To search this blog

Sunday, August 26, 2018

Thiruvallikkeni Thirupavithrothsavam 2018 ~ திருப்பவித்ரோத்சவம்


Today (26.8.2018) is concluding day of Thirupavithrothsavam at Thiruvallikkeni – today Yajur Upakarma too (famously known as Avani avittam) – and Sri Parthasarathi had grand purappadu at Thiruvallikkeni.  Apart from the beautiful crown, the big garlands and His most attractive face, one can worship the silken threads (pavithram) adorning Him.



இன்று ஆவணி அவிட்டம் என்று சிறப்பிக்கப்படும் யஜுர் உபாகர்மா .. .. இன்று பவித்ரோத்சவத்தின் நிறைவு நாள் கூட.  இன்று மாலை நம் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், சங்கு சக்கரங்கள் மறைந்தவாறு சாற்றப்பட்ட பெரிய மாலையுடன், அழகு கிரீடம்,  தாழம்பூ சாற்றிக்கொண்டு அற்புத புறப்பட்டு கொண்டு அருளினார். இன்றைய படங்களிலே பெருமாள் பல வண்ண பட்டு மாலைகள் அணிந்து இருப்பதை சேவிக்கலாம். இவை பவித்ரம் என்று அழைக்கப்படுபவை.  பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம்.

திருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருக்கோவிலில் யாக சாலை அமைத்து ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சார்யர்களால் யாக யக்னங்களும்,  அத்யாபகர்களால்  திவ்யப்ரபந்த திருவாய்மொழி  சேவை சாற்றுமுறையும் நடைபெறுகிறது. ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடும் நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு நூலிலான பல வண்ணங்கள் உடைய திருப்பவித்ரமாலை சாற்றப்படுகிறது.

திருவுடம்பு வான்சுடர் செந்தாமரை கண்கைகமலம்,
திருவிடமே மார்வம் அயனிடமே  கொப்பூழ்,
ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ,
ஒருவிடமொன்றின்றி என்னுள்  கலந்தானுக்கே

சுவாமி நம்மாழ்வார் ~ எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் தம்மிடம் வந்தடைந்ததை - 'ஒருவு இடம் ஒன்று இன்றி' -  நீங்கின இடம் ஒன்றுமில் வாதபடி (ஸகல அவயவங்களிலும்) தன்னோடு சேர்ந்தவனாய் உள்ள எந்தை என அதிசயிக்கிறார். அதிஅத்புதமான நம் எம்பெருமான் - திருமேனி திவ்யமான ஒளியை உடைத்தாயிராநின்றது.  திருக்கண்கள் செந்தாமரை மலர்களாயிராநின்றன;  திருக்ககைகள் - தாமரை மலர்களாயின ; அவரது திருமார்பு - பிராட்டிக்கு இருப்பிடயாயிற்று; திருநாபியோ ப்ரம்மதேவனுக்கு  உறைவிடமாயிற்று;  அத்தகைய சிறந்த எம்பெருமானே நாம் அனுதினமும் வணங்கும், நம்மை உய்விக்கும் ஸ்ரீமன் நாராயணன்.

Pavithrotsavam is an annual ritual - the word itself is a derivative from the combination of two words - 'Pavithram (holy) and Uthsavam (Festivity).    This Uthsavam is penitential as also propitiatory  ~ for sure, there is nothing good or bad for the Ultimate Benefactor, the Lord who gracefully blesses in all our endeavours.   It is our own attempt to get rid of the evils that might have been caused by the omissions and commissions in the performance of various rituals throughout the year.  

Sriman Narayanan in Sri Vaishnavaite philosophy beholds the Best of everything and cannot in any manner be having anything in short. The festivals are only intended to be error correction [dosha nirvana] of the rituals that we, the humans conduct and fail in some manner.  Lord only accepts them with Divine Grace, blessing us all the time beyond what we deserve.  For a Srivaishnavaite, nothing needs to be done by self as Sriman Narayana with His abundant opulence will shower his blessings and guide us to do kainkaryam to Him.  

During this Thiru Pavithrothsavam, yaga salai is constructed and vedic chants made by Thirukovil Battars; alongside homam – there would be arulicheyal as also veda parayanam by Adyapaka goshti.  In the sacred maha Yagnam - aswaththa samith, cow ghee, bilvapatrams - vilva ilai, lotus are used.    The poornahuthi / the conclusion of Thirupavithrothsava Sarrumurai is today and the photos here are of today’s purappadu.  Let us all have darshan of Sri Parthasarathi, Thirupavithorthsava yagnam and have the Divine Blessings. 

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்  நடை பெறும் பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம்.  திருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருக்கோவிலில் யாக சாலை அமைத்து ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சார்யர்களால் யாக யக்னங்களும், வேதவிற்பன்னர்களால் வேத பாரயணமும்;  அத்யாபகர்கள் மற்றும் திவ்யபிரபந்த கோஷ்டியினரால் அருளிச்செயல்- திருவாய்மொழி  சேவை சாற்றுமுறையும் நடைபெறுகிறது. ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடு நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு நூலிலான பல வண்ணங்கள் உடைய திருப்பவித்ர மாலை சாற்றப்படுகிறது. 





திருப்பவித்ரோத்சவம் மகிமை பற்றி படித்தது " எம்பெருமானிடம் உள்ள ஸாந்நித்யம் குறையாது இருப்பதற்கு ப்ராயச்சித்தமாக பல உத்ஸவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமுதுபடிகள் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் லோபத்தை (குறைபாடுகளை) நீக்குதற்பொருட்டு ஜ்யேஷ்டாபிஷேகத்திற்கு அடுத்த நாள் “திருப்பாவாடை உத்சவம் ” கொண்டாடப் படுகிறது. , திருவாராதனம் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்” கொண்டாடப் படுகிறது. பெருமாள் திருமேனி முழுவதும் பவித்ரத்தை (புனிதத்தன்மையை) உண்டு பண்ணும் பவித்ரம் (முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள்) சாற்றப்படுகிறது. " (நன்றி : ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ) 

முடிச்சோதியாய் ஒளி படைத்த கிரீடத்தை தரித்த எம்பெருமானின் திருமேனி ஸௌந்தர்யம் அளவிட முடியாதது.  ஸகல சேதன அசேதநப் பொருள்களென்ன எல்லாவற்றையும்  தன்னுள்ளே வைத்துள்ளதனாலேயே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவ எம்பெருமான் பரிபூர்ணன்.  சௌலப்யம், சௌசீல்யம், ஆர்ஜவம், வாத்சல்யம், சுவாமித்வம் என எல்லா கல்யாண குணங்களையும்  தன்னகத்தே கொண்டவன்.  எம்பெருமானுக்கு குறை என்பதே இல்லை.  எம்பெருமானின் திருவடிகளையே சரணாய் கொண்டு கைங்கர்யம் செய்யும் அவனடியார்கள் இது போன்ற உத்சவங்களை சிறப்புற நடத்தி, ஆனந்தம் கொள்கிறோம்.  

திருவல்லிக்கேணி திருப்பவித்ரோத்சவம் கடைசி  நாள்  புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :   

அடியேன் - ஸ்ரீனிவாச தாசன் – [ ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்]
26th Aug 2018.












Sri Raghavendra Aradhana 2018


Hari Sarvothama :Vayu Jeevothama
~  the tharaka mantra for Madhwas - essence of  Dvaita saatra


Today 26th Aug 2018 is Yajur Upakarma – here is a photo of Sri Parthasarathi Perumal – concluding day of Pavithrothsavam – and you could see Sri Raghavendra Mutt too. Hinduism is unique and more than 1000 years ago, existed three Acharyars who profounded Vedanta philosophy.  For us, their philosophies are the founding principles.  There is the ‘Advaita philosophy’ of Sri Sankaracharya; the ‘Vishishtadvaita’ philosophy of Sri Ramanujacharya and the ‘Dvaita’ philosophy of Sri Madhvaacharya.

There is fair sprinkling population of Madhwas in Triplicane – i.e., those who follow the ideals propagated by Sri Madhvacharya. Understand that the writings of Sri Madhvacharya comprises of thirty-seven works, collectively called Sarva-moola Grantha. As we have Guru parampara Acharyas in Sri Vaishnavism, the hierarchy in Madhvas starts with Sri Maha Vishnu himself, Pirattiyar Lakshmi Devi, and then has Brahma, Saraswati, Garuda, Anjaneya… heard from a friend that they have Karmaja Devatas which includes Sri Prahladarajar. Prahlada as we know is famed for his blemishless devotion to Sri Maha Vishnu, despite attempts by his father Hiranyakashipu, to turn him to the contrary. He is accorded special importance as being the reason for the Narasimha avatâr. The puranic instance of Sri Prahlada makes us understand that God is everywhere.

Miles away, is the town of  Mantralayam in Kurnool district, lying  on the banks of the Tungabhadra river and is known for the holy Vrindavana of Sri Raghavendra Swami.  Sri Raghavendra Swami is reverred to have lived on this earth between 1595 – 1671.  His knowledge, the way of life and the numerous miracles performed have led him being  worshipped specially.   After Sri Prahlada and Sri Vyasaraya, Madhwas rever Sri Raghavendrar in holy esteem.    The ‘Aaradhana Uthsavam’ for Sri Raghavendrar starts from tomorrow  .. .. and here are some photos taken at the Mutt at Triplicane.
Sri Lakshmi Aradhana 
~view sannathi - there is Narasimha & Anjaneya too.


Sri Venkata Natha as he was known, learnt and acquired mastery over Vedas, Sastra, puranas and was totally religiously inclined in service of God. Upon taking Sanyasa, he came to be known as ‘Raghavendra Swami’; on a very auspicious day, the saint  Sri Raghavendra Thirtha, entered the samadhi in the Brindavan, alive. The event was marked by great festivity. Understand that as ordered by the Swami, 700 saligrams  were kept in the Brindavanam and to-date are being worshipped alongside the image of Sri Anjaneya.

Sri Raghavendra Swami is hailed as an avatara of Sri Prahladarajar,  and he chose his Brindavan at Mantralaya on the banks of the Tungabhadra.  Devotees worship him in form of  Brindavans installed in many places and one such is at Triplicane. Sri Raghavendra Swamy  starts tomorrow at Thiruvallikkeni and many other places.

Hari Sarvothama! Vayu Jeevothama!
Sri Moola Ramo Vijayathe ..
With reverence – S. Sampathkumar
26th Aug 2018.

This mutt at Triplicane (opp to National Boys School)  was built in the early 1970s and lot of rich and famous visit this temple…………. Could recollect  having seen Rajnikant coming on a Priya scooter and in later days on a Fiat car………. Rajnikant’s 100th  film was on Raghavendrar and the cut out used in the film was lying in this mutt for long.


Sri Srinivasar
Prahaladar and Sri Raghavendrar below
Sri Srinivasar




Wednesday, August 15, 2018

Adi Hastham ~ Sri Varadha Rajar purappadu at Thiruvallikkeni 2018


Today is a great day – 15th Aug – the Independence Day of the Nation.  Today our respected Prime Minister Shri Narendra Modiji addressed the Nation from the ramparts of the Red fort on the occasion of 72nd Independence Day. 

Asserting that India is today brimming with self-confidence, the Prime Minister mentioned developments such as the success of Navika Sagar Parikrama by six young women naval officers, and the achievements of young Indian sportspersons from humble backgrounds. He mentioned the blooming of Neelakurinji flowers in the Nilgiri hills, a phenomenon that occurs once every 12 years. He said that the recently concluded session of Parliament, was one dedicated to the cause of social justice. He noted that India is now the world’s sixth largest economy.  The Prime Minister paid homage to the freedom fighters and martyrs. He saluted the jawans of the security forces and police forces. He recalled in particular, the martyrs of the Jallianwala Bagh massacre, which happened on Baisakhi day in 1919. He offered condolences to people affected by floods in some parts of the country.

He quoted poet Subramaniam Bharti to say that India will show the world the path to freedom from all kinds of shackles. He said such dreams were shared by countless freedom fighters.

At Thiruvallikkeni divyadesam, today is ‘Adi Hastham’ and Sri Varadharajar had chinna mada veethi purappadu – Sri Peyalwar’s moonram thiruvanthathi was rendered in the goshti.

Sri DEvathiraJar wears an attractive  gem crown with holy thulasi  wreath over it.  He has the adorable hue of a dark gem. He resides in the mountain that cool streams flowing around, making the place serene and pleasant.  It is He who came running to save His devotee – Gajendra, the elephant and killed the crocodile that troubled Gajendra.   He came and killed a crocodile living in the lake.

இன்று ஆடி ஹஸ்தம் - திருவல்லிக்கேணி திவ்யக்ஷேத்திரத்திலே ஸ்ரீ வரதராஜர் சின்ன மாட வீதி புறப்பாடு கண்டருளினார். 



ஸ்ரீ பேயாழ்வாரின் அமுத வரிகளை நினைவில் கொண்டு, அவரை தரிசிக்கும் போது இன்னமும் ப்ரம்மிப்பாக இருந்தது.  பரமபக்தனான கஜேந்திராழ்வான்ஒரு நீர்ப்புழுவின் வாயில் அகப்பட்டுக்கொண்டு மிகவும் நொந்து துயர் அடைந்தபோது, எம்பெருமானே சரணாகதி என அவனை அழைத்திட்டான்.  வைடூரியம் ஜொலிக்கின்ற கிரீடமும், குளிர்ச்சியான  திருத்துழாய் மாலையும் அணிந்து, குளிர் அருவிகள் சூழ்ந்துள்ள மலையில் வாழும் எம்பெருமான், அபயக்குரல் கேட்டவுடன், உடனடியாக, பக்தரை ரக்ஷிக்கும்படியாய், முதலையைத் துணித்து வேழத்தை வாழ்வித்ததான் ~ அவ்வாறாய் ஆனைக்கு அருள் செய்த பெருமானை   ‘அணிநீல வண்ணத்தவன்‘ என்ற ஈற்றடியினால் அருளிச்செய்தார் நம் பேயாழ்வார். 

சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால்,
தாழ்ந்த அருவித் தடவரைவாய், - ஆழ்ந்த
மணிநீர்ச் சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான்,
அணிநீல வண்ணத்தவன்.


adiyen Srinivasa dhasan
15th Aug 2018.







Monday, August 13, 2018

Thiruvadipuram Sarrumurai 2018 ~ Sri Andal Sri Parthasarathi purappadu


A great day today  (13th Aug 2018) ~ the concluding day of Andal Uthsavam – Thiruvadipuram.  இன்று 'திருவாடிப்பூரம்,' மிகச் சிறந்த நன்னாள் !  ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தினம்.     ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார்  பெண்பிள்ளையாய், நந்தவனத்தில்துளசி மலரில் பூமிப்பிராட்டி அம்சமாய் தோன்றிய கோதைப் பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த  பிரபந்தங்கள்  'திருப்பாவை; நாச்சியார் திருமொழி".


பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீர்மைஒரு நாளைக்கு
உண்டோமனமே உணர்ந்து பார்ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு.


~ Thiruvadipuram, our Acaryar Sri Manavala  Mamunigal states is  non-pareil among all days  -  Marking this glorious day, in the evening at Thiruvallikkeni, it was grand purappadu of Sri Andal with Sri Parthasarathi in eka asanam ~ same kedayam; whilst  at Srivilliputhur, it is rathothsavam [thiruther]  ..  there  is divinity everywhere




Sri Andal in her Nachiyar Thirumozhi   describes the Lord as having the white conch, wearing beautiful yellow silken robes, having tresses on shoulders hovering like bees over His lotus face, the Lord of immense compassion been worshipped at Vrindavan [Brindavan nearer Mathura, where Krishna grew up !]

வெளிய சங்கொன்றுடையானைப் பீதகவாடையுடையானை*
அளிநன்குடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே? *
களிவண்டெங்கும் கலந்தாற்போல் கமழ்பூங்குழல்கள் தடந்தோள்மேல்*
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே !


Let us prostrate at the Lotus feet of Sriman Narayana, singing the verses of Kothai piratti, which will ensure all goodness and prosperity in this material World and in the heavenly World. 

adiyen Srinivsa dhasan.












Thiruvadipuram 2018 ~ celebrating birth of Sri Andal Nachiyar


காலை எழுந்திருந்து கரியகுருவிக் கணங்கள் *
மாலின் வரவு சொல்லி மருள்பாடுதல் மெய்ம்மை கொலோ !




13/8/2018 -  இன்று மிகச் சிறந்த நன்னாள் !  ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தினம்.  'திருவாடிப்பூரம்' ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெண்பிள்ளையாய், நந்தவனத்தில்,துளசிமலரில் பூமிபிராட்டி அம்சமாய் தோன்றிய கோதை பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. தன் இளமை தொடங்கியே 'மானிடவர்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்என உறுதி பூண்ட பிராட்டியின் பக்திபெருக்கு திருப்பாவைநாச்சியார் திருமொழி நூல்களாக வடிவெடுத்தது.

பக்தி ஸ்ரத்தைக்கு  உதாரணமாய் திகழ்ந்த ஆண்டாள் சிறந்த கவிதாயினி.  அதிகாலையில் என்ன நிகழும் ?  எங்கே என்பதும் முக்கியம் !! ஆண்டாள் பிறந்தவூரில் திர்யக்குக்களுங்கூட எம்பெருமானைப்பற்றின சிந்தனையே கொண்டிருக்குமாம்.  இதையே ஆண்டாள், மிக அழகாக – கருங்குருவிகள் கூட்டங் கூட்டமாக காலை எழுந்திருந்து இருந்து எம்பெருமானுடைய வரவை கொண்டாடி மகிழுமாம் என சிலாகிக்கிறார்.

Somedays back, this photo of a tiny black bird landing on the big eagle having a five foot wing span, pecking it on the back of its head and stunningly riding on it went viral.   Here is that picture – credit – www.thesun.co.uk.

It is  black drongo (Dicrurus macrocercus) (கருங்குருவி) seen commonly across the country, often seen perched high on power cables and exposed branches, keeping a keen eye out for passing insects, its chief form of nourishment.

            It can also be spotted perched on grazing animals and picking grub off their hides. Though often colloquially called ‘king crow’, the bird is not related to the crow family at all. the Black drongo (Dicrurus macrocercus) is a small Asian passerine bird of the drongo family Dicruridae. It is a wholly black bird with a distinctive forked tail perching conspicuously on a bare perch or along power or telephone lines. The species is known for its aggressive behaviour towards much larger birds, such as crows, never hesitating to dive-bomb any bird of prey that invades its territory.  To the unobservant, the black drongo could appear rather unremarkable. Apart from the swift, balletic dives that it makes to pursue its prey, nothing about the drongo’s physical appearance — the small squat body, the glossy black feathers or even the distinctive forked tail — is spectacular. But to merely glance and then ignore this bird is to lose sight of a bird truly remarkable, fearless and aggressive.

Today 13th Aug 2018    is Thiruvadipuram [Puram Nakshathiram in the month of Aadi] – a most blessed day for all Srivaishnavaites – for this day marks the birth of Kothai Piratti [Andal].  Andal was the embodiment of divine wisdom and devotion par excellence. 

தமது திருப்பாவையில் - "வையத்து வாழ்வீர்காள்என்ற பாசுரத்தில் - இந்த பூவுலகில் வாழும் எல்லோரும் பேறுபெற உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்துதிருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமனையே நினைத்து அவரடியே சேருமாறு பாடின ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.  இன்று 'திருவாடிப்பூரம்,' மிகச் சிறந்த நன்னாள் !  ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தினம்.

     ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார்  பெண்பிள்ளையாய்,  நந்தவனத்தில்துளசி மலரில் பூமிப்பிராட்டி அம்சமாய் தோன்றிய கோதைப் பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. தன் இளமை  தொடங்கியே 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்என உறுதி பூண்ட பிராட்டியின் பக்தி திருப்பாவைநாச்சியார் திருமொழி நூல்களாக வடிவெடுத்தது. ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்து  ஸ்ரீகண்ணனிடம் பக்தியே.  அவரது வார்த்தைகள் இலக்கண நயமும்பக்தி மனமும் கொண்டன.  திருப்பாவை முப்பது பாடல்களும் சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப்படுகின்றன.

Andal’s birth occurred in the 98th  year of Kali Yuga – Nala Varudam – in the month of Aadi – shukla paksham – chathurthasi day.   She was found in a thulsi garden at  Sri Villiputhur by Vishnu Chithar [Periyazhwaar]. Our Acharyar in his  ‘Upadesa Rathina Malai’ hails the day as  ‘ Periyaazhwar pen pillaiai Aandal pirantha thiruvadipurathin seermai’.  Uyyakkondar says in the thanian visualizing Srivilliputhur as a very special Divyadesam where Hamsam [anna pakshi] known for its power to separate milk from water are abundant and hails Andal for the verses with which she offered garlands to the Lord.

Sri ANDAL is the quintessence incarnation  of Shri Bhuma Devi, the divine consort of Sriman Narayana, who took birth on this earth to liberate suffering human  beings from worldly bondage. She sang thirty sweet songs containing the cardinal principles of Sri Vaishnava Dharma.  Other than Thiruppavai which is specially sung in all the days of the month of Margazhi, She also gave us 143 verses known as ‘Nachiyar Thirumozhi’.

On this great day, there will be grand procession [purappadu] of Andal at Srivilliputhur, Srirangam, Kanchipuram, Thiruvallikkeni and many other divyadesams.  The 10 day celebrations at Thiruvallikkeni  culminates grandly today. 

Her philosophy is clear and unmistakable.  She says இம்மைக்கும் ஏழ் ஏழு பிறவிக்கும் பற்றாவான் நாராயணன் (‘immaikkum ezhezhu piravikkum patraavan, nammaiyudaivan Narayanan nambi’)  -  "Sriman Narayana is our refuge now and forever and He will not let us down, for we are His possessions".

adiyen Srinivasa dhasan  

PS 1:  Milk sweets are special and at Her place, Sri Villiputtur,   Palkova, the supreme milk delicacy is exceptional.   The semisolid texture and the flavor makes this delicacy unique.