To search this blog

Saturday, December 9, 2023

Cyclonic storms of Bay of Bengal - Emperuman - எம்பெருமான் ஆழி வலவன்

               எம்பெருமான் ஆழி வலவன் .. ..   வலவன் என்ற பெயர்ச்சொல்லுக்கு -  ஓட்டுநன், செலுத்துநன், பாகன், என பொருட்கள் உண்டு.  ஆழி வலவன்  என்றால்  சக்கரத்தை வலக்கையில் உடையவன்.  திருவல்லிக்கேணி எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி சங்கு சக்ரத்துடன் சேவை சாதிக்கின்றார்.



The deep depression over the Bay of Bengal, escalated into a severe cyclonic storm named ‘Michuang,’ made landfall near Nellore and Machilipatnam with wind speeds reaching up to 90-100 km/h. 

 


Every cyclone leaves a devastating trail, more so closer to its landfall. It has brought heavy rains to Andhra Pradesh, resulting in inundated streets and significant disruption to normal life in neighboring Tamil Nadu. Scores of  people have lost their lives in rain-related incidents in Chennai.   

Cyclones and cyclonic storms are both extensive atmospheric whirls in which the air moves cyclonically towards a central area and also upwards.  The course of the air is hence a species of spiral movement, a combination of in-draught and uptake.  The direction of the horizontal movement alone concerns sailors. 

The Bay of Bengal is open to the Indian Ocean to the south only; in other directions the bay is surrounded by land, much of it extremely mountainous. The land masses around the bay have a profound effect on the weather regimes of the area and a knowledge of the relevant physical features of these land masses is essential to an understanding of the meteorological phenomena affecting the Bay of Bengal.

 

                                                  cyclone Nargis

The most significant meteorological phenomenon affecting the Bay of Bengal is, of course, the monsoon. Paraphrasing the Glossary of Meteorology (Huschke, 1959), this is a name for seasonal winds (derived from Arabic mausim , a season) and was first applied to the Arabian Sea, where winds blow for six months from northeast and for six months from southwest. The use of the name has since been extended to similar winds in other parts of the world. The primary cause of monsoon winds is the much greater annual variation of temperature over large land areas compared with neighboring ocean surfaces, thus causing an excess of pressure over the continents in winter and a deficit in summer. However, other factors, such as the land relief features too, have a considerable effect . 

During the southwest monsoon of summer, the monsoon trough is located far to the north. The development of monsoon depressions is associated with the monsoon trough and they are thus confined to the head of the Bay of Bengal during the summer season. They are of particular interest to Indian meteorologists since they account for most of the southwest monsoon rainfall in northeast India. The development of a monsoon depression is not an isolated event within the monsoon circulation, but is associated with large-scale atmosphere circulation features (Gidley, 1972).

 


Tropical cyclones are the most dangerous meteorological phenomena encountered by shipping,and those tropical cyclones to be found in the Bay of Bengal are no exception.  In the Bay of Bengal there are four distinct seasons  -  the winter monsoon, the spring transition period, the summer monsoon, and the fall transition period.   The actual timing of the seasons varies from year to year and the forecaster in the Bay of Bengal must take this into consideration For example, in late September, a forecast should not be based on the normal characteristics of summer monsoon weather,  if, from the charts, it is evident that the monsoon trough has weakened and a near-equatorial trough lies across the central part of the bay. Under these circumstances, cyclonic storm formation is much more likely than in the average September. 

 

திருமயிலைவாசி ஸ்ரீ பேயாழ்வார்; அவரருளும் சிறப்பான உபாயமாவது ..  "அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்"  ~ ஸ்ரீமன் நாராயணான எம்பெருமானே நமக்கு என்றென்றும் ரக்ஷகன்.  அவனை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் ?  ~ இருகை  கூப்பி அவனடியே  சரணம் புகுதல் வேண்டும்.  எவ்வளவு எளிதானது ~ நம் முயற்சி ஒன்றுமே வேண்டாமே !!  நம்முடைய ரக்ஷணத்தில் நாம் முயல்வதை விட்டிட்டு அவனுடைய ரக்ஷகத்வத்திற்கு அவகாசம் கொடுப்போமாகில் அவன்  எக்காலத்திலும் ரக்ஷண ஜாகரூகனாயிருந்தருள்வன் என்பது மயர்வற மதிநலமுடைய பேயாழ்வார் வாக்கு.   இதோ அவரது மூன்றாம் திருவந்தாதியில் இருந்து ஒரு அற்புத பாசுரம் :  

 


அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,

முரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன், - சரணாமேல்

ஏதுகதி ஏதுநிலை ஏது பிறப்பென்னாதே,

ஓதுகதி மாயனையே ஓர்த்து.

 

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் எத்தகையவன்  !! ~  திருவாழியாழ்வானை வலத்திருக்கையிலுடையவனும், முராஸுரனுடைய ஆயுளையும், வலிமையையும் போக்கின மொய்ம்பன் (மிடுக்கையுடையவனுமான பெருமான்) - அவ்வளவு சிறப்பு மிக்கவன் நமக்கு ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில், நம்மிடத்தில் உள்ள எத்தகைய குறைகளையும் கருதாமல்,  நமக்கு எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவேயிருப்பன், நெஞ்சமே இதை நன்றாக அறிந்து கொண்டு, ஆச்சரியமான குண சேஷ்டிதங்களையுடையனான அப்பெருமானையே உபாயமாக புரிந்து கொண்டு, அவனது நாமங்களையே  அநுஸந்தித்துக் கொண்டிரு. என உரைக்கிறார் நம் பேயாழ்வார்.  

ஆழி - இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.  இதற்கு -  கடல், கடற்கரை, அரசனின் ஆணைச் சக்கரம், மோதிரம், சக்கரம், வட்டம், கட்டளை, பொத்தான்   (button) என பல அர்த்தங்கள் உண்டு. ஆழி என்பது கடலை குறிக்கும்.  சுனாமி ஆழிப்பேரலை என வழங்கப்பெற்றது.  

சில வருடங்கள் முன்னர், மாற்றுத்திறனாளிகளுக்கான, ஆசிரியர் தகுதித் தேர்வில், வேலூர் மாவட்டம், வீராரெட்டிபாளையத்தைச் சேர்ந்த, ஈஸ்வரி என்பவர் 81 மதிப்பெண் பெற்றார். கேள்விகளுக்கான, 'கீ' விடைத்தாளில்  'கடலை மட்டும் குறிக்காத சொல்லை கண்டெடு' என்ற கேள்விக்கு, 'ஆழி' என, பதில் அளிக்கப்பட்டிருந்தது.  சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈஸ்வரி, மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி நாகமுத்து விசாரித்தார். நிபுணர்களின் கருத்தை பெற, முதுகலை பட்டம் பெற்ற மூன்று தமிழ் ஆசிரியர்களை, நீதிமன்றத்துக்கு வரவழைத்து, அவர்களிடம் கருத்து பெறப்பட்டது. 

மனுவை விசாரித்த, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: நீதிமன்றத்துக்கு வந்த நிபுணர்கள், 'ஆழி' தான், சரியான விடை; சமுத்திரம் என்பது தமிழ் வார்த்தை அல்ல; எனவே, சமுத்திரம், சரியான விடை அல்ல' என, கூறியுள்ளனர். 'சமுத்திரம்' என்பது தமிழ் வார்த்தை அல்ல என கூறுவதை, நான் ஏற்கவில்லை. அது, தமிழ் வார்த்தை அல்ல என்றால், தமிழ் அகராதிகளில், சமுத்திரம் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்காது. ஆனால், 'சமுத்திரம்' என்பதற்கு, மூன்று விதமான அர்த்தங்கள் இருப்பது, தமிழ் அகராதியில் கூறப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள, 'கீ' விடைத் தாள், முழுமையாக சரியில்லாததால், மனுதாரருக்கு அளிக்கும் பயன், மற்றவர்களுக்கும் போய் சேர வேண்டும். அனைவருக்கும், நீதி கிடைக்க வேண்டும் என, இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, 'கடலினை மட்டும் குறிக்காத சொல்லை கண்டெடு' என்ற கேள்விக்கு, 'ஆழி' என்றோ, 'சமுத்திரம்' என்றோ, விடை அளித்திருந்தால், அவர்களுக்கு, ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். அனைத்து விடைத்தாள்களையும், மறு மதிப்பீடு செய்து, திருத்தப்பட்ட முடிவை வெளியிட வேண்டும். ஒரு வாரத்துக்குள், இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

 
 
 
adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
9.12.2023

Gratitude to  Sri Kachi Swami (Sri U Ve PB Annangarachar swami) – www.dravidaveda.org 
Biblio :  Handbook of Cyclonic storms in the Bay of Bengal for the use of Sailors by John Eliot,  Meteorological reporter to Govt of India – published in 1901. (Price 1 Re 8 annas)
2) Handbook for Forecasters in the Bay of Bengal by Michael J Cuming, Royal Navy  Environmental Prediction Research Facility, California, published in 1973. 

No comments:

Post a Comment