To search this blog

Friday, January 14, 2022

celebrathing Makara Sankranthi (Happy Pongal) - * உத்தராயண புண்யகாலம் *

Today  14.1.2022 – first day of Thai month is   a day of celebration ~ ‘Pongal” – the harvest festival celebrated as ‘Makara Sankranthi’ in many parts of India.  Pongal is a week long festival  ~ this in fact is the time of harvest festivals across the Country variedly called:  Pongal, Makar Sankranthi, Lohri, Bihu, Hogada .. ..   Kites are an intrinsic part of Sankrant celebrations in Harayana, Delhi, UP and some other places;  so are delicacies made of til (sesame seeds) and jaggery. People wake up early, adorn themselves in new warm clothes and offer their thanks to the Sun God. Later through the day, they fly kites while munching into delicacies like til ladoo, rewadi, gajak, peanuts.   In Tamil Nadu, it is Pongal day and time to offer and share  Chakkarai Pongal (jaggery sweetened pongal delicacy).     Pongal ~ derived from a Tamil word, meaning  to boil. Rice is boiled in milk and offered to Emperuman, The Sun God, n cows and then to the family and friends. 


இன்று பொங்கல் திருநாள்; தை  வெள்ளி; தை மாதப்பிறப்பு - வைகுண்ட ஏகாதசியை தொடர்ந்து வரும்  த்வாதசி  - உத்தராயண புண்யகாலம் தொடங்கும் நன்னாள்.  இன்று மகர சங்கராந்தி - தை , மாசி , பங்குனி , சித்திரை , வைகாசி , ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். கதிரவன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலமாகும். நம்முடைய ஆறு மாத காலம், தேவர்களுடைய ஒரு பகல் பொழுது காலமாகும். மிகவும் புண்ணியமான காலம்.  


பாரத  யுத்தத்தின்   10ம்  நாள்   பீஷ்மர்  தலைமையில்   கவுரவ  சேனையில்  யுத்தம்  நடந்தபோது  உத்தராயணம் துவங்க  58  நாள்  இருந்தது.   பீஷ்மர்  யுத்தத்தில் வீழ்ந்து பின்   அம்புப் படுக்கையில்  இருந்து    உத்தராயணத்தில்  உயிர் விடும்போது  மக நக்ஷத்ரம்  சுக்ல பக்ஷம்  ஏகாதசி நாள்.   அவர் உத்தராயணம் துவங்க காத்து இருந்தார்.   'உத்தர்' என்றால் வடமொழியில் வடக்கு -  சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயணம் எனப்படும். 


பீஷ்மர் தனது தந்தையாகிய சந்தனுவிடமிருந்து தான் விரும்பினால் மட்டுமே சாகக் கூடிய 'இச்சா-மிருத்யு' என்னும் வரத்தை பெற்றிருந்தார். அவர் அனுமதி இல்லாமல் மரணம் கூட அவரை அணுக முடியாது. பாரதப் போரில் பீஷ்மர் உடல் முழுவதும் அர்ஜுனன் எய்த அம்புகள் பாய்ந்திருக்க, கீழே சாய்ந்த பீஷ்மர்  தான் பெற்றிருந்த வரத்தை உபயோகப் படுத்தி மரணத்தை உடனே தன்னை நெருங்க விடாது தடுத்திருந்தார். பாரதப்போர் மார்கழி மாதம் தட்சிணாயன காலத்தில் நடைபெற்றது.  அம்பு படுக்கையில் இரத்தம் உதிர காத்திருந்து,  உத்தராயண காலம்  ஆரம்பமானவுடன் மரணமடைந்தார். 

மஹாபாரதம் இதிஹாசத்திலே, மரணப்படுக்கையில் கிடந்த  கங்கையின் மைந்தர், தன் கண்களைத் திறந்து, அங்கே தன்னைச் சுற்றிலும் கூடியிருந்த பாரதர்கள் அனைவரையும் கண்டார். வலிமைமிக்கப் பீஷ்மர், யுதிஷ்டிரனின் வலிய கரங்களைப் பிடித்துக் கொண்டு, மேகங்களைப் போன்ற ஆழமான குரலில் அவனிடம் பேசினார்.  "ஓ! குந்தியின் மகனே, ஓ! யுதிஷ்டிரா, நற்பேற்றின் மூலமே, நீ உன் அமைச்சர்கள் அனைவருடனும் இங்கே வந்திருக்கிறாய். நாள் சமைக்கும் ஆயிரங்கதிரோனான புனிதமான சூரியன், தன் வடக்கு நோக்கிய போக்கைத் தொடங்கிவிட்டான்.  நான் என் படுக்கையில் எண்பத்தைந்து நாட்கள் கிடந்திருக்கிறேன். இந்தக் கூர்முனைக் கணைகளில் நீட்டிக் கிடந்த நான், இந்தக் காலத்தை நூறு ஆண்டுகளாக உணர்ந்தேன். ஓ! யுதிஷ்டிரா, மாகச் சந்திர மாதம் {மாசி மாதம்} தொடங்கிவிட்டது. மேலும் இது வளர்பிறைக் காலமாகும்,   அறுவடைக் காலமாக இருக்கின்ற உத்தராயணத்தின் ஆரம்பத்தில் நாம் இப்போது இருக்கின்றோம். பூமிக் கிரகத்தோடு தொடர்புடைய சூரியனின் ஓட்டமானது, தெற்கு நோக்கிய ஓட்டத்திலிருந்து வடக்கு நோக்கிய ஓட்டத்திற்கு – அதாவது தக்ஷிணாயணத்திலிருந்து, உத்தராயணத்திற்கு மாறும். 

 

தக்ஷிணாயணம் தூய்மைப்படுத்துவதற்கானது. உத்தராயணம், ஞானமடைதலுக்கானது.  இது உள்வாங்குதலுக்கான காலம், அருளைப் பெறுவதற்கும் ஞானமடைவதற்கும் உகந்தது, மற்றும் உச்சபட்ச தன்மையை எட்டுவதற்கான காலம். இந்த நேரத்தில் விவசாய அறுவடையும் நடைபெறுகிறது. பொங்கல் என்பது அறுவடைத் திருநாள். ஆகவே, இது உணவு தானியங்களை அறுவடை செய்வதற்கான காலம் மட்டுமன்றி, மனித ஆற்றலை அறுவடை செய்வதற்கும் உகந்த காலமாக இருக்கிறது.



On Sankranthi day occurs the beautiful  purappadu of newly wed Divya Thampathis - Sri Andal and Sri Parthasarathi -  in a special open palanquin [one that has no roof known as kooralam].  Sri Parthasarathi,  embellished with many dazzling ornaments adorning the Crown [Sigathadai]; Sri Andal in a beautiful sitting posture sitting opposite to Him in the same pallakku.   Sadly this year due to Corona restrictions, there would be no purappadu.  Here  are some photos of the Sankranthi Urgola Uthsava purappadu  on 14.1.2021.

adiyen ~ Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14th Jan 2022  

No comments:

Post a Comment