To search this blog

Monday, July 5, 2021

Aphelion .. distance from Sun ! ~ சுடர்மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே

கடவுள் இருக்கிறாரா .. .. .. கடவுள் உண்டா இல்லையா? என்ற கேள்வி இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து கேட்கப்படுகின்ற கேள்வி. உலக மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் கடவுள் இருக்கிறார். அவர்தான் அதாவது, அந்த மாபெரும் சக்திதான் இந்த உலகையும் மக்களையும் படைத்து காத்து ரட்சித்து வருகின்றது என்பதை மிகவும் திடமாக நம்புகிறார்கள். இதுதான் யதார்த்தமான நிதர்சனமான உண்மை.  இம்மாதிரியான சிக்கலான அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் மிக அழகான அறிவுப்பூர்வமான பதிலை ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழி  பாசுரத்தின் மூலம் நமக்கு தருகிறார்,:


இன்று வெளிய சென்றவர்கள் உணர்ந்திருப்பர் ~  சூரியன் சுட்டு எரித்தான் - வெப்பம் அதிகமாக இருந்தது ! - சிலர் கூறியது 'சூரியன் அருகில் மிக அருகில் வந்து விட்டான்' - எனவேதான் வெம்மை அதிகரித்துள்ளது ! 

The sun is at the heart of the solar system. All of the bodies in the solar system — planets, asteroids, comets, and all other known / unknown things  — revolve around it at various distances. Mercury, the planet closest to the sun, gets as close as 29 million miles (47 million kilometers) in its elliptical orbit, while objects in the Oort Cloud, the solar system's icy shell, are thought to lie as far as 9.3 trillion miles (15 trillion km). But what is the distance between Earth and the sun?

Earth orbits the sun 100,000 times closer than the Oort Cloud, at an average of 92,955,807 miles (149,597,870 km). The distance from Earth to the sun is called an astronomical unit, or AU, which is used to measure distances throughout the solar system.

Miles away in USA, it is time for the  Independence Day holiday weekend  and the national weather forecast from NOAA is calling for afternoon high temperatures to hit at least 90 degrees Fahrenheit (32 degrees Celsius) across most of the High Plains, Intermountain, Desert Southwest and Pacific States.   Near record-breaking high temperatures at or above 100 degrees F (38 degrees C) are expected across parts of six states.  In fact, it was s expected to be as hot as the proverbial firecracker on the Fourth of July, with scorching readings of   108 degrees F (42 degrees C) at Las Vegas, Nevada, 110 degrees F (43 degrees C) for Palm Springs, California and 112 degrees F (44 degrees C) for Lake Havasu City, Arizona.  So, it may surprise you to find out that despite those triple-digit temperatures, our planet will reach aphelion, the point in its orbit when Earth is farthest from the sun, at 6:27 p.m. EDT (3:27 p.m. PDT/22:27 UTC) on Monday, July 5. At that moment, the distance between the Earth and sun will be 94,510,886 miles (152,100,527 kilometers) as measured from center to center.

During this annual milestone, the Earth is 3,111,432 miles (5,007,364 km) farther from the sun than it was on Jan. 2, when Earth was at perihelion, its closest point to the sun for 2021; a difference of 3.3%. In terms of radiant heat received by the Earth, that makes a difference of nearly 7%.  If you were to ask people in which month Earth is closest to the sun, most probably would guess June, July or August. But the warm weather doesn't relate to the Earth's distance from the sun. It's because of the 23.5-degree tilt of the Earth's axis that the sun is above the horizon for different lengths of time at different seasons. The tilt determines whether the sun's rays strike the planet at a low angle or more directly.




ஸ்ரீமந்நாரணன்  என்றாலே எங்கும் வியாபித்திருப்பவன்  -  உருவமாக இருந்தாலும் உருவம் அற்றதாக இருந்தாலும் இரண்டிலும் அவன் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்கிறார் ஆழ்வார். இன்னும் சொல்லப்போனால் பார்க்கப்படுகிற பொருட்களிலும் பார்க்கப்படாத அதாவது, கண்ணுக்குப் புலப்படாத பொருட்களிலும் பரம்பொருள் காணப்படுகின்றான்.  ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் எல்லாரையும் விட உயர்ந்தவன், அனைத்துக் கல்யாண குணங்களையும் உடையவன், திருமேனியை உடையவன், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஸம்ஸாரம் ஆகிய இரு உலகங்களுக்கும் தலைவன், வேதத்தாலே முழுவதுமாகக் காட்டப்பட்டவன், எல்லாவிடத்திலும் வ்யாபித்திருப்பவன், எல்லாரையும் நியமிப்பவன், சேதனர்களுக்கும் அசேதனப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய் இருந்து அவர்களை முழுவதுமாக ஆள்பவன் ஆகிய விஷயங்களை எடுத்துச் சொல்லி அப்படிப்பட்ட எம்பெருமான் தனக்கு மயர்வற மதிநலம் அருளியதை நினைத்து மகிழ்கிறார் முதல்  பதிகத்தில்.:

திடவிசும்பு எரி வளி நீர் நிலம்  இவை மிசை

படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்

உடல்மிசை உயிர் எனக் கரந்தெங்கும் பரந்துளன்

சுடர்மிகு சுருதியுள்  இவை உண்ட சுரனே

 

நிலையாக நிற்கும் ஆகாசமும் அக்னியும் வாயுவும் நீரும் பூமியும், இவைகளை இருப்பிடமாகக் கொண்டு பரந்த எல்லாப் பொருள்களும் தான் என்று சொல்லும்படி அவைகளுக்கு உபாதான காரணமாய், அவை எல்லாவற்றிலும் சரீரத்தில் ஆத்மா வ்யாபித்து இருப்பதைப் போலே, மறைந்து வ்யாபித்து இருக்கிறான். ஒளி மிகுந்து இருக்கும் வேதத்தின் உட்பொருளாகத் தோற்றுபவன் ப்ரளயம் வரும்பொழுது இவை எல்லாவற்றையும் விழுங்கிய “சுரன்” (தேவன்).  உலகுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு உடம்புக்கும் உயிருக்கும் உள்ளதுபோல் தொடர்பு உடையது என்கிறார் உலகமெல்லாம் எம்பெருமானுக்கு சரீரம்; அவன் சரீரி என்னும் வைணவத்தின் உயிர்நிலைக் கொள்கையை வெளியிடுகிறது இந்தப் பாசுரம். ஒவ்வொரு பொருளிலும் உடம்பில் உயிர் உறைவதுபோல் மறைந்திருந்து, எல்லாவற்றிலும் தனித்தனியே குறைவின்றி வியாபித்திருக்கிறான் எம்பெருமான் என்கிறார் நம்மாழ்வார்.



At Thiruvallikkeni – July is not exactly the hottest of months; in general, it would be April-May – in July comes Kodai uthsavam in Thiruvallikkeni.  Praying Emperuman that situation turns normal and we are able to have His kodai Uthsava purappadu and have darshan on the mada veethigal of Thiruvallikkeni. The Emperuman of Vedas swallowed the Universe that is manifest as fire, earth, water, sky and air.  Supreme Emperuman Sriman Narayana is everywhere;  is there in all the things made of the five elements – present, hidden like life in the body. Omnipresent – everywhere.  We fall at His lotus feet.

Reminiscing the past, here are some photos of Kodai Uthsavam day 3 on 26.6.2017.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
5th  July 2021.

 

Biblio : on Sun and distance : https://www.livescience.com/aphelion

திருவாய்மொழி பாசுர விளக்கம் : தோத்தாத்ரி சாரதி

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org 










No comments:

Post a Comment