To search this blog

Saturday, September 2, 2023

Thiruvallikkeni ThirupPavithrothsava Sarrumurai 2023 - வண்டுணு நறுமலர்

Thiruvallikkeni    ThirupPavithrothsava Sarrumurai 2023 



தாவர உலகம் ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்தது. தாவரங்கள்  எவ்வாறு பெருகுகின்றன ! அவற்றின் இனப்பெருக்கம் செய்யும் விதம் ஆச்சரியம் தர வல்லது.   இது பல்வேறு வகையான மகரந்தச் சேர்க்கைகளால் காட்டப்படுகிறது, இதன் மூலம் தாவரங்கள் தங்கள்  இனப்பெருக்கத்தை செயல்படுத்துகின்றன.  மகரந்தச்சேர்க்கை (pollination) என்பது, கருக்கட்டல் செயல்முறைக்காகவும், பாலியல் இனப்பெருக்கத்திற்காகவும் மகரந்தத்தூள்கள் ஒரு தாவரத்தில் இருந்து இன்னொன்றுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான ஒரு வழிமுறை ஆகும். மகரந்தத்தூள் ஆண் பாலணுக்களையும், சூல்கள் பெண் பாலணுக்களையும் கொண்டுள்ளன.  இது தாவரவியல்  பதிவல்ல ! - கொஞ்சம் வண்டுகள் பற்றி - எனினும் பூச்சியினங்கள் பற்றிய பதிவும் அல்ல !!



வண்டு என்றால் ஒரு பாத்திரம் !!  -  கொழுக்கட்டை, மோதகம், பிட்டு என்பவற்றை அவித்தெடுப்பதற்காக பானை போன்ற பாத்திரம் ஒன்றின் வாயில் துணி கட்டப்பட்ட உபகரண ஒழுங்கமைப்பு வண்டு எனப்படும். இது கொதிக்கும் நீராவியை அவிக்கும் உணவுத் தயாரிப்பில் செலுத்துவதற்கு வசதியாக்குகிறது.  நம் குறிப்பு பறக்கும் வண்டு பற்றியது  




Insect pollination constitutes  an ecosystem of global importance, providing significant economic and aesthetic benefits as well as cultural value to human society, alongside vital ecological processes in terrestrial ecosystems.  The role of plant–pollinator interactions in reproductive isolation has also led to the much grander hypothesis that insect pollination was a “key innovation” leading to the co-radiation of flowering plants (angiosperms) and anthophilous insects, which are those groups most involved in pollination, including certain bees and wasps (Hymenoptera), various families of flies (Diptera), and butterflies and moths (Lepidoptera).  

வண்டு என்பது ஆறு கால்கள் கொண்ட ஒரு பறக்கும் பூச்சியினம். இவற்றிற்கு, முன் இறக்கைகள் இரண்டும் பின் இறக்கைகள் இரண்டும் ஆக நான்கு இறக்கைகள் உண்டு. முன்னால் தலைப்பகுதியில் இரண்டு உணர்விழைகள் உண்டு. வண்டுகளின் முன் இறக்கைகள் கெட்டியானவை, பின் இறக்கைகள்தான் பறக்கப் பயன்படும்.  வண்டுகள் பூக்களில் உள்ள தேனை மதுவாக  குடிக்கும்.   ‘வண்டுணும்‘ என்ற அடைமொழியினால் மதுவெள்ள மொழுகப்பெற்ற மலர்கள் என்றர் நம் கலியன்.   தேனைக் குடிக்கும் வண்டுகள் மூலம் மகரந்தத்தூள் ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவிற்கு பரவுகிறது. தாவரங்கள் தங்கள் மகரந்தம் மட்டும் அதிக அளவில் பரவ விரும்புகிறது எனவே  அவை அதிக அளவில் தேனீக்களை ஈர்க்க வேண்டியிருக்கிறது.  

இதோ இங்கே திருமங்கை ஆழ்வாரின் திருமொழி ஆறாம் பத்தின் முதல் பாசுரம் :  

வண்டுணு நறுமலர்  இண்டைகொண்டு பண்டை நம் வினைகெட வென்று, அடிமேல்

தொண்டருமமரும் பணியநின்று அங்கண்டமொடு  அகலிடமளந்தவனே

ஆண்டாயுனைக் காண்பதோர்  அருளெனக்கு  அருளுதியேல்,

வேண்டேன்  மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.!!  





நமது முன்னைத் தீவினைகளெல்லாம் தொலையவேணும்‘ என்று  மனதார நினைத்து,  வண்டுகள் மதுவுண்ணப் பெற்ற மணம் மிக்க பூக்களினாலாகிய மாலைகளை ஏந்திக்கொண்டு தேவர்களும் சிறந்த பக்தர்களும்  திருவடிகளிலே விழுந்து ஸேவிக்கும்படியாக நின்று - அங்கப்போதே அண்டங்களையும்,   பரந்த பூமியையும்  தனது திருவடிகளால் அளந்த நம் ஸ்ரீமந்நாரணன்  திருவிண்ணகரில் நித்ய வாஸம் செய்கிறான் -  அங்கே அவனை  சென்று  ஸேவிக்கும்படியான க்ருபையை, என் விஷயத்தில் செய்தருள்வாயாகில் - இனி  ஸம்ஸார வாழ்க்கையை விரும்பமாட்டேன் என்கிறார் நம் கலியன் இப்பாசுரத்தில்.  

திருவிண்ணகர் போன்றே திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் அற்புத க்ருபாகடாக்ஷனாக எழுந்தருளி இருக்கிறான்.  இங்கே பல்வேறு உத்சவங்கள் சிறப்புற நடைபெறுகின்றன.   திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்  நடை பெறும் பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது.  7 நாட்கள் சிறப்புற நடந்த திருப்பவித்ரோத்சவம் இன்றோடு நிறைவு பெறுகிறது.  இன்று சாற்றுமுறை, பூர்ணாஹுதி.  திருவீதி புறப்பாட்டில் - திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய மடல், பெரிய திருமடல், இராமானுச நூற்றந்தாதி பாசுரங்கள் அனுசந்திக்க பெற்றன.  

இன்றைய 1.9.2023  புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :   

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1st Sept 2023. 
பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை  களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.   









No comments:

Post a Comment