To search this blog

Monday, July 1, 2013

Pushpa Pallakku - Sri Azhagiya Singar - Thiruvallikkeni 2013

பூக்கள் அழகானவை; Clitoria Ternatea
-  கேள்விப்பட்டு இருக்கிறீர்களா  ?

After 10 days of  Brahmothsavam, it is rest called ‘Vidayarri’ for Sri Azhagiya Singa Perumal and after 3 days of rest, comes the florally bedecked ‘Pushpa Pallakku – the palanquin with flowers’. 

It looks beautiful and pervades goodness all around – treat to the eyes, ears and senses  of Bakthas. At Triplicane [Thiruvalikkeni divyadesam] on the night of 30th June 2013, Sri Azhagiya Singar  had purappadu in Pushpa pallakku and photos taken on that occasion  can be worshipped below :-


பூக்கள் அழகானவை; நறுமணம் தர வல்லன:: மல்லிகை,  முல்லை, செண்பகம்,தாமரை, மகிழம், ரோஜா,  அல்லி  மற்றும் விருச்சி, செங்காந்தள் ஆம்பல்; அனிச்சம் ; குறிஞ்சி ; வாகை; வகுளம் ; கோங்கம்;   என எவ்வளவோ நறுமலர்கள் உள்ளன.   பூக்களை அழகாக  தொடுத்து இறைவனுக்கு சாற்றி வழிபடுவது நெடுங்காலமாக உள்ளதுஒரு நாட்டில் அதிகமாக மலர்கள் காணப்படுவதனை வைத்தே அந்த நாட்டின் நீர்வளம், நில வளம், மக்களின் மனவளம், ஆகியவற்றை நன்கு உணரலாம். இதனைப் பழங்காலந்தொட்டு தமிழ்ப் புலவர்கள் தம் இலக்கியங்கள் வாயிலாகப் பிறர்க்கு உணர்த்தி வந்துள்ளனர்மலருக்கு பருவங்கள் (stages) உண்டு.;    அரும்பு  மொட்டு   முகை   மலர் என எழுவகைப்படுமாம்.  புஷ்பங்கள்  பற்றிய பல குறிப்புகள் சங்க தமிழிலும் நமது திவ்யப்ப்ரபந்தத்திலும் உள்ளன. 
கோதைப்பிராட்டியாம் ஆண்டாள்"தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற" என அரும்புகளையுடைய கொடி முல்லைகள்அழகர்  பெருமானின்  வெளுத்த புன்சிரிப்பை காட்டுகின்றதாய் கூறுகின்றார்.    பிறிதொரு இடத்தில்  "கருவிளையொண் மலர்காள் காயாமலர்காள் திருமால் உருவொளி காட்டுகின்றீர்" என  அழகிய கருவிளை மலர்கள் மற்றும் காக்கணம் பூக்கள்எம்பெருமானுடைய திருமேனியின் நிறத்தை நினைப்பூட்டுவதாக பகர்கிறார்.காயா மலர்காக்கணம் பூ சங்குப்பூ. (Clitoria Ternatea)-of family  -:  Fabaceae, [Papinonaceae].   
சுவாமி நம்மாழ்வார் "மல்லிகை கமழ்தென்றலீருமாலோ வண்குறிஞ்சியிசை"  என்னும் போது  - மல்லிகையின் பரிமளத்தோடு கூடின  தென்றலையும்; வண் குறிஞ்சி இசை என்னும்  இடத்தில் 'செவிக்கினிய குறிஞ்சிப் பண் இசையையும்' குறிக்கிறார்- குறிஞ்சி என்று ஒரு நிலப்பரப்பும்; குறிஞ்சி என்று அரிய பூவினமும் உண்டு.  பெரியாழ்வார்  - "வலங்காதின் மேல்தோன்றிப் பூவணிந்து மல்லிகை வனமாலை மெளவல் மாலை" என - மேல்தோன்றிப்பூமல்லிகை, செங்காந்தள் பூகாட்டுமல்லிகை மாலை இவற்றை குறிக்கிறார்
இத்தகைய  அருமையான  நறுமணம்  நல்ல  மலர்களால் ஆனது 'பூப்பல்லக்கு' எனும் 'புஷ்பப் பல்லக்கு  '. மிக அலங்காரமானது.  சுகந்த வாசனையும் கொண்டதுதிருவல்லிக்கேணியில்  பிரம்மோத்சவம் கண்டு அருளிய  தெள்ளிய சிங்கர் எம்பெருமான் மூன்று நாட்கள்  'விடாயாற்றி' என இளைப்பாறுகிறார்பிறகு மணம் தரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'புஷ்பப் பல்லக்கில்' புறப்பாடு கண்டு அருள்கிறார்.   பெருமாளுக்கு புஷ்பங்கள் சமர்ப்பித்தலும், அதற்கான நந்தவனத்தை பராமரித்தலும், உகப்பான கைங்கர்யங்களாக கருதப்படுகின்றன. நன்மலர்கள் எல்லா இடங்களிலும் அழகு தரும்எனினும் பூக்கள் அணிவதற்கு ஏற்ற சகல சௌந்தர்ய ஸௌகுமார்யங்களையும் தகுதியையும், முதன்மையும் உடையவர் - ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே.   
30.6.2013 அன்று இரவு, ஸ்ரீ அழகியசிங்கர் சீர்மையுடன் அமைக்கப்பட்டு மணந்த புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார்.    அவ்வமயம்  எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே 

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.









No comments:

Post a Comment