To search this blog

Monday, May 18, 2026

Sri Parthasarathi Perumal pushpa pallakku 2018

 

After grand Chithirai Brahmothsavam and 7 days of Vidaayaarri

Today 18.5.2026 is Pushpa pallakku for

Sri Parthasarathi Perumal @ Thiruvallikkeni

Pic of   Pushpa pallakku   2018

Sree Parthasarathi vidaayaarri day 7 – Sri Sandeep Narayan

 

திவ்யப்ரபந்த பாசுரத்தில் ஆனந்தமாய் திக்குமுக்காட செய்த சந்தீப் நாராயண்

திருமங்கை மன்னன் திருவல்லிக்கேணி பாசுரம்

"மன்னு தண் பொழிலும் - திருவல்லிக்கேணி நின்றானை"

Sree Parthasarathi vidaayaarri day 7 – Sri Sandeep Narayan

: https://youtu.be/QUkkhdMGoDM




 

Sunday, May 17, 2026

தமிழும் எமக்கு தகராறு !! ~ அருகாமையில் + ! ? !

 

தமிழும் எமக்கு தகராறு !!  அண்மையில் இந்த படத்தை போட்டு - இப்படி எழுதி இருந்தேன்.  

 


இடுங்கண் வருங்கால் நகுக ~ அனைவரும் அறிந்த வள்ளுவன் மொழி.

நம் பாபு பட்டர் ஸ்வாமிகள் சிங்கத்தின் அருகாமையில் கூட  மனமார நகைக்கிறார்

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் ப்ரஹ்மோத்ஸசவம் 2026 

என் நோக்கம் சிங்கத்தின் பக்கத்தில் சிரித்துக்கொண்டு நிற்கும் பாபு பட்டர் என்பதே. 

தமிழ் இலக்கணம் நன்கு அறிந்த, அழகாக சொல்லாடல் கொண்ட திருமதி ஜெயந்தி திருநெல்வேலி இன்று தொலைபேசியில், என் தவறை உணர்த்தினார். அருகாமை என்றால் தொலைவு என்று பொருள் தரும்.  நான் அருகில் அல்லது அண்மையில் என்றே எழுதி இருக்க வேண்டும்.  

இணையத்தில் தேடியதில் -  அருகாமை என்றால் 'தொலைவு' அல்லது 'சுருங்காமை' (குறையாமல் இருத்தல்) என்று பொருள் படும். .  அருகண்மை - அருகண்மை என்பது "அருகில் இருத்தல்" அல்லது "நெருக்கம்" (Proximity) என்று பொருள்படும்.சொற்பிறப்பு: இது "அருகு" (அருகில்) மற்றும் "அண்மை" (நெருக்கம்) ஆகிய இரண்டு தமிழ்ச் சொற்களின் சேர்க்கையால் உருவானது. அருகாமை அருகு +ஆ+ மை என்று பிரிக்கலாம். ஆ என்பது எதிர்மறை இடைநிலை. ஆகவே அருகாமை என்ற சொல் தொலைவு என்ற எதிர்மறைப் பொருளைக் கொடுக்கும்.  

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளுமே ஏதாவதை ஒன்றை கற்க வாய்ப்பு அளிக்கின்றன.  நன்றி திருமதி ஜெயந்தி.  

அன்புடன் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்

17.5.2026

வந்துதைத்த வெண்டிரைகள் .. .. திருவல்லிக்கேணி யான் சென்று : - ஸ்ரீமதி விஷாகா ஹரி

வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்

 

திருவல்லிக்கேணி யான் சென்று என

ஸ்ரீபேயாழ்வார் மங்களாசாஸனம் - மூன்றாம் திருவந்தாதி பாசுரம்

 

ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் விடாயாற்றி - 6ம் நாள்

- ஸ்ரீமதி விஷாகா ஹரி பக்தி ப்ரவாகம்

 

கடற்கரையில் வெள்ளை அலைகள்வந்து உதைக்க சிவப்பான பவளம்வெண்மையான முத்துக்கள்அந்தி நேரத்தில் அழகான மங்கள விளக்குகள்  என விளங்கும்  திருவல்லிக்கேணி!  :  https://youtu.be/F3aRLOCm54M