To search this blog

Thursday, May 26, 2011

A song in “Naaladiyar” on Friendship and Patience.





நமது  செம்மையான  தமிழ்  மொழியில்  பற்பல  சிறந்த  கருத்துக்கள் அழகான  பாடல்கள்  மூலமும்  அறிவுரைகள்  மூலமும்  வழங்கப் பெற்று   வந்துள்ளன. நாலடியார்   என்னும்  திரட்டு   பல  சமண முனிவர்களின்  பாடல்களின்  திரட்டு  என  கருதப்படுகிறது.  அதில்  நட்பு  (friendship)  மற்றும்  பொறையுடைமை   (patience)  பற்றிய இச்செய்யுள்  என்னை கவர்ந்தது .

“வேற்றுமையின்றி  கலந்திருவர்  நட்டக்கால் *
தேற்றா வொழுக்கம்  ஒருவன்  கண்  உண்டாயின்
ஆற்றுந்  துணையும்  பொறுக்க, பொறா னாயின் 
தூற்றாதே தூர  விடல்  “

இருவர்  சேர்ந்து  இருக்கும்போது  ஒருவருடைய  நடத்தையில்  பிடிக்காத விஷயம்  நடந்தால் ,அதை  பொருட்படுத்தாது  நடத்தல் வேண்டும். அப்படி அது  எல்லை  மீறினால்,  அந்த   நட்பை விக்கிக்  கொள்ளலே தவிர   நண்பனது  குணங்களை (அல்லது  குணமின்மையை] தூற்றுதல் கூடாது.

முடிந்தவரை  நல்ல  பழக்கங்கள்  உள்ளவர்களையே  நண்பர்களாய் கொள்ளல்  நன்று.   சிநிகிதம்  ஆனபின் , நண்பனை   எல்லா சமயத்திலும் மதித்தல் வேண்டும்.  அவனிடத்தில்   அயோக்கியமான நடவடிக்கை உண்டானால், அவனுக்கு  உணர்த்தி  அவனை பொறுத்தல்  வேண்டும்.  அது  முடியாமற் போனால்,  நட்பை விட்டாலும்  விடலாமே தவிர, எக்காரணம்   கொண்டும்  –  நட்பையோ,  நண்பனையோ   பழித்தல் கூடாது.  

நமது  எல்லா  தவறுகள்,   ஏமாற்றங்கள்,   தோல்விகள்,   குணநலன்கள்   ஆகிய எல்லாவற்றுக்கும்  – மற்றவர்களையும் வேறு  ஏதாவது   காரணங்களையுமே   தேடும்  மானிடவருக்கு, இந்த  பாடல்  நல்ல அறிவுரையை  வழங்குகிறது.

அன்புடன்  – ஸ்ரீ  சம்பத்குமார்


Tuesday, May 17, 2011

Sri Varadharajar Garuda Vahanam and Doddachaaryar Sevai at Thirukachi


Dear (s) 


For a  Srivaishnavaite, Perumal Koil refers to “Sri Varadharaja Swamy temple’ at Kanchipuram.  Legend has it that Brahma performed Asvamedha yaga at mokshapuri i.e., Kanchi and Lord Vishnu emerged out of the fire with Sanku Chakram. It is believed that the annual Uthsavam was initiated by Brahma himself. Indira’s white elephant Iravatham took the form of a hill called Hastigiri on which shrine of Varadharajar is located. This Swami is known by various names, prominent among them being : Devarajar, Devathirajar, Thepperumal, Varadhar, PerArulalar …


The annual brahmothsavam is now on and today is the famous Garuda Sevai – when Lord is taken in procession on vahanam of Garuda also known as Periya Thiruvadi. Garuda was born to Kaashyapar and Vinathai (Vinathai siruvan siragu ena pasuram]

My Acharya is Cholasimhapuram Doddayachaaryar (presently Sri U. Ve. Kovil Kanthadai Chandamarutham Singarachaar Swamy) . Garuda Seva has special significance for Kanchi, Sholinghur because of Swami Doddayachaaryar connection. 




Forefather of the present day Acharyar,  who lived during  16th century, was an ardent devotee of Lord Varahdaraja and did many kainkaryams to Him. He was a regular in the annual Vaikasi Garuda Sevai of Devathirajar. Legend has it that on a particular year, he was not well and could not attend the Garudothsavam at Kachi.  He was feeling desperate about his misfortune of not being able to have darshan of PerArulalar at Kachi on Garuda vahanam. He lamented standing near the Thakkan kulam at Cholasimhapuram (Sholinghur]. He composed hymns on Varadharaja, known as  Sri DevarAja Panchakam. He yearned for the Lord's sevai and these outpourings were a direct result.




Emperuman will never let his ardent bhaktha down. He came down to Sholinghur and gave darshan to Dhoddacharyar - seated on Garuda vahanam. Such is the mercy and leela vinotham of PerArulalar.   Even today, on VaikAsi GarudOthsavam day, there is a tradition known as Doddayachaaryar  Sevai, when the archakas hide Lord Varadhar at the western gate for a short time with two umbrellas just before He leaves the temple. It is believed that Lord goes to Sholinghur for giving darshan to Dhoddacharyar. The mangala aarathi takes place thereafter. 




In the Devaraja Panchakam, Acharyan [Doddachaaryar]  sings that .**Lord VaradarAjan is radiant on the back of Garudan --the son of Vinathai-- and is flanked on both sides by the twin sets of white umbrellas and Kavari maan  vaal [deer tail] chamarams (fans). His sacred, lotus-soft right hand is held in abhaya mudhra pose assuring all that  He will free them from all their fears. His beautiful lotus-like eyes rain anugraham on all the beholders. Adiyen salutes always that Sarva Mangala Moorthy emerging out of His aasthaanam through the western gopuram on the third day of  His Vaikasi Brahmothsavam**.



Here are some photos taken this morning during the purappadu at Thiruvallikkeni. 






Regards : S. Sampathkumar [Adiyen Srinivasa dhasan]

Monday, May 16, 2011

Sri Varadharajar Uthsavam (Devathirajar) 2011 - Triplicane


Dear (s) 


For Srivaishnavaites, reference to Perumal Kovil would mean Kanchipuram – the abode of Devathirajan (Lord Varadharajar). His annual brahmothsavam is an occasion when devotees throng the temple in large numbers. Most important purappadus during this festivity are the Garuda Seva and Thiru ther.


Varadharaja Swamy uthsavam commenced on 15th May 2011 and Garuda Sevai is on 17th May 2011 (early hours of Tuesday). The Car festival is on 21st (Sat). Here are some photos taken during the first day purappadu at Thiruvallikkeni.


Adiyen Srinivasa dhasan
(S. Sampathkumar)







Saturday, May 14, 2011

Sri Parthasarathi Perumal - Thiruvallikkeni - Ekadasi Purappadu 14052011

Dear (s)

Some photos taken today during the evening purappadu of Sri Parthasarathi Swami

Regards - Srinivasan Sampathkumar







Friday, May 6, 2011

Thiruvellaraiyum Acharyar Uyyakkondarum : Thiruvellarai Divyadesam


திருவெள்ளறை திவ்யதேசமும்  ஓராண்  வழி ஆச்சார்யர் உய்யக்கொண்டாரும்


Dear Friends

Here is something on temple – divyadesam of Thiruvellarai.  For the uninformed, those temples which have been sung by Alwars (known as mangalasasanam) are called Sree Vaishnava Divyadesams.  Thiruvellarai is situated around 25 kms away from Srirangam.  On the way to Thuraiyur from Trichy / Srirangam tollgate via mannachanallur.

This is a huge temple – much like a fortress.  A tall imposing unfinished gopuram is in the vanguard.  As you go inside there is another Gopuram and prakaram.

The Thayar here is Sengamalavalli thayar and there are sannadhies for Nammalwar, Chakkarathalwar, Hanumar.  Once you enter the precincts, there are two gates coinciding with the movement of Sun known as ‘Utharanayanam’ and ‘Dakshinayanam’. 

The Lord here is Pundarikakshar in standing posture, also known as Senthamaraikkannan.   His consort is Pankajavalli.  Legend has it that this temple was constructed by Sibi Chakravarthi of Raghu vamsam, predating even Lord Rama. 

Two acharyas – Uyyakkondar and Engalazhwaan were born here.  Here are some photos of the temple and something about Acharyar Uyyakondar.

Regards – S. Sampathkumar

PS :   As I circulate these, a good friend of mine quipped that he is not able to understand anything as he could not read tamil..  that is the primary reason why you find a small English version in my tamil articles.
*****************************************************

சமீபத்தில் மறுபடி திருவெள்ளறை திவ்யதேசம் சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது.  இத்தலம் திருச்சியில்  (ஸ்ரீரங்கம்) இருந்து துறையூர் செல்லும் பாதையில் மண்ணச்ச நல்லூர்  அருகே உள்ளது.  திருவெள்ளறை திரு புண்டரீகாக்ஷப் பெருமாள் கோவில் ஒரு பெரிய அழகான கோவில்.  இக்கோயில், வெண் பாறைகளான (வெள்ளறை = வெண்பாறை) குன்றின் மேல் அமைந்துள்ளதால், இத்தலத்திற்கு வேதகிரி என்ற பெயரும் உண்டு. இத் திருத்தலம் ஸ்ரீரங்கம் கோயிலை விட பழமை  வாய்ந்ததாகக்  கருதப்படுவதால், ஆதி வெள்ளறை என்றும் அறியப்படுகிறது.  இது வராஹ அவதார க்ஷேத்ரம். சிபிச் சக்ரவர்த்தி பிரதிஷ்டை செய்த பெருமாள்.




கோவில் வாசலில் ஒரு பெரிய மொட்டை கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தை தாண்டி உள்ளே செல்ல மற்றொரு கோபுரம், திருக்குளம், பலிபீடம் த்வஜஸ்தம்பம் ஆகியன உள்ளன.  இந்த பலி பீடத்திற்கு கூட விசேஷ திருமஞ்சனம் நடைபெறுமாம். நாம் சன்னதியை நோக்கும் போது இடது புறத்தில் தாயார் சன்னதி பெரியதாக  உள்ளது.   தாயார் செங்கமல வல்லி என்ற  திருநாமத்துடன்   தனிக்கோவில்  நாச்சியார் - அழகாக சேவை சாதிக்கிறார். மூலவர் சதுர்புஜங்களுடனும் உத்சவர் இரண்டு திருக்கரங்களுடனும் சேவை சாதிக்கின்றனர்.  த்வஜஸ்தம்பத்தை  சேவித்து  உள்ளே  சென்றால்  பெருமாளின்  அழகான வரைபடம் உள்ளது.





மறுபடி பிரதட்சிணமாக சென்றால் 'தட்சிணாயனம் உத்திராயணம்' என இரண்டு வாசல்கள்.  சித்திரை மாதம் ஆதலால் உத்திராயண படிக்கட்டுகள் ஏறி மேலே சென்றால்   அழகான  நின்ற  திருக்கோலத்தில்  சேவை சாதிக்கும்  புண்டரீகாக்ஷன் - செந்தாமரைக் கண்ணன் பெருமாள் எழுந்து அருளி உள்ளார்.   . நின்ற திருக்கோலத்தில் நெடிய   பெருமாள்  மார்கண்டேய மகரிஷிக்கும் பூமா தேவிக்கும் சேவை அருளும் பெருமாள்.  பெருமாளுக்கு அருகில் கருட ஆழ்வாரும் ஆதி சேஷனும் நின்ற  திருக்கோலத்திலும் மார்கண்டேய மகரிஷியும் பூமாதேவியும் மண்டியிட்டு அமர்ந்தும்  பெருமாளை வணங்கிக்கொண்டு உள்ளனர்.    புண்டரீகாக்ஷ பெருமாள் உத்சவருடன்  பங்கஜவல்லி தாயார் உள்ளார்.  பெருமாள் சன்னதி அருகே வலது புறம் எல்லா ஆழ்வார்களும் மறு புறத்தில் ஆச்சார்யர்களும் எழுந்துஅருளி உள்ளனர். சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் ஆகியோருக்கு   தனிச்சன்னிதிகள் உள்ளன.

நான் சென்ற அன்று (29/4/11) ஏகாதசி ஆனதால் செந்தாமரை கண்ணன் உத்சவருக்கும் பங்கஜவல்லி தாயாருக்கும் திருமஞ்சனம்;  நன்கு சேவிக்கும்  பாக்கியம் கிடைத்தது.

பெரியாழ்வார்  கண்ணனுக்கு திருஷ்டி தோஷம் வராதபடி திருவந்திக் காப்பிட அழைக்கும்  பத்து பாடல்களும் திருவெள்ளறை மங்களா சாசனம். "இந்திரனோடு பிரமன் ......சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளரை நின்றாய்"  என்பது  பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி. ; திருமங்கை மன்னன் திருமொழி ஐந்தாம் பத்து மூன்றாம் திருமொழியில் 'தென்றல் மாமணம் கமழ தர வரு'  'தாமரை மலர் வார்த்த தேறல் மாந்தி வண்டின்னிசை முரல்'  திருவெள்ளறை நின்றானே ' எனவும் மங்களா சாசனம் செய்துள்ளனர்.


ஆதி அரங்கம் என போற்றப்படும் திருவெள்ளறை - இரண்டு ஆச்சார்யர்களின் அவதார ஸ்தலம்.  உய்யக்கொண்டார் மற்றும் எங்களாழ்வான் இங்கே அவதரித்தனர். புண்டரிகாக்ஷர்  சன்னதி முன்பு ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் எழுந்து அருளப்பண்ணி உள்ளனர்.  உய்யக் கொண்டாருக்கும்  எங்களாழ்வானுக்கும்  விக்ரகங்கள் உள்ளன.  ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது; பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள் யோகதசையில் வகுளாபரணருக்குச் சீடரானார். ஸ்ரீமன் நாதமுனிகளுக்கு பிறகு - உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார்.



உய்யக் கொண்டாரின் வருஷ திருநக்ஷத்திரம் "சித்திரை மாதத்தில் கார்த்திகை".  இவரது திருநாமம் - புண்டரீகாக்ஷர்.  இவர் நாதமுனிகளின் சீடர். இவரது பல சிஷ்யர்களில் ஒருவருக்கு திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர் என பெயருண்டு.  உய்யக்கொண்டாரின் முக்கிய சீடர் மணக்கால் நம்பிகள்.  ஸ்ரீமந்நாதமுனிகள் இவரை   'சுயநலம்  கருதாது உலக நன்மையே கருதிய நீரே இவ்வுலகை உய்விக்க தோன்றியவர் என  வாழ்த்தியதால்  இவருக்கு  உய்யக்கொண்டார் என திருநாமம்.  நம் வைணவ  ஆசார்யர்களில்  முக்கியமான இவர் திருப்பாவை தனியனை சாதித்து அருளியவர்.   அத்தனியன் :

**அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு **

அன்னங்கள் உலவுகின்ற வயல்களை உடைய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள். அரங்கனுக்கு பல (முப்பது) பாசுரங்களை ஆராய்ந்தருளிய திருப்பாவையை இனிய இசையோடு கூட்டி நல்ல பாமாலையாக (பாட்டுக்களால் ஆன மாலையாக), பாடிக் கொடுத்தவளும், பூக்களாலான மாலையைத், தான் சூடிக் களைந்து கொடுத்தவளுமான ஆண்டாளின் புகழைச் சொல்லு!

ஆழ்வார்  எம்பெருமானார் திருவடிகளே சரணம்.  வையம் உய்யக்கொண்டவர் தாள் வையத்தில் வாழியே !

அடியேன்  ஸ்ரீனிவாச தாசன்.

Tuesday, May 3, 2011

உடையவர் உத்சவம் - வெள்ளை சாற்றுப்படி - 3rd May 2011 {Emperumanar Uthsavam - significance of 6th day}

Chithiraiyil seiya Thiruvadirai is most important for Vaishnavaites – as this marks the birth of Sri Ramanujar widely known as Emperumanar, Udayavar, Bhashyakarar.   Yesterday  I had shared something about the annual 10 day Uthsavam of Swami Emperumanar (Ramanujar) which will culminate on his birth anniversary (Chithiraiyil Thiruvathirai) on 7th May 2011.

Today is the 6th day and on the morning, Ramanujar gave darshan on horse with pure white silk dress.  Confounding….  Swami Ramanujar is a sanyasi – in fact named Ethirajar (Yathi Rajar) which would mean that he is the Emperor of all saints.  How and why white dress to a sanyasi… 

The 6th day celebration is known as “Vellai Sathupadi” where Acharyar adorns white garments without tridandam. This is to remember the circumstances under which Acharyar doned vellai veshti of grahasta instead of usual kashaya. History has it that Chozha king Kulothunga 1 ordered Acharyar to subscribe to his faith and Kuresar donned the orange robes of Sanyasi, visited the court of the King and had his eyes plucked out.  Swami Emperumanar went out of Cholanadu adorning white dress and went places, reached Melkot, Mandya where he performed many religious discourses and managed temples. He went to Delhi for bringing back the Utsava vigraham of "Ramapriyan" which had been taken by the muslim ruler. The vigraham when invited by Udayavar walked on its own and sat on the lap of Udayavar. Marking this, on sixth day of Udayavar Uthsavam - Emperumanar  alights Kuthirai vahanam donning white silk. At Sriperumpudur, his Delhi visit symbolises visit to a place on way to Kanchi. Similar festivity takes place at Triplicane also.

By some historical accounts, these events took place at his ripe age around 80 (probably 1096 AD).  For those who fall at the feet of Udayavar and who takes care of the disciples of Udayavar, there would never be any hardship.

Regards – Srinivasan Sampathkumar.

Here are some photos taken this morning : (3rd May 2011)



"சித்திரையில் செய்ய திருவாதிரை " - இம்மாதம் ஏழாம் தேதி வருகிறது.  அல்லிக்கேணியில் எம்பெருமானாரின் உத்சவம் சிறப்பாக நடை பெற்று வருகிறது.  பிருந்தாரண்ய க்ஷேத்ரமான திருவல்லிக்கேணியில்  ஆசுரி கேசவ சோமாயாஜி தனது மனைவி காந்திமதியுடன் புத்திர காமேஷ்டி யக்ஞம்  பண்ண அவதரித்தவர் - திருவனந்தாழ்வனின் அவதாரமான நம் இராமானுஜர். உலகோர்கள் எல்லாம் ஸ்ரீமன் நாராயணணின் மகிமையை அறிந்து  அவர்கள்  அனைவரும் நாராயணனை  தொழச்செய்தது அவர் தம் பிறவி மகிமை.  


இன்று 3rd May 2011 - உடையவர் உத்சவத்தில் ஆறாவது நாள். காலை எம்பெருமானார் அழகாக வெள்ளை பட்டு அணிந்து புறப்பாடு  கண்டு அருளினார்.   "தூய்நெறி சேர் - யதிகட் இறைவன்" என அனைத்து யதிகளிலும் சிறந்தவராக கொண்டாடப்பட்ட  எம்பெருமானார் வெள்ளை பட்டு உடுத்துவதா ?

காரேய் கருணை இராமானுஜருக்கும் ஸ்ரீ வைஷ்ணவத்துக்கும் ஆயிர ஆண்டுகள் முன் நடந்த துயர நிகழ்ச்சி தான் இதற்கு காரணம். வைணவம் திக்கெட்டும் பரவியது. அடியார்கள் பெருகி வாழ அரங்கநகர் வளர்ந்தது. இராமானுஜரின் பெருமை எங்கும் பரவியது. இன்புற்றிருந்த ஸ்ரீரங்கஸ்ரீயில் தலைமைப் பொறுப்பினையேற்ற  உடையவருக்கும் பெருந்துன்பம் ஏற்பட்டது.  சோழமண்டலத்தில்  கங்கை கொண்ட சோழபுரத்தினை தலைநகராகக் கொண்டு வைணவத்வேஷம் கொண்டு இரண்டாம் குலோத்துங்க சோழன்’ (கி.பி 1070-1116) என்னும் மன்னன் சிவாத் பரதரம் நாஸ்தி’ (சிவனுக்கு மேலான தெய்வமில்லை) என்று அனைத்து மதத்தினைச் சார்ந்தவர்களையும் வலுக்கட்டாயபடுத்தியோ அல்லது ஏதேனும் ஒரு உபாயத்தினை பின்பற்றியோ நிலைநாட்டிக் கொண்டிருந்தான். வைணவத்தின் தலைவராகயிருக்கும்  இராமானுஜர்  ஒப்புக்கொண்டாலேயொழிய  தாங்கள் நினைப்பதை சாதிக்கவியலாது என்று வெறிகொண்ட மன்னன் திருவரங்கத்திற்கு தன் ஆட்களை அனுப்பி இராமானுஜரை அழைத்துவர ஏற்பாடுகளைச் செய்தான்.


இராமானுஜர் சோழ மன்னனின் சபைக்குச் சென்றால் தீங்கு நிச்சயம் என்று கூரத்தாழ்வான் மற்றும் சீடர்கள் உணர்ந்ததால், வட திருக்காவேரிக்கு நீராட சென்று இருந்த உடையவரது காஷாயத்தினை ஆழ்வான் தரித்து உடையவருக்கு வெள்ளை அங்கி அணிவித்து பத்திரமாக எழுந்துஅருள ஏற்பாடு பண்ணினார். வெள்ளை ஆடைகளை காவிமேல் அணிந்து எம்பார், முதலியாண்டான், நடாதூராழ்வான், பிள்ளான், வடுகநம்பி, கிடாம்பியாச்சான், வில்லிதாஸன் போன்ற அந்தரங்கமான சீடர்களுடன் மேல் திசை நோக்கி பயணித்தார்.  பல தேசங்கள் புறப்பாடு கண்டு அருளின உடையவர் மைசூர் மேல்கோட்டை திருநாரயணபுரம் அடைந்து அங்கே பல திருப்பணிகள் செய்வித்தார். இங்குள்ள மிக பெரிய தொண்டனூர் ஏரி சுவாமியால் ஏற்படுத்தப்பட்டது. தமது எண்பதாவது பிராய சமயம் மேல்கோட் சென்ற உடையவர், சுமார் இருபது வருட காலம் அங்கே திருப்பணிகள் செய்தார்.  அவ்வூர் உற்சவ விக்கிரகமான ராமப்ரியர் டெல்லி மன்னரிடம் இருப்பதாக அறிந்து அங்கு சென்றார். டெல்லி மன்னனோ, ‘‘என் மகளின் விளையாட்டுப் பொருளாக உள்ள அந்த பொம்மையைக் கேட்கிறீர்களா? முடிந்தால் அழைத்துச் செல்லுங்கள்..’’ என கூற, ராமானுஜரோ கண்களில் நீர் சுரக்க, ‘‘என் செல்வப் பிள்ளாய் வாராய்..’’ என கனிவுடன் அழைக்க, கலகலவென சலங்கை ஒலிக்க பாதுஷா மகளின் மடியில் இருந்த ராமப்ரியர் (விக்கிரகம்) ஓடோடி வந்து ராமானுஜர் மடியில் அமர்ந்தாரம். இப்படியாக எம்பெருமானார் பயணித்த ஆச்சர்யம் இன்று கொண்டாடப்படுகிறது. 


                                                              
ஸ்ரீ பெரும்புதூரில் இருந்து  காஞ்சி செல்லும் பாதையில் உள்ள மண்டபம் ஒன்றுக்கு உடையவர் இன்று குதிரை வாகனத்தில் எழுந்து அருள்வார். திருவல்லிக்கேணியில் குளக்கரையில் உள்ள 'யதுகிரி யதிராஜ மண்டபத்துக்கு' இன்று எழுந்து அருளி மண்டகப்படி கண்டு அருள்கிறார்.  

இவ்வுலகில் இனியொன்றும் எண்ணாதே நெஞ்சே - இரவு பகல் எதிராஜர் எமக்கினி மேலருளும்.  இராமானுசன் சரணல்லால் நமக்கு கதி வேறு ஒன்றுமில்லை. அவரது தொண்டர்கட்கு அன்புற்று இருத்தல்  ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு என்றென்றும்  பாக்கியம்.



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !             அடியேன் - ஸ்ரீனிவாச தாசன்.