To search this blog

Monday, March 8, 2010

அழகிய சிங்கர் தவன உத்சவ புறப்பாடு -[Ashagiya Singar Thavana Uthsavam]

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கொண்டாடும் உத்சவங்களில் தவன உத்சவம் முக்கியமான ஒன்று. துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் தவன உத்சவ பங்களா அமைந்து உள்ளது.



ஸ்ரீ பார்த்தசாரதிக்கு மாசி கிருத்திகை தொடங்கி ஐந்து நாட்களும், வரதருக்கு மாசி ஹஸ்ததன்றும் அழகிய சிங்கருக்கு மாசி சுவாதி விசாகம் அனுஷம் மூன்று நாட்களும் தவன உத்சவம் சிறப்ப நடக்கிறது. தினம் காலை பெருமாள் பங்களாவுக்கு எழுந்தருளி திருமஞ்சனமான பிறகு சாயங்காலம் பெரிய மாட வீதி புறப்பட்டு கண்டு அருள்வார்.

திருவல்லிக்கேணியில் மூன்று பங்களாக்கள் உண்டு. தவன உத்சவ பங்களா, கோமுட்டி பங்களா மற்றும் வசந்த உத்சவ பங்களா என்பவை இவை.

கோமுட்டி பங்களா கோவிலுக்கு பக்கத்தில் பேயாழ்வார் தெருவில் உள்ளது. வேங்கடரங்கம் பிள்ளை தெருவில் மிக அழகானதொரு இடமாக கோமுட்டி பங்களா இருந்தது. பெருமாள் வசந்தம் மற்றும் கோடை உத்சவ காலங்களில் புறப்பட்டு கண்டு அருளி இங்கே எழுந்தருள்வர். அழகான மத்ய மண்டபமும் இரு பக்கங்களில் தடாகைகளும் ஏராளமான மரங்களும் பூச்செடிகளும் நடை பாவி கிணறுமாக மனம் கமழ்ந்த இவ்விடத்தில் ரம்யமாக திருமஞ்சனம் நடக்கும். இந்த உற்சவங்கள் தவிர பிரம்மோத்சவ காலங்களில், ஐந்தாம் நாள் காலையும் திருத்தேர் அன்று இரவும் பெருமாள் இங்கே எழுந்தருள்வது வழக்கமாக இருந்தது. கடந்த பத்து வருடங்கள் மேலாக இது தடைப்பட்டு தற்சமயம் பெருமாள் இப்போது இங்கே ஏள்வது தடைப்பட்டு போனது வருத்தமே !

தவன உத்சவ பங்களா நடுவில் மண்டபமும், பெரிய திண்ணையும் நிறைய மணல் பரப்புமாக இருந்தது. இங்கும் ஒரு பெரிய கிணறு உண்டு. கோரி என்றுஅழைக்கபட்ட இரண்டு மாடங்கள் இருந்ததன. வட்ட படிக்கட்டுகள் ஏறி செல்ல இயலும். மேலே நிறைய வவ்வால்களுடன் பயம் தரும் இடமாக இருக்கும். கால போக்கில் இந்த கோரிகள் சரிந்து சிதிலமாகின. சமீபத்தில் பராமரிப்பு செய்யப்பட்டு இப்போது மண்டபம் நன்றாக உள்ளது. ஸ்ரீ பார்த்தர், அழகிய சிங்கர், வரதர் தவன உத்சவம் நடக்கும். தவிர பிரம்மோத்சவ காலங்களில், ஐந்தாம் நாள் காலையும் ஈக்காடு தாங்கல் திருஊறல் உத்சவம், ராம நவமி உத்சவம் காலங்களில் பெருமாள் இங்கே எழுந்து அருளுகிறார்.
முன்பு பெருமாள் எழுந்து அருளும் காலங்களில் நீர் இறைத்து சுத்தம் பண்ணி கோலங்கள் போட்டு பரிமளிக்கும்.

தவனம் என்பது வாசனை அளிக்கும் நறுமண பயிர். ஒரு காலத்தில் இந்த இடத்தில தவனம் மண்டி இருந்து இருக்கலாம். தற்போது தவனத்தால் மேற் கூறாளம் அமைக்கப்பட்டு பெருமாளுக்கு நறுமணம் கமழும்.

நேற்று நடந்த அழகிய சிங்கர் தவன உத்சவ மூன்றாம் நாள் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகை படங்கள் இங்கே

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

கோவில் வாசலில்

திவ்ய பிரபந்த கோஷ்டி ஆரம்பம்

புறப்பாடு கண்டு அருளும் பெருமாள்

தவன உத்சவ பங்களாவில்

தவன கூராளம்


No comments:

Post a Comment