To search this blog

Wednesday, May 15, 2024

Vasantha Uthsavam 4 2024 - எண்டிசையும் பேர்த்தகரம் நான்குடையான் பேரோதி !!

Today 15.5.2024 is day 5 of Vasantha Uthsavam at Thiruvallikkeni and it was Boothathazhwar’s Irandam thiruvanthathi.  




பண்டி என்ற பெயர்ச்சொல்லுக்கு அர்த்தம் அறிவீரா ?

How do you eat your food daily ! – do you see what is on your plate ? do  you like what you eat or do you have the habit of watching TV or reading a book or watching WA messages, scrolling your smartphone … from now on at least be   more mindful while eating, and the less likely you are to overeat. Notice your food, chew with care, and be present in your body as you take your food.  Not only your health will improve, your waist too would be thankful to you. 

This important organ is an intraperitoneal digestive organ located between the oesophagus and the duodenum. It has a ‘J’ shape, and features a lesser and greater curvature. The anterior and posterior surfaces are smoothly rounded with a peritoneal covering.  It primarily lies in the epigastric and umbilical regions, however, the exact size, shape and position of the stomach can vary from person to person and with position and respiration.  It is the Stomach  

Stomach is located  in the upper abdomen. It can be divided into the cardia and the non-cardia, which includes the fundus, the body, the antrum, and the pylorus. The stomach is part of the digestive system. It takes about 20 minutes for your brain to get the message from your stomach that it’s full. If you’re cramming food in too quickly, you’ll keep eating past the point your body needs. Slow eaters take in fewer calories -- and prevent extra pounds.  So never rush your food, never over eat, reduce the size of your portions at mealtimes, increase and eat 4 or even 5 means instead of large ones. Eat regularly and do not skip meals – avoid heating heavily before going to bed and take plenty of water.

தமிழில் ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ள சொற்கள் உள்ளன.  பண்டி என்ற பெயர்ச்சொல்லுக்கு :  வண்டி;  உரோகிணி. ( பெருங்குமிழ்);  உடல்;  யானை என பல அர்த்தங்கள் உண்டு. பண்டியெனும்  வயிற்றை பெரும்பதியாக்குவதாவது  கிடைப்பதை எல்லாம் தின்று ஏற்றச்சால் போலே வயிற்றை வளர்ப்பதாம்.




இதோ இங்கே நம் பூதத்தாழ்வாரின் அற்புத வரிகள் :

பண்டிப்  பெரும்பதியையாக்கி பழிபாவம்*

கொண்டு  இங்கு வாழ்வாரைக் கூறாதே, - எண்டிசையும் *

பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள் *

தீர்த்தகரர் ஆமின் திரிந்து.

பூதத்தாழ்வாரின் அற்புதமான போதனை :   இவ்வுலகில் வாழும் சம்சாரிகளை, சாதாரணமான மானுடர்களை உயர்த்தி பேசி பாடி, பணம் பெற்று தங்கள் வயிற்றை வளர்க்கும் மதியில்லா மூடர்காள்  -  வயிற்றை பெரிய   ஊர்போலக் கண்டதையுங் கொண்டு, தின்று,  நிரம்பச் செய்து வளர்த்து தெரியாமல் விளையுங் குற்றங்களையும் தெரிந்து செய்யுங் குற்றங்களையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு இவ்வுலகில் வாழ்கின்ற ஸம்ஸாரிகளை  புகழ்ந்து பேசுகை தவிருங்கள்.  நீங்கள் செய்ய வேண்டியதுதான் என்ன ?   உலகளந்த காலத்தில்  எட்டுத் திக்குக்களையும் பேர்த்துப்போடும்படி விம்மி வளர்ந்த நான்கு திருத்தோள்களையுடையனான எம்பெருமானுடைய திருநாமங்களை இடைவிடாது சொல்லிக்கொண்டு, திவ்ய தேசங்கள் தோறும் ஸஞ்சரித்து, உங்கள் ஸஞ்சாரத்தாலே நாடு முழுவதும்  பரிசுத்தமாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோள்.  எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன் புகழ் பாடுங்கோள்  என நமக்கு உரைக்கிறார் பூதத்தாழ்வார்.

BoothathAzhwaar says ~:  Oh foolish people living in this earthly World – don’t spend your time in pleasing ordinary mortals and making your stomach the veritable place for all and sundry food – don’t waste time speaking on the useless people and more so of their sins.   Without wandering, recite the names of Lord whose   four arms stretched into the eight Quarters.  Serve HIM become the propagators of the Holy Sriman Narayana.

Here are some photos of today’s Vasantha uthsava purappadu of Sri Parthasarathi Perumal.   

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar                                                
15.5.2024

Pasura vilakkam : Sri U Ve Kachi swamigal (Sri PB Annangarachar swami) – dravidaveda.org 








2 comments: