To search this blog

Saturday, November 7, 2020

worshipping at Malai Nattu divyadesam ~ செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே

எம்பெருமான் ஸ்ரீமந்நாராணனுக்கு எப்போதும்  கைங்கரியம் செய்யும் அரிய பேறான செல்வத்தைப் பெற்றுள்ள வைணவ அடியார்கள்தான் செல்வந்தர்கள் என்கிறார் ஸ்வாமி நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில். அத்தகைய செல்வந்தர்களும், அவர்கள் தொழும் அந்த எம்பெருமானும்  கோவில் கொண்டுள்ள திவ்யதேசம் எது தெரியுமா ?

நம் பெருமாள் இரவு- பகல் என்கிற வேறுபாடின்றி, எல்லாக் காலத்தும் தன்னை நினைக்கிற நாம் உய்வு பெறும்படியாக நமக்கே அருள்செய்து நம்மை வாழ வைக்கிறார். அவர் தன் திருமுடியில் அல்லி மலரும் குளிர்ந்த திருத்துழாயும் சேர்த்துத் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடியுள்ளார். இறைவனுக்குக் கைங்கரியம் செய்யும் அரிய பேறான செல்வத்தைப் பெற்றுள்ள வைணவ அடியார்கள் வாழும் ஊரான திருக்கடித் தானத்தில் என் தந்தையான பெருமாள் எழுந்தருளியிருக்கிறார்.

 

Changanassery is a municipal town in Kottayam district in the state of Kerala.  Changanassery is the gateway to the Western Ghats and Kuttanad. It is one of the major educational   centres of Kerala, with nearly 100% literacy.

The first recorded history on the origin of Changanacherry is obtained from Sangam period literature. According to Sangam era documents, Uthiyan Cheralathan (Perum Chorru Udiyan Cheralathan, Athan I, or Udiyanjeral - AD c. 130) is the first recorded Chera dynasty ruler.   He had his capital at a place called "Kuzhumur" in Kuttanad and expanded the kingdom northward and eastward from his original homeland.   His consort was Veliyan Nalini, the daughter of Veliyan Venman. Keralathan's descendant was Cheran Senguttavan. This is no post on History but on a Malai nadu divyadesam .. .. Thrikkodithanam is a village in Kottayam district on the outskirts of Changanassery Municipality.  

 

சோலை திருக்கடித்தானத்துறை செங்கண்மாலை என நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட ஸ்தலம் இது.  சமஸ்கிருதம், வேதபாடம் மற்றும் களரிப் பயிற்சி அளிக்கப்பட்ட தலம் என்பதால், இதனை கடிகாஸ்தானம் என்றழைக்க, அதுவே நாளாவட்டத்தில் கடித்தானம் என்றானதாம். இப்போது இப்பகுதி மக்கள் கொடித்தனம் என்கிறார்கள். இங்குள்ள  அற்புத நாராயணர் விக்ரகம் பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  இதனாலேயே இந்தத் தலத்தை ‘சகாதேவ அம் பலம்’ என்கிறார்கள். இத்தலத் தில் நிறுவுவதற்காக சகாதேவன் விக்ரகத்தைத் தேடித் தேடி அலைந்து, கிடைக்காமல் உள்ளம் நொந்தான்.கடி என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். 108 வைணவத் திருத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள் விளங்குகின்றன. அவைகள் தொண்டை நாட்டுத் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டுப் பகுதிகளுள் ஒன்றான கண்டமென்னும் கடிநகர், மலைநாட்டுத் திருக்கடித்தானம் ஆகியன.   அஃதாவது கடிகை பொழுதில், ஒரு நாழிகையில் (நாழிகை என்பது 24 நிமிடம்] தூய்மையான கடுந்தவம் இந்தத் தலங்களில் மேற்கொண்டால் காரிய சித்தியும் மோட்சமும் கிட்டும் என்பது ஐதீஹம். 

இப்பகுதி வாழ் மக்கள் திருக்கடித்தானம் என்றும், திருக்கொடித்தானம் என்றும் இத்தலத்தை விளிக்கின்றனர்.  மதில்களுடன் கூடிய ஒரு பெரிய கோவில் இது. இத்தலத்திலே திருக்கார்த்திகையில் 10 நாள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒன்பதாம் நாள் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு “சங்கேதம்’ என்று பெயர். இந்த தீபங்கள் மறுநாள் காலை வரை எரிந்து கொண்டிருக்கும்.  இவை தவிர கோகுலாஷ்டமி மற்றும் பெருமாளுக்குரிய விசேஷங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Thrikodithanam Mahavishnu Temple is a beautiful fortified Temple, a divyadesam dedicated to Sriman Narayana located in Thrikkodithanam, Kottayam District, Kerala. Constructed in the Kerala style of architecture, the temple is glorified in the Divya Prabandham by Swami Nammalwar. 

 It is one of the five ancient shrines in the Kottayam-Alappuzha-Pathanamthitta area of Kerala, connected with the legend of Mahabharata, where the five Pandavas built one temple each; Thrichittatttu Maha Vishnu Temple (Thiruchenganur Thiruchirraru) by Yudhishthira, Puliyur Mahavishnu Temple (Kuttanattu Thiruppuliyur) by Bheema, Aranmula Parthasarathy Temple (Thiruvaramula / Thiruvaranvilai) by Arjuna, Thiruvanvandoor Mahavishnu Temple (Vaigal thiruvanvandoor) by Nakula and Thrikodithanam Mahavishnu  (Solai thirukkadithanathurai) Temple by Sahadeva. The temple is open from 4:00 am to 11:00 am and 5:00 pm to 8:00 pm and is administered by Travancore Devaswom Board of the Government of Kerala.

The Divya Kshetram was built by Sahadeva of Pandavas. At this holy place, King Rukmangatha of Surya Vamsa undertook Ekadasi Vratham and gifted all his punyas to Devas by which he reached Devaloka.   A monthly Sravana Deepams (festival of light) is performed.  The presiding deity in the temple is Athpudha Narayanan, who is also named as "Amirutha Narayanan". Emperuman as in most Kerala divyadesams is in standing posture facing the east direction.  The temple in Kerala architecture, has a two storeyed gopuram with the upper storey having wooden trails covering the Kottupura, the hall of drum beating during festivals. A rectangular wall around the temple, called Kshetra-Madilluka pierced by the gateways, encloses all the shrines of the temple. The metal plated Dwajasthambam and the Deepastamba, the light post, are located axial to the temple tower leading to the sanctum. Chuttuambalam is the outer pavilion located within the temple walls.       

The holy  Nallambalam has pillared halls and corridors.  Between the entrance of Nallambalam to the sanctum, there is a raised square platform called Namaskara Mandapa (altar) which has a pyramidal roof. Thevrapura, the kitchen used to cook offering to the deity is located on the left of Namaskara Mandapa from the entrance. Balithara, altar is used for making ritualistic offering to devathas and the festive deities. The sanctum called Sreekovil, houses the image of the presiding deity. It is on an elevated platform with a single door reached through a flight of five steps. Either sides of the doors have images of   Dwarapalakas.  Only the main priest called Thantri and the second priest called Melshanthi  can enter the Sree Kovil. Santhan and flowers are offered as Prasad.  The temple has paintings on its walls dating back to many centuries.   The temple tank named Bhoomi Theertham is located opposite to the temple. The Vimanam, the roof the sanctum is called Punniya koti Vimaanam.

This Divya Desam is located about 4kms East of Chenganacheri – and can easily be reached from Chengannur or Thiruvalla.  Many express trains on the Kochi-Kottayam-Trinvandrum stop at Changanacheri. In the month of Vaisakha is celebrated ‘Pancha divyadesa darshan yatra’.  A divine  ‘rath’ carrying the  sacred flame is taken to the five   ancient Vishnu temples at Aranmula, Thrichittattu, Thrippuliyur, Tiruvanvandoor, and Thrikkodithanam, on a single day.    

எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ,

நல்ல அருள்கள் நமக்கே  தந்தருள்செய்வான்,

அல்லியந் தண்ணந் துழாய்  முடியப்பனூர்,

செல்வர்கள் வாழும்   திருக்கடித்தானமே.

மிகுந்த நறுமணமிக்க மலர்களையும், துளசி மாலையையும் அணிந்து சுந்தரனாகத் திகழ்கிறான் எம்பெருமான். தன் பக்தர்களை இரவும், பகலும் தன்னையே  நினைக்குமாறு செய்கிறான் இவன். அவ்வாறு சிந்திப்பதால் உண்டாகும் பலன்கள் பலமடங்காகப் பெருகுமாறும் அருள்கிறான், இந்த தயாபரன். அத்தகைய பெருமாள் நிலைத்து வாழும் தலத்தில் செல்வந்தர்களும் நிறைந்திருக் கிறார்கள். எப்படிப்பட்ட செல்வந்தர்கள்? அவனுடைய திருவடிக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்ற செல்வந்தர்கள்!’ என்று சொல்லி உருகுகிறார் ஸ்வாமி  நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில்.

So next time, you visit Kerala, plan to have darshan at the divyadesams by staying in Thiruvalla or Chenganur .. – Thiruvaramula, Thiruvanvandoor, Thirupuliyur, Thiruchitraru, Thirukadithanom, Thiruvallavazh (Thiruvalla) and more .. ..

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
07.11.2020

 

·         Raja Raja Varma Koil Thampuran a famous poet and translator with an equal facility in writing in English and Sanskrit, was born in Neerazhi Palace, Changanassery. He was part of the royal family of erstwhile Parappanad (Parappangadi and Beypore), Malabar.

·         Anju Bobby George  India's first and only World Champion in Athletics IAAF World Athletics Final. She won the bronze medal in long jump at the 2003 World Championships in Athletics in Paris.  She went on to win the gold medal at the IAAF World Athletics Final  2005,   Anju was born in Kochuparambil family in Cheeranchira village of Changanassery taluk, Kottayam.

 
  

1 comment: