To search this blog

Monday, March 28, 2011

Thiruvallikkeni Panguni Uthsavam 2011


Panguni Uthiram is a very auspicious day.  The Pallava uthsavam concludes on this day.  During the Pallava uthsavam, ‘Brindharanya puranam’ is read in front of Sri Ranganathar.
In Srirangam, it is famous for ‘Serthi sevai’.  At Thiruvallikkeni divyadesam,  on the day of Panguni Uthiram, divine wedding of Sri Vedavalli thayar and Sriman Ranganathar is performed.  On this day, there is purappadu on Garuda vahanam.

This is extremely attractive ‘Garudan’ known as ‘kannadi Garudan’ – for the vahanam has glass pieces of art embedded on the structure. 

This year  [2011] ‘Panguni Uthiram’ fell on 19th of March, (the day of super perigee when moon came closest to earth) and being the full moon day, it was resplendent radiance.   On that day, moon loomed closer to Earth at 356,577 km  which was 30000 km closer than the average distance of 382,900 km.

Here are some photos taken during the purappadu

Regards – Srinivasan Sampathkumar.

Wednesday, March 16, 2011

Thiruvallikkeni Parthar Thavana Uthsavam 2011 - Thirukachi Nambigal Satrumurai :: ஸ்ரீ பார்த்தர் தவன உத்சவமும் : திருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறையும்



ஸ்ரீ பார்த்தர் தவன உத்சவமும் : திருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறையும்

Thiruvallikkeni is replete with Festivities.  Of the many Uthsavams, Thavana Uthsavam is significant.  Immediately after the Float festival, Sri Parthasarathi visits Thavana Uthsava Bungalow situate in TP Koil Street.  In the centre it has a raised structure.  In olden days, it had two minars inside which there used to be bats.  Now this place is being maintained well.  During this Uthsavam, Perumal takes rest under the roof made of thavanam – an aromatic herb.  [Artemisia pallens, Dhavanam (Tamil: தவனம்), is an aromatic herb, In genus of small herbs or shrubs, xerophytic In nature. The flowers are racemose panicles bear numerous small yellow flower heads or capitula, but the silvery white silky covering of down gives the foliage a Grey or white appearance]


This is a festival of 5 days – the second day (Sunday) 13/3/11 was the birth celebration of Thirukachi Nambigal.  He was born in Poovirunthavalli, which is now known as ‘poonamallee’ lying around 20 km away from Central Chennai enroute to Bangalore, Kanchi, Vellore, Thiruvallur and Tirupathi. 

Nambigal served Kanchi Peruralalar by doing ‘aalavatta kainkaryam – (doing service of providing air by hand fan) and was an acharyan of Swami Ramanujar.  It is believed that Arulalar spoke to Nambigal in person.  Here is something on Thavana Uthsavam, Thirukachi nambigal and some photos taken during the purappadu. 

                                                       ***************************************

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கொண்டாடும் உத்சவங்களில் தவன உத்சவம் முக்கியமான ஒன்று.  துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் தவன உத்சவ பங்களா அமைந்து உள்ளது.ஸ்ரீ பார்த்தசாரதிக்கு மாசி  மாதம் தெப்போத்சவம் முடிந்தவுடன்  ஐந்து நாட்களும், வரதருக்கு மாசி ஹஸ்ததன்றும் அழகிய சிங்கருக்கு மாசி சுவாதி விசாகம் அனுஷம் மூன்று நாட்களும் தவன உத்சவம் சிறப்பாக  நடக்கிறது. தினம் காலை பெருமாள் பங்களாவுக்கு எழுந்தருளி திருமஞ்சனமான பிறகு சாயங்காலம் பெரிய மாட வீதி புறப்பாடு  கண்டு அருள்வார். 

திருவல்லிக்கேணியில் மூன்று பங்களாக்கள் உண்டு. தவன உத்சவ பங்களா, கோமுட்டி பங்களா மற்றும் வசந்த உத்சவ பங்களா என்பவை இவை.தவன உத்சவ பங்களா நடுவில் மண்டபமும், பெரிய திண்ணையும் நிறைய மணல் பரப்புமாக இருந்தது. இங்கு ஒரு பெரிய கிணறு உண்டு. கோரி என்றுஅழைக்கபட்ட இரண்டு மாடங்கள் இருந்ததன. வட்ட படிக்கட்டுகள் ஏறி செல்ல இயலும். மேலே நிறைய வவ்வால்களுடன் பயம் தரும் இடமாக இருக்கும். கால போக்கில் இந்த கோரிகள் சரிந்து சிதிலமாகின. சமீபத்தில் பராமரிப்பு செய்யப்பட்டு இப்போது மண்டபம் நன்றாக உள்ளது. தவன உத்சவம் தவிர பிரம்மோத்சவ காலங்களில், ஐந்தாம் நாள் காலையும் ஈக்காடு தாங்கல் திருஊறல் உத்சவம், ராம நவமி உத்சவம் காலங்களில் பெருமாள் இங்கே எழுந்து அருளுகிறார்.

முன்பு பெருமாள் எழுந்து அருளும் காலங்களில் நீர் இறைத்து சுத்தம் பண்ணி கோலங்கள் போட்டு பரிமளிக்கும். தவனம் என்பது வாசனை அளிக்கும் நறுமண பயிர். ஒரு காலத்தில் இந்த இடத்தில தவனம் மண்டி இருந்து இருக்கலாம். தற்போது தவனத்தால் மேற் கூறாளம் அமைக்கப்பட்டு பெருமாளுக்கு நறுமணம் கமழுமாறு உள்ளது. 

இந்த ஞாயிறு அன்று 13-03-2011  மாசி மிருகசீரிஷம் நக்ஷத்திரம் - திருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறை.  காலை பெருமாளுடன் நம்பிகள் தவன உத்சவ பங்களாவிற்கு எழுந்து அருளினார்.  இரண்டாம் திருவந்தாதி கோஷ்டி ஆனது.   மாலை சிறப்பாக சாற்றுமுறை புறப்பாடு -  இராமானுஜ நூற்றந்தாதி கோஷ்டி ஆனது. புறப்பாட்டின் பொது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :  
ஒற்றை மாலையுடன் எழுந்து அருளும் அவசரம் 
பின்னழகு 
தவன கூராளத்தில் 
தவன உத்சவ பங்களாவுக்குள் 
பங்களா மேடை
திருக்கச்சி நம்பிகள் 
எங்கள் அழகர் - ஸ்ரீ பார்த்தர்
திருக்கச்சி நம்பிகள் - எம்பெருமானாருக்கு ஆச்சார்யர் ஆவார்.  இவர் 1009 ஆம் ஆண்டு அவதரித்தார். இவரது அவதார ஸ்தலம் : பூவிருந்தவல்லி.  சென்னையில் இருந்து பெங்களூர் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருப்பதி செல்ல இந்த இடத்தை கடந்து செல்ல வேண்டும்.  இன்று : பூனமல்லி / பூந்த மல்லி  என மருவி அழைக்கபடுகிறது.  இங்கே திருக்கச்சி நம்பிகளுக்கு  பிரதானமாக கோயில் உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள்- திருக்கச்சிநம்பிகள் கோயில்தான் அது. இங்கே காஞ்சி வரதராஜர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீநிவாசர் என மூவரும் சந்நிதி கொண்டுள்ளனர். இங்கே உள்ள தாயார் திருநாமம் : புஷ்பவல்லி தாயார்.   பூவிருந்தவல்லி என்பது தான் கால போக்கில் இப்படி மருவி விட்டதாம்.  திருக்கச்சி நம்பிகள் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு கடந்த 2009ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

திருக்கச்சி நம்பிகள் தினமும் பூக்கள் சமர்ப்பித்து திருகச்சியிலே தேவராஜ பெருமாளுக்கு திரு ஆலவட்டம் (விசிறி) திருப்பணி செய்து வந்தாராம்.  இவருடன் பெருமாள் தினமும் பேசுவாராம்.  இளையாழ்வார்  (உடையவர்) தமது சந்தேஹங்களை நம்பிகள் மூலமாக கேட்க : பெருமாள் ஆறு வார்த்தைகள் பதில் அளித்தாராம்.  அவை 'அத்திகிரி அருளாளர் அருள்வித்த ஆறு வார்த்தைகள்' என கொண்டாடப்படுகின்றன.  "அஹமேவ பரம் தத்வம்" - என்பது முதல் வார்த்தை.  'ஸ்ரீமன் நாராயணனே பரம் பொருள் - முழு முதற் கடவுள்' என்பது ஆகும்.  நாம் இமையோர் தலைவன் மாதவன் பேர் சொல்லுவதே நன்மை என்பதை உணர வேண்டும். 

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன் 
==================================================================

When searching for some details, stumbled upon the website of Desikan.  Have read his posts earlier, as am also a very ardent fan of Sujatha.  Here is something taken from Desikan's web (with his due permission and thanks to him)-  Nandri :  http://desikan.com/blog/?p=145
முதல் பராந்தகன் (கிபி 907-954) கல்வெட்டில் ‘புலியூர்கோட்டத்துப் பூந்தண்மலி’ என்ற சொற்றொடர் இந்த ஊரைத்தான் குறிக்கிறது என்கிறார்கள். கிபி 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் நான்கு இந்தக் கோயிலில் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளில் செம்பாக்கததைச் சேர்ந்த ஒருவர் விளக்கு எரிய ஒரு பசுவை வழங்கினார் என்றும், சேரன் இரவிவர்மன் (கிபி 1275-1290) மானியம் வழங்கினார் என்றும் இருக்கிறது.கோயில் அர்ச்சகரிடம், திருக்கச்சி நம்பிகள் வாழ்ந்த வீடு இன்னும் இருக்கிறதா என்று கேட்டேன்.
“இங்கே தான் எங்கேயாவது இருக்கணும்… இப்ப கடை எல்லாம் வந்து அந்த இடமே எங்கே என்று தெரியாமல் போய்விட்டது” என்று பட்டும் படாமலும் சொன்னார். கொஞ்சம் நேரம் கழித்து “எனக்கு அவர் வசித்த இடத்தைக் காண்பிக்க முடியுமா?” என்று மீண்டும் கேட்டேன். “இப்படியே நேராகப் போய் வலது பக்கம் திரும்பினால் நம்பி தெரு வரும்; அங்கே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு அது தான் நம்பி இருந்த வீடு…இப்ப அவருடைய 1000 வருஷத்துல அதை மீட்க நடவடிக்கை எடுக்க போறதா சொல்றா” என்றார்.
நம்பி தெருவில் ஒருவரிடம் பிள்ளையார் கோயில் எங்கே இருக்கிறது என்று கேட்டேன். “எந்தப் பிள்ளையார் கோயில்? இங்க மூணு பிள்ளையார் கோயில் இருக்கு” என்றார். அப்போதுதான் எனக்கு அங்கே போகும் குறுக்கு சந்தில் எல்லாம் பிள்ளையார் இருக்கிறார் என்று தெரிந்தது.
“நம்பி தெரு பிள்ளையார்” என்று நம்பிக்கையாகக் கேட்டேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு நேராகப் போக சொன்னார். அதற்குள் வேறு ஒருவர் “சார் உங்களுக்கு யாரை பார்க்கணும்?” என்றார்.
“நம்பி வீடு”
“இது நம்பி தெரு, நீங்க யாரைப் பார்க்கணும்?” என்று கேள்வியை மாற்றிக் கேட்டார்.
“நம்பி தெருவில் இருக்கும் நம்பியின் வீட்டை,” என்றேன் திரும்ப. அவர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.
நம்பி தெருவில் அந்த பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் சென்றபோது பல கேஸ் சிலிண்டர்கள் அடுக்கப்பட்டு பிள்ளையார் ஒளிந்துக்கொண்டு இருந்தார். கோயில் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம் மூடியிருந்தது, பக்கத்தில் இருந்தவரிடம் அது என்ன என்று கேட்டேன் “அது ஏதோ பழைய மண்டபம், இப்ப அது உரம் வைக்கற கோடவுனாக இருக்கிறது” என்றார்.
“உரமா ?”
“ஆமங்க வியசாயத்துக்கு”
அந்த கோடவுன் மீது ஏதோ 3வது வட்ட தலைவர் பெயர் எழுதியிருந்தது.
அங்கிருந்து தமிழ்நாடு அறநிலையத் துறை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியில் பேசியபோது அவர், “ஆமாங்க அந்த கோடவுன் தான் திருக்கச்சி நம்பிகள் இல்லம், அது இப்ப பாழடைஞ்சு இருக்கு” என்றார்.
“அத உர கோடவுனா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்களாமே ?”
“ஆமாங்க அதை கோயிலோட சேர்க்க நடவடிக்கை எடுத்துகிட்டிருக்கோம்”
திருக்கச்சி நம்பிகள் திருமாளிகையை நம்பிக்கே விட்டுக்கொடுத்தால் நம்பி தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டேன். நம்பிக்கை தான் 

Saturday, March 12, 2011

திருவல்லிக்கேணி தெப்போத்சவ திருவிழா - Varatharajar Theppam


The annual float festival at Triplicane is a grand festival.  Starting on the Amavayai day of the month of Maasi – this is held for 7 days.  The first 3 days are for Lord Parthasarathi, then followed by Sri Azhagiyasingar, Sree Ramar, Sri Ranganathar and Varatharajar. 

There is a beautiful pond by name ‘kairavini’ which was also known as ‘allikkeni’ due to the abundant lily flowers present there.  The place derived its name because of this pond – Thiruvallikkeni because of the existence of the pond having lily flowers.  
On concluding day – 10th of March 11 – Lord Varadhar was taken on the float.  The God was in the form in which he saved the mighty elephant was attacked by the crocodile.  Lord released his chakra to save the elephant and this posture of ‘Gajendra moksham’ was depicted.  One of the arms was in prayoga posture, having released the chakra – holding the azhi or the sangu in the other, holding Gatha in one and abhaya hastham on the fourth thirukaram.  It was indeed a great darshan of the Lord.  Here are some photos depicting the Theppam, Thirukolam and one taken during the hastham purappadu.

**************************************************
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் மாசி மாதம் அம்மாவாசை முதல் தெப்போத்சவம் விமர்சையாக நடை பெறுகிறது.   பிருந்தாரண்ய க்ஷேத்ரம் ஆன திருவல்லிகேணியில் அழகான திருக்குளம் உள்ளது - இதற்கு 'கைரவிணி புஷ்கரிணி' என்று பெயர்.  இந்த திருகுளத்தில்தான் தெப்பம் நடைபெறுகிறது. திவ்யதேசத்துக்கு பெயர் வரக் காரணமே இந்த புஷ்கரிணி தான்.  ஒரு காலத்தில் அல்லி மலர்கள் மிகுந்து காணப்பட்ட இத் திருக்குளத்தில் தற்சமயம் அல்லியோ தாமரையோ இல்லை.  

முதல் மூன்று நாட்கள்  ஸ்ரீபார்த்தருக்கும். அடுத்து அழகியசிங்கர், ஸ்ரீமந்நாதர்,  ஸ்ரீராமர், வரதருக்கும் தெப்போத்சவம் நடக்கிறது. ஏழாம் நாளான 10/03/2011 அன்று வரதர் தெப்போத்சவம்.   " கானமர் வேழம் கையெடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ, ஆனையின் துயரம் தீர - ஆழி தொட்டானை' என திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்தபடி - ஆனைக்கு அருள் செய்த பெருமாளாக - சக்கரத்தினை பிரயோகம் செய்த திருகரங்களோடு ஒரு கையில் ஆழி (சங்கு) ஏந்தி, ஒரு கையில் கதை தாங்கி மற்றொரு கையால் அபயம் அளிக்கும் பெருமாளாக - வரதர் புறப்பாடு கண்டு அருளினார். 

தெப்பம், வரதர் சாத்துப்படி அழகு இங்கே சில புகைபடங்களாக.  இந்த திருகோலத்தை நன்கு கண்டுற  வரதர் ஹஸ்த புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட ஒரு படமும் இங்கே : 
theppam - the float 
varadhar gajendra moksham thirukolam 


 varadhar during hastham purappadu 


அடியேன் ஸ்ரீனிவாச தாசன்  

Monday, March 7, 2011

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி தெப்போத்சவம்


திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் மாசி அம்மாவாசை முதல் தெப்போத்சவம் கைரவிணி புஷ்கரிணியில் விமர்சையாக நடக்கிறது.  முதல் மூன்று நாள் ஸ்ரீ பார்த்தசாரதிக்கும், பிறகு அழகிய சிங்கர், ராமர், வரதர், ரங்கநாதர் ஆகியோருக்கும் என ஏழு நாட்கள் இவ் வைபவம் நடக்கிறது.  முதல் மூன்று நாள் உத்சவத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :





For more photos click this link : தெப்போத்சவம்
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்