To search this blog

Monday, November 27, 2023

Thirumangai Mannan Sarrumurai 2023

இன்று 27.11.2023  கார்த்திகையில் கார்த்திகை நாள்- திருமங்கை மன்னனின் சாற்றுமுறை வைபவம். இன்று அல்லிக்கேணியில் கலியன் ஸ்ரீபார்த்தசாரதி பெரிய மாட வீதி புறப்பாடு கண்டருள்வார்கள்.  இன்று இரவு முதல் தைலக்காப்பு.  நாளை முதல் டிசம்பர் 18வரை மூலவர் சேவை கிடையாது.  ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் மற்றும் கலியன் - கோபுரவாசலை கடந்து 36 கால் மண்டபத்தில் எழுந்தருளி -  தீமை எல்லாம் ஒழிய சொக்கப்பனை கொளுத்தப்படும்.

 Thirumangai mannan at Thiruvallikkeni

Kaliyan was born in Thiru Kuraiyulur, 2 km from Thiruvali-ThiruNagari near Sirkazhi.  At the time of his marriage with Kumudavalli   – one of the ‘wedding’ conditions  was  to feed 1008 Vaishnavites every day.  By divine grace, Kaliyan turned Thirumangai Azhwar, which gets enacted on day 8 Kuthirai vahana purappadu at Thiruvallikkeni.  He was to categorically direct us on the greatness of chanting Ashtaksharam of Sriman Narayana.

சோழ நாட்டில் உள்ள திருவாலி-திருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குறையலூரில் ஒரு கார்த்திகைத் திங்களில் கார்த்திகைத் திருநாளில் - திருமாலின் வில்லான ஸார்ங்கத்தின் அம்சமாய் தோன்றியவர். சீர்காழியில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் திருவெண்காட்டில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருக்குறையலூர்.  இவரது இயற் பெயர் 'நீலன்'.  சோழநாட்டில் குறுநில மன்னராய் விளங்கினார்.  நீலனின் படைத்தளபதிகளாக, இவரது சீடர்களாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் :  நீர்மேல் நடப்பான், தாளூதுவான், தோலா வழக்கன், நிழலில் மறைவான் போன்றவர்கள்.

கலியன் என்றால் அவரது குதிரை 'ஆடல்மா' என்னும் குதிரையும், 'அமரிற் கடமா களியானை' என்னும் யானையும் மற்றும் அவரது சிஷ்யர்களும்  நினைவுக்கு வரக்கூடும். குதிரை சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும்,  புராணங்களிலும் சிறப்பாக கருதப்பட்டு உள்ளது.  குதிரை, புரவி தவிர ~ மா, பரி, மான், இவுளி, கலிமா - இதனது வேறு பெயர்கள்.   திருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர்.   ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் "திருமங்கை" நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.  ஆழ்வார்க்கு பரகாலன், கலியன், நீலன், கவிலோக திவாகரன், ஷட் பிரபந்தக் கவி, கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன், ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன், கொற்றவேல் மங்கை வேந்தன் எனும் பல பெயர்கள்  உண்டு.

                           Thirumangai mannan at Velukkai @ Alari Divaydesam, Thirukachi

ஆழ்வார் குமுதவல்லியை     மணம்முடிக்க ஆசைப்பட்டார்.  குமுதவல்லி "பஞ்ச ஸம்ஸ்காரமும், ஓர் ஆண்டு முழுவதும் ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்கு அமுதூட்டினாலின்றி நான் உங்களைக் கணவராக ஏற்க மாட்டேன்" என்று கூற - அதன்படியே   ஓர் ஆண்டு முழுவதும் ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்கு அமுதூட்டி, தன்னிடம் இருந்த பொருள் அனைத்தும் தீர்ந்த நிலையில் வழிப்பறித்து பொருளீட்டத் தொடங்கினார். அவ்வாறு வழிப்பறிக்க திருமணங்கொல்லையில் திருவரசின் மேலே பதுங்கி இருந்தபோது வயலாளி மணவாளன் பிராட்டியோடு மணவாளக்கோலத்தில் திரளோடு வர, அவனை வளைத்துத் துணிமணிகளைக் கவர்ந்து அறுகாழியையும்  வாங்கினார். அவ்வமயம் அவரை ஆட்கொண்ட எம்பெருமான் அவரது செவியில் திரு எட்டெழுத்தாகிய திருமந்திரத்தைச் சொல்லித் தந்து இவரை ஆட்கொண்டார் என்கிறது குருபரம்பரை.  

                                                      Thirumangai mannan at Thirunagari

கலியன் அவதாரஸ்தலத்தில் கையில் வேலுடன் சேவை சாதிக்கின்றார். திருமங்கையாழ்வார் சோழநாட்டுத் தலமான தில்லை சித்திரகூடம் (சிதம்பரம்) சென்று மங்களாசாசனம் செய்து, காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி) எல்லையில் நுழையும்போது, அவருடைய தொண்டர்கள் "நாலுகவிப் பெருமாள் வந்தார்' என்று விருதுகூறிச் செல்ல, சைவம் தழைத்தோங்கிய சீர்காழி (தோணிபுரம்)யில் திருஞானசம்பந்தரின் சீடர்கள் "விருது கூறலாகாது' என்று கூறி, திருமங்கையாழ்வாரை திருஞானசம்பந்தரிடம் அழைத்துச் சென்றனர். திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வாரிடம் ""நாலுகவிப் பெருமாள் என்று கூறப்படுவது உண்மையெனில், ஒரு குறள் பாடும்'' என்றார். (நாலுகவி-ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி).  திருமங்கையாழ்வாரும் ""ஒரு குறளாய் இருநிலம் மூவடி வேண்டி'' எனத் தொடங்கி பத்துப் பாசுரங்களில் 108 வைணவத் தலங்களுள் ஒன்றான சீர்காழியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமாளுக்குப் பாசுரமிட்டார்.  இதனால் மகிழ்ந்த திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வாரை "பரகாலன்' என்று அழைத்து,  வேல் ஒன்றை அளித்தார். திருமங்கையாழ்வார் கையில் உள்ள வேல் பற்றி  .. ..   திருமங்கை ஆழ்வாரின் வடிவழகில் ஈடுபட்டு  நம் ஆசார்யர் சுவாமி மணவாள மாமுனிகள் அருளிய  வடிவழகு சூர்ணிகை: - 

அணைத்த வேலும் -தொழுத கையும் -அழுந்திய திருநாமமும்

ஓம் என்ற வாயும் -உயர்ந்த மூக்கும் -குளிர்ந்த முகமும்

பரந்த விழியும் -பதிந்த நெற்றியு- நெறித்த புருவமும்

சுருண்ட குழலும் -வடிந்த காதும் -அசைந்த காதுகாப்பும்  .. .. ...

நாராயணா என்னும் நாமம் நல்ல சுற்றத்தைத் தரும். ஐசுவரியத்தைத் தரும். அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் தரைமட்டமாக்கி (நிலந்தரம்), பரமபதத்தைக் கொடுக்கும் (நீள்விசும்பு), அருளோடு கைங்கரியம் என்னும் ஸ்தானத்தையும் கொடுக்கும், வலிமை கொடுக்கும், மற்றெல்லாம் தரும். பெற்ற தாயை விட அதிகமான பரிவைத் தரும். நல்லதே தரும் சொல் ‘நாராயணா என்னும் நாமம்’. 

Thirumangai Azhwar was a  vivid versatile personality – a great poet, efficient in horse riding and warfare, exceptional faith on his Lord, travelled very widely the length and breadth of the country  and did most mangalasasanam of divyadesangal.  Kaliyan has many names -  Arulmari, Kaliyan, Parakalan, Arattamukki, Adayarseelam, and Thirumangai Mannan. He was passionate about anything he pursued,  be that bewitching damsel Kumudavalli nachiyar, feeding Srivaishnavaites  or building temples. 

ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில், கலியனது பங்கு அதீதம்.  பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல்  என 1137 பாசுரங்கள் நமக்கு அளித்துள்ளார்.  சிறிய திருமடல், பெரிய திருமடல் எனும் இரண்டு படைப்புகளிலும் தன்னைத் தலைவியாக 'பரகால நாயகியாய்'  உருவகித்த நிலையில் அவர் பாடல்களைப் புனைந்துள்ளார்.  

                                         Thirumangai mannan at our native Dusi Mamandur 

Sensing his final days, Alwar reached Thirukkurungudi, did kainkayram to Vadivazhagiya Nambi and attained lotus feet of our Emperuman from there.  Among dense fields, his thiruvarasu now stands testimony that ‘the abode of Lord – Vaikundam’ is calling distance from here.  

"நம்மை உய்விக்கும் - நலம் தரும் சொல் - நாராயணா என்னும் நாமமே'' என அறுதியிட்டு உரைத்த திருமங்கை மன்னன் தாள்கள் பணிவோம்.

வாட்கலியன்  பரகாலன் மங்கையர்கோன் வாழியே .. .. ..

 

~adiyen Srinivasa dhasan
[Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
27.11.2023

 





No comments:

Post a Comment