To search this blog

Tuesday, July 5, 2022

அரியது கேட்கின் ! .. .. வானோர் தொழுதிறைஞ்சும், - Kodai Uthsavam 6 2022

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது; மானிடராய் பிறந்த காலையின் கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது ~ the immortal words of Tamil Poetess Avvaiyar.  It means it is difficult (in fact a boon) to be born as a human being; having been born – it is rare to have  a birth devoid of physical challenges like dumb, deaf, blind …. the significance is that one should use appropriately such good birth and do good to the Society. 



கந்தன் கருணை 1967ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்த இந்த  திரைப்படத்தை ஏ.பி. நாகராஜன் இயக்கினார்.   முருகக் கடவுளின் பிறப்பு, அவர் சிறுவனாயிருந்தபோது ஒரு மாம்பழத்துக்காகக் கோபித்துக் கொண்டு பழனிமலை சென்றது, சூரபதுமன் வதம், தெய்வயானை மற்றும் வள்ளியுடனான திருமணம் ஆகிய கந்தபுராண நிகழ்வுகளைக் கதைக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டத் திரைப்படம் ஆகும்.   இப்படத்தில்  'அரியது எது என  கேட்டமைக்கு'  அழகான தமிழில்  அவ்வையார் மூதாட்டி அளிக்கும் விளக்கம் - கே வி மஹாதேவன் இசையில் கே பீ சுந்தராம்பாள்  பாடிய அருமையான பாடல் ஞாபகம் உள்ளதா ??  இப்பாடல் -   'தனிப்பாடல் திரட்டு' எனும் நூலில் அமைந்துள்ளது !!  

அரியது கேட்கின் வரிவடி வேலோய்! அரிதரிது மானிடர் ஆதல் அரிது

மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

பேடு நீங்கிப் பிறந்த காலையும், ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது

ஞானமும் கல்வியும் நயந்த காலையும், தானமும் தவமும் தான்செயல் அரிது

தானமும் தவமும் தான்செய்வராயின், வானவர் நாடு வழிதிறந்திடுமே.

 

Ever wondered what is the purpose of life ? ~ why were we born .. why did Emperuman bless us with good hands, legs and tongue ? – what are we to do with the members of the body ??   Before you read further, you may be tempted to hear the magical voice of KB Sundarambal in Kanthan Karunai : 


                 In this earthly World giving more than ample sphere for sins and sins  - any act could lead to that sinful path, adding more harm.  Nammalwar says that he can only think of that Lord worshipped at Paramapadam by celestials whom he would like to praise with choicest words string neatly as garland in his poem without swerving weebit away from the chosen path of devotion.   Here is a pasuram from Swami Nammalwar’s Periya thiruvanthathi : 





வினையார் தரமுயலும் வெம்மையை   அஞ்சி,

தினையாம் சிறிதளவும் செல்ல - நினையாது

வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும்,

நாயகத்தான் பொன்னடிக்கள் நான்.

-      - -(பெரிய திருவந்தாதி பாசுரம்) 

கொடிய பாவங்கள் நிறைந்த இப்பூவுலகில்,  நமக்கு தீவினைகள் உண்டு பண்ண நினைக்கிற கொடிய துன்பங்களுக்கு அஞ்சி தினையளவு சிறிய அற்ப காலமும், நான் பரமபதத்திலே நித்யஸூரிகள் என்றென்றும்  தொழுது வணங்கும் பெருமை வாய்ந்த எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை மனது உவக்கும்  சொற்களாலே துதிக்கின்றேன், அடியேன் அவற்றை தவிர திணைப்பொழுதும் வீணாகக் கழிய விரும்பமாட்டேன் என்கிறார் நம்மாழ்வார்.   

Today 4th July 2022 is day 6 of Kodai Uthsavam at Thiruvallikkeni and in the siriya mada veethi – gate aam purappadu it was Thiruvasiriyam, Periya thiruvanthathi.  Here are some photos of our beautiful Emperuman Sri Parthasarthi Perumal.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
4.7.2022  












2 comments: