To search this blog

Monday, June 5, 2023

new Sri Sadagopa samarpanai by Challani to Sri Parthasarathi Emperuman 2023

ஸ்ரீமன் நாரணனே நமக்கு என்றென்றும் அழியாத நிதி. அவன் திருவடி நீழலில் உள்ளோர்க்கு எந்த தீங்கும் நடக்காது என்பது திண்ணம்.  எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் பால் ஈர்க்கப்பட்ட ஸ்ரீவைணவர்கள் அனுதினமும் அனுசந்திப்பது 'திருப்பல்லாண்டு'.    



ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் எல்லாரையும் விட உயர்ந்தவன், அனைத்துக் கல்யாண குணங்களையும் உடையவன்,  நம் மனதில் சூழ்ந்துள்ள அஞ்ஞானத்தை நீக்கி, மெய்ஞானத்தைக் கொடுப்பவன் எவனோ அவனே சிறப்பான கடவுள் - அவனே நம் எம்பெருமான்.    நித்யசூரிகள்  பரமபதத்தில் வீற்றிருக்கும் எம்பெருமானை ஒரு நொடியும் பிரியாமல், அவனுக்குத் தொண்டுகள் செய்பவர்கள்.   அநந்தன் (ஆதிசேஷன்), கருடன், விஸ்வக்சேனர் போன்றோர்  நித்யசூரிகள்.   .  பகவானை   பற்றிய மறதி என்ற ஒன்றே இல்லாதவர்கள் நித்யசூரிகள்.    நித்யசூரிகளுக்குத் தலைவனாய் இருக்கும் எம்பெருமானை "அயர்வறும் அமரர்கள் அதிபதி" என்று காட்டுகிறார்.  திருவாய்மொழி முதல் பதிகத்தின்  முதல் பாசுரத்தில் ஸ்வாமி நம்மாழ்வார்.

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்

மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்

துயரறு சுடர் அடி தொழுதெழென் மனனே. 

அடியார்களுடைய துக்கங்களையெல்லாம் போக்கி அதனால் ஒளிபெற்று விளங்குகின்ற திருவடி   கொண்டவனான,  மஹோபாரங்களைத் தமக்குச் செய்தருளின எம்பெருமானுடைய திருவடிகளைத் தொழுது மேன்மை பெறும்படியாக ஆழ்வார் தமது நெஞ்சிற்கு உபதேசிக்கிறார். 

நம் ஸத்ஸம்ப்ரதாயத்தில் திருவடிக்கு சிறப்பு .. ..தந்தையின் வார்த்தைகளைக் காப்பாற்ற, மரவுரி தரித்து வனவாசம் சென்றார் ஸ்ரீராமபிரான். கங்கை நதியின் கரையை அடைந்த ராமபிரானை வரவேற்ற குகனுடன் ஸ்ரீராமர் தங்கி இருந்தபோது,  . தசரதன், தான் கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்களைக் காப்பதற்காகத் தன் உயிரினும் மேலான ராமனை கானகம் அனுப்பியத்தை அறிந்து மனம் நொந்த  பரதன், தன் தமையன் வனம் சென்றதற்குத் தானும் காரணமாக ஆகிவிட்டதை எண்ணி வருந்தி  அயோத்தியை ஆள்வதற்கு தமையனுக்கே உரிமை உள்ளது என்றும், தனக்கு அரியாசனம் ஏற்க விருப்பம் இல்லை என்றும் கூறி, தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வந்தான். 

இராமபிரானை நாட்டுக்கு திரும்புமாறு வேண்டினான்.  பரதனின் வேண்டுகோளை மறுத்த ராமபிரான், பரதன் சொல்வதுபோல் தான் அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், தந்தைக்குக் கொடுத்த வாக்கை மீறியதுபோல் ஆகும் என்று மறுத்துவிட்டார். அதே நேரம், பரதனுக்கும் நாட்டை ஆள்வதில் விருப்பம் இல்லை.  பரதன் ராமபிரானின் பாதுகைகளைப் பெற்றான். தன் தலை மீது வைத்து அயோத்தி எல்லையில் இருந்த நந்திகிராமத்துக்கு வந்தான். ராமன் துறந்த திருமுடியை சிம்மாசனத்தின் மீது வைத்து   பட்டாபிஷேகம் செய்து, ராமபிரானின் சேவகனாக ஆட்சி செய்தான்.  

மேலும் எம்பெருமானுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்யும் கருடாழ்வார் பெரிய திருவடி என சிறப்பிக்கப்படுகிறார். ஸ்ரீஅனுமனை சிறிய திருவடி என்றும் நாம் வணங்குகிறோம்.  





நமது ஸ்ரீவைணவ தலங்களில் பெருமாள் தீர்த்தமும், சடாரியும் பெற்றுக்கொள்தல் விசேஷம். ஸ்வாமி  நம்மாழ்வார்  எம்பெருமான் திருவடிகளை அடைந்தவர் அவரே  ஸ்ரீமன் நாரணனின்  பாதத்தை நம்மிடம் சேர்பித்து நம்மை உய்விக்கிறார் என்று நம்பிக்கை. நம்மாழ்வாருக்கு  சடகோபன் என்று பெயர்.  பெருமாள் திருவடி நிலையான சடாரி ஸ்ரீசடகோபம் .  ஸ்ரீ சடகோபம் - சுருக்கமாக சடாரி - எம்பெருமானின் திருப்பாதங்களாக சுவாமி நம்மாழ்வார்.    நம்மாழ்வாரையே பெருமாளின் திருப்பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது. 



T Nagar is a rich market – there are so many garment shops selling high quality silk sarees and more and there are many Jewellery marts –  Challani Jewellers is a landmark shop.    Challani Jewellery Mart is a unit of  Jayantilal Challani  Group of  companies which has its captivating command in the business over 50 years, beginning with gold trading. The productive pace of expansion has brought the firm to attain a prosperous reach in diamond and gold jewellery and innumerable varieties of inimitable stones. 

They have done some kainkaryam to our Sri Parthasarathi temple, most famous among these being the unique Pandiyan kondai.  Made of 3 kg Gold studded with 5645 rosecut diamonds, 2761 Ruby stones, 36 Blue sapphire, 3 big Green maragatham – it is a glittering one, adorning Sri Parthasarathi Emperuman on important occasions.    Understand that this is the wish of Sri Rishub Challani, fulfilled by his father Shri Jayantilal Challani and his other sons  Sri Goutham Challani and Sri.Sripal Challani.   Really a jewel in the crown of our Emperuman Sri Parthasarathi. 






Now the Challani family is  dedicating a 2kg Golden sadari for Sri Parthasarathi Emperuman.  The new samarpanai  is on display now at Sri Athangi swami thirumaligai in front of the temple (house next to Geethacharyan house) in  South Mada Street.  Devotees can have darshan of this ornate Sri Sadagopam tomorrow ie., 6.6.2023 also.

 
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
5.6.2023    

No comments:

Post a Comment