To search this blog

Saturday, September 8, 2018

அர்ச்சாவதாரம் எளிது ~ வழுவிலா அடிமை : Sripadha Kainkaryam @ Thiruvallikkeni


The most acclaimed day  3rd Sept 2018 ~  hailing the birth of Lord Sri Krishna  ~  when our Emperuman Sri Krishna was born  -  Sri Periyazhwar sings that – people living in those beautiful mansions, spilled oil and turmeric powder on one another, in celebrations thus slushing the portico of Sri Krishna’s house.  .. .. ..  next day was the grand Uriyadi purappadu of Sri Parthasarathi in PUnnaikilai vahanam.  Sri Vaishnavam  dates back to centuries – following glorious principles  handed over to us through many generations by our Acharyars which include Sri Ramanujar and Sri Manavalamanunigal.   




Be it on this day ~ or any other day – how would an youngster spend time ? – in our school days, much time was spent on gully cricket, cricket discussions, debates on cine heroes  and so on … modern day youngsters spend more time on gadgets; TV; social media and more .. ..  imagine group of young and old – spending hours daily near the Lord doing kainkaryam !!

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் -எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று**
  `  ~  நம் மாமுனிவன் வாக்கு.

எம்பெருமானுடைய நிலைகளிலே  மிகமிக எளிதானதாக, அவனுக்கே உகந்ததாய்  - சௌலப்ய ஸ்வரூபமானது 'அர்ச்சாவதாரம்' எனும் திவ்யமங்கள ஸ்வரூப விக்கிரஹம்.  எம்பெருமான் தம் அடியார்களுக்காகவே மிகவும் எளியனாய் நாம் இருக்கும் இடத்துக்கே வந்து அருள் பாலிப்பது இந்த அர்ச்சை ரூபத்திலே ! இந்நிலையை நாம் அனுபவிப்பதற்கு அனுகூலமானவர்கள் - எம்பெருமானுக்கு அழகு சாற்றுப்படி சேர்க்கும் பட்டாச்சார்யர்களும் - எம்பெருமானை தம் தோளிலே சுமந்து திருவீதி வலம்வரும் ஸ்ரீபாதம்தாங்கிகளும்.

இது சரீரத்துக்கு சற்று கஷ்டம் தரக்கூடிய  கைங்கர்யம் !  மிக அதிக நேரம் இதற்க்காகவே ஒதுக்கவேண்டும் ! - புறப்பாட்டிற்கு சில மணி நேரங்கள் முன்போ அல்லது சில தருணங்களில் முந்தைய நாளிலே - வாஹனம் தயார் நிலையில் ஸ்ரீபாதம் தாங்கிகள் ஏற்பாடு பண்ணுகின்றனர்.  ஸ்ரீஜெயந்தி உறியடி புறப்பாட்டின் போது ஸ்ரீபார்த்தசாரதி திருமுன்பே சிங்கராச்சாரி தெருவில் உறியடி நிகழ்கிறது.  இது 2 மணி காலம் கூட நீட்டிக்கிறது. உறியடி அடிக்கும் யாதவ சிறுவர்களும் பெரியவர்களும் - 'கோபால சங்கீர்த்தனத்துடன்' - தண்ணீர் சுழன்று சாட்டைப்போல் அடிக்கப்பட்ட உற்சாக விளையாட்டை உறியடி திருவிழா நடக்கும் நேரம் - பெருமாள் ரசித்திருக்க, ஸ்ரீபாதம் தாங்கிகள் காத்திருக்கின்றனர்.  ப்ரம்மோத்சவ காலங்களில் சுமார் 3 அல்லது அதற்கும் மேற்பட்ட காலம் புறப்பாடு நடக்கின்றது.  கருடசேவை புறப்பட்டு ஐந்தரை மணி காலம் ஆகிறது.

இப்போது இந்த இளைஞர்களை, அவர்தம் சிரத்தையை நினைத்து அருகில் சென்று கவனிக்கவும். வஸ்திரங்கள் சற்று அழுக்குற்று,  தோள்களில் சதை வழன்று, தோள் சற்று மேடிட்டு, அவர்தம் உடல்நிலையை பறை சாற்றும்.  சிலரது கால்களில் காயங்களும், கால் முட்டியை பலப்படுத்த ஸ்ட்ரெஸ் பேண்ட்டேஜ்களும், சில இரத்த காயங்களும் கூட கண்படலாம் ... .. .. இவர்கள் இதை பொருட்படுத்துவதும் இல்லை, பிரஸ்தாபிப்பதும் இல்லை.  இவர்களது சித்தம், மனஓட்டம், பேச்சு, வாழ்க்கை எல்லாம் - எம்பெருமானிடத்திலே  கைங்கர்யம் மட்டுமே.   .   “ ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா  அடிமை செய்ய வேண்டும் நாம்,” – என நம் காரிமாறன் சொன்னது போலவே - இது கைங்கர்யம், பெருமாள் கைங்கர்யம், அவன் உகக்கும் கைங்கர்யம்.  இவர்களில் பலர் மிக நல்ல படிப்பாளிகள், கணினி மென்பொருள், வங்கி, காப்பீடு, வர்த்தகம், ஏற்றுமதி நிறுவனங்கள், அரசாங்க உயர் பதிவியில் இருப்பவர்கள்.  இவர்களை பிணைத்திருப்பது இவர்தம் அறிவோ, படிப்போ, ஏனைய பிற திறைமைகளோ அல்ல ~ எம்பெருமானுக்கு கைங்கர்யம் எனும் பட்டு நூல் மட்டுமே !!

நிற்க !  ~ இதுவோ கடினம் என விலகலாகா !  .... திருவல்லிக்கேணி புண்ணிய பூமியிலே - சிறார்கள் முதல், நடு வயதினர், சில 60 வயதை தாண்டியோர் கூட இந்த கைங்கர்யத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளவர்கள்.  பார்க்க ஒல்லியாய் உடல்பலம் வெளிப்படியாய் தெரியார் கூட சிறப்பாய் மிளிர்வதை நான் கண்டு ஆனந்திக்கிறேன். 

ஒரு முதிர்ந்த அனுபவம் உடைய ஸ்ரீபாதம்தாங்கி சொன்னது ~ இது ஆர்வம், மன வலிமை, கைங்கர்ய ஈடுபாடு, குழு உணர்வு சம்பந்தப்பட்டது.  திருக்கோவிலுக்கு கைங்கர்ய நோக்குடன் வரும் ஒவ்வொருவரும் செய்யத்தக்க கைங்கர்யங்கள் உள்ளன.  இங்கே பெரியோர் சிறுவர்களை நன்கு வரவேற்று வழி நடத்திச் செல்கின்றனர்.  பெருமாள் புறப்பாட்டின் போது - சிறிய குழந்தைகள் வெண்சாமரம், திருவாலவட்டம்  கைங்கர்யம் புரிய, அனுபவமுள்ள இளைஞர்கள் லாவகமாய் தங்க குடை, வெள்ளி குடை பிடிக்க, இளைஞர்கள் சீர்மையாய் ஒரே நடையுடன் தோளுக்கு இனியான் (என்னே ஒரு அழகு பெயர்ச்சொல் - எம்பெருமான் அமர்ந்திருக்கும் கேடயத்தை குறிக்கும் - எம்பெருமானை  தாங்கள் தோள்களிலே ஏளப்பண்ணுதல் சிறப்பாய், இனிமையாய்) ஏளப்பண்ண  - பெருமாள் வீதி தனிலே  திருவீதி வலம் வரும்போது - 14 அ 16 அ 18 அ 20 ஜான் குடைகளை மிக லாவகமாக தேர்ந்தோர் சிலர் தம் மடியில் கட்டிக்கொண்டு எம்பெருமானை அரவணைத்து நடந்து வர - உத்சவ புறப்பாடுகளில்  - பெரிய வாரையில் - பல ஸ்ரீபாதம்தாங்கிகள்  ஒன்றாய் வாகனத்தை ஏளப்பண்ணுவது காண மிகச்சிறப்பானது. - நமக்கு ஒரு இனிய, அபூர்வ  அழைப்பு.  இளைஞர்களோ ~ நடு வயதினரோ ~ அலுவலக பணிகளில் இருந்து ஒய்வு பெற்றோரோ - வாருங்கள்  - இதில் இனணந்து கைங்கர்யம் பண்ண தேவை முக்கியமாக மனமும் ஆர்வமும் தான்.  உடல் பலம் அல்ல.


எம்பெருமான் இடத்திலே நம்மை ஈடுபடுத்திக்கொண்டோர்க்கு 'சகலமும் அவனே'  -  நம்மை அழைத்து, அரவணைத்து, காத்து, சரியான பாதையிலே எடுத்துச்செல்பவன் அவன் ... அவனது திருப்பாத கமலங்களை அருகே இருந்து அனுபவித்து, அவனுக்கு கைங்கர்யம் பண்ண ஒரு அரிய வாய்ப்பு இக்கைங்கர்யம்.



Swami Nammalwar ordains that - when we do kainkaryam to Lord (to Him at Thiruvenkadam), we must do service by being with HIM throughout our life and do as a slave would serve his master. Life in a divyadesam is always exhilarating – you get to mingle with so many persons whose life is entwined in service to Emperuman Sriman Narayana.  Of the many kainkaryams, Sripadham thangi is physically associated too and can be very demanding.  At Thiruvallikkeni there are many dedicated youngsters who are extremely committed to the kainkaryam of carrying the Lord on their shoulders and do all the associated activities.  Their involvement actually commences hours before every purappadu and ends an hour or so later.

A couple of decades ago, when those coming for rendering this service were becoming thinner, this group got more organized and formed Sri Thennacharya Sri Vaishnava Sripadham Thangigal Kainkarya Sabhai ~ now a registered association too.   For the kainkaryabarars,  like Sripadhamthangigal,  involvement starts hours before the actual purappadu and ends much after Perumal’s vahanam descends at Vahana mantapam and Perumal returns to the Temple. Not all would know there is more …it is not only purappadu but prior and later – after the purappadu, the vahanam needs to go back to its place … and strategically, the vahanam for the next purappadu is readied – the evening purappadu would end in dead of night and the morning purappadu would start early morning and hence the work –



Here, are a couple of photos of Thennacharya Srivaishnava Sripadham Thangigal of Thiruvallikkeni, taken during Uriyadi purappadu and some taken earlier. For some it is yet another day ~ for the bakthas, it is great day of purappadu  and for Sripadham thangigal, it is not work ~ b u t – whatever they do is kainkaryam unto Him.  Poliga, Poliga, poliga !!! – long live Srivaishnavas and their kainkaryam

Adiyen Srinivasadhasan.













The achievements & activities of Sri Thennacharya Sripadham thangigal as appreciated by Geethacharyan magazine in 2017






9 comments:

  1. Very nice information and explanation about The Thennacharya sampradhaya SRIPADHAM THANGIGAL.Dhanyosmi. Adiyen Srinivasan daasan. K.RAMANI NEW PERUNGALATHUR.
    S

    ReplyDelete
  2. They are.doing. a marvelous kainkariyam. Perumal anugraham kidaikattum.

    ReplyDelete
  3. Realy great youngsters as well aged people are doing we pray God for all LOGA SAMASTHA SUKINO BHAVANTHU

    ReplyDelete
  4. நான் அறிந்திராத விஷயம். டெண்டர் எடுத்து சேவகம் செயகிறார்களா! என்ன ஒரு பக்தி! எல்லோரும் கற்றுச் சிறந்து, நல்ல நிலையிலும் இருப்பவர்கள், ஓய்வில்லாமல் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வது பெருமாளின் ஆசிர்வாதம்தான். (ஸ்ரீரங்கத்தில் இப்படியா என்று தெரியவில்லை, அங்கு இளைஞர்கள் குறைவு என்று நினைக்கிறேன். கோயில் சம்பாவனையும் உண்டு என்று நினைக்கிறேன்.)
    இவர்கள் உதாரணமாயிருந்து மற்ற இளைஞர்களுக்கும் வருங்கால சந்ததியினருக்கு பெரிமாளுக்கு கைங்கர்யம் குறைவில்லாமல் நடக்க பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  5. இதல்லவோ கட்டுரை....
    கைங்கரியபரர்களின் பெருமையை பரக்கப்பேசும் இதல்லவோ பேச்சு...
    அல்லிக்கேணியானின் அழகுப்பிள்ளைகள் இவர்களன்றோ...
    வணங்குகிறேன்...அத்துனை கைங்கரியபரர்களின் சிரத்தையை....

    ReplyDelete
  6. அடடா என்னே கைங்கர்யம் அடியேனுக்கு வைகுண்டம் வேண்டாம் திரு அல்லிக்கேணியே போதும் ஸ்வாமி

    ReplyDelete
  7. Exceptionally well written ~ kainkaryam done by these youngsters is laudable - you have aptly brought out the essence in lucid narration

    ReplyDelete
  8. Super.. I would also like to join the kaingaryam ..

    ReplyDelete
  9. Awesome .like ❤ a very special service of God lifting

    ReplyDelete