Tamil Nadu has become the
third worst coronavirus-hit state in the country, surpassing Delhi. Maharashtra, with over 20,200 cases and at
least 779 deaths, tops the list, followed by Gujarat with around 7,800 cases.
The national capital, with nearly 7,000 cases, has slipped to the fourth spot. The
bulk of cases were reported from Chennai, where the vegetable and fruit
wholesale market at Koyembedu was declared a hotspot. More than 1,500 positive
cases were found to be linked to the market. One good thing to note is that of the total cases in Tamil Nadu, 1, 959 patients
have recovered and 47 have died. ..
.. yet, Tamil Nadu has announced major
relaxation in lockdown in non-containment areas. While across the state,
private offices and tea shops will be allowed to open.
One would be delighted to
see people, mingle with people when CSK plays in Chepauk, in Temple festivals
and at marriage functions, certainly no on occasions like these. I
am really anguished by the turn of the events of date – but resign to destiny
and am following what best we can do. Today happy to post photos of
large crowds of people enjoying Sri Parthasarathi Emperuman Brahmothsavam 2016.
6.2.2016
was the grand occasion of Thiruther for
Sri Parthasarathi Perumal. Thiruther is most majestic and thousands
descend to the divyadesam to have glimpse of Emperuman and the rolling
juggernaut. We worship
Sriman Narayana, as devotees and followers of the Vedic path, we
firmly believe that Lord Krishna descended on this Universe
some 5,000 years ago. His upadesam Srimad Bhagavad Geetha
is the greatest treasure trove, rendered in the midst of Mahabaratha, when He
offered to drive the chariot of Arjuna and earned the sobriquet ‘Sri
Parthasarathi’ ~ today something on another charioteer ‘Salliyan’ as well.
0ne will realise the
grandeur of rolling juggernaut, if one were to stand near as the 8
or 9 feet wheel rotates by. Thiruther is a grand occasion of togetherness
of people. During Brahmothsavam thousands throng Temple and have darshan
of Perumal in His veethi purappadu ~ significantly, during Thiruther, thousands
partake – they pull, go around, push, offer buttermilk and panakam [jaggery
water] to devotees and there is celebrations on the air, clearly visible. In the
goshti, first it was Thiruvezhukkoorirukkai and then Thirumozhi of Thirumangai Mannan.
உத்சவங்களில் திருத்தேர் கம்பீரமானது. அழகான திருத்தேர் பெரிய
கயிறுகளால் இழுக்கப்படும். அவற்றை "வடம்" என்று கூறுவர். இவ்வடத்தைப் பற்றி
இழுத்துச் செல்வதை "வடம் பிடித்தல்" என்பர். கோவிலைச் சுற்றி தேர் செல்லக்கூடிய
அளவு அகலமான வீதி அமைந்த இடங்கள் ரத வீதிகள் என்று அழைக்கப்படும். திருத்தேர் உருண்டோடி
வரும் வீதிகள் எங்கும் மக்கள் வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டு, வழிபாட்டுப்
பொருட்களுடன் வாசலில் நின்று கொண்டு வணங்குவர்.
தேர் (திருக்கோவில் உத்சவங்களில் திருத்தேர்) - பண்டைய காலத்தில்
இருந்தே மக்களை கவர்ந்து வந்துள்ளது. மஹாபாரதத்தில் காணப்படும் ‘’ரத, கஜ, துரக, பதாதி’’ என்னும்
நால்வகைப் படைகளை மிக விவரமாக குறிப்புட்டுள்ளனர். பாரதப்போர் தனிலே, இருதரப்பின் பெரிய மற்றும் அற்புதமான படைகளும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், தேர்களும், மின்னலுடன்
கலந்த மேகங்களைப் போல, அபரிமிதமாக நின்று கொண்டிருந்த தேர் படையணிகள் நகரங்களைப் போலத்
தோற்றமளித்தனவாம் ! .
திருத்தேர்
ஓர் அற்புத திருவிழா. பொதுவாக மரத்தினால் ஆனது.
திருவல்லிக்கேணி திருத்தேர் இதற்கு முன்னம் இன்னமும் பெரிதாய் இருந்தது.
1980களில் மராமத்து செய்யப்பட்டபோது அளவு சற்று சிறுத்தது - இரும்பு சக்கரங்களும் பொருத்தப்பட்டன. தேர் இழுக்கும் தேர்வடமின் நீளமும் குறைக்கப்பட்டது. இப்போதும் தேர் திருவிழாவின் போது அருகில் நின்றால்
8 அல்லது 9 அடிக்கு மேல் உள்ள சக்கரம் சுழன்று வேகமாய் நகரும்போது ஒரு வேறு உலக
உணர்வு ! ... தேர் முன்பு பறக்கும் குதிரைகளும், தேரை சுற்றி, சிங்கம் யாளி பொம்மைகளும்
கட்டப்பட்டு, பெருமாளுக்கு முன்பே பட்டரும், தேருக்கு பின்பக்கத்தில் நாதஸ்வர இசையும்
- முன்னே ஊர் கூடி வடம் பிடிக்கும் கூட்டமும், பின்னாடி முட்டுக்கட்டை போடும் இளைஞர்களும். இருப்பதிலியே கஷ்டமானதும் ஆபத்தானதும் முன் கட்டை
போடுவது ! .
திருவல்லிக்கேணி
எம்பெருமான் உத்சவர் ஸ்ரீபார்த்தசாரதி. பார்த்தனாகிய
அர்ஜுனனுக்கு மஹாபாரத யுத்தத்தில் சாரத்யம் பண்ணி நம் அனைவருக்கும் 'பகவத் கீதை' உபதேசம்
அருளியவர். கர்ணன் சினிமா பார்த்துவிட்டு கர்ணனை அர்ஜுனனுக்கு முன்பே பலர் கொன்று
விட்டனர் என்ற கருத்து கொண்டவர் உண்டு. ஒவ்வொரு
கதையிலும் நாயகனை உயர்வுற சொல்வது மரபு. அர்ஜுனனுக்கு
பகவான் கண்ணன் போல கர்ணனுக்கு தேர் ஓட்டியவர் மாவீரன் சல்லியன். மத்ர தேசத்தின் மன்னனான சல்லியனின் சகோதரிதான் மாதுரி
- இவரது புதல்வர்கள் : நகுலன் மற்றும் சகாதேவன். கர்ணனின் இறப்புக்கு பின்னர் சல்லியன் (ஆம் அதுவரை
தேரோட்டியாக இருந்தவர்) படை தளபதியாகிறார்.
குருச்சேத்திரப் போரின் இறுதி நாள் யுத்ததில் வீர மரணம் எய்துகிறார்.
சல்லியன்
பாண்டவர்களின் தாய் மாமன் ஆன போதும் துரியோதனின் தந்திரத்தால் குருச்சேத்திரப் போரில்
கௌரவர்கள் தரப்பில் போரிட நேர்ந்தது. போர்
வீரர்களுடன் வந்து கொண்டிருந்த சல்லியனை உபசரித்து,
தன் பக்கல் இருக்கவேண்டி மாற்றப்பட்டவர் அவர். ஒரு சாரதியாக, கிருஷ்ண பரமாத்மாவும், சல்லியனும்
தங்கள் கடமையை சரியாகவே செய்தனர். அர்ஜீனன்
தன் வீரத்தின் மேல் கொண்ட செருக்கால், கர்ணனின் வீரத்தை குறைத்து மதிப்பிட்டு, தற்பெருமை
பேசிய போது, அவனது தவறை இடித்துரைத்து கர்ணனின் வீர தீரத்தை அர்ஜீனன் உணரும்படி கூறி
திருத்தினார் கிருஷ்ணன், அர்ஜீனனும் சிரம் தாழ்த்தி ஏற்றான். அதே போல
அர்ஜீனனின் வீரத்தை குறைத்து மதிப்பிட்டு கர்ணன் தற்பெருமை பேசிய போது, சல்லியன்,
எதிரியின் பலத்தை குறைத்து மதிப்பிடாதே என உரைக்க, செருக்குற கர்ணன் நீங்கள் ரத்தம்
செலுத்தும் பணியை மட்டும் செய்வீர் என்கிறான்.
தீதும்
நன்றும் பிறர் தர வாரா ! ~ அவரவர் விதிப்பயனே ! - அவரர் வாய்ச்சொல்லே ! - அவரவர் எண்ணங்களே
! ஸ்ரீவைணவர்களான நமக்கு கிடைத்தற்கரிய நிதி - நம் ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே! - ஆயிரம் ஆண்டுகள்
முன்பு திருமங்கைமன்னன் நமக்கு அருளிய உபதேசம் இந்த கொரோனா காலகட்டத்தில் வெகுவாக பொருந்தும். நிலை
கேட்ட மாந்தர்களே ! ~ பொருளையும் பிற இன்பத்தையும் தேடி அலையாதீர். ஸ்ரீமன்
நாரணனே நமக்கு என்றென்றும் அழியாத நிதி. அவன் திருவடி நீழலில் உள்ளோர்க்கு எந்த தீங்கும்
நடக்காது என்பது திண்ணம்.
ஆயிரம்
ஆண்டுகள் முன்பு ஸ்வாமி நம்மாழ்வார் நமக்கு அருளிய உபதேசம் இந்த கொரோனா காலகட்டத்தில்
வெகுவாக பொருந்தும்: -
காக்குமியல்வினன்
கண்ணபெருமான், சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே,
வாய்த்ததிசைமுகன் இந்திரன்வானவர், ஆக்கினான் தெய்வவுலகுகளே.
பாரதப்போரிலே
தேர் செலுத்தி அர்ஜுனன் மீது எய்த அம்புகளை தன் திருமுகத்தில் தாங்கி, அம்புபட்ட காயங்களுடன்
நிற்கும் நம் கண்ணபெருமான் நம் போன்றோரை ரக்ஷப்பதையே தனது தொழிலாகவுடையவன். அவனே பரம்பொருள் - திசைமுகன், இந்திரன், ஏனைய தேவர்கள்,
அவர்கள் இருப்பிடமான திவ்யலோகங்கள் அனைவரையும்
உண்டாக்கி காப்பவனான நம் கண்ணபிரான் நம்மையும் காத்து அருள்வான்.
~ adiyen Srinivasa dhasan
(mamandur Veervalli Srinivasan Sampathkumar)
11.5.2020.
No comments:
Post a Comment