For us Lord Sreenivasa, Thiruvengadamudaiyan, Thirupathi Balaji stands and blesses as the primordial Lord – He is the Saviour, He is the Emperuman who is lauded by thousands of thirunamas – all encomiums lead to HIM – and He bestows benevolently taking care of all His devotees. We were fortunate to have His darshan at Chenna Kesava Perumal thirukovil on 9th day of Irapathu uthsavam.
Chenna Kesava Perumal Temple, better known as Pattanam Kovil, and the conjointed Chenna Mallesswarar temple have a rich history and are now prominently placed in the bustling area of Flower Bazaar, lying closer to NSC Bose Road, Rattan Bazaar, Sowcarpet, Broadway, High Court and more……. – being a prominent landmark by itself. The temple was moved to its present place a few centuries ago and built with the grant of the Council, Manali Muthukrishna Mudaliyar contributed 5,202 pagodas, and subscriptions from the congregation amounted to 15,652 pagodas. With this the work on the Chennakesava Perumal temple began in 1767, was completed in 1780.
அவனே அகல்ஞாலம் படைத்திடந்தான் ~ Swami Nammalwar exudes devotion to Sriman Narayana and exhibits subliminal conjugation in extolling the greatness of Him, who created earth, lifted it, swallowed it, gave it back to us, measured it and .. .. is always the saviour for all earthly beings.
பரம்பொருளான பகவானை அடைய பல வழிகள் உண்டு. அவற்றுள் கலியுகத்திற்கு நாம சங்கீர்த்தனம் மிக சிறந்த வழியாக நமது ஆசார்யர்களால் காட்டப்பட்டிருக்கிறது. நாம சங்கீர்த்தனம் செய்வதற்கு எளிமையானது பெரிய பலன்களை அளிக்க வல்லது. ஒரு திரு நாமமே ஆயிரந் திருநாமங்களின் காரியஞ் செய்ய வல்லது’ எனும்படியான பெருமை பொருந்திய திருநாமங்கள் ஆயிரமுண்டு எம்பெருமானுக்கு. இங்கு ஆயிரமென்று, குறிப்பிட்ட ஒரு இலக்கத்தை சொல்வதன்று. எண்ணிறந்தவை என்பதுவே இங்கே அர்த்த விசேஷம். ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பீஷ்மாச்சர்யர் பகவானின் நாம ஜபமானது "பவித்ரானாம் பவித்ரம்யோ மங்களானாஞ்ச மங்களம்" - பகவத் நாம சங்கீர்த்தனம் நம்மை புனிதமாக்கி நற்பலன்களை கொடுக்கும் என்கிறார்.
Govardhana (गोवर्धन) is a 8km long hill located near the town of Vrindavan, in the Mathura district of Uttar Pradesh – it is the sacred hills of Braj. Lord Krishna was born in Mathura, brought up in Gokulam, played in Vrindavan and surroundings and thus many of His Leelas were in and around these areas ~ ‘lifting of the Govardhana Giri’ is a very important event. The greatness of the hills of Govardhan is appreciated by Periyazhwar in 10 hymns.
21.1.2022 was day 9 of Irapathu uthsavam at Thiruvallikkeni. Lord Krishna right from His childhood days exhibited magical qualities revealing and making those close to Him aware that He is the Supreme Power; yet He mingled with cowherds and all other folks treating all as equals ~ such is the great quality (Saulabhyam) of Lord Krishna, being accessible to mighty and meek without disparity. It was his Govardhanagiri prabhavam – protecting cowherds and humanity by lifting the hillock.
ஆண்டுகள் ஒரே மாதிரி இருக்க மாட்டா ! ~ சரித்திரத்தில் தேசங்கள்/ நாடுகளுக்கு இடையே போர்களும், பஞ்சமும், பெரும் பிணியும், பெரு வியாதிகளும் மக்களை அல்லல்படுத்தி உள்ளன. அல்லல் வரும்போது அஞ்சுற வேண்டா! - எம்பெருமானை துதிப்பீர். அவன் நம்மை சிறப்பாக காத்தருள்வான்.
திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே இராப்பத்து உத்சவத்திலே 9ம் நாள் - ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளுக்கு 'கோவர்தன கிரி' சாற்றுப்படி. சுவாமி நம்மாழ்வார் எம்பெருமானிடத்திலே மிக்க மையல் கொண்டு யாசித்தவையெல்லாம் தரவல்ல நாராயனன்றோ நான் என தன் பேருறவைக் கட்ட, ஆழ்வார் அவர்தம் சேலத்தில் ஈடுபட்டு அருளிச்செய்த பாசுரங்களில் ஒன்று இங்கே :
ஓராயிரமாய்
உலகேழளிக்கும்
பேராயிரங்கொண்டதோர்
பீடுடையன்
காராயின
காளநன்மேனியினன்
நாராயணன் நங்கள் பிரானவனே!
ஒரு திருநாமமே ஆயிரம் திருநாமமாய்க் கொண்டு ஏழுலகங்களையும் காப்பாற்றும்படியான ஆயிரம் திருநாமங்களை உடையவனாகிய, இணையில்லா பெருமையை உடையவனாகிய, காளமேகம்போலே கருத்த அழகிய திருமேனியையுடையனுமான, நாராயணனே நம்மைக் காத்தருள்பவன். இது ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் ஒன்பதாம் பத்தில் ஒரு பாசுர அர்த்த விசேஷணம்.
Yesterday ie., on 21.1.2022 at Patnamkovil, being day 9 of Irapathu uthsavam, there was purappadu inside the temple of Emperuman in Thiruvengadamudaiyan thirukolam and Swami Nammalwar. After paramapadavasal opening, there was Irapathu goshti and sarrumurai at Andal sannathi. Here are some photos of the purappadu.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
22.1.2022
அடியேன் நன்றிகள்
ReplyDelete