To search this blog

Monday, June 19, 2023

How to Name it !?! - "தேனித்து இருமின்"

Life in a divyadesam is enthralling -  divyaprabantham line written on a private auto attracted me and forms the nucleus of today’s post !!  "தேனித்து இருமின்"  -  தேனித்து என்ற வார்த்தையை கேள்வியுற்றுளீர்களா !  - அர்த்தம் என்ன தெரியுமா ?

 


"தேனித்து இருமின்"  -  தேனிப்பு  என்றால் தியானம் செய்தல் என கொள்ளலாம்.  தேன் என்பது இனிப்பு, தேனித்து இருப்போருக்கு மகிழ்வு;  தேறல், தெளிவு; என எல்லா நன்மையையும் வரும்.  தேனித்து இருங்கோள் -  மகிழ்ச்சி கொண்டிருங்கள். 

உலகில் வழங்கப்படும் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு குறிப்பட்ட பண்பு இருப்பதாக பண்டைக்காலம் முதலே மக்கள் நம்பி வந்துள்ளனர். அடைய விரும்பும் பண்புகளுக்கு ஏற்ப, பெயர்களை வைத்துக் கொள்ளும் பழக்கம் மக்களிடம் இன்றும் இருந்து வருகிறது. . விரும்பிப் போற்றப்படுகின்ற ஒருவரது பெயரை, மற்றொருவருக்கு வைப்பதோடு, வழங்கப்படுவதால், அப் பெயருக்கு உரிய பண்பைத் தாமும் பெறலாம் என்று மக்கள் கருதுகின்றனர். நம்மால் விரும்பப்படுகின்ற நமது முன்னோர் பெயரையே, பின்னர் வரும் குழந்தைகளுக்கு வைப்பதும்   வழக்கமாக உள்ளது.

 


Name, what is in a Name ?  A rose by any other name would still be as fragrant as it is – one’s own name is perhaps the sweetest music to ears !    In the Shankar directed Kamal starrere ‘Indian’ [Bharatheeyudu] -  amidst a crowd in front of Regional Transport Office, Goundamani will at first sight tell  Crazy Mohan,  his name as   Parthasarathi – indicating that it is so typical a brahminical name !! –  Of course, there are many  Parthasarathis’ from Triplicane,  Ranganathans  and Ranganayakis     from Thiruvarangam;  Perundevis from Kanchipuram !! 

In 1986 Isaignani Illayaraja released  an instrumental Indian-Western fusion album – ‘How to Name it!”, his  first fusion music album.  It had  musical movements  dedicated to Tyagaraja,   and the Western baroque music composer, J. S. Bach   

Mankind’s desire know no limits…. You study to earn and become rich; you aspire to get married ~ have kids – bring them up – save or keep wealth that would last for few more generations and in between you keep re-revising your earlier targets as ambitions [unbridled wishes] keep growing.  When a child is born or much earlier to that, parents start thinking of naming the child.  The Naming ceremony is celebrated on different days in different fashion ~ many have religious significance.   In Hinduism, naming is considered sacred ~ called Namakaranam, it is an elaborate ceremony.  It is usually done on the 10th day.  For orthodox -  the mother and child get more purified after the naming ceremony. 

When in the midst of numerous myriads, there is need for identity.   So, primarily the ‘name’ is a word or term for identification.   A Name can  identify a class or category of things, or a single thing, either uniquely, or within a given context.   In mankind,  we try to have unique and identifiable names though some are more oft repeated than others – so you find similar names for persons hailing from a particular place.  In India, as also in many other countries, there is the tradition of naming after Gods and valiant heroes. 

In Dan Brown’s super thriller ‘Origin’ -  the password is found to be the final stanza of "Four Zoas": "The dark Religions are departed & sweet science reigns". With the word 'et' replacing the '&' symbol,  makes 47 letters !!. 

 



உலகத்தில் பலர் தம்மக்களுக்கு இந்திரனே, சந்திரனே  என்றெல்லாம் பெயர்களை இடுவது –  அர்த்தமற்றது.  நாலுகாசு கிடைக்கும், நல்ல ஆடைகிடைக்கும், ஒரு கட்டுக்கற்றை கிடைக்கும் என அல்ப விஷயங்களில் உண்டான விருப்பத்தினாலாம்.  இடும்பெயர்கள் (ஸ்வரூபத்துக்குத்) தீங்கு விளைக்கத்தக்கவை; ஆதலால் அவற்றை ஒழித்து  அப்பிள்ளைகளுக்கு எம்பெருமான் திருநாமங்களை இட்டால், அவர்களைப் பெற்ற தாய் தந்தையர் நல்லது பெறுவார் என்கிறார் பெரியாழ்வார்.  விஷ்ணுசித்தன் என்ற பெரியாழ்வார் - தமது பெரியாழ்வார் திருமொழியில் - கண்ணன் பிறந்தது முதல், தவழ்ந்தது, விளையாடியது, கண்ணனுக்கு அம்புலியைக்காட்டி சோறு ஊட்டியது, நீராடியது, சிறந்த நறுமண  பூக்களை சூடிக்கொண்டது என ஒவ்வொரு பருவமாய் சீராட்டி படி வருகையில் - குழந்தைகளுக்கு, அழகான நமக்கு அருள் தரும் ஸ்ரீமன் நாராயணனின் பெயரை சூட்டி, அவர்களை பலவாறு கூப்பிட்டு மகிழ்தல் எவ்வளவு சிறப்பானது என விவரிக்கிறார். 

ஆழ்வார் அருள்வாக்கு : மூடர்களே! பணத்திற்கும், உடைக்கும், தான்யத்திற்கும் ஆசைப்பட்டு, உங்கள் குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் பெயர்களை இடாதீர்கள். கேசவனின் திருநாமங்களயே பிள்ளைகளுக்கு பெயர்களாக இட்டு இன்புற்றிருங்கள்.   "கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ"  - செல்லக்குழந்தையை -  செங்கணெடுமால் சிரீதரா,  வானுடை மாதவா, குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்றெல்லாம்  செம்பெருந் தாமரைக் கண்ணன் பேரிட்டழைத்தக்கால் ~ அத்தகைய மகனை பெற்றோர் நரகம் புக மாட்டார்கள். 

காசும் கறையுடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்

ஆசையினால்  அங் கவத்தப் பேரிடும் ஆதர்காள்

கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ

நாயகன் நாரணன் தம்  அன்னை  நரகம் புகாள்.

 

At Chennai there were rains right from the morning, but rainfall  relented in the evening and at Thiruvallikkeni divyadesam there was siriya madaveethi & kulakkarai purappadu of Sri Parthasarathi Emperuman  being day 2 of Kodai Uthsavam.  Here are some photos of the day. 


The auto that provided the spark is owned by Sri Pakshimannar Srikkanth who is doing wondrous kainkaryam for our sampradhayam and to the society !

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli  Srinivasan  Sampathkumar
19.06.2023.
  










No comments:

Post a Comment