To search this blog

Tuesday, November 29, 2022

Annakoota Uthsavam - Sri Chenna Kesava Perumal - Govardhana giri 2022

Govardhana (गोवर्धन) is a 8km long hill located near the town of Vrindavan, in the Mathura district of Uttar Pradesh – it is the sacred hills of Braj.   Lord Krishna was born in Mathura, brought up in Gokulam, played in Vrindavan and surroundings and thus many of His Leelas were in and around these areas ~ ‘lifting of the Govardhana Giri’ is a very important event.  The greatness of the hills of Govardhan is appreciated by Periyazhwar in 10 hymns.  

At Thiruvallikkeni divyadesam on day  9  of Irapathu uthsavam is Govardhanagiri Gopala.  Bhagwan Sri Krishna  right from  His childhood days exhibited magical qualities revealing and making those close to Him aware  that He is the Supreme Power;  yet He mingled with cowherds and all other folks treating all as equals ~ such is the great quality (Saulabhyam) of Lord Krishna,  being accessible to mighty and meek without disparity.  It was his Govardhanagiri prabhavam – protecting cowherds and humanity by lifting the hillock.   

திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே  இராப்பத்து உத்சவத்திலே 9ம் நாள் - ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளுக்கு 'கோவர்தன கிரி' சாற்றுப்படி.  

மழைக்கும் மேகத்துக்கும் அதிபதி இந்திரன். அவனே தேவர்களுக்கும் அதிபதியானதால் தேவேந்திரன் என்ற திருநாமத்தைப் பெற்றான். இந்திரனின் பெருங்கருணையால் மாதம் மும்மாரி பெய்து நிலங்களில் பயிர் செழுமையாக விளைந்து, மக்கள் பசிப்பிணியின்றி வாழ்ந்து வந்தனர். இந்த நன்றியை இந்திரனுக்குத் தெரிவிப்பதற்காக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் முதல் பயிரை அவனுக்கே படைத்தனர். இதனை ‘இந்திர விழா’ என்று கோலாகலமாகக் கொண்டாடினர்.  நான் மட்டுமே அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறேன். என்னையன்றி மக்களுக்கு நன்மைகள் செய்பவர்கள் வேறு யாரும் இல்லை!’ என்ற அகம்பாவம் இந்திரனுக்கு மிக அதிகமாக இருந்தது. இந்தச் செருக்கை அடக்கிட பரந்தாமனானகண்ணபிரான்,  ஒரு விருத்தாந்தம் அருளினார்.  



ஒரு வருஷம் விருந்தாவனவாசிகள் ஒன்றுகூடி பசுக்களை அலங்கரித்து அவற்றிற்குப் புல் கொடுத்தார்கள். பசுக்களுடன் கோவர்த்தன கிரியை வலம் வந்தார்கள். கோபியர்களும் விமரிசையாக ஆடையணிந்து மாட்டு வண்டிகளில் அமர்ந்து கிருஷ்ணரின் லீலைகளைப் பாடியபடி பவனி வந்தார்கள். கோவர்த்தன பூஜையை நடத்தி வைத்த அந்தணர்கள் கோபாலர்களையும் கோபியரையும் ஆசீர்வதித்தார்கள். எல்லாம் சரிவர நடந்தேறிய பின் கிருஷ்ணர் மிகப்பிரமாண்டமான உருவத்தை மேற்கொண்டு கோவர்த்தன கிரிக்கும் தமக்கும் எவ்வித வேறுபாடுமில்லை, ‘இரண்டும் ஒன்றே’ என்பதை அங்கிருந்த மக்களுக்கு உணர்த்தினார். பின்னர், அங்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு முழுவதையும் கிருஷ்ணர் உண்டார்.  கோவர்த்தன கிரியும் கிருஷ்ணரும் ஒன்றே என்பது இன்றும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அம்மலையிலிருந்து கற்களை எடுத்துச்சென்று வீடுகளில் வைத்து கிருஷ்ணராக அவற்றை பாவித்து பூஜிக்கிறார்கள். 

கர்வத்தில் தன் மதி இழந்த பலவகையான மேகங்களுக்கு அதிபதியான இந்திரன் ‘ஸாங்வர்த்தக’ என்ற கொடிய மேகத்தை அழைத்தான். இந்த மேகம், பிரபஞ்சம் முழுவதையும் ஒரே மூச்சில் அழித்துவிடும் ஆற்றல் கொண்டது. ஆகவே இந்திரன், விருந்தாவனத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரும் வெள்ளத்தில் மூழ்கடிக்கும்படி ‘ஸாங்வர்த்தக’ மேகத்திற்குக் கட்டளையிட்டான். இந்திரனின் கட்டளைப்படி பலவகையான அபாயகரமான மேகங்கள் விருந்தாவனத்தின்மேல் தோன்றி, தம் பலம் முழுவதையும் பிரயோகித்து அழிவை ஏற்படுத்தத் தொடங்கின. ஆயர்பாடி முழுவதும் நாசமாகும்படி பெருங்காற்றுடன் பெருமழையைப் பெய்தன. அப்படி மழை பெய்த ஒரு கணத்தில் பூமியும் ஆகாயமும் திசைகளும்  மழைத்தாரைகள் நிறைந்து ஒன்றாகக் காணப்பட்டன. மின்னல்களும் இடிகளும் கசையடிகளாகத் தாக்க, அந்த அடிக்குப் பயந்தவைபோல், மேகங்கள் திக்குகள் அதிரும்படி கர்ஜித்தன. ஆரம்பத்தில் கூரிய அம்புகள்போல் நீர் தாரை தாரையாகப் பெய்தது. பிறகு தூண் பருமனில் மழையைப் பொழிந்து, விருந்தாவனத்தில் நிலப்பகுதிகளை மேடு பள்ளம் தெரிய வொண்ணாமல் நீரால் நிரப்பின. உலகமே இருள் மயமானது. 


மாடுகளும், கன்றுகளும் கஷ்டப்பட, மனிதர்கள் பெரும்பயத்துடன் கிருஷ்ணனைசரணடைந்து, ‘‘கிருஷ்ணா, நீயே எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று தீனக்குரலில் வேண்டினர்.   இடி, மின்னல், மழையோடு பெருங்காற்றும் வீசியதால் ஒவ்வொரு ஜீவராசியும் கடுங்குளிரால் நடுங்கின.  ‘பக்தர்களே! நீங்கள் யாவரும் இந்த மலையின் அடியில் வந்து சேருங்கள். இந்தக் காற்றுக்கும் மழைக்கும் அஞ்ச வேண்டாம். அதை நான் இந்த மலையைத் தூக்கிப் பிடித்துத் தடுத்துவிட்டேன். இதனடியில் உள்ள இடங்களில் அவரவர் விருப்பம்போலச் சுகமாக இருக்கலாம். மலை மேலே விழுந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம்!’’ என்று கூறியபடியே மலையைத் தனது விரலாலே கிருஷ்ண பகவான் தாங்கிப்பிடித்துக்கொண்டார்.  தமது இடதுகையின் சுண்டுவிரலின் நுனியில் நிறுத்தியிருந்ததைக் கண்டும், பசி, தாகம், வேறு எந்தவிதமான கவலையுமில்லாமல்  அவர் முகம் ஒளிவிட்டதை எண்ணியும் ஆச்சர்யமடைந்தார்கள், அவ்வூர் மக்கள். . ஏழு தினங்கள் ஓயாமல் மழை பெய்ய, சுவாமியும் அந்த கோவர்த்தனகிரி மலையை குடைபோல ஏந்தி அனைவரையும் காத்தருளினார். அன்னக்கூட உத்சவத்தன்று  'கோவர்தனகிரி'  பிரபாவம்   நினைவு கூறப்படுகின்றது. 

Understand that in Northern part, hundreds of sweet dishes are offered to Lord Krishna on this day.    In various places,  people pray to Lord Govardhan for protecting us from hardships of life. On this day people also bathe  bulls and cow and decorate them with garlands and saffron.  The ones that were dear to Lord Krishna as he grew up are reverred. The preparation of 'Annakoot' is an integral part of the Govardhan Puja.  It is  ‘mountain of food’. Therefore on the auspicious day of Govardhan Puja, devotees offer 56 or 108  varied preparations of food / fruits / sweets as  ‘Bhog’ to Lord Krishna. The idols of Lord Krishna are bathed in milk and adorned with beautiful and dazzling clothes and jewelry.   

 


Chenna Kesava Perumal Temple, better known as Pattanam Kovil, and the conjointed Chenna Mallesswarar temple have  a rich history and are now prominently placed in the bustling area of Flower Bazaar, lying closer to NSC Bose Road,  Rattan Bazaar, Sowcarpet, Broadway, High Court and more……. – being a prominent landmark by itself. The temple was moved to its present place a few centuries ago and built with the grant of the Council, Manali Muthukrishna Mudaliyar contributed 5,202 pagodas, and subscriptions from the congregation amounted to 15,652 pagodas. With this the work on the Chennakesava Perumal temple began in 1767, was completed in 1780.    

On 27.11.2022 Annakkoota uthsavam was grandly celebrated at Sri Chenna Kesavar Thirukovil in Georgetown area – here are some photos of Emperuman holding Govardhana giri containing cows, birds, elephants and all living things.

 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
29.11.2022






 

  

1 comment: