To search this blog

Tuesday, January 31, 2023

Thai Rohini 2023 - தூகிரே ரங்கன தூகிரே கிருஷ்ணன

Today 31.1.2023  is Thai Rohini – at Thiruvallikkeni Sri Parthasarathi Emperuman had siriya mada veethi purappadu.



இன்று 31.1.2023 தை ரோஹிணி - ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் சிறிய மாட  வீதி புறப்பாடு கண்டருளினார்.  நம் திருவல்லிக்கேணி எம்பெருமான் பாரதப்போர் தனிலே பார்த்தனுக்கு சாரதியாய் அம்பு பட்ட காயங்களுடன் சேவை சாதிப்பவர் . .. .. அடியார் படு துயரங்களை சகிக்காமல் காத்து அருளும் சர்வ ரக்ஷகன்.  

பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் சிறப்பு காதையே ஸ்ரீமத் பாகவதம்.  வடமொழியில் வியாசர் எழுதிய பாகவதம்  36,000 சுலோகங்களில் எழுதப்பட்டுள்ளது.   ஸ்ரீவேதவ்யாஸர் ஸ்ரீமத்பாகவதத்தை   ஸ்ரீசுகர்  முனிவருக்கு அருளினார்.  எப்போதெல்லாம் அசுர இயல்பு கொண்டவர்கள் ஆட்சியாளர்களாக  இந்நிலவுலகை ஆக்கிரமித்து மக்களைத் துன்புறுத்துகிறார்களோ, அப்போதெல்லாம் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அவதாரம்‌செய்து அவர்களை அழிக்கறார்.  ஒவ்வொரு அவதாரத்தின் மாண்பும், தீயோரை அழிப்பதைக்‌காட்டிலும்  நல்லோரைக் காப்பதேயாகும்‌.  



எம்பெருமானின் புகழ் பாடுதலே, நாம சங்கீர்த்தனங்களே  அகத்து மாசைக் கழுவும் நன்னீராம். இரு காது மடல்களிலிட்டு ஆசைதீரப் பருகினால், அவை ஜீவன்களின் உலக வாசனைகளை அழித்துவிடும்.  அத்தகைய பகவான் தேவகியின் திருவயிற்றில் தோன்றினார். பிறந்தது வடமதுரைச் சிறையில். வளர்ந்தது நந்தகோகுலத்தில், இடைச் சேரியில்.  தனது ஒவ்வொரு பருவத்திலும், தனது பிறவியின் மாண்பை விஸ்வரூபங்கள், லீலைகள் வாயிலாக காண்பித்தார். சிலரே புரிந்து கொண்டனர் !!   தானும்‌ கன்றுகள்‌ மேய்த்தார். வடமதுரை திரும்பினார். தீயோர் அனைவரையும் அழித்தார். கடலின் நடுவே துவாரகை என்னும் நகரம் அமைத்து அங்கு குடியேறினார்.  கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நடந்த மகா பெரிய பாரத போரில், தர்மத்தின் பக்கல்  நின்று கௌரவர்களின் தீயொழுக்கத்தால் பூமிக்கு பாரமாக இருந்த அனைவரையும் கொன்றார்.  தனது சாதுர்ய வழிகாட்டலில்  பல அக்ஷௌஹிணி சேனைகளின் உயிரை மாய்த்தார். அர்ஜுனன் வென்றான், தர்மம் வென்றது .. ..    

கண்ணனின் புகழ் பாடும் பாசுரங்கள், பாடல்கள் பல்லாயிரம்.  இதோ இங்கே புரந்தர தாசர் கீர்த்தனை ஒன்று :  

தூகிரே ரங்கன தூகிரே கிருஷ்ணன

தூகிரே அச்சுதானந்தன (தூகிரே)  

ரங்கனை, கிருஷ்ணனை, அச்சுதனை, அனந்தனை தாலாட்டுங்கள் !!   

தூகிரே வரகிரியப்பா திம்மப்பன

தூகிரே காவேரி ரங்கய்யன (தூகிரே)  

திருப்பதியில் இருக்கும் பாலாஜியை, காவேரிக்கரையில் இருக்கும் ரங்கனை

தாலாட்டுங்கள் (தூகிரே)

Purandhara dasa, a follower of Madhwacharya lived in 15th century and composed many keerthanas, widely referred as Pitamaha of Carnatic music in Kannada and considered incarnation of Saint Naradha.  

Born as Srinivasa nayaka, he was a wealthy merchant of gold, silver and jewellery but  gave away all his material riches to become a Haridasa,  a devotional singer who made the difficult Sanskrit tenets of Bhagavata Purana available to everyone in simple and melodious songs.   He formulated the basic lessons of teaching Carnatic music by structuring graded exercises known as Svaravalis and Alankaras, he introduced the raga Mayamalavagowla as the first scale to be learnt by beginners in the field – a practice that is still followed today.  Purandara Dasa is noted for composing Dasa Sahithya.   Here is keerthana sung by  - Krishna Kashyap Murthy  https://www.youtube.com/watch?v=_Bp-tWlm9GE

 
Here are some photos of today’s purappadu at Thiruvallikkeni divyadesam.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
31.1.2023











 

Monday, January 30, 2023

Saidapet Sri Prasanna Venkatesa Narasimha perumal thirukkovil

 காளிங்கன் தலையின் மீதே ஆனந்த நடனமாடும் கண்ணன்

 


On the Gopuram of Saidapet Sri Prasanna Venkatesa Narasimha perumal thirukkovil

Sunday, January 29, 2023

parakeets too flock to Sriman Narayana !!

 துக்கச் சுழலையைச் சூழ்ந்துகிடந்த வலையை அறப்பறித்து

புக்கினில் புக்குன்னைக் கண்டு கொண்டேன்  !!

 


The ultimate refuge for everyone in distress is Sriman Narayana .. .. parakeets do realize this and flock to the gopuram of Sri Parthasarathi at Thiruvallikkeni  

28.1.2023

Saturday, January 28, 2023

Ratha Sapthami 2023 - Chandra Prabhai

ரத சப்தமியான இன்று 28.1.2023 மாலை சந்திர பிரபை புறப்பாடு.   சந்திரன் எனும் நிலா -  வட்டமான வடிவத்தையும், வெண்மையான நிறத்தையும், குளிர்ச்சியையும், மன அமைதியையும் அளிப்பதாக அமைந்துள்ளது. 

செல்போன் கண்டு பிடிக்காத  முன்னொரு காலத்திலே  தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு நிலவை காட்டி  உணவு ஊட்டி மகிழ்ந்தனர். 

Ratha Sapthami 2023 – Sri Parthasarathi Emperuman – Evening  Chandra prabhai purappadu  (Emperuman vadivazhagu and pinnazhagu) 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.1.2023 

Ratha Sapthami 2023 - Thiruvallikkeni purappadu

Thiruvallikkeni Ratha Sapathami 2023 purappadu

 






கங்கைகொண்டான் மண்டபத்தில் - அழகிய கோலங்களும், அருளிச்செயல் கோஷ்டியாரும்

28.1.2023 

Friday, January 27, 2023

Thai REvathi 2023 - Sri Ranganathar purappadu

யாருடைய கூந்தல் மிக மிக அழகானது ! -  நீங்கள் எப்போதாவது ஒருவருடைய பின்னல் அலங்காரத்தை கண்டு பிரமித்து, பின் சென்றதுண்டா !! - உங்கள் மனசாட்சியுடன் ஒப்புக்கொள்ளுங்கள் !!



Today 27.1.2023 is double bonanza – Thai Revathi – Sri Ranganathar siriya mada veethi purappadu followed by ulpurappadu of Sri Vedavalli thayar and Ranganathar, being Friday.


Modern LED tube lights are a real marvel – some of us would well remember those bulb days ! - the old gundu bulb (the 40W/60W – zero W and more) –…… an incandescent light bulb,  an electric light which produces light with a wire filament heated to a high temperature by an electric current passing through it, until it glows.  The hot filament is protected from oxidation with a glass or quartz bulb that is filled with inert gas or evacuated.  Current is supplied to the filament by terminals or wires embedded in the glass.  

Thomas Alva Edison (1847 – 1931) was an American inventor and businessman, who developed many devices in fields such as electric power generation, mass communication, sound recording, and motion pictures.  These inventions, which include the phonograph, the motion picture camera, and early versions of the electric light bulb, have had a widespread impact on the modern industrialized world.  He was one of the first inventors to apply the principles of organized science and teamwork to the process of invention, working with many researchers and employees. He established the first industrial research laboratory.  

In 1878, Edison began working on a system of electrical illumination, something he hoped could compete with gas and oil-based lighting.  He began by tackling the problem of creating a long-lasting incandescent lamp, something that would be needed for indoor use. However, Thomas Edison did not invent the light bulb.  In 1840, British scientist Warren de la Rue developed an efficient light bulb using a coiled platinum filament but the high cost of platinum kept the bulb from becoming a commercial success.  Many other inventors had also devised incandescent lamps, including Alessandro Volta's demonstration of a glowing wire in 1800 and inventions by Henry Woodward and Mathew Evans. Others who developed early and commercially impractical incandescent electric lamps included Humphry Davy, James Bowman Lindsay, Moses G. Farmer,  William E. Sawyer, Joseph Swan, and Heinrich Göbel. These early bulbs all had flaws such as an extremely short life and requiring a high electric current to operate which made them difficult to apply on a large scale commercially.  In his first attempts to solve these problems, Edison tried using a filament made of cardboard, carbonized with compressed lampblack. This burnt out too quickly to provide lasting light. He then experimented with different grasses and canes such as hemp, and palmetto, before settling on bamboo as the best filament. Edison continued trying to improve this design and in Nov 1879, filed for U.S. patent 223,898 (granted on January 27, 1880) for an electric lamp using "a carbon filament or strip coiled and connected to platina contact wires".





இதோ இங்கே ஸ்ரீ குலசேகராழ்வாரின் 'பெருமாள் திருமொழி' திவ்யப்ரபந்தத்தில் இருந்து ஒரு பாசுரம். : -

மொய்த்துக்கண்   பனிசோர  மெய்கள்சிலிர்ப்ப   ஏங்கி ளைத்துநின்று

எய்த்துக்கும்பிடு   நட்டமிட்டெழுந்து  ஆடிப்பாடி   இறைஞ்சி*   என்

அத்தனச்சன்    அரங்கனுக்கு     அடியார்களாகி அவனுக்கே

பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார்  முற்றும் பித்தரே  !! 

ஆழ்வார்களும், எம்பெருமானிடத்தில் ஈடுபாடு கொண்டவர்களும், தம் பக்தியினால் பித்தர்களே !. .. எம்பெருமானையும், அவனது லீலா விநோதங்களை நினைத்தபொழுதிலே கண்கள்,   இடைவிடாமல்  தம் நீரை சொரியவும்,  அவ்வாறாகையாலே கண்கள் பணிப்ப,  உடலானது  மயிர்க்கூச்செறிய ஏங்கி,  நெஞ்சு தளர்ந்து களைத்துப் போய் நிலை தளர்ந்து  மஹா கோலாஹலத்தோடு கூடிய நர்த்தனத்தைப் பண்ணி, நின்றவிடத்து நில்லாமல் (பல வித) ஆட்டங்களாடிப் பாட்டுகள் பாடி வணங்கி,  எனக்குத் தந்தையாய் [தந்தை தந்தை, தந்தை மூத்தப்பனாய்] ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனுக்கு  அடியவர்களாய், அந்த திருவரங்கனுக்கே  பித்தேறித் திரிகிறவர்கள் பைத்தியக்காரர்களல்லர்;  அவ்வாறு அவனிடத்தில் பக்தி  வ்யாமோஹம்  கொள்ளாத  மற்றபேர்களெல்லாம் தான்  பித்தர்கள், என்கிறார் நம் குலசேகரர்.

Here are some photos of Srimannathar purappadu at Thiruvallikkeni this evening.  The photo at the start is the pinnal alangaram for Sri Ranganathar.  

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27th Jan 2023

  

Thursday, January 26, 2023

Ekkattuthangal 2023 - Saidapet

 Sri Parthasarathi Perumal Ekkattuthangal thirumbukal 2023

Emperuman thirumuga mandalam and Saidapet Sri Prasanna Venkatesa Narasimha perumal thirukovil gopuram 
26.1.2023


Ekkadu Thiruvooral Uthsavam 2023

 Ekkaduthangal Thiruvooral Uthsavam 2023
 
Morning 2.49 am –  Sri Parthasarathi Perumal purappadu at Besant Road .. ..:


Thirumbukal purappadu evening : Sri Parthasarathi darshan in a flash-  check the speed  :  


 
299,792,458 metres per second (approximately 300,000 kilometres per second : Sri Parthasarathi Emperuman thirumbukal purappadu at Saidapet Sri Prasanna Venkatesa Narasimha temple @ 18:39 – 26.1.2023
 
adiyen Srinivasa dhasan – S. Sampathkumar
26.1.2023

Wednesday, January 25, 2023

Sri Parthasarathi Ekkadu Uthsavam 2023

திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் நடக்கும் ஒரு சிறப்பு உத்சவம் "ஈக்காட்டுத்தாங்கல் திருவூறல் உத்சவம்".  அடையாறு ஆற்றங்கரையில் கிண்டி அருகே உள்ள ஈக்காடு தொழிற்பேட்டைக்கு  ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பிரதி வருடமும் ஒரு நாள் எழுந்து அருள்கிறார்.

 


 இன்று ஈக்காடு தாங்கல் உத்சவம்  25.1.2023 நள்ளிரவு; அதாவது 26.1.2023 (இந்திய குடியரசு தினம்) அதிகாலை 1.30 மணியளவில் திருவல்லிக்கேணி திருக்கோவிலில்   இருந்து கிளம்பி - தவன உத்சவ பங்களா, வெங்கடரங்கம் தெரு விஜய் அவென்யு, ராதாகிருஷ்ணன் சாலை, திருமயிலை மாதவப்பெருமாள் திருக்கோவில், திருமயிலை கேசவப்பெருமாள் திருக்கோவில், ஆழ்வார்பேட்டை, தி. நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை என பல பகுதிகள் வழியாக ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் எழுந்தருளி, சுமார் 11 மணியளவில் ஈக்காடு மண்டபம் வந்தருளி திருமஞ்சனம் கண்டருள்வார். 


இவ்வழியில் உறைபவராயின்,  வழி மீது விழி வைத்து காத்து இருங்கள் - எம்பெருமானை தர்சிக்கலாம் 

adieyn Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
25.1.2023  

PS :  the timing and route are approx – for exact timing and correct route, only Temple Authorities know them well.  This purappadu covering a long distance, criss-crossing many areas will be taxing for all kainkaryabarars especially Sripatham thangigal .. .. yet, everyone feels happy in being part of this ! 

The first photo at Thirukovil entrance – taken a decade ago in 2012
Second thirumbukal at Besant road – taken in 2020. 

Sri Parthasarathi Perumal Ekkattuthangal Thiruvooral uthsavam 2023

 

Tomorrow 26.1.2023 – Sri Parthasarathi Emperuman purappadu

to Ekkattuthangal - early morning Thirumylai Sri Peyazhwar 

mangalasasanam





Sunday, January 22, 2023

Thiruvallikkeni Thai Thiruvonam 2023

 Thiruvallikkeni Thai Thiruvonam Sri Parthasarathi Emperuman  purappadu 22.1.2023 – kainkaryabarargal &  Perumal



Thiruvallikkeni Thai Amavasai 2023 - "Apocalypse" - what ! or when ??

Set in the eponymous year, the film depicts a dystopian world in which humanity is close to extinction. A theme that exists in every religion – that World will come to an end one day, may be due to extraordinary natural forces ! With the complete disappearance of the trees, the natural oxygen doesn’t exist any longer. People must rely on its synthetic variation, but because of its exorbitant price, the poor can hardly afford it. The first half of the film takes place in the only city in the world in which electricity is still available.  The protagonist’s wife  Xanthe, has a condition known simply as The Sickness, which gradually makes a victim’s body unable to process the artificial oxygen. Ethan and Jude work at the world’s only active nuclear power plant. Ethan’s apparently normal if bleak existence is interrupted when the corporation that he works for tells him that he is needed to save the World. 



இன்று 21.1.2023 - தை  அமாவாசை.!  சென்ற வருஷ  தை  அமாவாசை நன்னாள் (31.1.2022)  திருவல்லிக்கேணி வாசிகளுக்கு, வாழ்வில்  ஒரு இனிய மறக்கமுடியாத தருணம்.  பலமாதங்கள் பிறகு அன்றுதான்  மாலை திருவீதி புறப்பாடு  - ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் குலம்குலமாக பரம்பரையாக வழிபட்டுவரும் நம் பார்த்தசாரதி எம்பெருமான் திருக்கோவிலுக்கு வெளியே பெரிய மட வீதி புறப்பாடு கண்டருளி,  திவ்யதரிசனம் அளித்தார்.  மாட வீதிகளில் மக்கள் ஆனந்தமயமாக நின்று தரிசித்து இன்புற்றனர்.  

 

In our sampradhayam – there are yugas and at the end of Kali Yuga, the World will be wiped out of its living things by a big monstrous wave. Apocalypse (from Ancient Greek   (apokálupsis) 'revelation, disclosure') is a literary genre in which a supernatural being reveals cosmic mysteries or the future to a human intermediary. The means of mediation include dreams, visions and heavenly journeys. Eschatology, from Greek eschatos, last, concerns expectations of the end of the present age, and apocalyptic eschatology is the application of the apocalyptic world-view to the end of the world, when God will punish the wicked and reward the faithful.  An apocalypse will often contain much eschatological material.

"Apocalypse" has come to be used popularly as a synonym for catastrophe, but the Greek word apokálypsis, from which it is derived, means a revelation.  It has been defined as "a genre of revelatory literature with a narrative framework, in which a revelation is mediated by an otherworldly being to a human recipient, disclosing a transcendent reality which is both temporal, in that it envisages eschatological salvation, and spatial, insofar as it involves another, supernatural world." 

 

ஊழி - உலகம் அழியும் .. .. அந்தகாரம் எனும் இருள் எங்கும் சூழும் .. .. உலகம் அழிவது பற்றிய குறிப்பு ஒவ்வொரு சமுதாயத்திலும் உள்ளது.  ஆழிப்பேரலை எனும் மிக பெரிய வெள்ளத்தால் உலகம் அழியும் என்பது பல சமயங்களின் கணிப்பு.    உலகம் அழிவது யாருக்கும் சம்மதமில்லை, யாரும் விரும்பவும் மாட்டார்கள். இருந்தாலும் அப்படி ஓர் அழிவு வருமானால் என்ன செய்வது? எங்கு போவது? எப்படி இந்த அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பது? இதுவரை ஆசை ஆசையாய் சேர்த்து வைத்த செல்வத்தை எல்லாம் என்ன செய்வது? அன்பான குழந்தைகள், ஆதரவான உறவுகள், அறிவார்ந்த நட்புகள் எல்லாரையும் விட்டுப் பிரிய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதா? உயிர்மேல் ஆசையில்லாதவர் யார்? மற்ற மற்ற உயிரினங்களைவிட மனிதர்களுக்கு உயிர்மேல் ஆசை அதிகம். மனித வாழ்க்கை என்பது சுமார் 100 ஆண்டுகளாகும். மற்ற உயிரினங்களுக்கு ஆயுள் குறைவுதான்; இருந்தாலும் மனிதன் ஊழி ஊழிக்காலம் உயிர் வாழ்வதைப்போலவே எண்ணிக் கொண்டு பேராசையோடு செல்வங்களைச் சேர்க்கிறான். உலகம் அழியப் போகிறதாமே என்று கேள்வி கேட்டுக்கொண்டு அமைதி இல்லாமல் அல்லாடுகிறான்; தடுமாறுகிறான்.

மனிதர்கள் இரவு உறங்குவர்.  காலை எழுந்து இருப்பர் - சில சிறு வேலைகளுக்கு பின்னர் உத்யோகம் செல்வர், காலை, மதியம், இரவு உணவு உண்ணுவர்.  செல்வம் தேடுவர், ஈட்டுவர் - அந்த பணத்தை தேடி பேராசையுடன் ஓடுவர் .. .. மறுபடி இரவு, மறுபடி பகல் .. .. 2020 ஆண்டு ஜனவரி மாதத்தில் எங்கோ வூஹான் என்ற சீன தேசத்திலே புது வியாதி வந்துள்ளதாகவும், மக்கள் கொத்துக்கொத்தாக மடிவதாகவும் செய்தி பரவியது.  நாம், நம்மில் பலர் நினைத்தது - இந்தியா போன்று பல்வேறு கடின சூழல்களில் வாழ்பவர்களை இவை ஒன்றும் செய்யா!  

ஒரு நாள் - மெரீனா கடற்கரை மூடப்பட்டது.  இந்திய அரசாங்கம் ஒரு நாள் அடையாள கட்டுப்பாட்டை கொண்டு வந்தது.  மார்ச் மாதம் 20ம் தேதி, 2020  முதல் திருக்கோவில்கள் மூடப்பட்டன.  இரண்டொரு நாட்களில், ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.  கொரோனா நோய் பரவியது ! - மக்கள் பலர் மாண்டனர்.  பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பிரளயம் வந்து உலகம் அழிவது பற்றி புராண இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன. கடல்கோள் ஏற்பட்டு குமரிக்கண்டம் அழிந்ததைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் சுட்டுகின்றன.   அண்மையில் ஏற்பட்ட ஆழிப் பேரலை என்னும் சுனாமியை நேரில் பார்த்துவிட்டதால் மனித குலம் மேலும்  கவலைப்பட ஆரம்பித்தது.

மார்ச் மாதம் 20ம் தேதி, 2020  முதல் மூடி இருந்த கோவில்கள் செப்ட் 7 முதல் பக்தர்களுக்கு திறந்தன.  நவம்பர் 30 திருக்கார்த்திகை தீபம் - திருப்பாணாழ்வார் சாற்றுமுறை அன்று ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோபுர வாசல் தாண்டி எழுந்துஅருளினார்.  6.1.2021  முதலாக ஸ்ரீஆண்டாள் திருவீதி புறப்பாடு.  சேவித்த பக்தர்கள் அனைவருக்கும் ஆனந்தம்.  சென்ற வருஷ  தை அமாவாசை ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் திருவீதி புறப்பாடு கண்டருளி, நம்மை ரக்ஷித்தார்.






In the year 2020,  last purappadu for Sri Parthasarathi was on Masi magam [9.3.2020]; then there was Gajendra varadhar thavanothsavam, Sri Azhagiya Singar thavanothsavam (3 days)    15.3.2020   –   then after Corona lockdown – there could be  no veethi purappadu for 297  days !. 2021 was no different  .. .. at Thiruvallikkeni there were to be two brahmothsavams in Feb & Mar, then as the  ThiruAvathara Uthsavam of the Greatest Acharyar ~ Nammiramanusar   – started (9.4.2021) – in the morning it was ‘Thanga pallakku’ and in the evening ‘Mangalagiri’ – and  no purappadu after that for the whole year. In between Sri Parthasarathi did come out on Karthigai day and lit chokkapanai but no mada veethi purappadu – and during Neeratta uthsavam to there was purappadu of Andal from Temple till neeratta mantap only.  Then  after  another 297 days  [9.4.2021 – 31.1.2022] – there was thiruveethi purappadu of Sri Parthasarathi perumal on Thai Amavasai day. 

அடிவண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன்

படிவண்ணம் பார்க்கடல் நீர் வண்ணம், - முடிவண்ணம்

ஓராழி வெய்யோன்  ஒளியும் அஃது அன்றே

ஆராழி  கொண்டாற்கு அழகு 

முதலாழ்வார்கள் உலகளந்த சரிதையிலே மிகவும் ஆழ்ந்திருப்பர்களென்பது ப்ரஸித்தம்.  எம்பெருமானுடைய திருமேனியை உகப்பது  போலே, அவனது திருவடித்தாமரைகளையும் உகப்பர் பெரியோர்.  பேயாழ்வாரின் அமுத வரிகளிலே :  முன்பு உலகங்களை அளந்த  பெருமானுடைய  திருவடிகளின் நிறம், அன்றலர்ந்த  தாமரைப்போலே சிவந்திராநின்றது; திருமேனியின் நிறம் -  பூமியைச் சூழ்ந்த கடல் நீரின் வண்ணம் போல் கறுத்துக் குளிர்திராநின்றது.;  அவன் அணிந்த கிரீடத்தினுடைய நிறம் -  ஒற்றைச்சக்கரமுடைய தேரிலேறின ஸூர்யனுடைய நிறம் போன்றது, அப்பெருமானுடைய  தேஜஸ் அந்த ஸூர்யப்ரகாசம் போன்றதேயன்றோ ~ என பொன்னிவர் மேனி மரகதப்பெருமானின் விசேஷனாதிகளை சிலாகிக்கின்றார்.  

இப்பூவுலகில் தீமைகள் எல்லாம் நீங்கி, கொரோனா போன்ற நோய்கள் பறந்தோடி - நாம் அனைவரும் சந்தோஷத்துடன் வாழ எம்பெருமானை பிரார்த்திப்போம்.  இன்று ஒரு நல்ல தொடக்கம்.  இனிவரும் நாட்களில் எந்த குறைபாடும் இல்லாமல் உத்சவங்கள் சிறப்புற நடக்க அவ்வெம்பெருமானையே வேண்டுவோம். 








 

The description in first para is that of Movie titled ‘2067’  Australian science fiction film set in that year and released in 2020,  directed and written by Seth Larney from a treatment by Gavin Scott Davis   starring Kodi Smit-McPhee and Ryan Kwanten.

இன்றைய 21.1.2023  தை  அமாவாசை புறப்பாட்டின் சில புகைப்படங்கள் இங்கே ! 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
21.1.2023