To search this blog

Thursday, March 8, 2012

Thiruvallikkeni Masi Magam 2012


Today is Masi Magam [8th March 2012]  Early morning  Sri Parthasarathi  adorning beautiful  ornaments had purappadu atop Karuda Vahanam.

After a brief halt at Kangai Kondan Mandapam, Sri Parthasarathi visited the shores of Marina beach – the coast of Bay of Bengal.  “Theerthavari’  of Sri Chakkarathazhwaar was conducted.

100s of bakthas accompanied Sri Parthasarathi and had holy bath in the sea.  Here are some photos taken few hours ago.

இன்று மாசி மகம் - மாசி மாதத்தில் பௌர்ணமி  நன்னாள். மாசி மகம் அன்று பெருமாள் கடல் மற்றும் நீர் நிலைகளுக்கு எழுந்து அருள்வது வழக்கம். இன்று அதிகாலை ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் கருட வாகனத்தில் அழகாக எழுந்து அருளினார்.   கங்கை கொண்டான் மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளி நல்ல தம்பி தெரு வழியாக மெரினா  கடற்கரைக்கு எழுந்து அருளினார். 

வங்கக் கடலில் மெரினா அருகே (முன்பு சீரணி அரங்கம், திலகர் திடல் இருந்த இடம்) எழுந்து அருளினார்.   முன்னம் காலத்தில் பெருமாளுக்கு அழகான பந்தல் போடப்பட்டு திருமஞ்சனம் கண்டு அருளினது ஞாபகம் உள்ளது. கால போக்கில் பல விழயங்கள் மாறி உள்ளன. சமீப காலங்களில் பெருமாள் எழுந்து அருள்வது மட்டுமே நடை பெறுகிறது. 

அதிகாலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள்  கடல் அருகே எழுந்து அருளிய உடன், ஸ்ரீ  சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடை பெற்றது.  உடன் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கடலில் குளித்தனர். சாதாரண நாட்களில் கடலில் குளிக்க கூடாது என்பர் பெரியோர் - இன்று போன்ற முக்கிய தினங்களில் குளிப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. இன்று காலை  எடுத்த சில புகைப்படங்கள் இங்கே.

அடியேன் - ஸ்ரீனிவாச தாசன். 



கங்கை கொண்டான் மண்டபத்தில் ஸ்ரீ பார்த்தசாரதி  


பீச் சாலையில் ஸ்ரீ பார்த்தசாரதி 
வங்கக் கடலில் ஸ்ரீ பார்த்தசாரதி 


பக்தர்களுக்கு வரவேற்பு 

ஸ்ரீ சக்கரத்தாழ்வார் 







No comments:

Post a Comment