To search this blog

Wednesday, August 12, 2020

தடவரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி

2020 has been different and the humanity is made to lament on its feet by the spread of killer virus Corona.  India's Covid-19 tally crossed 23 lakh on Wednesday, with a single-day increase of 60,963 cases. The death toll climbed to 46,091 with 834 new fatalities being reported in the last 24 hours while the recoveries surged to 16,39,599, according to the Union health ministry data.  There was a time when it was Mumbai, Delhi, Chennai – but now the count of people affected is coming from many other cities, districts and States. The whole world is praying for its relenting and looking forward to vaccines. 

தடவரைவாய் மிளிர்ந்து  மின்னும் தவள நெடுங்கொடி :  பெரியதொரு மலையின் உச்சியிலே  நிர்மலமாக விளங்குகின்ற ஒரு கொடி எல்லார்க்கும் காண எளிதாயிருக்குமாறுபோல !

Sputnik 1 was the first artificial Earth satellite. The Soviet Union launched it into an elliptical low Earth orbit on 4 Oct 1957. It orbited for three weeks before its batteries died and then silently for two more months before it fell back into the atmosphere. The name "Sputnik" is Russian for spouse/traveling companion or satellite when interpreted in an astronomical context. Korabl-Sputnik 5 was a Soviet spacecraft which was launched in 1961, as part of the Vostok programme. It was the last test flight of the Vostok spacecraft design prior the first manned flight, Vostok 1. It carried the mannequin Ivan Ivanovich, a dog named Zvezdochka,  television cameras and scientific apparatus.


12.12.2019 அன்று திருக்கார்த்திகை தீபம்.  அவ்வமயம் உலகம் ஆரோக்கியமாய் இருந்தது.    திருக்கார்த்திகை தீபத்தன்று திருக்கோவில், சுற்றுக்கோவில் சன்னதிகள் அனைத்திலும் திருவிளக்கு ஏற்றப்படுகின்றது.  கார்த்திகை விளக்கீடு’ என இலக்கியங்கள் போற்றும் தீபத்திருவிழாவில், பனைமரங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு.  கொடுமைகளை விரட்ட திருக்கோவில் முன்பு புறப்பாட்டின் போது பனைமர சொக்கப்பனை கொளுத்தப்படுகின்றது.



At Thiruvallikkeni divyadesam on 12.12.2019 there was grand purappadu of Sri Parthasarathi ~ it was Thirukarthigai deepam at Srivaishnava temples.  Life was good for humans those time – the Covid 19 though had incubated perhaps at Wuhan was not known to the rest of the World – whether Chinese contained it or let it go and how much they were part of this would remain unknown to the ordinary mortals.

Nearly nine months into the Covid-19 outbreak, Russia became the first country to grant regulatory approval to a Covid-19 vaccine, dubbed “Sputnik V” (a reference to the world’s first satellite), for civilian use, President Vladimir Putin announced on Tuesday, describing it as “a very important step for the world”. Putin said the vaccine works “quite effectively” and “forms a stable immunity” against Covid-19. Putin said that one of his daughters had tested the vaccine on herself and she was feeling well. Humanity should appreciate Putin and Russia for that test – instead Scientists reportedly have poured scorn, perhaps crying over the fact that Russians have announced before others could react.

In a race to find a vaccine that will protect people from the novel coronavirus, six candidates from around the world are now in phase three of human trials. Recent reports from Russia claim that one of their candidates has completed safety and efficacy testing in human trials successfully. Russia will reportedly begin producing the vaccine soon and already has plans for a massive, country-wide vaccine drive.  Russia currently has two COVID-19 vaccine candidates in the race – one, a vaccine being developed by the Vektor State Research Center of Virology and Biotechnology. The second is a vaccine being produced by the Gamaleya Scientific Research Institute of Epidemiology and Microbiology along with the Russian Defence Ministry.

The good news is -  first batch of the Russian vaccine against COVID-19 is expected to be released within two weeks, Health Minister Mikhail Murashko said today.  On Tuesday, the Russian Health Ministry registered the first coronavirus vaccine in the world. The vaccine, named Sputnik V, was developed jointly by the Gamaleya Research Institute and the Russian Defense Ministry.  Russia’s vaccine is based on the DNA of a SARS-CoV-2 type adenovirus, a common cold virus. The vaccine uses the weakened virus to deliver small parts of a pathogen and stimulate an immune response. Speaking to Sputnik News, Alexander Gintsburg, director of the Gamaleya National Research Centre, maintained that the coronavirus particles in the vaccine cannot harm the body as they cannot multiply.  We fervently hope that this vaccine effectively stalls Corona and the World limps back to normalcy.




தடவரைவாய்   மிளிர்ந்துமின்னும்   தவள  நெடுங்கொடிபோல்*

சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும்  என் சோதிநம்பீ*

வடதடமும் வைகுந்தமும்   மதிள்   துவராபதியும்

இடவகைகள் இகழ்ந்திட்டு  என்பால்   இடவகை   கொண்டனையே.

              என பாசுரமுரைக்கிறார் நம் விஷ்ணுசித்தன் தம் பெரியாழ்வார் திருமொழியில்.

 

மலைகள்  உயரமானவை ! மக்களை உச்சியை பார்த்து ஈர்க்கவல்லன.  அத்தகைய நெடிய உயர்ந்த பெரிய பர்வதத்தில்  பட்டொளி வீசி திகழும்  பரிசுத்தமான பெரியதொரு கொடிபோல, மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய்  எனது ஹ்ருதயத்தினுள்  விளங்கி நின்றுள்ள  ஒளியினால் நிரம்பியவனே!   வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும்,   ஸ்ரீவைகுந்தமும், பெருமதில்களையுடைய  த்வாரகையும் ஆகிற தனக்கு உவந்த இடங்களை யெல்லாம் இகழ்த்திவிட்டு என்னிடத்தில் மிக்க வாத்சல்யத்துடன் வந்து இடங்கொண்டவனே !  என பெருமாளை விளித்து ஆனந்திக்கிறார் பக்தியில் மூழ்கி திளைக்கும் நம் பெரியாழ்வார்.   இந்த உலகம் இதுகாறும் இந்த கொடிய தீநுண்மியில் பட்ட கஷ்டம் எல்லாம் விலகி, மறு பொலிவு பெற எம்பெருமானை வேண்டி வணங்குவோம்.

 



திருக்கார்த்திகை சொக்கப்பனை தீ  போல துன்பங்கள் ஓடட்டும் ! விரைவில் திருக்கோவில்கள் திறக்கப்படட்டும்.  மக்கள் அனைவரின் வாழ்விலும் நன்மைகள் விளைந்து, நல்லனவும் இனியனவும் நடக்கட்டும். 

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளே உன் பாதமே கதி 

Here are photos of chokkapanai Thirukarthigai deepa purappadu of Sri Parthasarathi Perumal at Thiruvallikkeni on 12.12.2019. 

~adiyen Srinivasa dhasan [Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]

12th Aug 2020.

பாசுர விளக்கம் : கட்டற்ற களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.





 

No comments:

Post a Comment