சித்திரை 1 - குரோதி புது வருஷ பிறப்பு. இன்று மாலை மெரினா கடற்கரையில் சில நூற்றுக்கணக்கானோர்
காவடி ஏந்தியும், கால்நடையாகவும் பாத யாத்திரை.
அருகில் சென்று வினவ அவர்கள் திருவொற்றியூர் தலத்தில் இருந்து திருப்போரூருக்கு
செல்வது தெரிய வந்தது.
மஹாபலிபுரம் செல்லும் பழைய கடற்கரை சாலையில் உள்ளது முருகப்பெருமானின் திருப்போரூர் திருத்தலம். 700 வருடங்களுக்கும் பழைமையான திருத்தலம் இது. இதோ இங்கே ஓர் திருப்புகழ் பாசுரம்.
குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர
குறவர் மா மகள் ஆசை கொள் மணியே !!
ஞான குருவே, இதய குகையில் விளங்குபவனே, குமரேசனே என்றென்றும் 16 வயதான செல்வமே, ஒளியும் ஈகையும் அறமும் மறமுமான அருமை சரவண நாமத்தோடு அவதரித்தவனே உன் பக்தர்கள் அனைவரையும் காப்பாற்றுவீராக ! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!
This evening
witnessed hundreds of youth and old people walking on pilgrimage from
Thiruvotriyur to Thirupporur (on way to Mahabalipuram) – a photo of some of the
youth.
With regards – S Sampathkumar
11.4.2024
No comments:
Post a Comment