நரசிங்கமதாய உருவே !
திருவல்லிக்கேணியில் நடைபெற்று வரும் ஆனி ப்ரஹ்மோத்சவத்திலே இன்று 28/6/2023
இரண்டாம் நாள். காலை சேஷ வாஹனம்.
மாலை சிம்ஹ வாஹனம் ! - ஸ்ரீநரசிம்மனுக்கே சிம்ம வாகனமா !!
யோகோ
யோகவிதாம் நேதா பிரதான புருஷேஸ்வரஹ
நாரஸிம்ஹ வபுஹ ஸ்ரீ மான் கேசவ புருஷோத்தம
எம்பெருமான் நாரணன் எத்தகையவன் ? - பக்தனுடைய பயத்தைப் போக்க அவன் விரும்பிய காலத்திலே திவ்ய நரசிம்ஹ உருவத்தைக் கொண்டவன் .. .. ஒன்றுக்கு ஓன்று முரண்பட்ட வடிவங்களைச் சேர்த்துக் கொண்ட போதும் அழகு மிக்க மநோஹரமான வடிவை யுடையவன் - அழகிய கேசாதிபாசங்களை உடையவன் - திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கன்.
எல்லா ஜீவராசிகளினதும் இருதயத்தில் ஈஷ்வரன் நியமித்து நடத்துபவனாய் இருக்கிறான். யோகத்தினால் (சித்தத்தினால்) அறியப் படுபவர். யோகவித்தைகளியின் தலைவர், இயற்கையின் மாயை, அதனுள் வாழும் ஜீவராசிகளின் தலைவர். திருமகளை திருமார்பில் கொண்டவர். நரனும் சிங்கமும் கலந்த தெய்வீக உருவத்தை பக்தனுடைய துயர் தீர்ப்பதற்காக,அவன் பயத்தை போக்குவதற்காக அவன் வேண்டிய போது எடுத்தவர். .எந்த நேரத்திலும் அடியார்களின் விண்ணப்பத்திற்கிணங்க உதித்து அருள் புரியும் நம் திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கனை தொழுவோம்.
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
28.6.2023
No comments:
Post a Comment