To search this blog

Saturday, December 25, 2021

sleeping ! - awakening !! - கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்று !!

Sleep is a naturally recurring state of mind and body, characterized by altered consciousness, relatively inhibited sensory activity, reduced muscle activity and inhibition of nearly all voluntary muscles during rapid eye movement (REM) sleep, and reduced interactions with surroundings.  Sleep is an important part of your daily routine—you spend about one-third of your time doing it.  Quality sleep – and getting enough of it at the right times -- is as essential to survival as food and water.   Sleep is important to a number of brain functions, including how nerve cells (neurons) communicate with each other.  

Certainly not any post on sleep, its depravity and ill-effects but more on awakening; not exactly the spiritual awakening, physical one too .. .. getting up early and praying Emperuman Sriman Narayana with Thiruppavai pasurams, the month being special, Margazhi.



இது மார்கழி ! - "திருப்பாவை மாதம்".  கோதை என்றால் தமிழில் மாலை. வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள். ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிக்கொண்டிருப்பதற்கு சிகரம் வைத்ததுபோன்றது திருப்பாவை. ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப்படுகின்றன.  திருப்பாவை மிகக் கடினமான ‘இயற்றர விணை கொச்சகக் கலிப்பா’ வகையைச் சேர்ந்தது.  ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை - பாவை நோன்பின் அற்புத சிறப்பை விளக்குவது.  கோதைப்பிராட்டி, வீடு வீடாக சென்று அதிகாலையில் தன் தோழியினரை எழுப்புகின்றார்.   இன்றைய பாசுரம் " நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!”  

பொதுவாக  தூக்கத்தின் ஒரு சுழற்சி 90 நிமிடங்கள் நீடிக்கும். ஒரு இரவின் தூக்கத்தில் இதுபோன்ற 4-5 சுழற்சிகளை நாங்கள் வழக்கமாக முடிக்கிறோம்!!   90 நிமிட சுழற்சியின் முதல் கட்டம் ,Non rapid eye movement (NREM) 'விரைவற்ற கண் அசைவு தூக்கம்' என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் நாம் இதை ஆழ்ந்த தூக்கம் என்று சொல்கிறோம். இது இரண்டாம் கட்டத்தை ஒப்பிடும்போது நீண்டது. 60-70 நிமிடங்கள் வரை இது இருக்கும்.இரண்டாவது கட்டம், விரைவான கண் அசைவு (REM) தூக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் அதிகமாக கனவு காண்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் இந்த நேரத்தில் தூக்கத்தில் நடக்கும் விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்கிறோம்  !! 

இராமாயண இதிஹாச புராணத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் "இராவணனின் தம்பி கும்பகர்ணன்" - நல்ல குணவான், பெரிய வீரன் .. .. .. ஆனால் வாழ்வின் பெரும்பாகத்தை உறங்கியே கழித்தவன் !  சனகாதி முனிவர்கள் இட்ட சாபத்தால் விசயன் எனும் இவன்  பூமியில் வந்து பிறந்ததாக கூறப்படுகிறது.  இவரது உறக்கத்திற்கு காரணம் பிரம்மனிடம் தவறுதலாக நித்திரையை கேட்டு பெற்றது.   அண்ணனைக் கண்டவுடன் கும்பகர்ணன் நிலத்தில் விழுந்து வணங்குவது ஒரு மலையே கீழே விழுந்து படுத்தது போல் இருக்கிறது எனவும் வலிமையும் பெருமையும் உடைய தன் தம்பியை இராவணன் ஒரு குன்று மற்றொரு குன்றைத் தழுவுவதைப் போன்று தழுவுகிறான் எனவும்  கம்பர் தமது இராமாயணத்திலே  உருவகப்படுத்துகிறார்.   பகைவனும் வியக்கும் தோற்றமுடையவன் கும்பகர்ணன்.  இங்கே இப்பாசுரத்திலே -  கர்ம வினை பேசப்படுகிறது. முற்பிறவியில் செய்த நற்செயல்களினால் இப்போது நல்வாழ்வு வாழ்கிறாய் என்கிறாள் ஆண்டாள்.   உறங்குதல் போட்டியில் கும்பகர்ணன் பாவை நோன்பிருக்கும் அப்பெண்ணிடம் தோற்றதால் அவன் தனது உறக்கத்தை அவளிடம் தந்து சென்றான் என்று சொல்வது காலட்சேபங்களில் வரும் சுவையான ஒரு கோணம்.



திருப்பாவை பாசுரமும் - எளிய விளக்கமும் (பல வலை தளங்களில் படித்தது, சில உபன்யாசங்களில் கேட்டது):

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். 

ஆண்டாள் மற்றும் தோழியர் அழைக்க இம்மியும் அசையாமல் தூமணி மாடத்து வீட்டில் துயில் கொண்டிருக்கும் அந்த பெண்பிள்ளை,   முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிதுக்கொண்டு இருப்பதாக ஆண்டாள் மருவுகிறாள்.   பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா. -  என்று அவளை துயில் எழுந்து, நீராடி, கண்ணனின் பேர்பாடி பாவை நோன்பிருக்க அழைக்கும் ஒரு அற்புத பாசுரம் இது. 

            Sooner, the English New year 2022 will be born and from 5.1.2022, Andal Neeratta uthsavam is scheduled to commence.  Last year, there was purappadu from day 2 of the uthsavam.  6.1.2021 dawned beautifully as there was Andal thiruveethi purappadu .. .. pray that this year too at least from Andal Neeratta uthsavam, there would be regular thiruveethi purappadu and life as normal as it was in earlier years.  Reminiscing the glorious past, here are some photos from Sri Godhapiratti Thiruvadipura Uthsvam of 2015 and Andal Purappadu with Sri Parthasarathi Emperuman in eka asanam.   

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26th Dec 2021.







No comments:

Post a Comment