To search this blog

Sunday, February 28, 2010

மாசி மகம் - ஸ்ரீ பார்த்தசாரதி வங்கக்கடலில் தீர்த்தவாரி {Sree Parthasarathi visiting Bay of Bengal}

இன்று மாசி மகம் - மாசி மாதத்தில் பௌர்ணமியும் மக நட்சத்திரமும் சேர்ந்து உள்ள நன்னாள். மாசி மகம் அன்று பெருமாள் கடல் மற்றும் நீர் நிலைகளுக்கு எழுந்து அருள்வது வழக்கம்.


இன்று காலை ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் கருட வாகனத்தில் அழகாக எழுந்து அருளினார். வழக்கமாக தெற்கு மாடவீதி துளசிங்க பெருமாள் தெரு, சிங்கராச்சாரி தெரு வழியாக நல்லதம்பி தெருவில் திரும்பி கடற்கரைக்கு எழுந்து அருள்வார். இன்று ஒரு அசந்தர்ப்பம் காரணமாக இவ்வழி ஏள இயலவில்லை. பெருமாள் குளக்கரை புறப்பட்டு கண்டு அருளி சுங்குவார் தெரு வழியாக எழுந்து அருளி பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.


மெரினா கடற்கரையில் (முன்பு சீரணி அரங்கம், திலகர் திடல் இருந்த இடம்) எழுந்து அருளினார். எனது சின்ன வயதில் பெருமாளுக்கு அழகான பந்தல் போடப்பட்டு திருமஞ்சனம் கண்டு அருளினது ஞாபகம் உள்ளது. கால போக்கில் பல விழயங்கள் மாறி உள்ளன. சமீப காலங்களில் பெருமாள் எழுந்து அருள்வது மட்டுமே.


அதிகாலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புறப்பட்டு கண்டு அருளி கடற்கரையை அடைந்தார். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்த உடன் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கடலில் குளித்தனர். சாதாரண நாட்களில் கடலில் குளிக்க கூடாது என்பர் பெரியோர் - இன்று போன்ற முக்கிய தினங்களில் குளிப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. இன்று காலை நான் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே.


அடியேன் - ஸ்ரீனிவாச தாசன்.

கோவில் வாசலில் 
சக்கரத்தாழ்வார்

சுங்குவார் கிழக்கு வாயில் அருகே 



திரும்புகால்



No comments:

Post a Comment