To search this blog

Thursday, April 18, 2024

Sree Rama Navami 2024 - Hanumantha vahanam

இன்று அற்புத நாள் ~ ஜகம் புகழும் ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நல்நாள்.  நன்மையளிப்பவனும், இணையற்றவனும்,  தாமரைக்கண்ணனும், பூசிக்க தக்கவனுமாகிய - இராமபிரானின் அருள் பெறாதவர் - இருந்தும், என்ன செய்தும் என்ன பயன் என வினவினாராம் தியாகய்யர்.  ஸ்ரீ ராமபிரான் முடி சூட வந்தபோது, அவரை பார்த்த அயோத்தி மக்கள் :




 

‘உய்த்தது இவ்வுலகம்’ என்பார்; ‘ஊழி காண்கிற்பாய்’ என்பார்;

‘மைந்த! நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும்’

 

~  “செய்ய முடியாத தவத்தை செய்து இப்படி ஒரு செம்மலைப் பெற்றெடுத்த தசரத மன்னனுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்,?”   என புகழ்ந்து மகிழ்ந்தனாராம் அயோத்தி மக்கள்.

Today (17th Apr 2024)  is the holy  Sree Rama Navami – the day on which Lord Sri Ramachandra murthy, the supreme avatar was born in the blessed land of  Ayodhya.  Lord Rama descended on earth for the purpose of upholding righteousness and rewarding virtue. The Greatest of  Ithihasa purana ‘Sri Ramayanam’  is the undiluted history of the Greatest Person who descended on this Universe.. .. ..   ~ and there is also the  great character – a warrior, mightily powerful, whose body was as hard as a diamond, whose speed equalled those of fastest flying eagles, who possessed great wisdom, who could organize a group of roaming ones, who can jump hundreds of miles, yet who remained at the feet of his Master, totally committed thinking of their welfare alone – unassuming, yet capable of telling the right things at the right moment – that is Pavana Puthra Hanuman – Aanjaneya, who is called ‘siriya thiruvadi’ – bearer of Lord Rama – who carried Rama on his shoulders during the war in which the demon was killed.   



As he traversed the samudra and landed at Lanka, in search of Sita Mata, he trailed destruction killing demons and devastating the property of Ravana.  Getting the news of the power of Hanuman,  Ravana ordered Rakshasas known as Kinkaras, Valmiki describes them to be 80000 – mighty, big and powerful demons. They too were killed – later as  Hanuman decided to stop the fighting and meet Ravana, he was over-powered  and taken to the courtyard of Ravana where he introduced himself thus,

 

अहं तु हनुमान्नाम मारुतस्यौरसस्सुतः । सीतायास्तु कृते तूर्णम् शतयोजनमायतम् ।

समुद्रं लङ्घयित्वैव तां दिदृक्षुरिहागतः । भ्रमता च मया दृष्टा गृहे ते जनकात्मजा ॥

அஹம் து ஹநுமாந்நாம மாருதஸ்யௌரஸஸ்ஸுத: ।

ஸீதாயாஸ்து க்ருதே தூர்ணம்

ஸதயோஜநமாயதம் । ஸமுத்ரம் லங்கயித்வைவ ॥

 

My name is Hanuman, born to the mighty Vayu.  I came here searching for Seetha matha, I hopped over 100 yojana wide ocean and as I roamed around, I saw the daughter of Janaka in your house  ..    …… ……….

கம்ப இராமாயணத்தில் - சுந்தர காண்டம் ஒரு முக்கிய அவகாசம்.  சுந்தர காண்டம் கதை அழகு; அசோகவனம் அழகு; வானரர்கள் அழகு; சுந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு; நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு; காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு. ஆஞ்சநேயருக்கு  அவர் தாயார் அஞ்சனை வைத்தப்  பெயர் சுந்தரன். அவரின் சாகசங்களை சொல்லும் படலம் என்பதாலும் இப்பெயர்.  

சுந்தர காண்டம் முதல் சர்க்கத்தின் தொடக்கம், அனுமன் மகேந்திர மலையின் மீது எறி பெரிய உருவம் எடுத்து,   உயரே எழும்பிப் பறப்பதுடன் தொடங்குகிறது. முதலில் பர்வதத்தின் மேல் எறி நின்றார், ராம நாமத்தை சொல்லிக் கொண்டே இருந்தார். அவர் உருவம்  உயர தொடங்கியது.  ஆகிருதியோடு அவர் மேலெழும்பினார்,  அந்த அதிர்வில் அவரை சுற்றியுள்ள மரம் செடி கொடிகளும் கற்களும் அவருடன் எழும்பி சிறிது தூரம் அவரை வழியனுப்பவது போல மேலே அவருடன் சென்று பின் கீழே இறங்கின. ராம நாமத்தை சொல்லி அவர் உருவம் உயர்ந்தது, நாம் ராம நாமத்தைத் தொடர்ந்து ஜபித்து வந்தால் நம் பக்தி பெருகும். எப்படி அனுமான் எந்த இடரையும் ராம நாமத்தை வைத்து வெற்றி பெற்றாரோ அது போலே எந்தத் துன்பத்தையும் தைரியத்துடன் எதிர்கொள்ள, நம் மன வலிமை பெருக ராம நாமம் உதவி செய்யும்.  

அனுமன் பிறந்த பொழுதே இளஞ்சூரியனைக் கனிந்த பழம் என்று கருதி சிறிதும் அச்சம் கொள்ளாமல், அதனைப் பிடிக்கச் சென்ற வீரர்.  கம்பர் சிறு வயதில் இருந்தே அனுமானை வீரம் கொண்ட வலிமையானவனாகவே படைத்துக் காட்டுகிறார் –  அனுமனுக்கு தண்ணீர் தீ, ஆயுதம், அஸ்திரம், வியாதி போன்ற வற்றாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் கம்பர்,

“வெப்புறு செந்தீ நீர் விளியாளும் விளியாதீர்

செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்”

என்ற பாடல் வரிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்.  
அத்தகைய சிறந்த ஆஞ்சநேயர் மீது இராமர் எழுந்து அருளியிருக்க பெரிய மாட வீதி புறப்பாடு விமர்சையாக நடந்தேறியது.  அருகில் தரிசித்த அனைத்து பாக்கியசாலிகளும் - அனுமனின் திருவடி முதல், அவர்தம் திருக்கரங்களில் தாங்கிய ஸ்ரீராமனின் மலர்பாதங்களையும் தரிசித்தன்னர்.  மலர்மாலைகளால் அலங்கரிப்பட்ட பின்சேவை கண்டோர், அனுமனின் வாலில் இருந்த அழகிய மணியை கவனித்து இருப்பீர்கள்.  




Here are some photos of Sri Ramar Hanumantha vahanam at Thiruvallikkeni divyadesam this evening. 

 
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17.4.2024 











No comments:

Post a Comment