A chuppah (huppah, chipe, chupah, or chuppa), is a canopy under which a Jewish couple stand during their wedding ceremony. It consists of a cloth or sheet, sometimes a tallit, stretched or supported over four poles, or sometimes manually held up by attendants to the ceremony. A chuppah symbolizes the home that the couple will build together. In a more general sense, chuppah refers to the method by which nesuin, the second stage of a Jewish marriage, is accomplished.
பூக்கள் அழகானவை; அழகானவை; நறுமணம் தர வல்லன ! எம்பெருமானுக்கு நல்ல மணம் தரும் பூக்களை மாலையாக கோர்த்து சமர்பிக்கின்றனர். பெரியாழ்வார் தமது பிரபந்தத்தில் ஆநிரை மேய்க்கும் கண்ணபிரானை பூச்சூட அழைக்கிறார் - கானகமெல்லாம் திரிந்த கரிய திருமேனி வாட திரியும் தேனிலினிய பிரானுக்கு -செண்பகப்பூ, மல்லிகைப்பூ, பச்சை தமனகம், மரு, தமனகம், செங்கழுநீர்ப்பூ, புன்னைப்பூ, குருக்கத்திப்பூ, இருவாட்சிப்பூ, கருமுகைப்பூ - என பற்பல மலர்களை ஆயர்கோனுக்கு பட்டர்பிரான் சமர்பிக்கின்றார்.
Flowers are beautiful . .. .. they
pervade fragrance and happiness. Imagine walking in a beautiful garden -
sweet scent would waft through the air. In a Temple they
pervade divinity. The blooming and fragrance is perhaps part of a
strategy that helps flowering plants reproduce themselves and spread their species.
Plants flower to produce seeds that can go on to become new plants. To
make a viable seed, pollen from one part of the flower must fertilize the
ovules in another part of the flower. Some plants can self-pollinate, using
their own pollen to fertilize the ovule. Others require pollen from another
plant of the same species – that’s called cross-pollination.
ஸ்ரீமன் நாராயணனுக்கு மணம் தரும் நன்மலர்கள் மட்டுமே சமர்பிக்கப்படுகின்றன. நாற்றம் ~ தமிழை சரியாக அறியாதவர்கள் முகம் சுளிக்கக்கூடும் ! இச்சொல் தற்காலத்தில் கெட்ட வாசனையை குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் வார்த்தை. கழுத்தில் அணியக்கூடிய மலர்களால் ஆன தொகுப்பும், மாலை எனப்படும்.
A canopy is an overhead roof or simply a structure over which a fabric or metal covering is attached, able to provide shade or shelter from weather conditions such as sun, hail, snow and rain. A canopy can also be a tent, generally without a floor. The word comes from the ancient Greek konópeion, (cover to keep insects off). Architectural canopies include projections giving protection from the weather, or merely decoration. Such canopies are supported by the building to which they are attached and often also by a ground mounting provided by not less than two stanchions, or upright support posts.
கூராளம் என திருக்கோவில்களில் அழைக்கப்படுவது - விதானம்; துணியினால் ஆன மேற்கூரை! அனைத்து திருக்கோவில்களில் பெருமாள் எழுந்தருளியிருக்கும் இடத்தின் மேல் விதானம் கட்டப்பட்டிருக்கும்; பல்லக்கு, தேர் ஆகியவற்றில் வீதி உலா வரும்போது நான்கு கம்பங்கள் கொண்ட அமைப்பில் மேலே அலங்காரமான பட்டுத் துணி - கட்டியிருக்கும்.
திருவல்லிக்கேணி ப்ரஹ்மோத்சவத்தில் தினமும் மாலை எம்பெருமான் வாகன மண்டபத்திற்கு எழுந்தருளும் முன்னர் 'பத்தி உலாவுதல்' நடைபெறுகிறது. எம்பெருமான் அழகிய அணிகலங்களும், நறுமணம் கமழும் மலர்மாலைகளும் அணிந்து எழுந்தருள்வார். ஊஞ்சல், மற்றும் ஒய்யாளி உண்டு. திருவல்லிக்கேணி ஊஞ்சல் மண்டபத்துக்கு மேலே, மலர் கூராளம் அழகாக அமைக்கப்படுகிறது.
ஸ்ரீபார்த்தசாரதி சித்திரை ப்ரஹ்மோத்சவத்தின் எட்டாம் நாள் பத்தி உலா - புஷ்ப கூராளம், பெருமாள், விசிறிபாகை, சில படங்கள் இங்கே. இந்த புஷ்ப கைங்கர்யத்தில் திருமதி வத்சலாசேஷன் மாமி குழுவினர் ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர். சிறப்பாக உள்ளது.
For us life is simple .. .. flowers are beautiful and fragrant flowers are submitted to Sriman Narayana – there is canopy made of flowers – placed over the oonjal for Emperumam. Here are some photos of pushpa kuralam u at Thiruvallikkeni for Sri Parthasarathi Emperuman as also Perumal with visiripagai on kuthirai vahana pathi ula – taken on 23.4.2022.
No comments:
Post a Comment