To search this blog

Tuesday, July 23, 2024

Sri Parthasarathi Emperuman Jyeshtabisheka Thirumanjanam 2024

வல்வினை என்றால் என்ன.... அவை நீங்கி நன்மை பயக்க என்ன செய்ய வேண்டும் ? அவனடியை பற்றவேண்டும் !!  எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் - “வல்வினையைக் கானும் மலையும் புகக் கடிவான்”  வல்வினை எனும் கொடிய  உருத்தெரியாத நிலையையும்  தனது அனுகிரஹத்தால் கண்காணாத இடமான காட்டுக்கு மலைப்பகுதிக்கு ஓட்ட வல்லன். 



For many life become complicated because of their attachment to material things and relationship – for some attachment becomes addiction too – Hinduism as a way of life revels in becoming detached to materialistic World and in doing kainkaryam to Sriman Narayana.

 


Emotional attachment refers to the feelings of closeness and affection that help sustain meaningful relationships over time Psychologists coined the term “attachment theory” in the 1950s to describe the effect of early childhood interactions on personality and behavioral traits throughout life. Specifically, attachment theory focuses on the early interactions between a child and their primary caregiver.  By nature, humans are wired to turn to loved ones for care and comfort. Yet, while there is nothing inherently dysfunctional about wanting to be loved, when this nurturance isn’t provided, we tend to try and find alternative methods to self-soothe. It is at this point that addiction and attachment start to interrelate.  First developed by psychologist John Bowlby in 1958, the attachment theory came about in an effort to understand more about human relationships. Bowlby theorised that the connections we build in childhood are critical to our emotional development, laying the foundations for all relationships in the future. According to Bowlby, individuals can display either secure or insecure attachments to one another – a fact which can offer a huge insight into our past and early experiences. 

Addiction in Medical parlance,  is a state that is characterized by compulsive drug use or compulsive engagement in rewarding behavior, despite negative consequences.  This addiction is bad !  - here addiction is a neuropsychological disorder characterized by a persistent and intense urge to use a drug or engage in a behavior that produces natural reward, despite substantial harm and other negative consequences. Repetitive drug use often alters brain function in ways that perpetuate craving, and weakens (but does not completely negate) self-control.  

For Srivaishnavaites, life is simple, we are attached to the lotus feet of Sriman Narayana and shun the so called pleasures of  materialistic  World.

பொருட்களின் மீது பற்றறுத்தல் வேண்டும் ... ஆனால் அதி முக்கியமானது "தேசப்பற்று".  திருவல்லிக்கேணியில் வாழ்ந்த மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களில் வீரமும், தேசபக்தியும் கமழும்.  இந்தியா முழுவதும் சுதந்திரப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் புதுச்சேரியில் பாரதியார்  ஆங்கிலேயர்களின் கையில் சிக்காமல் தங்கி இருந்து 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" என்று வேட்கையை பரப்பி வந்தார்.  அவ்வமயம்  பாரதத் தாய்க்கு ஒரு சிலை செய்ய வேண்டும் என்ற அவரது விருப்பத்தை கூறியிருக்கிறார். 

அங்கிருந்தவர்கள் ஒரு சிற்பியை வரவழைத்து பாரதத் தாய்க்கு சிலை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். சிற்பி சிலை தயாரிக்கத் தொடங்கியபோதே ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. சிலையை ஏழ்மையாக இருப்பது போல் எளிமையாகச் செய்வதா? அல்லது ஆடை ஆபரணங்களுடன் வசதியாக இருக்கும்படி செய்வதா? என்று கேட்டார் சிற்பி.   இதைக் கேட்ட பாரதிக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. ""என் பாரதத் தாயை ஏழை என்று எப்படிச் சொல்லலாம்? எல்லாச் செல்வங்களும், வளங்களும் என் பாரதத்தாய்க்கு இருக்கத்தானே செய்கின்றன. தங்கம், வைரம், நெல், கோதுமை இவையெல்லாம் எங்கள் நாட்டில் விளையவே இல்லையா? என்றுமே வற்றாத ஜீவநதிகளும், ஆறுகளும் ஓடத்தானே செய்கின்றன. எனவே, என் பாரதத் தாயை மிகுந்த செல்வச் செழிப்போடும், ஆடை, ஆபரணங்களோடும் இருப்பது போலச் செய்யுங்கள்'' என்று கர்ஜித்தாராம் பாரதி.    பாரதத் தாயின் மீது பாரதியார் வைத்திருந்த மதிப்பைக் கண்டு அனைவருமே  சிறிது நேரம் மெய்சிலிர்த்துப்  போயினராம்.  இன்று நாம் காணும் பாரதத் தாய் பாரதியின் விருப்பப்படியே ஆடை, ஆபரணங்களோடு வடிவமைக்கப்பட்டுக் காட்சி தருகிறாள்.

பற்று (attachment) என்பது ஒரு பொருளின் மீதுள்ள அளவில்லா ஈடுபாடு ஆகும். இது முற்றிவிட்டால் பற்று கொண்ட பொருளுக்கு ஒருவர் அடிமையாகவும் (addiction) கூடும். இவ்வுணர்ச்சியின் மிகுதியால் ஒருவர் தான் பற்று கொண்ட பொருளை அடையவோ, காக்கவோ, மறைக்கவோ, வளர்க்கவோ, குறைக்கவோ கூடும். தேசப்பற்று போன்றவை நல்லன .. .. நம் நாட்டினை எப்போதும்  பெருமையுடன் புகழ வேண்டும்.   நாம் வாழும் நாட்டை எக்காரணத்தினாலும்  தரம் தாழ்த்திப் பேசாமல், நிலை உயர்வதற்குப் பாடுபட எண்ணம் கொள்ள வேண்டும்.  நாடுஎப்படிப் போனால் என்ன, நமக்குப் பணம் கிடைக்கிறதா, வேறு ஏதாவது பலன் கிடைக்கிறதா எனச் சுயநலமாக இருப்பதால்தான் நாட்டுக்கு ஏற்படும் அந்நிய அச்சுறுத்துதல்களைவிட உள்நாட்டிலேயே அச்சுறுத்துதல்கள் பெருகிவருகின்றன.   வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றுவிட்டு அதைப் பற்றி பெருமை பேசுவதைவிட, அந்த அளவுக்கு நம்மை உயர்த்த என்ன செய்ய வேண்டும் எனச் செயல்படுவதுதான் சிறப்பானது.  நாம் இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம் - நம் நாடு பயனுற வாழ்வோம்.   ஒவ்வோர் இந்தியனும் செயல்களில் ஒழுக்கம், தொழிலில் நேர்மை, கடமைகளைச் சரியாகச் செய்தல், நாகரிகம் - பண்பாடு - பாரம்பரியம் காத்தல், முறையான கல்வி, ஆரோக்கியம் போன்ற நோக்கங்களை மனதில் நிறுத்திச் செயல்படவேண்டும்.  இப்படிச் செய்தால் உலக நாடுகளுக்கெல்லாம் முன்னோடி நாடாக  இந்தியா விளங்க முடியும். அதற்காக ஒவ்வொரு இந்தியனும் முயற்சிக்க வேண்டும்.




எம்பெருமானிடத்திலே ஈடுபடுவதே உண்மையான நல்ல பற்று.  ப்ரஹ்லாதனுக்கு இரணியனும் அவனுடைய ஏவலாளர்களும் எத்தனையோ வகையான தீங்குகளை யிழைத்தார்களெனினும் அவன் திறத்து ஒன்றும் பயன்படவில்லை.  பாம்புகளை விட்டுக் கடிக்க வைத்தார்கள் தீயை வளர்த்தி அதிலே தள்ளினார்கள்; மலைகளில் நின்றும் தலைகீழாக உருட்டினார்கள்; சிங்கம் புலி யானை முதலிய கொடிய விலங்குகளைக் கொண்டு அச்சமுறுத்தினார்கள்; இன்னமும் எத்தனையோ செய்தார்கள். ப்ரஹ்லாதாழ்வான் ஒன்றையேனும் லக்ஷியம் பண்ணவில்லை - அவருக்கு ஸ்ரீமன் நாரணனிடத்திலே  இருந்த  நம்பிக்கையும் பற்றும் சற்றும் அசைக்க இயலாதன. 

இதோ இங்கே ஸ்வாமி  நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி பாசுரம் : 

அடர்ப்பொன்முடியானை ஆயிரம்  பேரானை,

சுடர்கொள் சுடராழியானை, -  இடர்கடியும்

மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே

யாதாகில் யாதே இனி? 

அடர்ந்த பொன்மயமான திருவபிஷேகத்தையுடையவனும்,  ஸஹஸ்ரநாமங்களால் பிரதிபாதிக்கப்படுபவனும், சந்திர ஸூர்யன் முதலியன சுடர்களையெல்லாம் வென்று விளங்குகின்ற திருவாழியையுடையவனுமான எம்பெருமானை, துக்கங்களைப் போக்கவல்ல தாயும் தந்தையுமாக என்னுடைய இதயத்தினுள்ளே இருத்தினேன்; இனிமேல் எனக்கு என்ன நேர்ந்தாலென்ன? - எந்த விதமான குறையும் வர வாய்ப்பே இல்லை என்கிறார் நம்மாழ்வார்.

‘ஜ்யேஷ்ட’ எனும் சொல்லுக்கு ‘பெரிய’ அல்லது ‘மூத்த’ என்று பொருள் கொள்ளலாம்.  நட்சத்திரங்களில் ‘கேட்டை’  நட்சத்திரம் ‘ஜ்யேஷ்டா’ என்று சம்ஸ்கிருத மொழியில் அழைக்கப்படுகிறது.  திருவரங்கத்தில் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில், நம்பெருமாளுக்கு நடைபெறும் சிறப்பு மிக்க பெரிய அபிஷேகமானது ‘ஜ்யேஷ்டாபிஷேகம்' எனும் பெரிய திருமஞ்சனமாகும்.   மிக அற்புதமான வைபவம் இது.  ஸ்ரீரங்கத்தில், பெரியபெருமாள் சந்நிதியில், ஆனித் திருமஞ்சனத்தன்று அதிகாலையில் காவிரி நீர் கொண்டு, நித்தியப்படி முதற்கால பூஜை மற்றும் பொங்கல் நிவேதனம் கண்டருளப்படும்.    

இன்று 22.7.2024 ஆடி திருவோணம் - திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானுக்கு ஜ்யேஷ்டாபிஷேகம்.     இந்த சிறப்பு திருமஞ்சனம் எம்பெருமானின் திருமேனிக்கு!.  ஏனைய திருமஞ்சனங்கள் எல்லாம் எம்பெருமான் கவசத்துடன் இருக்கும்போது;   இன்றைய திருமஞ்சனம் சிறப்பாக - கவசங்கள் களைந்த திருமேனிக்கு - கவசங்கள் சுத்தம் செய்யப்படும். பேயாழ்வார் மங்களாசாசனம் செய்தபடி எம்பெருமானின் பொன்மேனியை, அவர்தம் திருஉடம்பில், திருப்பாதங்களில்  -  போர் தழும்புகளை தரிசனம் பண்ணும்போது மெய் சிலிர்க்கும். 


Here are some photos of Sri Parthasarathi Emperuman taken on various dates.

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
22nd July  2024.  

No comments:

Post a Comment