To search this blog

Monday, July 26, 2021

Sri Azhagiya Singar ~ எனக்கெளியன் எம்பெருமான் இங்கு.

 

Rolls Royce has launched a new brand ‘Cullinan’ – it is available in India too – priced at Rs 6.95 crore (ex-showroom). It is based on the carmaker’s aluminium space frame architecture, called ‘The Architecture of Luxury’. The Cullinan is powered by a 6.75-litre V12 petrol engine that makes 571PS/850Nm. Power is sent to all four wheels of the SUV via a four-wheel-drive system, which is a first for Rolls-Royce. Since it is a Rolls-Royce, the list of features it gets is endless. It is equipped with night vision and vision assist, including daytime and night-time wildlife & pedestrian warning, alertness assistant (a 4-camera system with panoramic view, all-round visibility and helicopter view), active cruise control, collision warning, cross-traffic warning, lane departure and lane change warning, 7x3 high-resolution head-up display and WiFi hotspot. 

.. .. .. what attracted me is an article titled ‘This $465,000 Rolls-Royce Cullinan is an unexpected lesson in simplicity’ !!!!! கிட்டத்தட்ட 7 கோடியில் எளிமையா !!!!



திருவல்லிக்கேணி ஒரு புண்ணிய பூமி - இந்த  சிறப்பான திவ்யதேசத்தில் வாழும் நாம் புண்ணியம் செய்தவர்கள்.  மிக அழகான திருக்கோவில் - ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு கிழக்கு வாசல் - திரு அழகியசிங்கப்பெருமாளுக்கு மேற்கு வாசல். நரசிம்ம அவதாரமே உக்கிரத்தின் வெளிப்பாடு - எனினும் இங்கு மூலவர் யோக நரசிம்மராகவும் உத்சவர் மிக அழகிய தெள்ளியசிங்கன் ஆகவும் நம்மை அழைத்து  அருள் தந்து ஆள்விக்கிறார்.

வாழ்க்கை மிக மாறிவிட்டது.  சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகள் முன் நம் பள்ளி நாட்களில், உடைகள் மிக குறைவாகவே இருக்கும் !  .. அதிலும் பாதி பள்ளி சீருடைகள்.  குடும்பங்களில் மூத்த பிள்ளைக்கு வாங்கப்படும் ஆடைகள், இளைய பிள்ளைக்கு உபயோகப்படுத்தப்பட்டன. அந்த குடும்பம் என்பதில் விளக்கம் விவரமானது.  அப்படி பழைய உடைகள் / பழைய புத்தகங்கள் கூட சந்தோஷத்துடன் ஏற்கப்பட்டன.  அதன் பிறகு அந்த ஆடைகள் நைந்த துணியாகி வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது அப்படியல்ல. விரைந்து வளரும் பொருளாதார வளா்ச்சியும் நடுத்தர வா்க்கத்தின் பெருக்கமும் அதிக நுகா்வுக்கு வழிவகுக்கின்றன.

நாம் அனைவருமே சராசரியாக நமக்கு தேவைக்கு மேல் ஆடைகளில் செலவழிக்கிறோம்.  ஒரு வாடிக்கையாளா் 2000-ஆம் ஆண்டில் வாங்கியதை விட 75  சதவீதம் அதிக ஆடைகளை 2019 -ஆம் ஆண்டில் வாங்கினார்கள் என்கிறது ஒரு தரவு. தேவை அடிப்படையில் ஆடைகள் வாங்குவது என்ற நிலை மாறி தற்போது ஆா்வ அடிப்படையில் வாங்குதல் என மாற்றம் கண்டுள்ளது. அன்றைய நுகர்வோர் தர உத்தரவாதம் கொண்ட ஆடைகளை வாங்கினா். இன்றைய நுகர்வோர்  குறைந்த விலையில் புதுப்பாங்கான ஆடைகளை  விரும்புகிறார்கள்.  இவ்வாறாக ஆடைகள் அதிகமாக அதிகமாக,  அந்த ஆடைகளை உபயோகிக்கும் காலஅளவு  குறைந்துவிட்டது. 

எளிமையாக வாழ்தல் கடினமா !  .. சமூகம் நம்மை ஏற்றுக்கொள்ளதா ? எளிமை என்பது ஏழ்மை அல்ல.  எளிமையில் சாதாரணம் இருக்கும். எளிமையின் வேர்கள் எஃகு போன்றன. எளிமையில் அன்பு வெளிப்படும். எளிமையாக இருப்பது வேறு எளிமையாககாட்டிக் கொள்வது  வேறு!  உண்மையான எளிமையாளர்கள்  பேச்சில் பணிவு இருக்கும் செயலில் நிதானம் இருக்கும். எதிலும் அவரிடம் சுயநலம் இருக்காது.  எளிமை அனைவருக்கும் இருப்பதை பகிர்ந்தளிக்கும்.

Simplicity is the state or quality of being simple. Something easy to understand or explain seems simple, in contrast to something complicated.  Something is simple or complex depending on the way we choose to describe it. In some uses, the label "simplicity" can imply beauty, purity, or clarity. In other cases, the term may suggest a lack of nuance or complexity relative to what is required. .. here is something excerpted from the article titled ‘This $465,000 Rolls-Royce Cullinan is an unexpected lesson in simplicity’

Of all the things I expected from the 2021 Rolls-Royce Cullinan Black Badge – an SUV with a near half-million-dollar price tag – a reminder of the value of simplicity was not among them. Launched in 2018, the Cullinan is as luxurious, as excessive, and as attention-grabbing as you’d think, particularly in Black Badge form. Look beyond the glitter, though, and there’s something more important there too.

Simple doesn’t have to mean basic, and clearly simple doesn’t necessarily mean cheap. The 2021 Cullinan starts at $388,000 (plus $2,750 destination and $2,600 “gas guzzler” tax) but, with extras like the striking Galileo Blue paintwork, this particular Cullinan Black Badge is a heady $465,300 all-in. And yet, there’s simplicity there too. Of a different sort to a base-spec mass-market SUV, where simple means the absence of features, sure, but simplicity nonetheless. In Rolls-Royce’s world, it’s about keeping the annoyance of complexity at arm’s length. The luxury of not having to sweat the small stuff. In a Cullinan, the doors close themselves when you press a button. It seems lavish at first, and then you ask yourself why pulling a heavy, safety-regulation-reinforced door closed manually ever seemed acceptable. The 10.25-inch touchscreen isn’t some vast, attention-stealing display, and you can hide it behind a motorized screen and do just fine. Rolls-Royce’s crisp 12.3-inch digital instrumentation doesn’t try to serve up every possible map, and engine graphic, and animation; it just tries to give you the cleanest possible dials.  The air conditioning system is monstrously potent, cooling the cabin in record time, but its knobs and buttons are the epitome of simplicity. Rolls-Royce’s 8-speed transmission silently surveys the road ahead, using GPS to make sure it’s never caught unawares of which ratio to slip into, but you’d never guess how smart it is from the simple, slender stalk behind the wheel.





எளிமையை சிறப்பிக்கும் , ஸ்வாமி நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி பாசுரம் இங்கே :

உணர ஒருவர்க்கு  எளியனே? செவ்வே,

இணரும் துழாய்  அலங்கல் எந்தை,-உணரத்

தனக்கெளியர்  எவ்வளவர் அவ்வளவனானால்,

                                   எனக்கெளியன் எம்பெருமான் இங்கு.                

எம்பெருமான் மிகவும் சௌலப்யன்.  அவனது திருமேனியில் திருத்துழாய் எப்போதும் தவழும். அப்படி, அவரது திருமேனியின் ஸம்பந்தத்தாலே,  மேன்மேலும் தழைத்தோங்குகின்ற திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமான் தனக்கு அடிமைப்பட்டவர்கள்,  தன்மேல் எவ்வளவு அன்பு உடையவர்களோ, தானும் தன்னை அவ்வளவு தன்னை தந்து அருள்பவன் .  தன்னிடம் சரண் அடைபவர்களின் எல்லா நலனுக்கும் தானே பொறுப்பு ஆகி, அவர்களுக்கு அருள் தந்து, காத்து அருளும் அற்புதன். அத்தகையான எம்பெருமானை சரண் அடைந்தபின், நம் போன்ற பக்தர்களுக்கு எவ்வித கவலையுமே  இல்லை.

Reminiscing the good olden days, here are some photos of day 6 morning purappadu of  Sri Azhagiya Singa Perumal during Aani brahmothsavam at Thiruvallikkeni divyadesam on 3.7.2012.

adiyen Srinivasa dhasan
Mamandur veeravalli Srinivasan Sampathkumar
26th July 2021.










1 comment: