Sri Thelliya Singar
Brahmothsavam 2018 Day 6 : @ Thiruvallikkeni divyadesam Ananda Vimanam
: சூர்ணாபிஷேகம் உத்சவம். . Churnabhishekam
பலர்
பிறந்த நாளை சிறப்புற கொண்டாடுவர் ! ஆனால்
அந்த கடந்து செல்லும் தினங்களே, நம் ஆயுளை வெட்டி குறைக்கும் நாள்கட்டிகளும் என்பதை
நினைத்து பார்க்கிறோமா ?
தீநுண்மி
... .. இந்த சொல்லை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? - இரண்டு மாதங்களாக தினமும் நாம்
கேட்பது இதை பற்றியது தான். இன்று உலகமே பயந்து
போய் வாழ்க்கை முறையும் மாறி இருப்பதும் இதனால்தான். “மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்” என்றபடி நமது
வாழ்நாள் இன்னபோது முடியுமென்று தெரியாததாகையால் வாழ்நாளுள்ள வரையில் எம்பெருமானை வணங்கி
வாழ்த்தவேணுமென்று உபதேசிக்கிறார் ஸ்வாமி நம்மாழ்வார்.
பல்லாயிரக்கணக்கான
வருட சரித்திரத்தில் - மனித இனம் கொள்ளை நோய்கள், பெரும் போர்கள், இயற்கை சீற்றங்கள்,
விலங்குகளின் தாக்குதல், கடல் கொள்ளுதல், வெள்ளப்பெருக்கு, பஞ்சம் போன்ற பற்பல பேரழிவுகளை
பார்த்துள்ளது. மற்றும் சாதாரண அசாதாரண மரணங்களும்
சம்பவிக்கின்றன ! மூப்பு என்றால் என்ன ? தெரியுமா ?? : - வயதானநிலை,
வயோதிகம், முதுமை; ஒப்பீட்டளவில் அதிகவயது.
முதுமை கொடிது அல்ல; ஆனால் அவ்வயதில் பலநோய்கள் தாக்கக்கூடும். இவ்வுலகத்திலே
எத்துணையோ கஷ்டங்கள் ! ~ பயம், வியாதிகள், பல்வேறு அல்லல்களோடு கூடிய பலபிறப்புகள்
ஆகிய இவற்றையும்; இவற்றை அனுபவிப்பதற்காகக்கண்ட நெஞ்சையும், அல்லல்படும் சரீரத்தையும்
போக்கடித்து ~நம்மை காக்கவல்லன் யார் ? ~ who
is our only eternal saviour ??
– there
is only one : Supreme
Emperuman Sriman Narayana.
திருவல்லிக்கேணியில் சிறப்புற
நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் . ஆறாம்நாள் ~சூர்ணாபிஷேகம் உத்சவம். 28.6.2018 அன்று காலை அருள்மிகு ஸ்ரீ அழகிய சிங்கர்
அழகு பொலிந்திட தங்கசப்பரத்தில் புறப்பாடு கண்டு அருளினார்.
ஸ்ரீரங்கத்து உலக்கை
என்றொரு வழக்காடு உண்டு. ஸ்ரீரங்கத்தில் கோவிலில் பெருமாளுக்கு அமுது செய்விக்க மாவு
இடித்தல் போன்ற வேலைகளைச் செய்வது வழக்கம். இந்தப் பொறுப்பை ஏற்போர், நாள் முழுதும்
மாவு இடிக்க வேண்டும். இதை மேற்பார்வையிட ஒரு கண்காணியும் இருப்பார். வேடிக்கையாக, யாராவது
அந்தப் பக்கம் வருவோர் போவோரிடம், “இந்தாருங்கள், கொஞ்சம் இந்த உலக்கையைப் பிடியுங்கள்,
இதோ வருகிறேன் என்று உலக்கையைக் கை மாற்றுவார்கள் - . மாற்று ஆள் வந்து
உலக்கை பிடிக்கும் வரை, சூரிய அஸ்தமன நேரம் வந்தாலும் இடை விடாமல் மாவு இடித்தாக வேண்டுமாம்
!
சூர்ணாபிஷேகம் சிறப்பு.: சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள்
மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது
நறுமணத்திற்கு ஆகவும் பெரியவாகனங்களில் எழுந்து அருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு
பண்ணப்பட்டதாக இருக்கலாம். திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக
இடிக்கப்பட்டு, பெருமாள்
திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது.
திருவீதிப் புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய "கருச்சந்தும் காரகிலும்
கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம்" அனுசந்திக்கப்படுகிறது.
விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது. இதோ இங்கே திருமழிசைப்பிரானின் ஒருபாடல் *திருச்சந்தவிருத்தத்தில்*
இருந்து :
வாள்களாகி நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பெய்தி
மாளுநாளதாதலால் வணங்கி
வாழ்த்தென் நெஞ்சமே
ஆளதாகு நன்மையென்று நன்குணர்ந்ததன்றியும்
மீள்விலாத போகம் நல்க
வேண்டும் மால பாதமே.
ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே, நம்மை காப்பற்றவல்லன். 24 மணிகள்
கொண்ட ஒவ்வொரு தினங்களும், நமது ஆயுளை அறுக்கும்
வாள்கள்போன்று கழிய, பலவகை வியாதிகளாலே சரீரம்
பலவீனமடைந்து, கிழத்தனமும், மனச்சோர்வும்,
நம்மை கவனிப்பாரில்லையே என சோர்ந்து மரணமடைவதோர்
நாள் நெருங்கிவிட்டது என பயமும், பதைபதைப்பும் வரும் முன்னரே, எம்பெருமான் ஸ்ரீமன்
நாரணனுக்கு ஆட்பட்டிருப்பதே நன்மையென்று நன்கு
உணர்ந்து, நம்பெருமாளை தொழுது ஏந்துவோம். எம்பெருமானின்
திருவடிகளே 'மீள்வு இலாத போகம்' - மறுபடி திரும்பி வருதலில்லாத நித்யபோகம். அதை எனக்கு நல்குவீராக என எம்பெருமானிடத்திலே மனமுருகி
பிரார்திப்போம்.
Thirumazhisaippiran
guides us to submit to the lotus feet of
Sriman Narayana. As days pass by, every
human being is inching towards illness, infirmity, old age and the sword of
death is hanging low. From all miseries the only Saviour is Sriman Narayana and
we should entreat for that permanence near him, a life on earth without return.
28th June 2018
was 6th day
of Brahmothsavam at Thiruvallikkeni Divyadesam for Sri Thelliya Singar.
In the morning after
‘Choornabishekam’, Sri Azhagiya Singar had purappadu in ‘AnandaVimanam
[PunniyaKodivimanam]’. In the purappadu, ‘Thiruchanda Virutham’ given to
us by Sri Thirumazhisai Azhwaar was rendered. These 120 songs fall
under the type ‘viruthapaa’ – they are replete with numbers and fall under a
specialized category of tamil grammar called ‘ennadukkicheyyul’.
Some photos taken during the
morning purappadu are here.
adiyen Srinivasadhasan
(Mamandur Veeravalli Srinivasan Sampathkumar)
2nd May 2020.
தீநுண்மி என்பது வைரஸ் கிருமி என்று புரிந்துகொண்டேன். மின்னின்னிலையில் மன்னுயிராக்கைகள் என்ற பதம் புரியவில்லை.
ReplyDeleteபதிவும் படங்களும் எப்பவும் போல. அருமை. தாசன்.