To search this blog

Friday, February 23, 2018

Thavana Uthsavam day 2018 ~ Thavana Uthsava Bungalow

                                       1970களில்  எங்கள் திருவல்லிக்கேணி இன்னமும் அனுபவிக்க சிறந்த இடமாக இருந்தது.  மாட வீதிகளில் அவ்வளவாக வண்டிகள் பயணிக்காது.  இந்து உயர்நிலைப்பள்ளி சேர்ந்ததால் பைகிராப்ட்ஸ் சாலையில் பல்லவன் பஸ் வரும் - கவனமாக சாலையை கடக்கவும் என அறிவுரை வழங்குவர்.  சாமராவ் பள்ளி நாள்களிலிருந்தே - பள்ளி முடிந்து மாலையில் பங்களாவுக்கு கிரிக்கெட் விளையாட செல்வேன்.  


பங்களா என்றால் நீங்கள் நினைக்கும் ஒரு பணக்கார வீடல்ல.  இது துளசிங்க பெருமாள் தெருவில் - மேட்டின் மேல் பெரிய  மண்டபமும், நடுவே மேடையும், இரண்டு கோரி எனப்படும் (சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ளது போன்ற அமைப்பும்)  அக்காலத்தில் இதனுள் நிறைய வௌவ்வால்  இருக்கும் / படபடவென பறக்கும்  எனவே மேலே தைரியமனாவர்கள் மட்டுமே பிரவேசிப்பார்கள்.  மேடை சுற்றி அரளி போன்ற செடிகளும், மணற்பரப்பும், ஒரு பக்க வீடுகளும் என ஒரு அமைப்பு - அந்நாள் கிரிக்கெட் மைதானம்.    சிறுவர்களை டீமில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் எனினும் பக்கத்தில் நின்று, பந்து பொறுக்கி போட்டாலே ஆனந்தமாக இருக்கும்.  




பங்களா மோட்டில் பலர் அமர்ந்த்து பார்க்க விறுவிறுப்பான விளையாட்டு நடக்கும்.  ஒரு பிப்ரவரி மாத நாளில் - விளையாடும் ஆர்வமுடன் உள்ளே சென்றால் - ஒருவரும் விளையாடவில்லை.  அந்நாள் பிரபலங்கள் வரிசையாக நின்றிருக்க - பெரிய கிணற்றில், டீம் ஓபன்னர் - உள்ளே இறங்கி வாளியில் நீர் வார, வரிசையாக கைகள் மாறி - பங்களா மண்ணில் வாசமெழ, அனைவருமே இறை பணியில்.  நீர் வாங்கி மண் தர பளீராக - உடனே செம்மண் மற்றும் கலர் பொடிகள் தூவி வண்ண கோலங்கள் உயிர் பெற்று எங்கள் மைதானம் பக்தி மயமானது.  



இனிய நாதஸ்வரம் ஒலிக்க ~ பங்களாவில் நான் தினமும் பார்க்கும்  (அப்பொழுதே 90 வயதோ என வியக்க வைக்கும்) பாட்டி, சிகப்பு அல்லி மலர்களை நயத்துடன் தொடுத்துக்கொண்டே ஸ்ரீரங்கநாதனை பாட, திரை விலகி - எங்கள் அற்புத நாயகன் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு.  கிரிக்கெட் டீமும் கோலம் போட்ட தாவணி பெண்களும் பெருமிதத்துடன் தொடர தவன உத்சவ பங்களா உள்ளே புறப்பாடு. 

எனது தாத்தா  ஸ்ரீ அத்திசோழமங்கலம் இராமானுஜ அய்யங்காரிடமும் எனது அம்மாவிடமும் - தவன உத்சவ பங்களா பற்றியும், வருடாந்தர தவன உத்சவம் பற்றியும் அறிந்து வியந்தது பின்னர். இன்றும் ஓவ்வொறு தவன உத்சவத்தின் போதும் பல்வேறு வருடங்கள் முன்பு நடந்த சிறுவயது நினைவுகள் வண்ணமாடுவது இயல்பே.

The month of Masi brings back sweet memories of school days,  Cricket at nearby bungalow maidan  - and my childhood experience is reminisced above.  Thavana Uthsava Bungalow derives its name from the Thavana Uthsavam that occurs for 5 days starting Masi Krithikai. This Bungalow as I could recall from my young days, had a big well with steps inside,  trees of rose Nerium Oleander [Arali] and a differently looking  structure having two ‘goris’ [minars] ~ one can reach the top of the minars through the steps provided one is not afraid of bats.  Enthusiastic residents would draw water from the well, sprinkle on the sands that surround the raised structure, colourful kolams will be drawn adding to the religious atmosphere.

During this Uthsavam, Perumal takes rest under the roof made of thavanam – (Tamil: தவனம்) [Artemisia pallens],  an aromatic herb, in genus of small herbs or shrubs, xerophytic in nature.  This herb pervades great aroma and provides coolness. These days a kooralam [roof] made of Dhavanam is set up over the resting place of the Lord.

Here are some photos of Thavana Uthsava purappadu in the evening on day 1 – 22nd Feb 2018.


~adiyen Srinivasa dhasan (Mamandur Srinivasan Sampathkumar) 










1 comment: