For Srivaishnavaites – Adhyayana uthsavam is extremely significant as it offers golden opportunity of worshipping Emperuman, offering arulicheyal and more .. 13th Jan 2022 the auspicious day of Bhogi is ‘Vaikunda Ekadasi’ – first day of Irapathu uthsavam. During Pagalpathu and Irapathu one can have darshan of assemblage of all Azhwargal and Acaryas – there is rendition of Sree Nalayira divyaprabandham.
Besides the Divyadesams, there are some temples which are more than a few centuries old and one such temple is Chenna Kesava Perumal Temple, better known as Pattanam Kovil. This temple prominently is placed in the bustling area of Flower Bazaar, lying closer to NSC Bose Road, Rattan Bazaar, Sowcarpet, Broadway, High Court and more……. – being a prominent landmark by itself.
The British began to build a fort in the 1640s. It was built in stages for a number of years. Out of this famous Fort St. George grew a few settlements. The Indians lived here and it was referred to as the Blacktown by the British. By some accounts, the present Pattnam kovil housing Chenna Kesava Perumal and Chenna Malleeswarar were relocated from their existing place and constructed in the present place near Broadway, Mint Street and Kothawar chavadi, a major vegetable market. The twin temples of Chenna Kesava Perumal and Chenna Mallikeswarar Temples reportedly appear on the notification dating back to 1766. The temple is well maintained and attracts hundreds of devotees every day.
At Thiruvallikkeni divyadesam Sunday 9th Jan 2022 was day 7 of pagalpathu and it was ‘Bagasuravatham’ thirukolam. (photos here of Sri Parthasarathi Emperuman are screengrabs from live telecast) .. .. and it was the same thirukolam at Pattnam koil on 4.1.2022 day 2 of Pagalpathu uthsavam.
Bhagwan Sreekrishna descended on this earth and showed glimpses that HE is Supreme on many occasions – yet the Ithihasa purana Mahabaratha is not entirely the life story of Sree Krishna. The Supreme Lord was born under extremely difficult situation when his parents were incarcerated and on the very night of His birth was taken elsewhere, across the flowing Yamuna to Gokul. He grew up in Gokulam / Vrindavan/ Govardhanagiri when Kamsa kept sending one Asura after the other. The toddler Krishna growing up killed everyone of them, protected the cowherds – while playfully mingling with them all.
பகவான் ஸ்ரீகிருஷ்ணன் வரலாறு மிக கடினமானது ! - கொடிய சிறைச்சாலையில் ஒருத்தி மகனாய் பிறந்து, அன்றிரவே கொட்டும் மழையில், யமுனை ஆற்றை தாண்டி - கோகுலத்தில் வேறொருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தவன். அவரது சிறுவயது தவழ்ந்த நாள் முதல் கம்சன் ஒவ்வொரு அரக்கனாக அனுப்ப, அவர்தமை வென்று, கொன்று, ஆநிரைகளையும் மனித குலத்தையும் காப்பாற்றினவனன் நம் வேணுகோபாலன்.
ஒவ்வொரு அரக்கனாக கம்சனாதிகள் அனுப்புவதும், குழந்தை கண்ணன் அவர்களை அழிப்பதுமாக கம்சனும், கண்ணனும் விளையாடிக் கொண்டே இருந்தனர். அந்த கொடிய அரக்கர்கள் பெண் உரு, சகடம், மரம், மிருகங்கள் என பல உருவில் வந்தனர். கொக்கு வடிவில் வந்தவன் பகாசுரன் என்ற அரக்கன். கூரிய அலகை வைத்துக் கொத்தி குழந்தையை விழுங்கி கொல்ல முயற்சிதான். இறக்கைகளை ஓங்கி அடித்துப் புழுதியைக் கிளப்பியபோது கோகுலத்து சிறுவர்கள் அனைவரும் பயந்து ஓடினர். எம்பெருமான் புள்ளின் வாய் பிளந்து அதனை மாய்த்தான்.
திருப்பாவை பாசுரத்தில், கோதைப்பிராட்டி பாவை நோன்பு இருந்து தம் தோழியரை எழுப்புகிறாள். நம் கண் அழகு -போதரிக் கண்ணினாய் –உண்டாகில் தானே வருகிறான் என்று கிடக்கிறாள் ஒருத்தி - அவளை எழுப்புகிறார்கள்- இப்பாட்டில்-நமக்கு ஸ்வரூப ஞானமுண்டாகில் அவன் தானே வருகிறான் என்று நிர்ப்பரராய் இருக்கும்வரை எழுப்புகிறார்கள்.
கோகுலத்து சிறுவர்கள் அனைவரும் பசுக்களை மேய்த்துக்கொண்டு யமுனை நதிக்கரைக்கு செல்வார்கள். அங்கு பசுக்களையும், கன்றுகளையும் நீர் அருந்த வைத்து விட்டு, சிறுவர்கள் அனைவரும் ஓய்வெடுப்பார்கள். ஒரு நாள் அப்படி கிருஷ்ணரும், அவரது நண்பர்களும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, மலைபோல் பெரியதுமான ஒரு பறவையைக் கண்டனர். அதன் அசாதாரண வடிவத்தைக் கண்டு அவர்கள் பயந்து போனார்கள். கம்சனின் நண்பனான அந்த அசுரப் பறவையின் பெயர் ‘பகாசுரன்’. கிருஷ்ணரை அழிப்பதற்காக கம்சன், பகாசுரனை அனுப்பிவைத்திருந்தான். அவன் திடீரென்று கிருஷ்ணரைத் தன் கூரிய அலகுகளினால் தாக்கி, வேகமாக விழுங்கினான். கண்ணபிரான் , அந்த மாபெரும் பறவையின் அலகுகளைப் பிடித்து, ஒரு குழந்தை புல்லைப் பிளப்பதுபோல், எளிதாக, தன் கோபால நண்பர்களின் முன்னிலையில் அரக்கனின் வாயைப் பிளந்தார். ஆகாயத்தில் இருந்து சுவர்க்கவாசி களான கந்தர்வர்கள், சாமேலி போன்ற நறுமணம் மிக்க மலர்களைத் தூவி, குழந்தை கிருஷ்ணரைப் பாராட்டினார்கள். இதோ இங்கே ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாசுரம்: -
புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய் !
பறவையின் உருவம் எடுத்து வந்த பகாசுரனின் வாயினைக் கிழித்து அவனை அழித்தவனும், பொல்லாத அரக்கனாகிய இராவணனின் பத்து தலைகளையும் தனது அம்பினால் அறுத்து எறிந்தவனும் ஆகிய நாராயணனின் கீர்த்திகளை பாடியவாறு, சிறுமிகள் பலரும் பாவை நோன்பு நோற்கப்படும் இடத்தில் குழுமி உள்ளார்கள். வானில் விடியலில் தோன்றும் சுக்கிரன் தோன்றி உச்சிக்கு வந்து விட்டது, அதன் முன்னர் இருந்த வியாழம் மறைந்துவிட்டது; பறவைகள் தாங்கள் இரை தேடிச் சென்ற இடங்களில் செய்யும் ஆரவாரங்கள் எங்களுக்கு கேட்கின்றன; குவளை மலர் போன்று அழகிய கண்களை உடைய பெண்ணே, கண்ணனோடு சேர்ந்து இருக்கும் பாக்கியத்தைப் பெறுவதற்காக நோன்பு நோற்கப்படும் இந்த நல்ல நாளில் உனது கள்ளத்தனத்தை தவிர்த்து எங்களுடன் கலந்துக்கொள்.
Here are some photos of Bagasuravatham thirukolam at Pattnam koil on 4.1.2022 day 2 of Pagalpathu uthsavam.
11.01.2022
No comments:
Post a Comment