அமைதிக்கு பெயர்தான் சாந்தி !!
அமைதி! = சாந்தி ?? தமிழ் படங்களில் அதிகமாக காணும் cliché
(அசல் சிந்தனையின் பற்றாக்குறையை அதிகப்படுத்தியுள்ள
ஒரு கருத்து.) பணக்காரன் அமைதியை தேடி அலைவான்; அவனால் நன்றாக
தூங்க முடியாது ! - ஏழை எப்போதும் சந்தோஷமாக
இருப்பான் - எந்நிலையிலும் நன்றாக தூங்குவான் !
- இது எனக்கு ஏற்பு உடையதல்ல !!
பணத்தின் மூலம் உடல் ரீதியாக சவுகரியங்களை செய்து கொள்ள முடியும், சில வலிகளை குறைக்க முடியும், உடல் அளவில் திருப்தியை ஏற்படுத்த முடியும். பெயர், பலம் மற்றும் புகழ் இவை பல சமயங்களில் சந்தோஷத்தையே தரும். நாம் அனைவருமே அவற்றை தேடி அலைகின்றோம்.
உலக வாழ்வு அமைதியற்றது - கொள்ளை நோய்கள், பண போராட்டம், போர் மற்றும் எந்த ஒரு பேரழிவும் மக்கள் மனதில் பயம்,பதட்டம், காட்டிக் கொடுக்கும் உணர்வு ஆகியவற்றுடன் வாழ்வதற்கு வழி செய்கின்றது. அடுத்தவர் ஆழ்ந்த வெறுப்பும், பொறாமையும், பழிவாங்கும் உணர்வும் தோன்றுகின்றன.
தொல்லைகளும், துன்பங்களும், பிரச்னைகளும் சூழ்ந்து இருக்கும் தருணத்தில் அவைகளைக் கண்டு பதற்றமடையாமல் எதிர்கொள்வதே உண்மையான அமைதி. நடு ரோட்டில நாற்பது வண்டிகள் போனாலும் - அமைதியாக அசை போடும் (இங்கே உணவை அல்ல !! நினைவுகளை !!) மாடுகள் இங்கே !!
நாமும் சும்மா இருந்து யோசித்தால் இது போன்ற அற்புத கருத்துகள் தோன்றும் என்று காலை வணக்கம் கூறும் உங்கள் சுவாமி சும்மார் குமார் !!
22.11.2022
No comments:
Post a Comment