To search this blog

Friday, June 21, 2024

International Yoga Day 2024 : யோகோ யோகவிதாம் நேதா

The best picture to have on International Yoga Day 2024 !


 

யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாந புருஷேஶ்வர: |

நாரஸிம்ஹவபு: ஶ்ரீமாந் கேஶவ: புருஷோத்தம: |

 

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன்  யோகத்தினால் (சித்தத்தினால்) அறியப்படுபவர்; - யோகவித்தைகளின் உத்தம  தலைவர்.  இயற்கை, ஈரேழு உலகங்கள்,  அதனுள் வாழும் ஜீவராசிகளின் தலைவர்.  அங்கப்பொழுதே - நரசிங்கனாக தோன்றி தன பக்தனை காத்து அசுரனை அழித்தவர். அனைவரிலும் உயர்வான உன்னத புருஷோத்தமர்.  

Today 21.6.2024 is International Yoga Day.  Yoga is an ancient physical, mental and spiritual practice that originated in India. The word ‘yoga’ derives from Sanskrit and means to join or to unite, symbolizing the union of body and consciousness. Today it is practiced in various forms around the world and continues to grow immensely  in popularity.  

Recognizing its universal appeal, on 11 December 2014, the United Nations proclaimed 21 June as the International Day of Yoga by resolution 69/131. This year marks the 10th International Day of Yoga with the theme “Yoga for Self and Society.” Yoga, a transformative practice, represents the harmony of mind and body, the balance between thought and action, and the unity of restraint and fulfillment. It integrates the body, mind, spirit, and soul, offering a holistic approach to health and well-being that brings peace to our hectic lives. Its power to transform is what we celebrate on this special day.  

Today 21 June 2024, 6:00 pm (EDT) at UN Headquarters, New York, 10th International Yoga Day event is being organized by the Permanent Mission of India to the UN in collaboration with the UN Secretariat, the event takes place in the North Lawn Area of UNHQ.  

Celebrating Yoga Day with  darshan of most benevolent Thiruvallikkeni Thelliya Singar in  Yoga Narasimha thirukkolam.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.6.2024 

Sri Thelliya Singar Nachiyar thirukolam 2024

 



Thiruvallikkeni Sri Azhagiya Singa Perumal Nachiyar thirukolam 2024

(mirror image inverted)

Thiruvallikkeni Sama vedha geetham

 

Thiruvallikkeni  Sama vedha geetham

Wednesday, June 19, 2024

Sri Thelliya Singar purappadu to vahana mantap - Hamsa vahanam 2024

 

போகின்ற காலங்கள்,  போய காலங்கள், போகு காலங்கள் -

உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ ?


 

திருவல்லிக்கேணி ஸ்ரீ அழகிய சிங்கர்

ஹம்ச வாகனத்துக்கு எழுந்து அருளும் அவஸரம்

chant - 'Om Namo Narayanaya'

 

நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்

'நாராயணா' என்னும் நாமம்.

 


ஓம் நமோ நாராயணாய!!

Sri Thelliya Singar Garuda Sevai 2024

 

Thiruvallikkeni Sri Azhagiya Singa Perumal Garuda SEvai 19.6.2o24







Tuesday, June 18, 2024

Sri Azhagiya Singar - Simha vahanam 2024

In the ongoing Aani Brahmothsavam of Sri Azhagiya Singar at Thiruvallikkeni, day 2 night is Simha vahaam, yes Lion for the lion-faced Narasimha.  Here are some photos of Thelliya Singar, face of the vahanam and the tail of the vahanam.

 



எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் எடுத்த பல அவதாரங்களும் துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனத்துக்காக !   கணக்கற்ற அடியவர்கள் வேண்ட, எம்பெருமான்  தர்மத்தை நிலை நிறுத்தவும், சாது ஜனங்களைக் காக்கவும், ஏதேனும் ஒரு வடிவம் எடுத்து அவதரிக்கிறான்.  நரசிம்ம அவதாரத்தில்  ஒரே ஒரு பக்தனின் வேண்டுகோளுக்காக, கணக்கற்ற வடிவங்களில் எங்கும் பரந்து, எல்லா பொருட்களிலும், இடங்களிலும் கலந்தான். தன்னுடைய திருவடியைப் பற்றியவர்களை ஒருநாளும் கைவிடாத சிங்க முகம் படைத்தவன் திருவல்லிக்கேணியில் அழகிய சிங்கனாக, தெள்ளிய சிங்கனாக அருள் பாலிக்கின்றான். . 



அந்த அழகிய சிங்கனுக்கு இன்று திருவல்லிக்கேணியிலே சிம்ம வாஹனம்.  தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடு கொண்டருளிய தெள்ளியசிங்கனின் அருள் மிகு தோற்றமும், சிங்கத்தின் முகமும், வாலும். 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
18.6.2024 

Sri Azhagiya Singar - Sesha vahanam 2024

Sri Azhagiya Singar - Sesha vahanam  2024

At Thiruvallikkeni divaydesam – for Sri Parthasarathi & Sri Azhagiya Singar brahmothsavam – on day 2 morning would be the beautiful Sesha vahanam.   Today  (18.6.2024) being day 2 of Sri Thelliya Singar  Aani  brahmothsavam, there was grand purappadu of Sri Azhagiya Singar  in Sesha vahanam as Paramapatha Nathar. 






Of those who render service to MahaVishnu, Ananthan – the Adi Sesha serves Him in the best possible manner that one could visualize.  He is with Him when He is moving, sitting and at Thirupparkadal, Emperuman is reclining on him.  The serpentine Ananthazhwaan is ever at the service of the Lord in every possible manner.    

Snakes have coexisted with humans for millions of years. There are more than 3,000 species of snakes on the planet and they’re found everywhere except in Antarctica, Iceland, Ireland, Greenland, and New Zealand. About 600 species are venomous, and only about 200—seven percent—are able to kill or significantly wound a human.   The serpent, or snake, is one of the oldest and most widespread mythological symbols. The word is derived from Latin serpens, a crawling animal or snake.  Snake  worship has been prevalent in many cultures.

 


In Mexico's Yucatán Peninsula, amidst the vast forests and archaeological sites, lies the awe-inspiring city of Chichén Itzá. This ancient Maya metropolis is renowned for its architecture, intricate mythology and reverence for Kukulkan, the feathered serpent god. A "vision serpent" in Maya culture, Kukulkan represented an important connection between the physical world and the spiritual world, and played a part in many of the people's social and religious traditions.  The god Kukulkan is an important figure in Maya history, dating back to pre-Hispanic Mesoamerica's classic period (250 to 900 C.E.). The Yucatec Maya attributed their living habits and agricultural practices to the benevolence of this god, among other deities. 

Kukulkan, also known as Quetzalcoatl among the Aztecs, was more than just a deity worshipped by the Maya peoples; he was a creator god, symbolizing the interconnectedness of life, the underworld and the sky. Maya mythology often depicts Kukulkan as a feathered serpent because snakes were symbols of life above and below the earth, while winged creatures were symbols of the sky. The cult of Kukulkan/Quetzalcoatl was the first Mesoamerican religion to transcend the old Classic Period linguistic and ethnic divisions.  This cult facilitated communication and peaceful trade among peoples of many different social and ethnic backgrounds.  Although the cult was originally centred on the ancient city of Chichen Itza in the modern Mexican state of Yucatán, it spread as far as the Guatemalan Highlands and northern Belize.

There is the illustrious lineage of Purvacharyargal – the hierarchy of Srivaishnava preceptors – through whom the glorious traditions passed by in generations.  Its happy culmination with Namperumal Himself becoming disciple of Acarya Mamunigal redounds the wisdom of our holy lineage.  Swami Emperumanar (Sri Ramanujar) and Mamunigal – both were incarnation of Adisesha.  Born as Nayanar, Mamunigal was an ocean of knowledge, yet learnt at the feet of his erudite father and others – the way Sri Rama and Sri Krishna did, during their stay on earth – through courses under great sages of their times like Vasistha, Viswamitra, Sandeepani .. ..  

திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் பெருமானுக்கு 'சேஷசாயி' என அழகான  திருநாமம். அந்த அரவணையானின் பாதங்களை    தொழுது ஏத்துபவர்கள் என்று  என்றும் குறைவிலர் !..  . Here is one of the verses of Boothathazhwar:        

ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,

தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், - வானத்து

அணியமரர்  ஆக்குவிக்கும் அஃதன்றே, நங்கள்

பணியமரர் கோமான் பரிசு. 

பூதத்தாழ்வாரின் இந்த வரிகள் ஆழ்வாரின் அனுபவத்தை நமக்கு உணர்த்த வல்லன.  மிக சாதாரணமாய் புரிந்து கொள்ள முயற்சித்தால் இப்பாசுரத்தின் அர்த்தம் இவ்வாறு ஆகுமாம் போலே  : 

எம்பெருமானுக்குப் பல்லாயிரத் திருநாமங்களுண்டு; அவற்றில், திருமேனி முதலியவற்றுக்கு வாசகமான திருநாமங்கள் என்று ஒரு வகுப்பும், விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான திருநாமங்கள் என்று மற்றொரு வகுப்பும் கொள்ளத் தக்கன.  ஸ்ரீவத்ஸவக்ஷா; புண்டரீகாக்ஷ:, பீதாம்பர:, சார்ங்கீ, சக்ரபாணி:-  இத்யாதி திருநாமங்கள் முந்தின வகுப்பைச் சேர்ந்தவை; லோகாத்யக்ஷ:, ஸுராத்யக்ஷ:, ஜகத்பதி : -  இத்யாதி திருநாமங்கள் பிந்தின வகுப்பைச் சேர்ந்தவை.  ஆக இவ்விரு வகுப்புகளையுந் திருவுள்ளம்பற்றி, முதலடியில் “நாரணன்றன் நாமங்கள்” என்றும், இரண்டாமடியில் “மற்றவன் பேர்” என்றும் அருளிச் செய்யப்பட்டுள்ளது. 

Here are some photos of  Sri Thelliya Singa Perumal  Sesha vahana purappadu at Thiruvallikkeni divyadesam  this morning. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
18.6.2024

பாசுர விளக்கம் : ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி - ஒப்பற்ற ஸ்ரீவைணவ கலைக்களஞ்சியம் திராவிட வேதா இணையம்.  












Monday, June 17, 2024

Sri Azhagiya Singar Aani Brahmothsavam day 1 2024 - Kolam

 

Sri Azhagiya Singar Brahothsavam day 1 – purappadu to vahana mantapam



Kolam before Swami Nammalwar sannathi (vahana mantap) by Smt. Aravindhakrishna

Sri Azhagiya Singar - punnai kilai vahanathukku 2024

 

திருவல்லிக்கேணி அழகன் - ஸ்ரீ தெள்ளியசிங்கப்பெருமாள் 

புன்னைகிளை வாகனத்துக்கு எழுந்து அருளல்


 

Thiruvallikkeni Sri Azhagiya Singar – Pathi ula – day 1 :2024

Sri Azhagiya Singar Dharmathi Peedam 2024

Sri Azhagiya Singar Aani Brahmothsavam 2024  started this morning.  On day 1 morning it is Dharmathipeedam – one of the oldest vahanams dating back to more than 122 years - -as could be seen from the inscription – this vahanam dates back to Kali subakruth varusham 5004 Chithirai masam – the present year is Krothi  Kali 5125– so two full 60 years have rolled by since its samarpanam.  

 





Sri Vaishnavism dwells on principles of Dharma – our purpose of life is to do dharma, kainkaryam to Emperuman and His devotees.  The concept of Dharma or law in ancient India was inspired by the Vedas which contained rules of conduct and rites and compiled in Dharma Sutras, were practiced in a number of branches of the Vedic schools. Their principal contents address the duties of people at various stages of life, the rights and duties of the kings and juridical matters. These were basis of Hindu Law. The earliest document throwing light on the theory of jurisprudence, which forms part of practical governance, is the Artha Sastra of Kautilya dating back to circa 300 B.C. The third chapter deals with Vyavahara i.e. transactions between two or more parties or Vivada or disputation 

Dharma in Hinduism, is an organizing principle that applies to human beings in solitude, in their interaction with human beings and nature, as well as between inanimate objects, to all of cosmos and its parts. It refers to the order and customs which make life and universe possible, and includes behaviors, rituals, rules that govern society, and ethics. Hindu dharma includes the religious duties, moral rights and duties of each individual, as well as behaviors that enable social order, right conduct, and those that are virtuous. Dharma is that which all existing beings must accept and respect to sustain harmony and order in the world. It is neither the act nor the result, but the natural laws that guide the act and create the result to prevent chaos in the world

 


Yato Dharmastato Jayah ( यतो धर्मस्ततो जयः யதோ தர்மஸ்ததோ ஜய:)   is an all important a Sanskrit shloka that occurs a total of 13 times in the Hindu epic,  the Mahabharata. It means "Where there is Dharma, there will be Victory".

 

राजन्सत्त्वमयो ह्येष तमोरागविवर्जितः |

यतः कृष्णस्ततो धर्मो यतो धर्मस्ततो जयः ||

6.62.34 (Bhīma to Duryodhana)

 

O King! He is the embodiment of truth, devoid of any shadows of darkness or passion. Wherever Kṛṣṇa resides, there abides Dharma. Where there is Dharma there is victory.

 

This is the motto of Supreme Court of India too.  The Dharma chakra logo of the Apex Court of the Nation has the wheel that appears on the abacus of the Sarnath Lion capital of Ashoka with 32 spokes. The inscription in Sanskrit “yatodharmastato jayah” means – Truth alone I uphold. It is also referred to - as the wheel of righteousness, encompassing truth, goodness and equity. 

The Muthalazhwargal (Pogai alwar, Boothathalwar and Peyalwar) met at Thirukovalur.... Poigai azhwar started singing the greatness of the Lord by lighting the Earth itself as the light and Ocean as the ghee...  he tells us :... ... எம்பெருமானை தங்கள் மனசார அனுபவித்து ஆசையாய் தங்கள் வார்த்தைகள் உரைத்தவர்கள் ஆழ்வார்கள்.  ஸ்ரீமன் நாராயணின் பக்தர்களுக்கு இதோ பொய்கைப்பிரான் காட்டும் எளிய வழி : 

நன்றுபிணிமூப்புக் கையகற்றி நான்கூழி,

நின்று நிலமுழுதும் ஆண்டாலும்,- என்றும்

விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்,

அடலாழி கொண்டான்  மாட்டன்பு.  (முதல் திருவந்தாதி) 

வாழும் காலத்தில் வியாதியையும், கிழத்தனத்தையும் - இவற்றைப்பற்றிய கவலைகளையும், நன்றாக தொலைந்தொழியும்படி  நல்வாழ்க்கை பெற்றாலும், காலமுள்ள வரையிலும் ஸ்திரமாக இருந்து நிலம் முழுதும் ஆண்டாலும் - நாம் செய்ய வேண்டியது எல்லாம்  அண்டஜஸ்வர்யங்கள்  எல்லாவற்றையும் தனதாகப்பெற்ற  திருவாழியைக் கையிலேந்திய பெருமானிடத்தில்  என்றென்றும் சார்ந்து இருக்க, அவ்வெம்பெருமானிடத்திலே  ஆழ்ந்திருக்கிற நெஞ்சை  வேண்டுவோமாக.  !

Poigai alwar – directs the heart thus – diseases during life time are common; ageing and senility is certain – even if one is to live long long years and rule the Earth – we should always think of the Emperuman who has the discuss (Thiruvazhi) in His hand – it is eternally  blissful to have a mind deeply devoted to His lotus feet. 

Here are some photos of morning purappadu of Sri Thelliya Singar  at Thiruvallikkeni divyadesam – dwajarohanam took place after purappadu. 

adiyen Srinivasa dhasan. 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17.6.2024. 
Pasura vilakkam : Sri Kachi swami, dravidaveda.org. 











Sunday, June 16, 2024

Thiruvallikkeni Sri Senai Muthaliyar - Vishwaksenar purappadu 2024

Thiruvallikkeni Sri Senai Muthaliyar - Vishwaksenar purappadu

Brahmothsavam is a very  happy occasion – devotees assemble in large numbers, do service to Lord in every possible manner.  At Thiruvallikkeni, there are two grand brahmothsavams [Chithirai for Sri Parthasarathi and Aani for Sri Azhagiya singar)   

உத்சவங்கள் ஆனந்தத்தை தர வல்லன ! - தொண்டிலே ஈடுபடும் அனைவர்க்கும் மட்டுமல்ல ! - உத்சவ நாயகனான எம்பெருமானுக்கும் கூட ஆனந்தமே !  நாளை முதல் திருவல்லிக்கேணியில் ஸ்ரீ அழகியசிங்கர் ஆனி  ப்ரஹ்மோத்ஸவம்.  ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்வைபவம், பத்தாம் நாள் த்வாதச ஆராதனை, வெட்டிவேர் தேருடன் முடிவடையும். பின்னர் பத்துநாள் விடையாற்றி உத்சவம்.  உத்ஸவ துவக்கம்  செல்வர் புஷ்ப பல்லக்கு, அடுத்த நாள் அங்குரார்ப்பணம் - சேனை முதலியார் புறப்பாடு - உத்சவ முதல் நாள் கொடியேற்றம்.



Today 16.6.2024  is   Angurarpanam of Aani  Brahmothsavam for Sri Thelliya Singa  Perumal and from tomorrow on there would be grand 10 day Brahmothsavam.

சேனை (பெயர்ச் சொல்)  : =  படை - பண்டைய காலத்தில் பல படைகள் ஒன்றிணைந்தது சேனையாகும். சேனை என்ற சொல்லுக்கு அடிச்சொல்  சேர்தல்,  கூடுதல் என்பதாகவும் கொள்ளலாம்.  சேனை என்பது பலர் சேர்ந்த கூட்டம்  அல்லது பிற பொருளிற் பல எண்ணிக்கை என்றும் கொள்ளலாம்.  போர்தனை வெல்ல பெரிய சேனையும், ஆயுதங்களும், சிறந்த சேனாபதியும் அதி அவசியம்.



சேனைத்தலைவர் (சேனைக்குடையார், சேனையார், சேனை முதலியார், சேனைக்குடியர்,  சேனை குல வேளாளர்) என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்துள்ளதாக அறிகிறோம்.    சேனைத்தலைவர் - ஒரு சிறந்த போராளியாக, மதி வியூகம் அமைக்க தெரிந்த படைத்தலைவர் - மன்னனது சபையில் முக்கிய ஆலோசகர். தவிர  இப்பதவி வகிப்போர் -  நிலச்சுவான்தார்களாக,  பண்ணையார்களாக, ஆயுதம் செய்யும் கலை அறிந்தவர்களாக, வணிகர்களாக இருந்துள்ளனர்.  பாண்டியர் காலத்தில் இவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதாக சில குறிப்பேடுகள் இயம்புகின்றன. 

படையின் எண்ணிக்கையை விட,  போராளிகளின் குணமாக உற்சாகம் இருக்குமேயானால், அதுவே நிச்சயம் வெற்றியின் அடையாளம் ஆகும். அவ்வாறு ஊக்கப்படுத்தி, சரியான உத்திகளை தரும் பொறுப்பில் இருப்பவர் படை தளபதி.  மகாபாரதப் போர் 18 நாட்கள் நடைபெற்றது. அதில் கவுரவர்கள் சார்பில் தலைமையேற்ற நான்கு பேரை முன்னிலைப்படுத்தி நான்கு பருவங்கள் பிரிக்கப்பட்டன. மகாபாரதத்தில் அவை பீஷ்ம பருவம், துரோண பருவம், கர்ண பருவம், சல்லிய பருவம். பீஷ்மர் முதல் 10 நாட்களும், துரோணர் 5 நாட்களும், கர்ணன் 2 நாட்களும், சல்லியன் ஒரு நாளும் தலைமையேற்றனர். கௌரவர் பக்கம் பதினொரு அக்ஷௌஹிணி சேனை இருந்தது. பாண்டவர்களிடமோ ஏழு அக்ஷௌஹிணி சேனை மட்டுமே இருந்தது.  21870 ரதங்கள், 21870 யானைகள், 65610 குதிரைகள், 109350 காலாட்படையினர் கொண்டது ஒரு அக்ஷௌஹிணி.   திருஷ்டத்யும்னன் எனும் இணையற்ற போர் வீரன் - பாஞ்சால நாட்டின் மன்னனான துருபதனுக்குப் மகனானவன்,   குருச்சேத்திரப் போரின்போது பாண்டவர்களுடைய தலைமைப் படைத்தலைவனாகப் வெற்றிக்கு காரணமானவன்.

நமக்கு போரோ, வணிகமோ, பிற பொருட்செல்வமோ முக்கியமல்ல - எம்பெருமான் மட்டுமே முக்கியம். அவர்தம் திருவீதி புறப்பாடுகளை முக்கியமாக உத்சவ புறப்பாடுகளை  அதிலும் அதி முக்கியமாக - ப்ரஹ்மோத்சவ வைபவங்களை விரும்பி எம்பெருமானை சேவித்து அருள் பெறுவோம்.  திவ்யதேசங்களில், ப்ரஹ்மோத்சவத்திலே - முதல் புறப்பாடு - அங்குரார்ப்பணம் தான் - அன்று எம்பெருமான் புறப்பாடு கண்டருள மாட்டார் .. ..  நம் சம்பிரதாய ஆசார்யர் சேனை முதலியார் எனும் விஷ்வக்சேனருக்குத்தான் புறப்பாடு !!

திவ்ய தம்பதிகளின் ஸேநாதிபதியானவரும், ‘யஸ்யத்விரத வக்ராத்யா .. .. ..  விக்னம் நிக்நந்தி விஷ்வக்ஸேனம் தாமஸ்ரயே'  என்று ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ச்லோகத்தில், “நம் விக்நங்களை (தடைகளை / கஷ்டங்களை)  விலக்கிக் கொடுப்பவரான விஷ்வக்ஸேநரை ஆஸ்ரயிக்கிறேன்” என்று வணங்கப்படும் ஸேனை முதல்வரை வணங்கி நம் கவலைகள் தீர்வோம்.  

 यस्य द्विरदवक्त्राद्याः पारिषद्याः परः शतम् ।

विघ्नं निघ्नन्ति सततं विष्वक्सेनं तमाश्रये ॥ २॥

yasya dviradavaktrādyā pāriadyā para śatam .

vighna nighnanti satata vivaksena tamāśraye   

I  bow obeisance and worship the one by whose quick commands function the entire Universe right  from the Nityasuris .. .. I pray  the one who always removes obstacles and  impediments (in performing ones duties) - I bow to such a one â Vishwaksena.

நமது ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது; பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள் யோகதசையில் வகுளாபரணருக்குச் சீடரானார். ரஹஸ்யார்த்தங்களை தங்கள் சிஷ்யர்களுக்கு உபதேசிக்கு முன்பு அந்த சிஷ்யர்கள், தங்கள் க்ருபைக்குப் பாத்ரமானவர்களா என்று பரிசீலித்து, தங்கள் மனம் நோகாதவண்ணம் , அதே சமயம், தங்கள் மனம் உகக்குமாறு தங்களைப் பின்பற்றுவார்கள் என்று உறுதி செய்து கொண்ட பிறகே உபதேசம் செய்வார்கள். இது ஓராண் வழி ஆசார்யர் சிஷ்யர் என வாழையடி வாழையாக வந்த மரபு. 

எம்பெருமான், பெரிய பிராட்டி தாயாரை தொடர்ந்து நம் ஸத்ஸம்பிரதாயத்தில் ஆசார்ய பரம்பரையில் மூன்றாவதாக இருப்பவர் சேனை முதலியார் எனப்படும் விஷ்வக்சேநர். இவர் எம்பெருமானின் படைகளுக்கு தலைவராக இருக்கிறார். ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவர்கள் அனைவரையும் அந்த அந்த செயல்களில் நியமிப்பவராக உள்ளார்.    இவரே நித்ய சூரிகளில் ஒருவராக, ஸேநாதிபதியாக, எம்பெருமானின் அதீநத்திற்குட்பட்ட நித்யவிபூதியையும், லீலாவிபூதியையும் தன் மேற்பார்வையில் பார்த்துக்கொள்பவராக இருக்கிறார்.  ஸேனை முதல்வர், ஸேநாதிபதி, வேத்ரதரர், வேத்ரஹஸ்தர் என்று பல திருநாமங்கள் கொண்டவர். சூத்ரவதி என்று இவருடைய திவ்ய மஹிஷியின் திருநாமம். எம்பெருமானின் சேஷ  ப்ரசாதத்தை முதலில் கொள்பவராதலால், இவருக்கு சேஷாஸனர்  என்ற திருநாமமும் உண்டு.  விஷ்வக்சேனர் அவதரித்த திருநக்ஷத்திரம்: ஐப்பசி, பூராடம்;  இவர் அருளிய சாஸ்திரம்: விஷ்வக்ஸேன ஸம்ஹிதை. 

அங்குரார்ப்பணத்தன்று துளசி செடி அல்லது நல்ல மரங்கள் அடியில் இருந்து  அடிமண் சேகரிக்கப்பட்டு,  பாலிகையில் நவதானியங்கள் சேர்த்து,   - சந்நிதி யாகசாலை - தேவதைகள் ஆஹ்வாஹனம் நடைபெறுகிறது.  திருவல்லிக்கேணியில் சேனைமுதலியார் புறப்பாடு கண்டருளி,  ஸ்ரீபேயாழ்வார் சன்னதியில் புற்று மணல் வைபவம் திருக்கோவில் பட்டாச்சார்யர்கள் வெள்ளி மண்வெட்டி கொண்டு மண் சேகரிக்கப்பட்டு, திருக்கோவில் கைங்கர்யபரர்கள் யாகசாலைக்கு ஏளப்பண்ணி கொண்டு வருகிறார்கள்.

 நாளை முதல் (from 17.6.2024)  திருவல்லிக்கேணியில் ஸ்ரீஅழகிய சிங்கருக்கு ஆனி ப்ரஹ்மோத்சவம் துவங்குகிறது.  இன்று மாலை அங்குரார்ப்பண புறப்பாட்டில் ஸ்ரீ சேனைமுதலியார் எழுந்து அருளிய போது எடுக்கப்பட்ட சில படங்கள். 

On Angurarpanam day today, this evening,   Senai Muthaliyar, had purappadu  and at Peyalwar sannathi rituals were  conducted to collect mirtigai [sacred earth] for construction of the yagasalai.

 
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
16.6.2024