To search this blog

Wednesday, April 10, 2024

ஸ்ரீ ராம நவமி உத்சவம் - Ugadi Subhakankshalu 2024

ஸ்ரீ ராம நவமி உத்சவம் -  Ugadi Subhakankshalu  2024





“Ugadi Subhakankshalu” -  Today (9.4.2024)  is Ugadi Panchanga Sravanam  – birth of Telugu new year  when the panchangam is read in Temples  . .. .. today is also day 1 of    Sree Rama Navami Uthsavam at Thiruvallikkeni  & other divyadesangal.  

Azadirachta indica, also known as Neem, is a tree in the mahogany family Meliaceae. It is one of two species in the genus Azadirachta, and is native to India, and parts of Asia, growing in tropical and semi-tropical regions. Neem tree is the official tree of the Sindh Province and is very common in all cities of Sindh.  The neem tree is noted for its drought resistance.  




Yugādi, is the New Year's Day for the people of the Deccan region of India. The name Yugadi or Ugadi is derived from the Sanskrit words yuga (age) and ādi (beginning): "the beginning of a new age". In Temples on the occasion of Ugadi ‘panchangam’ will be read.  It is also celebrated as  Gudi Padwa, Ugadi and Cheti Chand inv arious places.  Gudi Padwa is celebrated by Marathi speaking people; Ugadi is celebrated in Karnataka and Andhra Pradesh; . Cheti Chand is the festival of the Sindhi community.  In Maharashtra, Gudi Padwa has the legend that it on this day Lord Rama returned victorious to Ayodhya.  

In Andhra, Ugadi pachhadi is a delicacy made on the occasion and shared with all. It  is a specific mixture of six tastes – with neem buds; jaggery; green chilli/pepper; salt; tamarind; unripened mango being its ingredients.    From today on, it is  9 days of  Sree Ramanavami Uthsavam.  The Thiruvavathara Mahothsvam of Lord Rama is Sree Ramanavami.

மன்னுபுகழ்  கௌசலை  தன் மணி  வயிறு  வாய்த்த சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீ ராமபிரானின்  திருவவதார மகோத்சவம்     ஸ்ரீராம நவமி.    அனைத்து உத்தம குணங்களும் நிரம்பிய அற்புத யுக புருஷன் ஸ்ரீராமபிரான். “இராமன்” என்ற திருநாமத்திற்கு, “ஸ்வேச்சயா ரமணீய வபுர்வஹன்வா தாசரதி ராம” என்று சங்கரர் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையில் (394-வது நாமத்திற்கு) விளக்கியுள்ளார். இதன் பொருள், “மனதைக் கவரும் திவ்யமான ரூபத்தைத் தன்னிச்சையாலே எடுக்கவல்ல தசரத புத்திரனாகிய இராமன்” என்பதாகும். “இந்த புண்ணிய பாரத தேசத்தில் இமயம் முதல் குமரி முதல் எல்லா பிராந்தியங்களில், மக்கள் அனைவரும்  “மரியாதா புருஷோத்தம் ராம்” என்று இராகவனை விரும்பி அழைப்பர். இராகவன் தருமத்தின் வழியே நடந்து தருமம் காத்தவன்.  அந்த இராமபிரான் சத்யம் காக்க இப்புவியில் அவதரித்தான்.

ஒரு காலத்தில், தீவுகளுடன் கூடிய மொத்த பூமியைப் பிரஜாபதிகள் {குடிமுதல்வர்கள்} தொடங்கி பல ஜயசீலர்களும் {வெற்றியாளர்களும்} ஆண்டனர்.  சகரன் என்ற பெயரைக் கொண்டவன் அறுபதாயிரம் புத்ரர்கள் சூழப் போரிடப் புறப்பட்டு பெருங்கடலை  ஆழமாக்கினான்.  இத்தகைய மஹாத்மாக்கள் தோன்றியதும், இக்ஷ்வாகு என்ற பெயரைக் கொண்டதுமான ராஜவம்சத்திலேயே உயர்வாக மதிக்கப்படும் இந்த ராமாயணம் தோன்றியது.  தனதானியங்களில் செழித்ததும், மகிழ்ச்சி நிறைந்ததும், பெரியதுமான ஒரு மஹாஜனபதம், சரயு தீரத்தின் அருகில் கோசலம் என்ற பெயரில் அமைந்திருந்த அயோத்தி மாநகரம், இது மானவேந்திரனான  மனுவால் கட்டப்பட்டது.    புகழும்  செழிப்பும்  நிறைந்ததும், நன்கு வகுக்கப்பட்ட மஹாபதங்களை {நெடுஞ்சாலைகளைக்} கொண்டதுமான அந்த மஹாபுரி, பனிரெண்டு யோஜனைகள் நீளமும், மூன்று யோஜனைகள் அகலமும் கொண்டதாக இருந்ததாம்.   

அந்த புண்ணிய பூமியில் வசித்தவர்கள் -  அனைவரும் தர்மசீலர்களாகவும், நல்ல தற்கட்டுப்பாட்டையும், நல்ல பண்பையும், நல்ல ஒழுக்கத்தையும் கொண்டவர்களாகவும், தன்னிறைவு அடைந்தவர்களாகவும், மஹரிஷிகளைப் போன்றவர்களாகவும், மாசற்றவர்களாகவும் இருந்தனர்.  அங்கே  முழு நிறைவின்றி உணவை உண்பவனும், ஈகை குணம் இல்லாதவனும், அங்க ஆபரணங்களாலும், தோள் வளைகளாலும் அலங்கரிக்கப்படாதவனும், இதயமற்றவனுமான எவனும் அங்கே காணப்படவில்லை.  வேள்வி நெருப்புகளை மூட்டாதவனும், யஜ்ஞங்களைச் செய்யாதவனும், அற்ப வாழ்வு வாழ்பவனும், கள்வனும், முறையற்ற கலவியில் பிறந்தவனுமான எவனும் அந்த அயோத்தியில் இல்லவே இல்லை.  வேதம் பயிலும்   தியான சீலர்க கோட்பாட்டுடன் கூடிய மேன்மக்களும் தங்கள் செயல்களை வழுவறச் செய்து வந்தார்கள்.  அங்கே நாத்திகர்களோ, பொய்யர்களோ, சாத்திரங்கேளாதவர்களோ, பொறாமையுள்ளவர்களோ, சக்தியற்றவர்களோ, கல்வி கல்லாதவர்களோ ஒருவரும் காணப்படவில்லை.

அந்த தேசத்தை ஆண்ட தசரத சக்கரவர்த்தி, பல யாகங்களை சிறப்புற நடத்திட,  வேள்வி நெருப்பில்  இருந்து ஒப்பற்ற பிரகாசத்துடனும், மஹாவீரியத்துடனும், மஹாபலத்துடனும் கூடிய மஹாபூதமானவன் {யஜ்ஞ புருஷன்} வெளிப்பட்டு  சூரியனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டதும், தழலின் நாவுகளைப் போலப் பிரகாசிப்பதும், புடம்போட்ட பொன்னாலானதும், வெள்ளி மூடியால் மறைக்கப்பட்டதும்,  திவ்ய பாயஸத்தால் நிறைந்ததும், மாயாமயமானதுமான ஒரு பாத்திரத்தைத்  மன்னனுக்கு அருளினார்.  மஹீபதியின் உத்தம ஸ்திரீகள், அந்த உத்தம பாயஸத்தைப் பருகி,  விரைவில் கர்ப்பந்தரித்தனர்.  [இராமாயண காதை - திரு அருட்செல்வப்பேரரசன் எழுத்துகளில் இருந்து] 

வால்மீகி முனிவர், நாரதரிடம், மிக மிக சிறந்த  நல்லொழுக்கமுடைய மனிதன் உலகில்  உண்மையில் வாழ்கிறாரா என்ற கேள்வியுடன் பால காண்டம் துவங்குகிறது. நாரதர், இராமனின் குணநலன்கள், உடல் அமைப்புகள், இராமனின் கதையைச் சுருக்கமாக வால்மீகி முனிவருக்கு விளக்குகிறார். பின்னர் இராமகாதையை எழுதிய வால்மீகி முனிவர், தனது ஆசிரமத்தில் வாழும் சீதையின் பிள்ளைகளான லவன் மற்றும் குசனுக்கு எடுத்துரைக்கிறார்.   தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பிய நூல்களுள் ஒன்று  கம்ப ராமாயணம்.  கம்பர்,  அடிப்படையில் அறமும், சமயமும் காப்பியத்தின் பொருளாக கொண்டு இந்நூலை அமைந்துள்ளார்.  மனிதர் யாவருக்கும் பயன் தரும் ஒழுக்க முறைகளையும் பண்பாட்டினையும் குறிக்கோளினையும் ஆட்சிச் சிறப்பினையும் விளக்கும் அருமையான இலக்கியமாகத் திகழும் சிறப்புடையது கம்பராமாயணமாகும்.

Here are some photos of Sree Ramapiran on day 1 of the utsavam at Thiruvallikkeni

adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
9.4.2024
(same post of last year with photos taken this year!) 








No comments:

Post a Comment