To search this blog

Saturday, September 15, 2018

Avani Swathi Sri Azhagiya Singar Purappadu 2018 ~ இயற்பா - திருவந்தாதி


செப்ட் 13 அன்று ஆவணி ஸ்வாதி ~ திருவல்லிக்கேணியில் திரு தெள்ளியசிங்கர் சிறிய மாடவீதி புறப்பட்டு கண்டருளினார்.  கோஷ்டியில் பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி சேவிக்கப்பெற்றது.  'அந்தாதி ! ~ இயற்பா' - என்பன பற்றி அடியேனின் சில எண்ண ஓட்டங்கள் இங்கே. எம்பெருமானான ஸ்ரீமன் நாராயணனுக்கு பூ மாலைகளும், பொன் மாலைகளும் கூட - அருந்தமிழ் சொல்மாலையும் அழகு சேர்க்கின்றன - எனவேதான் ஒவ்வொரு புறப்பாட்டின் போதும் - பெருமாள் முன்பே திவ்யப்ரபந்தம் சேவிக்கப்பெறுகிறது.



தமிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ்.  முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். பொதுவாகத் தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும்.

யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். யாத்தல் என்னும் சொல் கட்டுதல் என்னும் பொருளை உடையது. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளை ஒருசேரக் கட்டி அமைப்பது என்னும் பொருளிலேயே செய்யுள் யாத்தல் என்கிறார்கள்.  செய்யுளில் இயற்றப்பட்ட இலக்கியங்களுக்கும் இலக்கணங்களுக்கும் விளக்கம் கூறுவதற்கே உரைநடை பயன்படுத்தப்பட்டது.   அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் ஆகும். இந்த உறுப்புகளைப் பற்றியும் ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகிய பாக்களையும் அவற்றின் வகைகளையும் பற்றியும் விவரிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும்.

நம் நாலாயிர திவ்யப்ரபந்தத்திலே - இசைப்பா, இயற்பா எனப் பிரித்து, இசைப்பாக்களை மூன்று பகுதிகளாகவும், இயற்பாக்களை ஒருபகுதியாகவும் ஸ்ரீமன் நாதமுனிகள் வகுத்தருளினார். அவற்றில் மூன்றாவது ஆயிரமாகிய இயற்பா, இயலாகச் சேவிக்கத்தக்கது எனும் பொருளில் அவ்வாறு பெயர்பெற்றது.  நாதமுனிகள் இசைப்பாக்களைத் தேவகானத்திலே ஏறிட்டுச் சேவித்ததாகவும் இயற்பாவை இயலாகச் சேவித்து வந்ததாகவும் கோயிலொழுகு  கூறுகின்றது.

முதலாவார் மூவரே எனும் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரின் படைப்புகளும் தான் இயற்பாவின் ஆரம்பம்.  திருக்கோவலூரிலே ஒரு இடைகழியிலே, ஒரு மழை நாளிலே, மூவரும் சந்தித்த போது - அவர்கள் அடைந்த ஆனந்த அனுபவமே இப்பாடல்கள்.  இவை அந்தாதிப்பாடல்கள் - முதல், இரண்டாம், மூன்றாம் திருவந்ததிகள்.

அந்தாதி ( கடைமுதலி / ஈற்றுமுதலி )என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி ஆகிய இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல்சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது அந்தாதித் தொடை (கடைமுதலி/ஈற்றுமுதலித் தொடை) எனப்படும். அந்தாதி (கடைமுதலி / ஈற்றுமுதலி ) அமைப்பு பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கு வசதியாக உள்ளது.


இதிலே மற்றோரு சிறப்பம்சம் உள்ளது - நூறு பாடல்கள் அந்தாதி .. .. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் ஆளுக்கு நூறு பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.  அதாவது, முதல் பாடலின் கடைசி வரியில் அடுத்த பாடலின் ஆரம்ப வார்த்தை இருக்கும். இப்படிச் சொற்களை மாலை போன்று தொடுக்கிறார்கள் மூவரும்.

பொய்கைப்பிரானின் முதல் திருவந்தாதி முதல் பாடல் -  " வையம்  தகளியா வார் கடலே நெய்யாக" .. .. இடராழி நீங்குகவே என்று; என முடிகிறது. இரண்டாம் பாடல் "என்று கடல் கடைந்து .... உண்டு உமிழ்ந்த பார்" என முடிந்து, மூன்றாவது பாரளவும் ஓரடி வைத்து .. .. ... என தொடர்கிறது.  .. .. ஈற்றுப்பாடல் (100வது) - "மாயவனையே மனத்து வை"  - என முடிய - இப்போது முதல் பாடலை நினைவு கூறுங்கள் .. .. " வையம்  தகளியா வார் கடலே !"  -  விசேஷம் நூறாவது பாட்டின் கடைசி வார்த்தை முதல் பாட்டின் முதல் வார்த்தை. மாலை ஒரு சுற்று முற்றுப் பெற்று விட்டதல்லவா?

இது போலவே இரண்டாம் திருவந்தாதியும், மூன்றாம் திருவந்தாதியும் - திருமழிசைப்பிரானின் நான்முகன் திருவந்தாதியும் அழகுற மிளிர்கின்றன.



13th Sept 2018 was Avani Swathi and Sri Azhagiya Singar had chinna mada veethi purappadu.  In the goshti, it was Peyalwar’s Moonram thiruvanthathi. Dark clouds were on the horizon and it appeared as though it would rain heavily .. .. .. but !

பேயாழ்வாரின் பக்தி சுரக்கும் வார்த்தைகளில் இங்கே இன்னொரு பாசுரம் :

பொலிந்திருண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,*
மலிந்து திருவிருந்த மார்வன், - பொலிந்த*
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே, *
தெருடன்மேல் கண்டாய் தெளி.*

Azhwar likens the lightning appearing clear on dark rain cloud – with the appearance of Sriman Narayana with Sri Lakshmi on His chest, seated resplendently on Garuda as mount.  Having seen the lotus feet through knowledge Alwar directs our hearts to fall and follow those divine feet, which alone can lead us to salvation. 

~adiyen Srinivasa dhasan.










2 comments:

  1. Photos are not clear except a couple of images.

    ReplyDelete
  2. who ever made this comment ! ~ knows the truth ... some called, some asked over email - for these photos - to have them printed and kept for worship .. I have shared .. and you made your comments .

    ReplyDelete