வீடு ஆக்கும் பெற்றி அறியாது - வீடு எனப்படும் மோக்ஷத்தைப் பெறுவிக்கும் வழி தான்
யாது ? ~
அறிந்துகொள்ள ஆசையா ?? - ஸ்ரீ திருமழிசைப்பிரானின் நான்முகன் திருவந்தாதியை அறிவீர் !!
தவமிருத்தல் சிறப்பு; மனதை அலையவிடாமல் சிந்தையை ஒருங்கே
நிறுத்தி, உடலை சிரமப்படுத்தி - தவமிருக்க வேண்டும். திருமழிசைப்பிரான் அனைத்தும் அறிந்தவர். அவர் அருந்தவம் புரிந்து கஷ்டப்படுகின்றவர்களை
விளிக்கிறார் . அந்தோ! மோக்ஷமடையவேண்டிய வழி எளிதாயிருக்கச்செய்தேயும் அந்த மார்க்கத்தைத்
தெரிந்துகொள்ளாமல் அபாயங்கள் மிக்க கொடுவழியில் செல்லுகின்றீர்களே! வீடு எனப்படும் மோக்ஷத்தைப் பெறுவிக்கும் வழி தான்
யாது ? ~ இதோ அறிவீர் என்கிறார்.
Generally, people get excited about Vaikunda Ekadasi and ‘Paramapada
Vasal’ ~ commonly called ‘Sorga vassal thirappu’.. .. this year Vaikunda
Ekadasi fell on Tuesday 18th Dec 2018 (3rd day of
Margazhi) ~ Pagal pathu uthsavam commenced on 8.12.18 and from Vaikunda Ekadasi
it was Irapathu – culminating with ‘thiruvadi thozhal’ of Swami Nammalwar
reaching Paramapadam and returning to this earthly world for our benefit – a
day later on 29th it was
Iyarpa Sarrumurai ~ completing chanting of Sri Nalayira divyaprabandham
in 21 days.
Now it is the month of Margazhi and early morning it is Thiruppavai
Sarrumurai on all days .. .. sooner we will have Andal Neeratta Uthsavam. Today is Hastham nakshathiram in the month of
Margazhi and Sri Varadharajar had chinna mada veethi purappadu at
Thiruvallikkeni ~ here are some photos of the purappadu.
வீடாக்கும் பெற்றி
அறியாது மெய்வருத்திக்
கூடாக்கி நின்றுண்டு கொண்டுழல்வீர், - வீடாக்கும்
மெய்ப்பொருள்தான்
வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாராயணன்.
வீடு எனப்படும் மோக்ஷத்தைப் பெறுவிக்கும் வழி, சரீரத்தை வருத்தி (உபவாஸாதிகளாலே) க்லேசப்படுத்தி
எலும்பே மிகுந்த கூடாக அஸாரமாக்கி நெடுங்காலம் தவம்புரிந்தும், சொற்பமாக புஜித்தும் திரிகின்றது என்பது அல்ல; மோக்ஷத்தைத் தரக்கூடிய மெய்யான உபாயமாயிருப்பவனும்
வேதங்களினால் முழு முதற்கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும், பரமபத வாசிகளான நித்யஸூரிகளுக்கு
நற்பொருள் என போக்யமான வஸ்துவாயிருப்பவனும்
- முழு முதற்கடவுளான ஸ்ரீமந்நாராயணனேயாவன்.
அவனை வணங்கி, அவனது பொற்பாதகமலங்களிலே நம்மை செலுத்தினாலே போதும், வேறு ஒன்றும்
தேவையில்லை என அழகாக எடுத்துரைக்கிறார் நம் மழிசைப்பிரான்.
There cannot be simpler and saner advice than what
Thirumazhisaippiran offers. He addresses
those people who without understanding the real nature of eternal bliss,
practices various forms of penance, pushing body to extremes by eating frugal
food and doing many acts in solitary confinement - simple, is to know that Sriman Narayana, the
supreme Lord, is the path as also the goal for the eternity. HE is the only Lord spoken in Vedas; He is
the Lord of Celestials ~ only HE can relieve us of all our fears and
difficulties. Do nothing – simply place
yourself in the golden lotus feet of Sriman Narayana – everything else is taken
care says Thirmazhisai Alwar.
~ adiyen Srinivasadhasan
30th Dec 2018.
Pranams to Sri Kachi Swami PB
Annangarachar and dravidaveda.org.