To search this blog

Tuesday, July 2, 2024

Aani Krishna paksha Ekadasi 2024 - வெற்றிப் பணிலம்

 

பணிலம் என்ற சொல்லை கேள்வியுற்று இருக்கிறீர்களா !  அதன் பொருள் என்ன என்று தெரியுமா ?? Today,  2nd July 2024     is ‘Aani Krishna paksha  Ekadasi’.   On this  Ekadasi day at Thiruvallikkeni divyadesam, Sri Parthasarathi had grand purappadu with most beautiful floral garlands outsmarting the dazzling ornaments.   Today He was ‘pulchritudinous’ – stunning beauty – besides the ornaments embellishing, in tune with the season, it was choicest garland. 
Conch  is a common name of a number of different medium-to-large-sized sea snails. Conch shells typically have a high spire and a noticeable siphonal canal (in other words, the shell comes to a noticeable point on both ends).   A conch is a sea snail in the phylum Mollusca. A conch shell consists of about 95% calcium carbonate and 5% organic matter. 

In North America, a conch is often identified as a queen conch, indigenous to the waters of the Gulf of Mexico and Caribbean    The protected Queen conch season, a period when regulations are in place to safeguard the population officially started yesterday, July 1.  During this time, restrictions are imposed on harvesting the Queen conch to prevent overfishing and ensure the sustainability of the species, while helping to maintain a healthy population of the Queen Conch in the marine environment.   According to a   post of  the Antigua and Barbuda National Park, “It’s illegal to fish for, sell, purchase, or possess Queen conch during this time”. 

The English word "conch" is attested in Middle English, coming from Latin concha (shellfish, mussel), which in turn comes from Greek konchē (same meaning) ultimately from Proto-Indo-European root *konkho-, cognate with Sanskrit word śakha.

பணிலம் என்றால் சங்கு !

சங்கம் முழங்கவே, சாரதியாய் வந்து - எங்களை காப்பாயே !!

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனின் திருக்கரத்தில் பாஞ்சஜன்யம் எனும் சங்கும் திருவாழி எனும் சக்கரமும் நிலை கொண்டு இருக்கும்.  தனது அடியார்களை காப்பாற்ற சக்கரத்தையும், பாரத போரில் சங்கத்தையும் ஏந்தியவன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.  அவனே ஸ்ரீபார்த்தசாரதியாக திருவல்லிக்கேணி புண்ணிய பூமியிலே சேவை சாதித்து அருள்கிறான்.   இதோ இங்கே தமிழ் தலைவன் பேயாழ்வாரின் ஒரு அற்புதமான பாசுரம் மூன்றாம் திருவந்தாதியில் இருந்து : 

பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம்,

முற்றக்காத்தூடு போயுண்டுதைத்து, – கற்றுக்

குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப்

பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு. 

எம்பெருமான் எத்தகையவன் ! நம் அனைவரையும் காத்து ரக்ஷிப்பவன்.  கிருஷ்ணாவதாரத்திலே பசுக்களை முற்ற காத்து ஒன்று தப்பாமல் ரக்ஷித்தவனாயும், பிணைந்து நின்ற இரட்டை மருத மாங்களிடையே சென்றவனாயும், பூதனையின் முலையை உண்டவனாயும்,  பெரிய சகடத்தை உதைத் தொழித்தவனாயும், கன்றாகிய எறிதடியைக் கொண்டு விளாம்பழத்தின் மீது எறிந்தவனாயும் சிறப்புற வளர்ந்த எம்பெருமான் கண்ணன் முன்பொரு காலத்தில் ஜயசீலமான சங்கை (வெற்றிப் பணிலம்)  வாயிலே வைத்து ஊதி  உகந்தான்  என பேயாழ்வார் அதிசயிக்கின்றார். 

Leave your fears ! ~ try and forget all the difficulties !! fall at the lotus feet of Sriman Narayana and pray to Emperuman Sri Parthasarathi for the well being of us all. Here are some photos of Ekadasi purappadu this evening. 

After assuming office for the third time, Prime Minister Narendra Modi reached his parliamentary constituency Varanasi to visit Sri Kasi  Vishwanathar Temple. During this visit, he also participated in Ganga Aarti at Dashashwamedh Ghat along with Uttar Pradesh Chief Minister Yogi Adityanath, Home Minister Amit Shah.  The  man who grabbed the eyeballs was Ramjanam Yogi. He during the aarti blew the conch for 2 minutes and 40 seconds and caught the most attention, including that of PM  Shri Narendra Modiji.  

 
adiyen  Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
2.7.2024

3 comments:

  1. Nice explanations Sampath Swami. Pranams.
    B Venkatakrishnan, T'keNi

    ReplyDelete
  2. பணியில் ஈடுபடுவதற்கான காரியத்தைச் செய்வதால் பணிலம்

    ReplyDelete