழியே
தூய மகாதேசிகனார் துணைப்பதங்கள்
வாழியே !
அடியேன்
ஸ்ரீனிவாசதாசன்,
ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
Sholinghur Hill Temples View
Cholasimhapuram aka Sholinghur is a beautiful divyadesam – there is Periya Malai, Chinna malai and divyadesam temple at the foothills in the town and .. .. one at Thakkankulam.
The periya malai (big hill) is about 450 feet high – a little more than 1300 steps where Moolavar Sri Yoga Narasimar is seated in a yogaasana with Salagrama Hara (necklace) and Chaturbuja (four arms). He holds Shanku (conch) and Chakram (discus) on two arms. The other two arms signify a meditative posture.
Chinnamalai one has to climb around 405 steps and have darshan of Yoga Aanjaneya. Emperuman at this divyadesam is passionately worshipped as - “Thakkan” and “Akkarakani”. NammAzhvar, PeyAzhvar and Thirumangai Azhvar have sung praises of the Kadigai Lord Narasimha. ‘Thakkan’ means the Lord is the right one to fulfil all the wishes of devotees. Akkarakani means sweet nectar.
At this divyadesam one would encounter too many monkeys especially on the path to Periya malai, which in someways would be too intimidating.
குரங்குகள், பெரிய
பெரிய குரங்குகள் - நம் கையில் உள்ள பை, பழங்கள், மாலை - முதலியவற்றை பிடுங்கி செல்ல
வல்லன. காலப்போக்கில், குளிர் பான புட்டிகளின்
மூடியை அழகாக திறந்து சாப்பிட கற்றுக்கொண்ட உயிரினம். தொண்டரடிப்பொடிஆழ்வார் தமது
திருமாலை திவ்ய பிரபந்தத்தில், வானர
வீரர்கள், இராம கைங்கர்யத்தில் ஈடுபடவேண்டும் என்ற காரணத்தினால், மலைகளை தள்ளிக்கொண்டு
வருவது பற்றி அழகாக விளக்கியுள்ளார்.
குரங்குகள் மலையை நூக்கக்
- குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடைக்கல்
உற்ற சலம் இலா அணிலும் போலேன்
ஸ்ரீராமருக்கு பாலம்
கட்ட குரங்குகள் அணை போடக் கல்லைத் தூக்கிப்
போனதை பார்த்து எப்படி அணில்களும் கைங்கர்யத்தில் கலந்து கொண்டன என்பதன் குறிப்பு
இது.
In the Thirumalai pasuram, Thondaradipodi Azhwar tells us that hundreds of monkeys were involved in Rama kainkaryam as they pushed mighty mountains to the Ocean enabling building a path across the sea.
Here is a short video taken from Chinnamalai – one can view the
Periya malai and some monkeys too
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
Sunday, March 15, 2026
திருமஞ்சன குடம் ~ திருக்கடிகை எனும் சோளிங்கபுரம்
Thirumanjana kudam - @ Sri Lakshmi Narasimha Swami thirukkovil,
Cholasimhapuram [Sholinghur] in the town at the foothill 14.3.2026
திருமஞ்சன குடம்
~ திருக்கடிகை எனும் சோளிங்கபுரம்
Saturday, March 14, 2026
Masi Uthiradam - Swami Doddayachar thirunakshathiram 2026
மாசி உத்திராடம் - ஸ்வாமி தொட்டையாச்சர்யார்
திரு நக்ஷத்திரம்
உபதேச இரத்தினமாலை சேவாகாலம் @ பெரியப்பங்கார்
திருமாளிகை, சோளஸிம்ஹபுரம்
https://youtu.be/KIteBUCFMeU?si=AgTgIwYsjH_HSMkZ
Sholinghur Periya malai - Yoga Narasimha hills at dusk
கடிகை தடங்குன்றின் மிசை
சோளஸிம்ஹபுரம் பெரியமலை ஸ்ரீ யோகநரஸிம்ஹர்
திருக்கோவில்
சந்தியா காலம் சூரிய அஸ்தமனம்
13.3.2026
Friday, March 13, 2026
Sri Gajendra Varadhar purappadu 2019
Thiruvallikkeni Sri Gajendra Varadhar
Purappadu after theppothsavam – in front of Sri Azhagiya Singar
gopuram 2019
Thursday, March 12, 2026
Thirumalai Ananthanpillai in kolam depiction !
A very beautiful kolam of Swami Thirumalai Ananthazhwan
-at Puraisaivari thottam – Thirumala Tirupathi
-kolam drawn by Sri
Krishnakumar in 2012.
why theevatti flame appears broken in photo !!!
FB
throws up memories daily and today happened to see a photo of Sri Azhagiya Singar
purappadu after theppothsavam of 2016.
The thirumuga mandalam of Sri Azhagiya Singar is not very clear and that way not a great photo – but what intrigues is that the flame from theevatti appears broken / fragmented !! Unlike olden days, now we have AI – got the following answers to the query on why ! the flame appears broken.
Flames often appear broken, streaky, or distorted in photographs due to their rapid flickering and turbulent motion. Camera sensors capture light instantaneously, freezing the flame's shape at one moment, but flames dance at high frequencies (around 10-100 Hz from heat convection), creating unnatural fragmentation.
Fast shutter speeds (e.g., 1/250s or higher) can freeze flames but reveal turbulent edges as broken wisps if not perfectly synced. Slower speeds blend motion into smooth glows, while smoke trails exacerbate the "breaking" look by trailing separately.
To be more specific – in this photo, the flame looks “broken” mainly because of motion during exposure plus how the camera focuses and meters in low light.
• The torch [theevatti] is moving slightly while the shutter is open,
so different parts of the flame trace out slightly different paths, giving that
split, doubled look instead of a single clean shape.
• The camera is likely focused more on the people behind, not perfectly on
the flame, so the out of focus blur plus movement makes the flame’s core look
like two overlapping tongues instead of one.
• Because it is night and the background
is darker than the flame, the camera probably used a relatively slow shutter
speed with flash; this combination often freezes part of the flame (lit by
flash) while also recording a short motion trail (from ambient light), which
visually “breaks” the flame shape.
• The torch material burns unevenly, with multiple small jets and eddies; when frozen at a single instant this turbulence does not match our eye’s time averaged, smooth perception, so the recorded shape feels wrong or broken.
Interesting
!! ~
this photo was taken with Nikon d3100 with 18-55 lens – with flash
12.3.2026
Triplicane ~ Mylapore : early morning scene - the lights
Early morning around 3.30 am on 15.2.2026 – Sri Parthasarathi
Perumal Ekkattuthangal thiruvooral uthsava purappadu
Taken near Mundakakanniyamman thirukovil, Mylapore – lights on
for Sivarathiri celebrations.
Thiruvallikkeni Thirumanjana kudam
Thiruvallikkeni
Thirumanjana kudam @ Thavana uthsava
bungalow
Kainkaryam
– Sri VS Gopinath
https://youtu.be/hmD7oGM5O84
Wednesday, March 11, 2026
the divine flautist of Triplicane - Sri Azhagiya Singar
திருவல்லிக்கேணி ஸ்ரீ தெள்ளிய சிங்கன்
குழலூதும் கண்ணனாக சாற்றுப்படி
~ தவன உத்சவ சிறப்பு 2026
குழலூதும்
குருவாயூர்க் கண்ணனே கண்ணனே
தேன்மதுரம்
உன்கீதம் பாடிய தெய்வீகம்
உலகினை
வலம்வரவே கதிரவன் எழுந்தானே
பறவைகள்
பாடியதே சுகராகம் சுககீதம்
விப்ரபூஜ்யம் விஷ்வவர்த்யம் விஷ்ணு சம்பூர்ப்ரியம் சுதம்
விப்ர ப்ரசாத விரதம் சாஸ்தாரம் பிரணவாம்யகம்
யமுனாவின் கரையோரம் குழலோசை யை கேட்டு
எழில் ராதை உடன் சேர்ந்து இசை
பாடுவாள்
பசும்சோலை அதில் மறைந்து விளையாடுவான்
வருவாய் கண்ணா வருவாய் கண்ணா!!
என்றே ராதை, உனைத் தேடுவாள்
வண்டு விழிப்பேரெழிலே, ஆயர்கள்
குழக்கொழுந்து!!
வண்ணமுகில் கண்ணனவன் கண்டு ரசிப்பான்; வாரி அணைப்பான் .. ..
குழலூதும் குருவாயூர்க் கண்ணனே கண்ணனே
Tamil
version of a popular Malayalam song on Guruvayur Krishna !

.jpg)
.jpg)


%20(2).jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)

.jpg)
.jpg)