To search this blog

Thursday, April 7, 2011

Thiruvallikkeni - Sree Rama Navami Garuda Sevai


Lord Rama, the perfect avatar of the Supreme Maha Vishnu is the pure symbol of chivalry and virtue.  He is the embodiment of truth, morality, the ideal son, the ideal husband and the ideal King.
Sree Rama Navami is the birth day of Lord Rama and 9 days festival is organized everywhere celebrating HIS birthday.  In Triplicane – there will be procession (purappadu) in the evening of all the Nine days – except the third day, when Lord Rama will ascend Garuda in the morning.
Here are some photos of the Garuda sevai uthsavam on 6th April 2011

*********************************
ஸ்ரீ ராமநவமி திருநாள் - திருவல்லிக்கேணி கருட சேவை.  

மிக உன்னதமான அவதார புருஷர் இராமர்.

ஓர் இல், ஒரு சொல், ஒரு வில் என வாழ்ந்து வழிகாட்டியவர் ஸ்ரீராமர். 'ராமன்' என்றாலே தானும் ஆனந்தமாக இருந்து மற்றவர்களுக்கும் ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனைவிதமான துக்கங்கள் வந்தபோதிலும் மனத்தைத் தளரவிடாமல், ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துவந்தவர்.

மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்த இராமச்சந்திர மூர்த்தியின் பேரை சொன்னாலே எல்லா வளமும் பெருகும். இராமர் மனிதனாக வாழ்ந்து காட்டியவர்.
அழகிய இடத்தையுடையதும், உயர்ந்த மதில்களினால் நாற்புறமும் சூழப்பட்டதுமான அயோத்யா எனும் அழகிய நகரத்திலே சூர்ய வம்சத்துக்குசிறப்பு விளங்க அவதரித்தவர். அனைத்து கல்யாண குணங்களும் ஒரு சேரப் பெற்ற இராமபிரான், தசரதரின் மகனாக சித்திரை மாதம் சுக்ல பக்ஷ நவமியில் அவதரித்தார்.

எம்பெருமானுடைய சரிதையை செவியால் கண்ணால், பருகுவது இனிய தேவாம்ருதத்தை உண்பதற்கு சமானம் ஆகும்.   திருவல்லிக்கேணியிலும் மற்றைய திவ்ய தேசங்களிலும் ஸ்ரீ ராமநவமியைமுன்னிட்டு ஒன்பது நாள் உத்சவம் விமர்சையாக நடைபெறும். 06/04/2011 - புதன் கிழமையன்று காலை ஸ்ரீ ராம பிரான் கருட வாஹனத்தில் எழுந்து அருளினார்.
அது தருணம் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே:

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்




1 comment:

  1. thank you. as an erstwhile resident of Tiruvallikkeni, i am thrilled to see Sri Rama on Garudazhwar.

    sadagopan iyengar, coimbatore

    ReplyDelete