To search this blog

Monday, November 28, 2011

Thiruputkuzhi Divyadesam Kandome

திருப்புட்குழி   திவ்யதேசம் :  'மரதகத்தை புட்குழியெம் போரேற்றை'
 The Divyadesam known as “Thiruputkuzhi” is situated on the Chennai Bangalore High Road – around 90 km off Chennai.  As you pass through Sriperumpudur, on way to Vellore, you would pass the bridge known as ‘Vellai gate’ which would take you to Kanchi.  Around 10 kms after this, is Baluchetty Chathiram.  Hardly half a kilometer from the main road, is the temple sung by Thirumangai Azhwar in Periya Thirumozhi and Periya Thirumadal.  
Legend has it that Lord Rama did moksha kainkaryam to ‘Jadayu’ – the bird who fought valiantly against Ravana when he was abducting Sita and lost his life.  There is a sannathi for Jadayu before the temple tank.  ‘Pul” is bird and this sthalam is known as “Thiru-pul-kuzhi – thiruputkuzhi’.  Unusually, the dwajasthambam (the flag post) is situated outside the Temple and the main Gopuram lies after the the dwajasthambam.  Here are some photos of this temple and Lord Vijayaraghavar (Uthsavar).  
சமீபத்தில் திருப்புட்குழி சென்று பெருமாளை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. 
திருப்புட்குழி திவ்யதேசம் சென்னையில் இருந்து சுமார் 90 கி மீ தொலைவில் உள்ளது.  ஸ்ரீபெரும்பூதுரை  கடந்து வேலூர் பெங்களூர் செல்லும் பாதையில் பயணித்தால், பிரதான சாலையில், கச்சி செல்லும் வெள்ளை கேட் தாண்டியவுடன் வரும் மேம்பாலத்தை தாண்டி சுமார் 10 கி மீ பயணித்தால் பாலுசெட்டி சத்திரம் வரும்.  இங்கே பிரதான சாலையில் இருந்து இடது புறம் திரும்பி சுமார் அரை கி மீ தூரத்திலேயே திருக்கோவில் அமைந்துள்ளது.   திருக்கோவில் வாசலிலே உள்ள குளம் 'ஜடாயு தீர்த்தம்' என வழங்கப் படுகிறது. வித்யாசமாக த்வஜஸ்தம்பம் குளக்கரை அருகே கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது. கொடிமரத்துக்கு பின்னல் பிரதான கோபுரம் உள்ளது. 
இங்கு பெருமாள் ஜடாயுவுக்கு (புள்)  மோக்ஷம் கொடுத்த திருத்தலம் ஆனதால் திருப்புட்குழி !   குளக்கரையில் ஜடாயுவுக்கு சன்னதி உள்ளது.   உள்ளே மூலவர் விஜயராகவப் பெருமாள்  பரமபதத்தில் இருக்கும் நிலையில் வீற்றிருந்த திருகோலத்தில் சேவை சாதிக்கிறார்.  மூலவர் ஜடாயு சம்ஸ்காரம் செய்யும் தாபத்தை தாங்க முடியாமல் ஸ்ரீதேவியும் பூதேவியும் இடம் வலமாக மாறி எழுந்து உள்ளனர்.  தாயார் : மரகத வல்லி தாயார்.

திருமங்கை மன்னன் தனது பெரிய திருமொழியில் {இரண்டாம் பத்து - ஏழாம் திருமொழி} -  "அலங்கெழுதடக்கை  ஆயன் வாயாம்பற்கு  அழியுமால் என்னுள்ளம் என்னும் * புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும்  -  எனவும் "பெரிய திருமடலில்" - " மரதகத்தை புட்குழியெம் போரேற்றை" எனவும்   மங்களாசாசனம் செய்துள்ளார் .  

அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 


திருக்கோவிலின் முகப்பு 

குளம், கொடிமரம், கோபுரம் காண்க
கோவிலின் உள்ளே, சந்நிதியின் அருகே 
உத்சவர் விஜயராகவர் 
திருமஞ்சனம் கண்டு அருளும் அவசரம் 

 

Monday, November 14, 2011

Rohini Purappadu at Thiruvallikkeni Divyakshetram

திருவல்லிக்கேணி ரோஹிணி புறப்பாடு

In the divyadesam of Thiruvallikkeni, there are many  festivities.  On every ‘Rohini Nakshathiram’ day – Rohini being the birth star of Lord Sri Krishna, there will be a procession (purappadu) in the mada streets of Triplicane.

Here are some photos taken during the purappadu of Lord Parthasarathi on 13th Nov 2011 (Sunday)

கிருஷ்ண பகவான் இப்பூவுலகில் வந்துதித்த ரோஹிணி நக்ஷத்திரத்தன்று, பிரதி மாதமும் திருவல்லிக்கேணியில் ஸ்ரீ பார்த்தசாரதிக்கு சிறிய மாடவீதி புறப்பாடு நடைபெறுகிறது.

13/11/2011 அன்று ஸ்ரீ பார்த்தசாரதி அழகாக எழுந்து அருளிய புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :










அடியேன் - ஸ்ரீனிவாசதாசன்
 

Monday, November 7, 2011

Sri Peyazhwaar Sarrumurai 2011


பேயாழ்வார் சாற்றுமுறை  (5th Nov 2011)

Among the 12 Azhwaars of Srivaishanva Tradition, Poigai Azhwar, Boothath Azhwar and Peyazhwar – were the ones to have decended on this Earth earlier.  They were contemporaries and are praised as “Muthal Azhwars (the first among the Azhwars).  They were born in the month of “Aippasi: in the thirunakshathirams of ‘Thiruvonam, Avittam, Sathayam’ respectively.

The three of them met on a rainy day at Thirukkovalur – when they sang 100 verses each which now form part of Moonravathu Ayiram (Iyarpa) in Naalayira Divyaprabandham. 

Sri Peyalwar was born in a tank in Mylapore (thence known as Mylai Thiruvallikkeni).  His birthplace is in the present day Arundel Street in Mylapore closer to Mylai Madhaava Perumal Kovil.  At Thiruvallikkeni, the road adjacent to Sri Parthasarathi Kovil houses a separate sannathi (temple by itself) for Sri Peyalwar and the street is named after the Azhwar and is known as ‘Peyazhwar kovil Street’.

On 5th of Nov 2011 was the sarrumurai of Sri Peyalwar.  Here are some photos of Mylai Peyalwar (during His earlier visit to Thiruvallkkeni); Lord Parthasaratahi during Aekadasi purappadu yesterday and the avatharasthalam (birthsite) at Mylapore.
[Perumal Aekathasi photos : courtesy Thirumazhisai Kannan]
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை - ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் - என ஸ்ரீ மணவாள மாமுனிகள் தமது 'உபதேச ரத்தினமாலையில்' எடுத்து உரைத்தார். இவை எப்புவியும் பேசு புகழ் "பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார்' - இவ்வுலகில் வந்துதித்த நாள்கள். பன்னிரு ஆழ்வார்களில் முதலில் வந்துதித்ததனால் முதல் ஆழ்வார்கள் என பெருமை பெற்றவர்கள் இவர்கள்.  ஸ்ரீ மணவாள மாமுனிகள்  "உபதேச ரத்தினமாலை"யில் மேலும்  :
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து * 
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * - 
பெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு * 
நின்றது உலகத்தே நிகழ்ந்து.                --         என சிறப்பித்தார். 

ஐப்பசி சதயம் நட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார். ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தா அரண்யம் என துளசி காடாக இருந்ததை போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது. சிறப்பு வாய்ந்த இந்தத் தலத்தில் மாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்) அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹா விஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார்.  இவர்  அயோநிஜர்.  இந்த அவதார ஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப் படும் வீதியில் மிக சாதரணமாக உள்ளது.   

 இவர் அருளிச் செய்த பிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி. முதல் ஆழ்வார்கள் மூவரும் ஒரு நல்ல மழை நாளில் திருகோவலுரில் ஒரு இடைகழியில் சந்தித்தனர். முதலில் பொய்கை ஆழ்வார் அங்கே இருந்தார்; பூதத்தாழ்வார் அவ்விடம் வந்தபோது, 'ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம்' என இடமளித்தார். பிறகு பேயாழ்வாரும் அங்கே வரவே "ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்' என அவரையும் வரவேற்றனர். ஸ்ரீமன் நாராயணன் அவர்களை சோதிக்க எண்ணி தானும் உட்புகுந்த போது, முதலில் பொய்கை ஆழ்வார் "வையம் தகளியா, வார்கடலே நெய்யாக  (உலகத்தையே விளக்காகவும் பெரிய கடலை நெய்யாகவும்) கொண்டு நூறு பாடல்கள் பாடினார்.  பிறகு, பூதத் ஆழ்வார், 'அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக' (அன்பை விளக்காகவும் ஆர்வமான எண்ணங்களை நெய்யாகவும்) கொண்டு நூறு பாடல்கள் பாடினார். 

 இவ்வாறான விளக்குகளில் எம்பெருமானை சேவித்த பேயாழ்வார்
 "திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், *திகழும்
 அருக்கன் அணி நிறமும் கண்டேன்;* செருக்கிளரும்
 பொன்னாழி கண்டேன், புரிசங்கம் கைக் கண்டேன்,*
 என்னாழி வண்ணன் பால் இன்று"  - என நூறு பாடல்கள் பாடினார்.  இப்பாடல்களே  நாம் அனுசந்திக்கும் "மூன்றாம் திருவந்தாதி" 

முதலாழ்வார்களின் சாற்றுமுறை வைபவம் திவ்யதேசங்களில் சிறப்பாக நடை பெற்றது.  திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஆழ்வாருக்கு தனி சந்நிதி (தனி கோவில் என்று சொல்லலாம்) அமைந்துள்ளது. ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலுக்கு வடக்கு பக்கம் கோவிலை ஒட்டி அமைந்துள்ள வீதியில் இந்த கோவில் உள்ளதால், இந்த தெரு "பேயாழ்வார் தெரு".  பழமையான இந்த சன்னதி தற்போது புனர் அமைக்கப்பட்டு வருகிறது. திருவல்லிக்கேணி ஸ்ரீ மணவாளமாமுனிகள் சபையார் இத்திருப்பணிகளை செய்து வருகின்றனர்.  திருப்பணி வேலைகள் நடைபெறுவதால் ஸ்ரீ பேயாழ்வார் உத்சவர், ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் உள்ளே எழுந்து அருளி உள்ளார். 

சென்னை மற்றும் சுற்றுபுறங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக,  சாற்றுமுறை புறப்பாடு(5/11/2011 Eve)  மிகவும் வேகமாக நடைபெற்றது.  

அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 


திருமயிலை பேயாழ்வார்  திருவல்லிக்கேணி எழுந்து அருளிய போது

ஸ்ரீ பார்த்தசாரதி ஏகாதசி புறப்பாட்டின் போது
அருண்டேல் தெருவில் உள்ள ஸ்ரீ பேயாழ்வார் அவதாரஸ்தலம் 
அவதார ஸ்தலத்தில் மண்டபமும் 



ஆழ்வார் அவதரித்த கிணறும்

Thursday, November 3, 2011

Thiruvallikkeni Sri Manavala Maamunigal Uthsavam - Sarrumurai


Sri:
Srimathe Ramanujaya Nama:
Srimath Varavara Munaye Nama:

Today is the most important day for Thennacharya Srivaishnavaites – Thirumoolam in the month of Aippasi is the birth thirunakshathiram of Acharyar Swami Manavala Maamunigal. 
On 31st Oct 2011, it was celebrated in a very grand manner.  In the morning immediately after mangalasasanam in all the sannathies in Thiruvallikkeni Divyadesam, there was the unique “Kaithala Sevai” – whence Lord Parthasarathi and his consorts were taken on the palm of kainkaryabara Bhattacharyars infront of hundreds of devotees.  Then there was the morning purappadu which was embellished with 10 pairs of thirukudais (total 20 in nos).
In the evening, again there was grand purappadu of Sri Manavalamamunigal with Lord Parthasarathi.

31/10/2011 இன்று மிக சீரிய "ஐப்பசியில் திருமூலம்".  இன்று  - நம் ஆச்சார்யர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உதித்த  நந்நாள் . "செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடும் நாள் - அந்தமில் சீர் மணவாள முனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்"
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்  இன்று அதிகாலை எல்லா சன்னதிகளிலும் மங்களாசாசனம் முடிந்து, மாமுனிகள் - ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளின் மரியாதைகளை பெற்றுக் கொண்டபின், "கைத்தல சேர்வை" நடைபெறுகிறது.  பெரிய சன்னதியில் இருந்து உடையவர் சன்னதி முன் உள்ள மண்டபம் வரை, முதலில் உபய நாச்சிமார்களையும் அடுத்து ஸ்ரீ பார்த்தசாரதி உத்சவரையும், அர்ச்சகர்கள் தங்கள் கைத்தலத்தில் ஏளப்பண்ணுவர்.  வேறு எந்த திவ்ய தேசத்திலும், இந்த சிறப்பு சேவை உள்ளதாகத் தெரியவில்லை.  ஸ்ரீரங்கத்தில்  கைத்தல சேவை உண்டு - இராப்பத்து உத்சவத்தில், இது நடைபெறுவதாக கேள்விப்பட்டு உள்ளேன்.

திருவல்லிக்கேணியில் பொய் இல்லாத மணவாள மாமுனிகளின் உத்சவ சிறப்புகளில் - கைத்தல சேவையும் ஒன்று.  தீபாவளி புறப்பாடு,  அன்ன கூட உத்சவம் போன்றவை இன்ன பிற.  சாற்றுமுறை அன்று காலை புறப்பாட்டின் போது ஸ்ரீ பார்த்தசாரதியும் மாமுனிகளும் ஏளுகின்றனர்.   இவ்வமயத்தில் திருக்குடைகள் சிறப்பு.  இன்று காலை பெருமாள் பத்து ஜதை குடைகளுடன் (இருபது குடைகள்) புறப்பாடு கண்டு அருள ஆயத்தம் ஆனபோது, பெருமழை பெய்து, புறப்பாடு இடர்ப்பட்டது. பிறகு மழையில் நனைந்த வீதிகளில் புறப்பாடு அழகாக நடந்தது.  மாமுனிகள் அருளிச்செய்த உபதேச ரத்தினமாலை சேவிக்கப் பெற்றது.

இரவு மாமுனிகளும் ஸ்ரீ பார்த்தசாரதியும் சேர்ந்து புறப்பாடு கண்டு அருளினார். "திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுஜ நூற்றந்தாதி" கோஷ்டி ஆனது. மணவாள மாமுனிகளின் சாற்றுமுறை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே. 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்







காலை புறப்பாட்டுக்கு  முன்பு திருக்குடைகள்  தயாராகின்றன





காலை புறப்பாட்டில்  ஸ்ரீ பார்த்த சாரதி


காலை புறப்பாட்டில்  நம் ஆச்சார்யர் - ஸ்ரீ மணவாள மாமுனிகள்





திருக்குடைகள்





மாலை புறப்பாட்டில்  ஸ்ரீ பார்த்த சாரதி




மாலை புறப்பாட்டில்  ஸ்ரீ மணவாள மாமுனிகள்

பட்டாசுகள்

Tuesday, November 1, 2011

Sri Manavala Mamunigal Uthsavam - 9th day - 30102011


மணவாள மாமுனிகள் உத்சவம் ஒன்பதாம் நாள் (30/10/2011)
Today is the ninth day of Maamunigal Uthsavam.  In the morning around 8 am, Acharyar in ‘kedayam’ had purappadu around the Temple tank and ascended the “Ther”.  In the evening, there was the beautifully decorated ‘pushpa pallakku’.  Here are some photos taken during the two purappadus. 

இன்று இரண்டு வேலையும் மாமுனிகளுக்கு புறப்பாடு நடைபெற்றது.   காலை ஸ்ரீ மணவாள மாமுனிகள், கேடயத்தில், குளக்கரை புறப்பாடு கண்டு, சிறிய திருத்தேரில் எழுந்து அருளி, பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார். 
இரவு - அழகான, நல்ல மணம் வாய்ந்த, சிறந்த மலர்களால் சிறப்புற செய்யப்பட  புஷ்ப பல்லக்கு.  நம் மணவாள மாமுனிகள் அழகாக வீற்றிருக்க  புறப்பாடு.  ஏராளமான பக்தர்கள் சேவித்து மகிழ்ந்தனர். 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.






மாமுனிகள் குளக்கரை எழுந்து அருளும் அவசரம்
கோஷ்டி


திருத்தேரில்



மாலை - புஷ்ப பல்லக்கில்
மாலை - கோஷ்டி