5.5.2020 Sri Parthasarathi Brahmothsavam would have commenced
but for Covid-19 and subsequent lockdown 3.
Today is ‘Chithiraiyil Chithirail – thirunakshathiram of Sri Madhurakavi Azhvar who was
born at Thirukkolur near Tirunelveli.
திருக்கோளூர் மதுரகவிகள் அவதார ஸ்தலம். இங்குள்ளது ஸ்ரீவைத்தமாநிதி
பெருமாள் கோயில். சுவாமி நம்மாழ்வாரால் பாடல்
பெற்ற இத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவர் கிழக்கு நோக்கி சயனக் கோலத்தில் நிக்ஷேபவித்தன்
(வைத்தமாநிதிப்பெருமாள்). திருஆதனூர் ஆண்டளக்கும்
ஐயன் போலே இங்கும்
மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
திருக்கோளூர்ப்
பெண்பிள்ளை ரகசியங்கள் இங்கு விசேஷம். திருக்கோளூர்
வைத்த மாநிதிப் பெருமானை தரிசிக்க இராமானுஜர்
சென்ற போது தம் எதிரில் வந்த வைணவப் பெண்பிள்ளை (திருமாலடியார்) திருக்கோளூர் விட்டு
நீங்கிச் செல்வது கண்டு காரணம் கேட்டார். அதற்கு எண்பத்தொரு வைணவப் பெரியவர்களின் தன்மைகளைக்
கூறி அத்தகைய செயல்கள் எதையும் தாம் செய்யவில்லையே என்று வருந்தினார் அந்த மாதரசி.
அப்போது அடுக்கிக் கூறிய தொடர்களின் களஞ்சியமே ’திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள்.
Thirukkolur (above photos)
எம்பெருமானை
தேடி அவனிடமே சரணமென அடைந்த தன தலைமகளை குறித்து பாசுரமாக இந்த பத்து பாசுரங்களை ஸ்வாமி
நம்மாழ்வார் அருளிச் செய்துள்ளார்.
நினைக்கிலேன் தெய்வங்காள் நெடுங்கண் இளமான் இனிப்போய்,
அனைத்துலகுமுடைய
அரவிந்தலோசனனை,
தினைத்தனையும் விடாள்
அவன்சேர் திருக்கோளூர்க்கே,
மனைக்கு
வான்பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.
தெய்வங்களே!
எனக்கு வேறு ஒன்றுமே தோன்றவில்லை. பெரிய நீண்ட
கண்களையுடைய இளமான் போன்ற என் மகள், இப்போது சென்று ஸர்வலோக ஸ்வாமியான அரவிந்தலோசனனை (செந்தாமரைக் கண்ணனை)
சிறிது போதும் விடாதவளாய்க் கொண்டு, அவனது வாசஸ்தலமான திருக்கோளூரை நோக்கியே சென்றுள்ளாள். தன் குடிக்கு இது பெரிய பழிப்பாகுமென்பதையும் நினைத்திலள்
அவள் என உருகுகிறார்
Sri
Madhurakavigal avathara sthalam is Thirukkolur situate closest to Azhwar
Thirunagari, with which place Azhwar’s life was entwined. At this sthalam is Sri Vaithamanidhi Permual
Temple, one of the Nava Tirupathi
thirukovilgal and a divyadesam at that.
Situate in the southern bank of
Thamiraparani river. Thirukolur is a beautiful temple.
Focus is very important
in life. Focus as the act of concentrating one’s interest or activity on
something. Technically, we are capable of doing two things at the same time. It
is possible, for example, to watch TV while cooking dinner or to answer an
email while talking on the phone ! .. .. however, it is
perhaps impossible, however, to concentrate on two tasks
at once. You're either listening to the TV and the
overflowing sambar is background noise, or you're tending
to the boiling sambar not really following who is batting or how the last
wicket fell !! ~ you may tend to agree or
otherwise - Focus shifts ! and this is about all too different
focus, that of a disciple on his master !!
For ordinary mortals,
there is the samanya Sasthram. Azhwars were totally different – they were
blessed with the benevolence of Sriman Narayana and were focused only on Sriman
Narayana. This Alwar however was too focussed on the epitome of kainkaryam at
the feet of his master and thought of none else. For him, Sadagopa was
the only true guide and preceptor. He knew or thought of none else; he
was too elated in singing holy Upanishad utterances of Sadagopa and realized
the ennobling qualities and benign virtues of Swami Nammalwar.
Thirukkurugur
(Azwar thirunagari)
Today 6.5.2020 is ‘Chithiraiyil
Chithirai thirunaal’ [Chitra Nakshathiram in the month of Chithirai] ~
the birthday of Sri Madhurakavi Azhwar. He was born in Thirukkolur as
incarnation of Sri Garuda. He sang only one divyaprabandham ~ ‘Kanninun
Chiruthambu’ consisting of only 11 hymns; his life was
intertwined with that of Sri NammAzhwar.
Of the Nava Thirupathi
divyadesams, ThirukKurugoor is hailed as Azhwar Thirunagari, as it was here
Swami Nammalwar was born. Mathura Kavigal saw the leading light
from Thiru Ayodhya and travelled all the way to Azhwar Thirunagari and
identified Nammazhwar in the Puliyamaram. He as a disciple was
attracted to the holy feet of ‘Kurugaip Piran’ [Swami Nammazhwar] that
he sang only in praise of Nammazhwaar and considered his duty to spend life
devoted to Nammazhwaar ~ an exceptional piece of guru bakthi.
கண்டு கொண்டென்னைக் காரிமாறப்பிரான்
பண்டை வல்வினை பாற்றியருளினான்
எண்டிசையுமறிய இயம்புகேன்
ஒண்தமிழ்ச் சடகோபனருளையே.
Azhwar in his exalted
state claims that Nammalwar, the son of Kari transformed him ( a person
who was not worthy of any values) by taking care and being
considerate towards him and removed him of his sins by guiding him to the right
path, hence he will loudly proclaim the glory of the kindness of the one who is
the source of sweet Tamil poets , spreading his fame in all directions (that is
he would sing in praise of Nammalwar only)
**************************************
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஈஸ்வர வருடம், சித்திரை மாதம், சுக்ல பக்ஷ சதுர்த்தசி திதியில் சித்திரை
நக்ஷத்ரம் அன்று திருக்கோளூர் என்னும் திவ்யதேசத்தில் வைநதேயத்தின் அம்சமாக
திருவவதாரம் செய்தருளினார். ஆழ்வார் ஞான பக்தி வைராக்யங்கள் நிரம்பப் பெற்றவர். மதுரகவியாழ்வார்ஒரு
சமயம் அயோத்தியில் இருந்து தென் திசை நோக்கி வணங்கும் போது அத்திசையில்
ஒரு பேரொளியை கண்டார். அதிசயத்த மதுரகவியாழ்வார் அந்த ஒளியை நோக்கி நடந்து
வரத்தொடங்கினார் அந்த ஒளி ஆழ்வார் திருநகரி புளியமரத்தடிக்கு வந்ததும் மறைந்து விட்டது.
நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார்
கோயிலில் உள்ள "உறங்கா' புளியமரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது. இன்றும் கோவில் உள்ளே இந்த மரத்தை சேவிக்கலாம். அந்த மரத்தில் ஒரு மகா ஞானி இருப்பதை உணர்ந்த மதுரகவியாழ்வார், ஞான முத்திரையுடன் மோனநிலையில் இருந்த சடகோபரை எழுப்ப
நினைத்து, அவர் அருகில் ஒரு கல்லை போட சடகோபர்
கண்விழித்தார். "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே
கிடக்கும்" என சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார்?
அது வரை பேசாமலிருந்த சடகோபர் "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்"என்றார். மதுரகவியின் கேள்விக்கான நேரடியான விளக்கம். அவர் கேட்டது, உயிர் தோன்றும்போது அந்த உயிரானது எதை அடைந்து, அனுபவித்து எங்கே கிடக்கும் என்பது... அதற்கு நம்மாழ்வாரின் பதில் - அந்த உடம்பின் தொடர்பாக வரக்கூடிய பண்புகளைத்தான் கொள்ள முடியும் என்பது.
அது வரை பேசாமலிருந்த சடகோபர் "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்"என்றார். மதுரகவியின் கேள்விக்கான நேரடியான விளக்கம். அவர் கேட்டது, உயிர் தோன்றும்போது அந்த உயிரானது எதை அடைந்து, அனுபவித்து எங்கே கிடக்கும் என்பது... அதற்கு நம்மாழ்வாரின் பதில் - அந்த உடம்பின் தொடர்பாக வரக்கூடிய பண்புகளைத்தான் கொள்ள முடியும் என்பது.
இந்நிகழ்ச்சியிலிருந்து சடகோபரை நம்மாழ்வார் என்ற பெயரில் மதுரகவி
ஆழ்வார் அழைத்தார். இவர்
அருளிச் செய்த திவ்ய பிரபந்தம் கண்ணிநுண்சிறுத்தாம்பு ஆகும். மதுரகவிகள் தம்
ஆசார்யனான ஸ்ரீ நம்மாழ்வாரையே தமக்கு எல்லாமாகக் கொண்டாடுகிறார்.
** தேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி; பாவின் இன்னிசை பாடித்திரிவனே.**
Here are some photos of
Thirukkolur divyadesam, Mathurakavi Azhwar at Thiruvallikkeni, at Thirukkurugur
and at Thiruneermalai.
அடியேன் : ஸ்ரீனிவாச தாசன். [S.
Sampathkumar]
Thiruvallikkeni
(4 photos above)
Thiruneermalai (one
below)
No comments:
Post a Comment