To search this blog

Tuesday, July 30, 2024

Thiruvadipura Uthsavam 1 - 2024

 For Srivaishnavaites, the month of Aadi is of special significance – as Thiruvadipuram [Puram Nakshathiram in the month of Aadi]    marking  the birth of Kothai Piratti [Andal] falls in this month. 

 


              This year Thiruvadipuram falls on Aadi 22 – Wednesday Aug 7th  – and from today (29.7.2024)  commenced the  Thiruvadipura uthsavam.  Andal  was found in a thulsi garden at  Sri Villiputhur by Vishnu Chithar [Periyazhwaar], grew up idolizing Emperuman Himself.    

 தமது திருப்பாவையில் - "வையத்து வாழ்வீர்காள்' என்ற பாசுரத்தில் - இந்த பூவுலகில் வாழும் எல்லோரும் பேறுபெற உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமனையே நினைத்து அவரடியே சேருமாறு பாடின ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவத்தில்  இன்று 29.7.2024 முதல் நாள்.   

பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயீ திருக்கோவிலில் நந்தவன பணி ஆற்றும் போது ஆண்டாள் கிடைக்கப் பெற்றார். கோதை என்றால் தமிழில் மாலை; வடமொழியில் வாக்கை கொடுப்பவள் என்று பொருள். ஆழ்வார்கள் பாடல்கள் - பைந்தமிழுக்கும் பக்திஇலக்கணத்துக்கும் உயர்ந்த சான்றாய் திகழ்வன !  அவரது திருப்பாவையின் யாப்பு  மிக கடினமான இலக்கண கோப்பு வாய்ந்தது.  திருப்பாவை முப்பது பாடல்கள் - சங்க தமிழ்மாலை என போற்றப்படுகின்றன.  ஆண்டாளின் திருப்பாவையும் நாச்சியார் திருமொழி பாசுரங்களும் சொல்லழகும் பொருள் அழகும் சிறப்புற மிளிர்பவை.  "நம்மையுடைவன் நாராயணன்" என மானுடவரான  நாம் 'பரம்பொருளின் உடமை' என்பதை அழகாக வெளிப்படுத்துகிறார்.  

திருவல்லிக்கேணியில்  திருவாடிப்பூர உத்சவத்தின் எல்லா நாட்களிலும் ஆண்டாள் புறப்பாடு உண்டு.  இன்று ஆண்டாள் சிறிய மாட வீதி புறப்பாடு கண்டருளினார்.  வீதியில் முதல் திருவந்தாதியும், ஊஞ்சல், மாலை மாற்றல் முடிந்து திருவாய்மொழி முதல் பத்து  பாசுரங்களும் சேவிக்கப்பெற்றன.     Here are some photos of that grand purappadu.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
29.7.2024 








No comments:

Post a Comment