To search this blog

Thursday, May 28, 2020

Thirukkarthigai Chokkapanai - let all difficulties vanish in fire


மாவளி சுளுந்து என்பதை கேள்வியுற்று இருக்கிறீர்களா ?  டிவி மின்சாரம் போன்றவை இல்லாமல் கிராமத்து தெருக்களில் இரவு நேரங்களில் விளையாடி, கயிற்றுக்கட்டிலில் உறங்கிய அனுபவம் உண்டா ? - தெருவில் படுத்து வானத்து விண்மீன்களை எண்ணியது உண்டா ? சொக்கப்பனை கொளுத்துதல் என்பது ஆலயங்களில்  கார்த்திகை தீபத் திருவிழாவின் பொழுது நடைபெறும் நிகழ்வாகும். படபடவென வெடிக்கும் பனைமர ஓலைகளுடன் மக்களுடைய எல்லா கஷ்டங்களும் ஒழிந்து ஓடும் என்பது ஐதீஹம்

If “social distancing” sounds to you more like snubbing or ghosting a friend, you are right. It was a 1957 collection of work by sociologist Karl Mannheim that first described it as a way to enforce power hierarchies. “The inhibition of free expression can also serve as a means of social distancing,” he wrote. “Thus, the higher ranks can constrain themselves to preserve a certain kind of deportment or dignity.” In doing so, they distance themselves socially from the plebs !  ~  now a common phrase suggested to fight pandemic – it is more about physical distancing – not keeping physical contact and trying to be a few meters away from the other human being.

The Central Govt today  said 13 cities have been affected by the COVID-19 pandemic most in the country. The 13 cities, include Delhi, Mumbai, Chennai and Kolkata, constitute about 70 per cent of the total positive cases in the country. Other cities on the list include Ahmedabad, Thane, Pune, Hyderabad, Indore, Jaipur, Jodhpur, Chengalpattu and Thiruvallur.   Tamil Nadu's virus count crossed 19,000-mark with 827 new cases getting reported in the last 24 hours.   Chennai alone accounted for 559 of these 827 new patients.

Now we are closer to end of lockdown 4 (or would it be beginning of lockdown 5.0!) – there are indications that with the unhindered increase in no. of people affected, there could be continued restrictions at least in the Red / Containment zones.  There are indications that the decisions will be driven by the respective State Govts.  While there will be a complete restriction on the opening of the educational institutions and the resumption of the international flights, the states are likely to decide whether to open swimming pools, gyms, shopping malls etc.  !! 

One of Donald Trump's first acts when he moved into the Oval Office in 2017, was to restore to a central position the bust of Winston Churchill that Barack Obama had moved out in favour of a bronze of Martin Luther King Jr. And in this fight against coronavirus, Donald Trump does see himself as a war leader; the property tycoon who could work a shovel on a Manhattan building site was also going to be shown to be a man of destiny - the untried field-marshal, with a baton in his knapsack ready to command the troops to get the job done. But also keeping the home fires burning, and lifting the morale of a frightened nation. It has all been far more jagged than that.  The number of US servicemen and women killed in Korea, Vietnam, Iraq and Afghanistan - over an aggregate 44 years of fighting - is almost exactly the same as the number of Americans who've now lost their lives to coronavirus in just three months of America's war against the hidden enemy, as Donald Trump likes to refer to Covid-19.


Amidst all fears and apprehensions – there is hope ! .. on Thirukarthigai day, we light ‘chokkappanai’ – one of dried leaves – with wishes that all misgivings, difficulties will vanish like ash.  On a positive note, it is stated that the annual Amarnath Yatra pilgrimage, earlier curtailed on account of the coronavirus pandemic, will this year be held only for 15 days. . The pilgrimage will only be conducted from the Baltal route, it is further stated.

தீபத் திருவிழா அன்று  திருவண்ணாமலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து மாலையில் மலை மீது மகாதீபம் ஏற்றுவார்கள். எல்லா வீடுகளிலும்  அகல் விளக்குகளும், மாவிளக்கு தீபமும் ஏற்றி வழிபடுவார்கள்.   சில கிராமங்களில், கார்த்திகைத் திருநாளில் மகளிர் விளக்குகள் பல ஏற்றி வானத்து விண்மீன்கள் போல ஊரெங்கும் ஒளிரச் செய்வர். சிறுவர் தாமே செய்த சுளுந்தைச் சுற்றித் தீப்பொறிகள் சிதறும்படி செய்து மகிழ்வர்.

துவரங்கட்டைக் கரி, நெல் உமி, உப்பு, ஊமத்தஞ்சாறு ஆகியவற்றைச் சேர்த்து இடித்து நிழலில் காயவைத்து, சிறுசிறு துணிப்பைகளில் கட்டி வைத்து,  சுமார் ஒரு அடி நீளமுள்ள 3 மூங்கில் சிம்புகளை நுனியில் கட்டி இடையில், முன்பே செய்து வைத்திருக்கும் பைகளில் ஒன்றை வைத்து மற்றொரு முனைகளை நீண்ட கயிற்றில் சேர்த்துக் கட்டி, பையில் தீ மூட்டிக் கயிற்றைச் சுற்றும்போது இக்கால மத்தாப்பைப் போலத் தீப்பொறி பறக்கும். பல சிறுவர்கள் ஒரே இடத்தில் நின்றுகொண்டு சேர்ந்தாற்போல் சுற்றும்போது சுற்றுபவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் பெருங் கொண்டாட்டம்.  நான் இதைக் கண்டதில்லை - இது பற்றி சமீபத்தில் ஒரு மதுரை நண்பர் சொல்லக்கேட்டேன்.


கார்த்திகை மாதம் ஒரு சிறப்பான மாதம்.  திருமங்கை மன்னன், திருப்பாணாழ்வார்    சாற்றுமுறைகள்  - கூடவே திருக்கார்த்திகை தீப உத்சவம்.  கார்த்திகை புறப்பாட்டின் போது சொக்கப்பனை கொளுத்துதல் உண்டு. இது காய்ந்த பனை ஓலைகளால் ஆனது.  நகர்ப்புறத்தில் இதன் நடுவே தீபாவளி பட்டாசுகளையும் சொருகி வைப்பர்.     பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். தமிழ்நாட்டின் தேசிய மரம் பனை. ஒரு தாவரத்தின் எல்லா பாகங்களும் பயன் தருவது பனைக்கு உள்ள சிறப்பு. பஞ்சங்களில்  பனங்கிழங்கு உணவாக பயன் பட்டிருக்கிறது. பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது.  பனை ஓலைச் சுவடிகள் மூலமாகவே நமக்கு பல இலக்கியங்கள் கிடைத்துள்ளன.

At Thiruvallikkeni divyadesam on Thirukarthigai day @ 8 pm on 12.12.2019, Sri Parthasarathi had purappadu on the occasion of Deepa Uthsavam after lamps were lit all over the temple and in all sannadhis.  Generally, Karthigai would fall on ‘karthigai nakshathiram’ – after which there would be no purappadu. This year 10.12 was Thirumangai mannan Sarrumurai [Karthigaiyil Karthigai]; 11.12.20 was Thiruppanar sarrumurai [Karthigaiyil  Rohini] and there was to be some Pournami on 12.12 and hence Thirukarthi deepa uthsavam on that day. The highlight of the day is the lighting of ‘chokka panai’ – a structure made of palmirah trunk and leaves stuffed with rice bran etc., ….. people put fireworks also into this bonfire.  This symbolizes burning of bad behavior and unwanted elements ~ the lamps symbolize blossoming knowledge.


From this day  starts ‘ananathyayanam’ and so no purappadu for sometime.  From  midnight of 12.12  there will be thailakappu for Moolavar and there will be no darshan of moolavar in Sri Parthasarathi temple.  In the period of ‘Anadhyayanam’ ~ Divyaprabandham and Vedas will not be recited in Temples and at homes.  This tradition is followed in all Divyadesams.   

12.12.2020 அன்று திருக்கார்த்திகை தீபம். திருக்கோவில், சுற்றுக்கோவில் சன்னதிகள் அனைத்திலும் திருவிளக்கு ஏற்றப்படுகின்றது. ஒவ்வொரு திருக்கார்த்திகைக்கும் ஸ்ரீ பார்த்தசாரதி புறப்பாடு உண்டு.  நாம் சிறப்பாக கொண்டாடும் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம். இவ்விழாவில் விளக்குகள் ஏற்றப்பட்டு  இனிய கொண்டாட்டங்கள்  நடைபெறும்.  கார்த்திகை விளக்கீடு’ என இலக்கியங்கள் போற்றும் தீபத்திருவிழாவில், பனைமரங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு.  பனை மரத்தை இலக்கியங்கள் - , `பூலோக கற்பகவிருட்சம்’ என்று போற்றுகின்றன.




இன்றைய புறப்பாட்டின் மற்றைய   சிறப்பு  "சொக்கப்பனை ".. .. .. காய்ந்த பனை ஓலைகளால் கோபுர வடிவில் செய்து கோவில்களின் முன்னால் கார்த்திகை பண்டிகையன்று கொளுத்துவார்கள்.  இம்மரம்  திருக்கார்த்திகை தினத்தில்  ஆலயத்தின் முன்பெ  வெட்டவெளியில் நடப்படும் - பனை ஓலைகளைப் பிணைத்துக் கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பில் நடுவே பட்டாசு மத்தாப்புகளும்  கூட இடம் பெறும்.  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு கண்டு அருளும் போது  திருக்குளம்  முன்பு  (முந்தைய யானை கொட்டாரம் இருந்த இடம் முன்பு) இந்த சொக்கப்பனை பட்டர் பெருமாள் விளக்குடன் ஏற்றப்பெறும்.  மக்கள் கூட்டமாக வந்து இதனை கண்டு களிப்பர். திருக்கார்த்திகை புறப்பாட்டின்  போது எடுக்கப்பட்ட "சொக்கப்பனை " படங்கள் இங்கே.

திருக்கார்த்திகை சொக்கப்பனை தீ  போல துன்பங்கள் ஓடட்டும் ! விரைவில் திருக்கோவில்கள் திறக்கப்படட்டும்.  மக்கள் அனைவரின் வாழ்விலும் நன்மைகள் விளைந்து, நல்லனவும் இனியனவும் நடக்கட்டும்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளே உன் பாதமே கதி

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.5.2020













No comments:

Post a Comment