To search this blog

Friday, December 31, 2021

Thiruvallikkeni Kairavini Pushkarini - rains !!

“Kairavini Pushkarini” ~ the famed temple tank of Sri Parthasarathi swami temple – brimming with water –  copious water  added by recent rains ! 

View of the Neerazhi mantapam in the middle of the pond with  Gopuram in backdrop 



Saturday, December 25, 2021

sleeping ! - awakening !! - கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்று !!

Sleep is a naturally recurring state of mind and body, characterized by altered consciousness, relatively inhibited sensory activity, reduced muscle activity and inhibition of nearly all voluntary muscles during rapid eye movement (REM) sleep, and reduced interactions with surroundings.  Sleep is an important part of your daily routine—you spend about one-third of your time doing it.  Quality sleep – and getting enough of it at the right times -- is as essential to survival as food and water.   Sleep is important to a number of brain functions, including how nerve cells (neurons) communicate with each other.  

Certainly not any post on sleep, its depravity and ill-effects but more on awakening; not exactly the spiritual awakening, physical one too .. .. getting up early and praying Emperuman Sriman Narayana with Thiruppavai pasurams, the month being special, Margazhi.



இது மார்கழி ! - "திருப்பாவை மாதம்".  கோதை என்றால் தமிழில் மாலை. வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள். ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிக்கொண்டிருப்பதற்கு சிகரம் வைத்ததுபோன்றது திருப்பாவை. ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப்படுகின்றன.  திருப்பாவை மிகக் கடினமான ‘இயற்றர விணை கொச்சகக் கலிப்பா’ வகையைச் சேர்ந்தது.  ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை - பாவை நோன்பின் அற்புத சிறப்பை விளக்குவது.  கோதைப்பிராட்டி, வீடு வீடாக சென்று அதிகாலையில் தன் தோழியினரை எழுப்புகின்றார்.   இன்றைய பாசுரம் " நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!”  

பொதுவாக  தூக்கத்தின் ஒரு சுழற்சி 90 நிமிடங்கள் நீடிக்கும். ஒரு இரவின் தூக்கத்தில் இதுபோன்ற 4-5 சுழற்சிகளை நாங்கள் வழக்கமாக முடிக்கிறோம்!!   90 நிமிட சுழற்சியின் முதல் கட்டம் ,Non rapid eye movement (NREM) 'விரைவற்ற கண் அசைவு தூக்கம்' என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் நாம் இதை ஆழ்ந்த தூக்கம் என்று சொல்கிறோம். இது இரண்டாம் கட்டத்தை ஒப்பிடும்போது நீண்டது. 60-70 நிமிடங்கள் வரை இது இருக்கும்.இரண்டாவது கட்டம், விரைவான கண் அசைவு (REM) தூக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் அதிகமாக கனவு காண்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் இந்த நேரத்தில் தூக்கத்தில் நடக்கும் விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்கிறோம்  !! 

இராமாயண இதிஹாச புராணத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் "இராவணனின் தம்பி கும்பகர்ணன்" - நல்ல குணவான், பெரிய வீரன் .. .. .. ஆனால் வாழ்வின் பெரும்பாகத்தை உறங்கியே கழித்தவன் !  சனகாதி முனிவர்கள் இட்ட சாபத்தால் விசயன் எனும் இவன்  பூமியில் வந்து பிறந்ததாக கூறப்படுகிறது.  இவரது உறக்கத்திற்கு காரணம் பிரம்மனிடம் தவறுதலாக நித்திரையை கேட்டு பெற்றது.   அண்ணனைக் கண்டவுடன் கும்பகர்ணன் நிலத்தில் விழுந்து வணங்குவது ஒரு மலையே கீழே விழுந்து படுத்தது போல் இருக்கிறது எனவும் வலிமையும் பெருமையும் உடைய தன் தம்பியை இராவணன் ஒரு குன்று மற்றொரு குன்றைத் தழுவுவதைப் போன்று தழுவுகிறான் எனவும்  கம்பர் தமது இராமாயணத்திலே  உருவகப்படுத்துகிறார்.   பகைவனும் வியக்கும் தோற்றமுடையவன் கும்பகர்ணன்.  இங்கே இப்பாசுரத்திலே -  கர்ம வினை பேசப்படுகிறது. முற்பிறவியில் செய்த நற்செயல்களினால் இப்போது நல்வாழ்வு வாழ்கிறாய் என்கிறாள் ஆண்டாள்.   உறங்குதல் போட்டியில் கும்பகர்ணன் பாவை நோன்பிருக்கும் அப்பெண்ணிடம் தோற்றதால் அவன் தனது உறக்கத்தை அவளிடம் தந்து சென்றான் என்று சொல்வது காலட்சேபங்களில் வரும் சுவையான ஒரு கோணம்.



திருப்பாவை பாசுரமும் - எளிய விளக்கமும் (பல வலை தளங்களில் படித்தது, சில உபன்யாசங்களில் கேட்டது):

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். 

ஆண்டாள் மற்றும் தோழியர் அழைக்க இம்மியும் அசையாமல் தூமணி மாடத்து வீட்டில் துயில் கொண்டிருக்கும் அந்த பெண்பிள்ளை,   முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிதுக்கொண்டு இருப்பதாக ஆண்டாள் மருவுகிறாள்.   பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா. -  என்று அவளை துயில் எழுந்து, நீராடி, கண்ணனின் பேர்பாடி பாவை நோன்பிருக்க அழைக்கும் ஒரு அற்புத பாசுரம் இது. 

            Sooner, the English New year 2022 will be born and from 5.1.2022, Andal Neeratta uthsavam is scheduled to commence.  Last year, there was purappadu from day 2 of the uthsavam.  6.1.2021 dawned beautifully as there was Andal thiruveethi purappadu .. .. pray that this year too at least from Andal Neeratta uthsavam, there would be regular thiruveethi purappadu and life as normal as it was in earlier years.  Reminiscing the glorious past, here are some photos from Sri Godhapiratti Thiruvadipura Uthsvam of 2015 and Andal Purappadu with Sri Parthasarathi Emperuman in eka asanam.   

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26th Dec 2021.







Friday, December 24, 2021

sleep! awakening ! - Praying Sreeman Narayana : "தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய !!"

Ever heard of – ‘l’avenir appartient à ceux qui se lèvent tôt’ !?!?.. ..  in my childhood, my mother used to say daily – ‘the future, and all good things’ belong to those who wake up early.   What you read is an exxpression created by Henry Gauthier-Villars, referring to the fact that since electricity was not very widespread at that time, those who rose with the sun had an advantage over others. 


நீங்கள் தினமும் எவ்வளவு நாழி உறங்குகிறீர்கள் ? - படுத்த உடனேயே உறக்கம் வருமா ? - எது போன்ற கனவுகள் காண்பீர்கள் !!  

The modern children are mostly sleep depraved – there is enough of distraction.  Gone are those days of school, play at grounds, back home, study for a while, dinner, milk and hitting the bed.  Even for the adults the days now are ‘extending work culture, pinging phones, Netflix / TV watch/ computer games’ and life stress points adding up.  Then came the pandemic, that changed the way people had been living.  Still not many created the right life style – to a large % of population, sleep became worser after the pandemic struck.   After almost 21 full months, we are used to ‘new normal’ – yet sleep is not perhaps normal.  When do you hit bed daily ~ how long and how well do you sleep !! ~ it is close to 11 pm as I post this and perhaps this is not good for health !!! 

Sleep is a naturally recurring state of mind and body, characterized by altered consciousness, relatively inhibited sensory activity, reduced muscle activity and inhibition of nearly all voluntary muscles during rapid eye movement (REM) sleep, and reduced interactions with surroundings.  Sleep is an important part of your daily routine—you spend about one-third of your time doing it.  Quality sleep – and getting enough of it at the right times -- is as essential to survival as food and water.   Sleep is important to a number of brain functions, including how nerve cells (neurons) communicate with each other.  In fact, your brain and body stay remarkably active while you sleep.   Everyone needs sleep, but its biological purpose remains a mystery.  Sleep affects almost every type of tissue and system in the body – from the brain, heart, and lungs to metabolism, immune function, mood, and disease resistance. Sleep is a complex and dynamic process that affects how you function in ways scientists are now beginning to understand.     

Certainly not any post on sleep, its depravity and ill-effects but more on awakening; not exactly the spiritual awakening, physical one too .. .. getting up early and praying Emperuman Sriman Narayana with Thiruppavai pasurams, the month being special, Margazhi.

 



இது மார்கழி ! - "திருப்பாவை மாதம்"  இன்று  24.12.2021 மார்கழியில் 9ம் நாள் - வெள்ளிக்கிழமை, மக நக்ஷத்திரம். ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை - பாவை நோன்பின் அற்புத சிறப்பை விளக்குவது.  கோதைப்பிராட்டி, வீடு வீடாக சென்று அதிகாலையில் தன தோழியினரை எழுப்புகின்றார்.   இன்றைய பாசுரம் "தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய !!" 

தூமணி மாடம்’  ஒரு அற்புத சொல்லாடல்.   தூமணி-தூயமணி என்பதன் மரூஉ.  தூய்மை சிறப்பானது, எந்த விதமான அந்நிய கலப்பும் இல்லாத தன்மையே  தூய்மை. புற அழுக்குகள் ஓட்டுவதால் ஒரு பொருளின் தூய்மை கெட்டுவிடாது. செம்பு கலக்காத தங்கம் அப்பழுக்குடன் இருந்தாலும் அதன் தூய்மை குறையாதிருக்கும். கங்கை, காவிரி போன்ற  புண்ணிய நதிகள்  மக்களால் அசுத்தபடுத்தப்பட்டாலும் அவை தனது புனிதத்தின் தூய்மையை இழப்பதில்லை.  

நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடியும் தூய்மை இந்தியா இயக்கத்தை தனது பேச்சின் மூலமும், நடவடிக்கைகளின் மூலமும் மக்களிடையே பரப்பி வருகிறார். வாரணாசியில் அவரே தூய்மைப்படுத்தும் நடவடிக்கையையும் மேற்கொண்டார். வாரணாசியில் உள்ள அசிகாட் என்னுமிடத்தில் அவரே மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை தூய்மையாக்கினார். இதில், அங்குள்ள மக்கள் பலரும் பங்கேற்றனர். சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அப்போது எடுத்துக் கூறியதோடு, சுகாதாரம் இல்லாமல் போனால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என்றும், அவர்களை தங்களது இல்லங்களில் கழிப்பறைகளை அமைப்பது அவசியம் என்றும் கூறினார்.  மக்களின் பேராதரவு தூய்மை இந்தியா திட்டத்திற்கு கிடைத்துள்ளதால் இது மக்களின் இயக்கமாக மாறியுள்ளது. இந்தியாவை தூய்மைப்படுத்த மக்கள் திரளாக தங்கள் பகுதிகளை தூய்மைப்படுத்துகிறார்கள். தூய்மை இந்தியா திட்டம் துவக்கப்பட்ட பின்னர் தெருக்களை சுத்தப்படுத்துவது, குப்பைகளை அகற்றுவது, சுத்தம் சுகாதாரத்தை மேற்கொண்டு, சுற்றுப்புற தூய்மையை காப்பது போன்றவற்றிற்கு தற்போது முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 

இதோ இங்கே ஆண்டாளின் பாசுரம்: 

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;

மாமீர்!  அவளை எழுப்பீரோ? உன் மகள்தான் -

ஊமையோ? அன்றிச் செவிடோ  அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!

 



ஆண்டாள் இன்று எழுப்புவது தனது தோழி ! -  மாமான் மகளே- என உறவு பற்றி அழைக்கிறாள். ஸ்ரீவைணவ இல்லங்கள் அழகானவை - பக்தி மனம் கமழுமவை.  இங்கே :   தூமணி மாடம், சுற்றும் விளக்கு, மணம் கமழும் பஞ்சணை-  யாவும்  செல்வ வாழ்க்கையை விவரிக்க வந்தன.  அந்த அழகான திருமாளிகையில் பல சுற்றுக்கள் இருந்தன;  தாழ்வாரம், முற்றம், படிக்கட்டு, பால்கனி ..  எங்கெங்கும், எல்லாவற்றிலும் விளக்குகள் எரிந்துகொண்டு பிரகாசமாக இருக்கிறது.  

மார்கழி நோன்பு,  பாவை நோன்பு -  நோற்பதற்காக ஒவ்வோர் இல்லமாகச் சென்று இன்னொரு பெண் பிள்ளையை ஆண்டாள் எழுப்பும் திருப்பள்ளி எழுச்சி பாசுரம் இது.  அவ்வில்லத்தில் ஓர் பெண்பிள்ளை எந்த கவலையுமே இல்லாமல் ஆழ்ந்து  உறங்குகிறாள்.   அவள் தன்னைச் சொத்தாகவும் தனக்கு உரிமை உடையவனாக பெருமாளையும் கருதுகிறாள். அதனால் தன்னைக் கொண்டு போவது அவன் கடமை என்று அவள் கவலையின்றி உறங்குகிறாள்.  நாம் கவலை இல்லாமல் உறங்க  மாடமாளிகை, பஞ்சு மெத்தை, அமைதியான சூழ்நிலை என்பன தேவையில்லை !!  சிலர் சோம்பலில் நீண்ட நேரம் உறங்குவர்; சிலர் வேலை களைப்பில், சிலர் தூங்குவதே பழக்கமாக !!   அவ்வாறு நித்திரையில் கிடப்பவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான ஸ்ரீவைகுண்டமே நிலையானது என்பதை உணர வைக்க வேண்டும்.  அங்கவ்விடம் செல்ல, அந்த எம்பெருமான் பரமபத நாதனது  திருநாமங்களைச் திரும்ப திரும்ப உரக்க வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து  சொல்ல வேண்டும்.  

In our Sreevaishnava  philosophy, Emperuman is Supreme, the great benevolent Supreme master who takes care of us all.  He is one capable of ‘Yoga Nidhra’ – ie., providing care and comfort to all His followers, even when He is asleep.  Yoga nidra is a state of consciousness between waking and sleeping, like the "going-to-sleep" stage, typically induced by a guided meditation. 



                                 Sooner, the English New year 2022 will be born and from 5.1.2022, Andal Neeratta uthsavam is scheduled to commence.  Last year, there was purappadu from day 2 of the uthsavam.  6.1.2021 dawned beautifully as there was Andal thiruveethi purappadu .. .. pray that this year too at least from Andal Neeratta uthsavam, there would be regular thiruveethi purappadu and life as normal as it was in earlier years.  Reminiscing the glorious past, here are some photos from Sri Godhapiratti neeratta uthsavam of year 2014. 

Adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24th Dec 2021.

  

Wednesday, December 15, 2021

Kaisika Dwadasi - Kaisika puranam padanam 2021

Today 15.12.2021 is Kaisika Dwadasi. 

Western Ghats, very rich in bio-diversity,  is older than the Himalayan mountain range. The  forests of the wide ranging region include some of the best representatives of non-equatorial tropical evergreen forests in the world. A UNESCO World Heritage site, the Western Ghats has a significant impact on the monsoon weather pattern in the country.  At least 325 globally threatened (IUCN Red Data List) species occur in the Western Ghats.  It possesses rich varieties of  flora and fauna and some of the critically endangered ones thrive here. Howsoever interesting it be otherwise, for us – this mountain range is most important to Srivaishnavaites for the great divyadesam and this post is on a drama that occurs every year at this divine place.


மண்ஆசை மனிதனை ஆட்டிப் படைத்துள்ளது. 

பெரியபெரிய சாம்ராஜ்யங்கள் மேலும் நிலத்தைகவரும் ஆசையில் சண்டையிட்டு மாண்டன.  அரசர்கள் படையெடுத்து பலதூரங்கள் சென்றனர்.  மாவீரன் அலெக்சாண்டர் இந்தியகண்டம் வரை வெற்றிகண்டவர் ஆனால் தனது ஊருக்கு திரும்பாமலே மறைந்தார்.  இந்தியாவை மௌரியர்கள், குப்தர்கள் என பலர் ஆண்டனர்.  தென்னகத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ, புலிகேசி, சாளுக்கிய மன்னர்கள் ஆண்டனர்.   தெற்கே விஜயநகர சாம்ராஜ்ய சிதைவுக்குப் பின்னர் ஆங்காங்கே சிதறடிக்கப்பட்ட சிறுசிறுபகுதிகளை  500க்கும் மேற்பட்ட  சிற்றரசர்களும், ஜமீன்தாரர்களும், பாளையக்காரர்களும் ஆட்சிபுரிந்தனர். அவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் ? - சிலருக்கு வரலாற்றில் சிறுஇடம் உண்டு - பலரது சுவடே இல்லை. 

இன்றைய சூழ்நிலையில்,  உலகநாடுகளில் வியத்தகு முன்னேற்றமடைந்துள்ள சிலநாடுகள் முன்னேற்றப் பாதையில் மேலும் விரைந்து செல்கின்றன. இன்னும்  சிலநாடுகள் முன்னேற்றத்துக்கு வழிதெரியாமலும், வழிகாட்டுதலும் இல்லாமல், பசியால், பட்டினியால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. 

"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்"  -மஹாகவி சுப்ரமண்ய பாரதியாரின் வரிகள்.  நீலகண்டன்,  சீர்காழிக்கு அருகில் உள்ள எருக்கூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.  சென்னையில் வங்கப்பிரிவினைக்கு எதிராக மெரினாகடற்கரையில் பேசிய விபின்சந்திரபாலின் ஆவேச முழக்கம் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  மணியாச்சி ரயில்நிலையத்தில் கலெக்டர் ஆஷை  திரு வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.  நீலகண்ட பிரம்மச்சாரி ஒரு பெரிய புரட்சிப்படையை உண்டாக்கி 1857ல் நடந்தது போன்ற மிகப்பெரிய புரட்சியை ஒரேநேரத்தில் நாடு முழுவதும் உண்டாக்கவேண்டும் என்று பாடுபட்டார்.   ஆஷ் கொலையில் நீலகண்ட பிரம்மச்சாரி முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.  பெல்லாரிசிறையில் 7 ½ ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.  சிறை மீண்டு சென்னை வந்த நேரத்தில், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு, வாடிய   அவரது பசியை கண்டதும் உருகி பாரதியார் முழங்கிய வரிகள் இவை !!

ஒருவருக்கு உணவு தேவைப்படுகையில் பசி (hunger) என்ற உணர்வு ஏற்படுகிறது.  ஐப்போதாலமசு (Hypothalamus) எனும் நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் (Hormone)  நுரையீரலில் உள்ள அறிமானிகளைக் குறிவைத்துச் சுரப்பதாலேயே அடிக்கடி பசிஉணர்வு ஏற்படுகிறது.  நூற்றாண்டுகள் முன்னர், மனிதவாழ்க்கை எளிமையாக இருந்த காலத்தில்,  மனிதனின் நோக்கம் கடுமையாக உழைத்து நிம்மதியாக வாழவேண்டும் என்பதுமட்டுமே.  உடல்எடை குறைத்தலோ, ஊட்டச்சத்து என தனியாக உட்கொள்ளுதலோ இல்லை.  தேவைப்படவில்லை ! தினசரி உண்ணும் உணவே அவர்களுக்கு சத்தாகவும் மருந்தாகவும் பயன்பட்டது.   .... விதவிதமாக அறுசுவை உணவுகள் கிடைக்கும் இக்காலத்தில் பலர் சரியான உணவில்லாமல் கஷ்டப்படுவது, மிக வருத்தமான விஷயம்.

According to some info – across the world, up to 811 million people do not have enough food. According to recent estimates, 45 million people in 43 countries are at risk of sliding into famine – the most extreme form of hunger, which can result in death from starvation or disease. Indeed, parts of  Yemen, South Sudan and Madagascar may be close to or are already in the grip of famine.  There are other existential crises too – since  the change in government in Afghanistan,  food crisis has been unfolding across the country. Nearly 23 million Afghans are now facing hunger and 1 million children are at risk of dying unless they receive immediate treatment for malnutrition.

Then there is another grave behaviour associated with demons – ‘cannibalism’.  Humans turning into cannibals may seem like the perfect script for an apocalyptic film. It is the act of consuming another individual of the same species as food. Cannibalism is a common ecological interaction in the animal kingdom and has been recorded in more than 1,500 species. Human cannibalism is well documented, both in ancient and in recent times.Cannibalism, however, does not—as once believed—occur only as a result of extreme food shortage or of artificial/unnatural conditions, but may also occur under natural conditions in a variety of species. Have seen fishes eat their own species, cats do, and in one of the gory documentaries in Discovery channel, crocodiles were observed eating their own young !

ThirumangaiAzhwaruthsavam is celebrated in the month of Karthigai, during his times, built the huge walls of Srirangam and contributed in no small measure to the temple there, sought moksham, Lord Ranganatha directed him to visit his ‘Southern Home.’ Accordingly, Kaliyan came down to  the Vamana Kshetram of ThirukKurungudi  and performed services invoking the blessings of Lord AzhagiyaNambi and composed the last of his sacred verses (Paasurams) on the Lord before attaining moksha at Thirukkurungudi.

பசி, ஆசை, தேடுதல், கோவம், ஆத்திரம், போன்றன பல உலக இயல்பு .. பிரபஞ்சத்தில் வேறு எங்கேனும் உயிர்நிலை உள்ளனவா ?   செவ்வாய் கிரகத்தில் உள்ள கேல் பள்ளத்தாக்கு வழியாக 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளம் வழிந்தோடியதாக ஓர் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. தண்ணீர் இருந்ததன் அடிப்படையில் அக்கிரகத்தில் உயிர்கள் இருந்திருக்கலாம் எனவும் தெரியவருகிறது. 

It is “ThirukKurungudi” divyadesam  located on the  foot of the Mahendra Hill on the Western Ghat. From Chennai, one can take the Kanyakumari/Ananthapuri Express to Valliyur. From here, one can reach Thirukkurungkudi (10 km) in 20 minutes by boarding the Papanasam bound bus.   At this divine place, stands the most majestic Azhagiya Nambirayar Temple ~ sung by Periyazhwar,  Thirumazhisaippiran, Thirumangai Azhwar and Swami Nammazhwar.   The famous ‘Kaisika puranam’ is associated with this temple and is read on ‘shukla paksha’ dwadasi of the month of Karthigai, known as ‘Kaisika Dwadasi’ and enacted in drama form too .. .. .. 

அடர்ந்த வனவிலங்குகள் நிறைந்த காட்டில் - சிங்கம், புலி, கரடி, ஓநாய், கழுதைபுலி போன்ற மிருகங்களிடம் மாட்டிகொண்டால் என்ன ஆகும் ?  நரமாம்சம் புசிக்கும் ராட்சசனிடம் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் !  திருக்குறுங்குடிதனில் - ஒரு பக்திமானுக்கும் ! - பசியில் துக்கப்பட்ட ஒரு ராட்சசனுக்கும் இடையே பெரிய வாதப்போரே நடந்தது.  பசியில் தவித்து இருந்தும், தன் இரையை செல்ல விட்ட ராக்ஷஸன் நல்லவனா ! - அவ்வாறு தப்பி சென்று, தனது இறைப்பணி முடிந்தவுடன், வாக்கை காப்பாற்றி தன்னையே உணவாக ஒப்படைத்த பக்தன் உயர்ந்தவனா !! 

If one were to describe the Puranam in a simple captivating manner: it is :-   

"ஊன் மல்கி மோடு பருத்தவனுக்கும்..... நினைந்து,  நினைந்து  உள்கரைந்துருகி இளைத்தவனுக்கும்' நடந்த சத்திய போராட்டம் “கைசிக புராண மகாத்மியம்.” 

(the battle of wits beween a Rakshas who grew fat eating meat and the baktha who became leaner living  thinking, and singing paeans of God all the time) 

Every year on the Kaisika Dwadasi day the puranam is  read out [in characteristic manner by Sri U.Ve M. A. Venkadakrishnan Swami] at Sri Parthasarathi Swami temple and by sampradhaya vidwans in many other divyadesangal.   The high moral  story of Nampaduvaan is in the 48th  chapter of Sri Varaha Puranam,;  explains and emphasizes the importance of singing the glory of Lord Sriman Narayana.     Sri Varaha Purana is considered one of the major eighteen Mahapuranas. 

It would have been wonderful to have a photo of Dr MAV Swami rendering Kaisika puranam in front of Sri Parthasarathi and Thiruppanar but photography inside is not allowed and hence could not take today too .. .. here are photos of Kaisika puranam at Thirukkovalur – of yesteryear Sri U Ve Thirukkovalur Sreemath Emperumanar Jeeyar Srinivasa Ramanujachar swami and this year Sri U Ve Thirukkovalur Sreemath Emperumanar Jeeyar Dehaleesa Ramanujachar swami. 


எம்பெருமானிடத்திலே  பக்தி கொண்டு அவனது திருவடி நீழலையே அடையவேண்டி திண்ணம் கொண்டு  இருப்பவர்கள் - சகல உயர்வும் பெறுபவர்களாவர்.  திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் மகேந்திர மலையில் நடந்த இந்நிகழ்வு அனைத்துக்கும் சிகரம் வைத்ததை போன்றதாகும். கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி இரவு அன்று ஸ்ரீமன்நாராயணின் பரமபக்தனான நம்பாடுவான் திருக்குறுங்குடிநம்பி பெருமாள் கோவிலை நோக்கி செல்கிறான். அந்த இரவு நேரத்தில் அவன் செல்லும் வழியில் ஒரு ப்ரம்மரக்ஷஸ்(பிசாசு) அவனை வழிமறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். ப்ரம்மரக்ஷஸின் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம்பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் ப்ரம்மரக்ஷஸின் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனாலும்  அவன் சற்றும் மனக்கிலேசம் அற்றவனாய்,  தான் ஸ்ரீமன் நாராயணனிடத்திலே கொண்ட நம்பிக்கை சற்றும் அசையாதவனாய் இருந்தான். ப்ரம்மரக்ஷஸை பார்த்து, "நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு;  என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே என்று கெஞ்சினான். எனது இந்த அற்புதமான விரதத்தை கோயிலின் வாசலில் வீணையை மீட்டி  நம்பெருமாள் முன்பே ‘பண்’ இசைத்து திருப்பள்ளியெழுச்சி  பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான். 

அதற்கு ப்ரம்மரக்ஷஸ் பலமாக சிரித்து, "யாரவது தானாக வலிய  வந்து உயிரை மாய்த்துக்  கொள்வாரோ ?  நீ என்னிடமிருந்து தப்ப பொய் சொல்கிறாய்; நீ  இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பிவிடுவாய்" என - அதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான ப்ரதிக்ஞைகளை செய்கிறான். லோகம் உண்டானதும் சத்யத்தாலே என வாக்கை காப்பாற்றி  திரும்பிய நம்பாடுவானிடம் ராக்ஷஸ் பல பலன்களை யாசித்து,  கடைசியில் கீத பலத்தையாவது தருமாறு கேட்டு, சத்தியத்தின் பெருமையை உணர்ந்து, அவனிடமே சரணாகதி அடைந்து மோக்ஷம் அடைந்தது.   இந்த சிறப்புதான் கைசிக மகாத்மியம்** 

The World exists on promises and fulfillment of them and the story of Nam Paduvaan only describes the greatest virtues of those devoted and committed to the kanikaryam (service) to Lord.  The ardent devotees of Sriman Narayana will never err or sin in life.   There cannot be a better example than that of ‘Nampaduvaan’ 

The story of Num Paduvaan can be best summarised as “the fight between ‘Padi Ilaithavan and Pasiyale Ilaithavan’ [one who leaned by fasting in the vratha of Singing paeans and one who was starved off food].  Legend has it  that on every Kaisika Ekadasi day, Nampaduvaan, an ardent devotee of the Lord Maha Vishnu  used to do Namasankeerthanam for Emperuman at Thirukurungudi.  This Nampaduvan Charithram was narrated by Sri Varaha Perumal to Bhoomi Pirarttiyar in Varaha puranam.  

It is believed that those who go to temple on this holy Kaisika Dwadasi day and read ‘kaisika purana’ will be showered with  munificence of Lord…. For us hearing the Kaisika puranam in Divyadesam nearer will give us all benefits of a good pure happy life ; those who hear ‘kaisika purana’ will get His choicest blessings and perhaps all of us who read and think of Nampaduvaan and Lord would also be getting the bountiful blessings of Lord Sriman Narayana, 

Parayana palan 

ஏதத் கீத பலம் தேவி கௌமுதத்வாதஸீம் புந:

யஸ்து காயதி ஸ ஸ்ரீமாந்  மம லோகஞ்ச கச்சதி

 

ஸ்ரீவராஹப் பெருமாள் பிராட்டியிடம் உரைத்தது : " யார் ஒருவன் கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ  த்வாதசி நாளில் -  நமக்கு முன்பாக கைசிக மகாத்மியம் வாசிக்கின்றானோ, வாசிப்பதை கேட்கிறானோ - அவன் நமக்கு என்றும் திருப்பல்லாண்டு பாடியபடி இருக்க கடவன்". இப்படி ராகம்/பக்தி  மூலமாகவே எம்பெருமானை அடைவதற்கான உபாயம்  உள்ளது. 

There would be grand periya mada veethi purappadu of Sri Parthasarathi Emperuman on Kaisika Ekadasi and Kaisika Dwadasi days – though there are crowds everywhere, and people have sort of returned to normal life, purappadus are still not there and we are not able to have darshan of Emperuman in thiruveethi purappadu.  On this significant day, we pray Emperuman for restoration of regular activities, more importantly thiruveethi purappadu at Thiruvallikkeni and all other divyadesam at least from Andal neeratta uthsavam and Irapathu uthsavam.  Here are some photos of Sri Parthasarathi purappadu on Kaisika dwadasi day on 23.11.2009 [yes, a dozen years ago !]

Azhwar Emperumanaar Jeeyar Thiruvadigale Saranam. 

adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15th Dec 2021.  








Tuesday, December 14, 2021

Kaisika Ekadasi 2021

 

Today 14.12.2021   is Karthigai Aswini - ~ today is Ekadasi too – a very special one at that – “Kaisika Ekadasi”.  Sure you would have heard and admired that great song “Thirupparkadalil Palli kondaye – Sriman Narayana ” !!  .. .. and at the holy Booloka Vaikundam Thiruvarangam, it is Vaikunda Ekadasi (for reason of Thai uthsavam and thiruther .. .. in most other divyadesam – Vaikunda Ekadasi on 13th Jan 2022) – and here is a pic showing the sublime beauty of Swami Namperumal – photo credit Thirumalai Vinjamoor Venkatesh (Jilla) swami.



Ekadasi is an all important day ~  and today  assumes greater significance being Kaisika Ekadasi.  On days of Ekadasi – fasting, worshipping Sriman Narayana and listening to religious discourses are all valued.  Upavavasa could mean ‘remaining by the side of the Lord’ – and on these days, we should eat only food that is offered to Perumal, medidate, recite and think of Sriman Narayana all the time.  I have been writing about “Kaisika Mahatmiyam” and the story of Nampaduvaan.  Of the many Ekadasis, the one occurring in the Shukla paksha of Karthigai month is very important.  Kaisika is ‘Punn’ [raga / tune] – the legend of Kaisika puranam is associated with Numpaduvan at Thirukurungudi – which I am posting in detail separately.  

Thirukkurungudi Malaimel Nambi thirukovil 

கைசிகப் பண் பாடிய ஏகாதசி கைசிக ஏகாதசி.

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும்  ஒரு நாள்.    இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை (பௌர்ணமி, முழு நிலவு) நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். ஏகாதச எனும் வடமொழிச் சொல் பதினொன்று எனப் பொருள்படும்.   30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும்.    

நாம் அறிந்த உலகம் பொருளாதார மயமானது !!  - மக்கள் உழைப்பதும், பிழைப்பதும் ஏதோ ஒன்றைப் பெறுவதற்காகத்தான். ஆனால் பெறுவதே தருவதற்குத்தான் என்பதை உணர்த்தியவன் நம்பாடுவான் எனும் அரிய  பக்தன். பெருமாளைப் பண்களால்  பாடுவதே தனது பாக்கியமாகக் கருதியவன், வீணையும் கையுமாக அவன் பாடுவதைக் கேட்க காதுமடல் சாய்த்துக் காத்திருப்பார் பெருமாள். இந்த திவ்யசரிதை தான் கைசிக புராணம்.

கைசிகம் என்பது ஒருவகைப் பண் ஆகும். வராக அவதாரத்தின்போது பூமாதேவிக்கு வராகப் பெருமாள் (எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன்) இதை அருளியதாக வராக புராணம் கூறுகிறது. வைகுண்ட ஏகாதசி முன்னர் வரும், கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று பாணர் குலதிலகம் நம்பாடுவான் கைசிகப் பண் இசையில் பாடியதால் இந்த ஏகாதசியை கைசிக ஏகாதசி என்றும் அழைப்பர்,. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள திருக்குறுங்குடிக் கோயிலில் குடிகொண்டுள்ள நம்பிப்பெருமாள் மீது பக்திகொண்ட பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவார் என்ற பக்தரின் இறைப்பற்றைக் கூறுவதுதான் கைசிக புராணம். 

Western Ghats, very rich in bio-diversity,  is older than the Himalayan mountain range. The  forests of the wide ranging region include some of the best representatives of non-equatorial tropical evergreen forests in the world. A UNESCO World Heritage site, the Western Ghats has a significant impact on the monsoon weather pattern in the country.  At least 325 globally threatened (IUCN Red Data List) species occur in the Western Ghats. It possesses rich varieties of  flora and fauna and some of the critically endangered ones thrive here. Howsoever interesting it be otherwise, for us – this mountain range is most important to Srivaishnavaites for the great divyadesam .

It is “ThirukKurungudi” divyadesam  located on the  foot of the Mahendra Hill on the Western Ghat. From Chennai, one can take the Kanyakumari/Ananthapuri Express to Valliyur. From here, one can reach Thirukkurungkudi (10 km) in 20 minutes by boarding the Papanasam bound bus.   At this divine place, stands the most majestic Azhagiya Nambirayar Temple ~ sung by Periyazhwar,  Thirumazhisaippiran, Thirumangai Azhwar and Swami Nammazhwar.   The famous ‘Kaisika puranam’ is associated with this temple and is read on ‘shukla paksha’ dwadasi of the month of Karthigai, known as ‘Kaisika Dwadasi’ and enacted in drama form too .. .. ..  here is Swami Nammalwar’s pasuram on this divyadesam : 

எங்ஙனேயோ அன்னை மீர்காள்!   என்னை முனிவது நீர்?,

நங்கள்கோலத்   திருக்குறுங்குடி நம்பியை நான்  கண்டபின்,

சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களொடும்,

செங்கனிவாய்   ஒன்றினொடும் செல்கின்றது  என்நெஞ்சமே !  

நம்மாழ்வார் நாயகி பாவத்திலே  எம்பெருமானிடம் ஆழ்ந்த மையல் கொள்கிறார்.  அவர் உரைக்கும் வார்த்தை !  அன்னைமீர்களே !  நீங்கள் என்னை சீறுவது எதற்கு? சீறிப் பயனென்? வேறுமாகில் திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகைச் சீறுங்கோள்!  திருக்குறுங்குடிப் பெருமானை, அந்த வடிவழகிய நம்பியை  நான் ஸேவிக்கப் பெற்ற பின்பு, என் நெஞ்சமமானது, எப்படி பொருந்தி என்னிடம் இருக்கும் ?  நாம் அநுபவிப்பதற்குரிய சிறந்தவனான - சங்கு சங்கரங்களோடும்,  அழகிய தாமரை  போன்ற  திருக்கண்களோடும், சிவந்த கனிபோன்ற ஒப்பற்றதான அதரத்தோடும் உள்ள எம்பெருமானை நோக்கியே செல்கின்றது.  அவனிடம் சேர்த்தலே நம் அனைவருக்கும் உலப்பு - நம்மை செம்மைப்படுத்த வல்லது.

இந்தக் கைசிக புராண நாடகத்தை 500 ஆண்டுகளுக்கு முன்பே சங்கரக்கம்பர், நாராயணன், குறுங்குடி காந்தம்மாள் போன்றோர் நாடக வடிவில் இயற்றி நடித்து வந்தனராம்.  தமிழிசை மரபில் ‘கைசிகப்பண்’ என்றழைக்கப் படுவதே இன்றைய ‘பைரவி’யாகும். (ஹிந்துஸ்தானி இசையில் ‘பைரவி என்றழைக்கப்படுவது கர்நாடக இசையின் ‘தோடி’ ராகமாகும்).: ராகங்களும் திரைப்படப் பாடல்களும்  ~ அறந்தை மணியன் [லக்ஷ்மன் ஸ்ருதி இணையத்தில்].    ஸ்வாமி ஐயப்பன் படத்தில் பிரபலமான "திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ! ஸ்ரீமன் நாராயணா" என்ற பாடல் இந்த பண்ணில் அமைந்துள்ளதாம்.   படம்: ஸ்வாமி ஐயப்பன்(1975);  பாடியவர்: கே ஜே யேசுதாஸ்;          இசையமைப்பாளர்: த.தேவராஜன்; பாடல் வரிகளை எழுதியவர் : கவியரசு  கண்ணதாசன். 

Here are some photos of  Sri Parthasarathi on the occasion of Kaisika Ekadasi  purappadu on 22.11.2015.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14.12.2021