To search this blog

Thursday, July 8, 2021

Aani Thiruvathirai 2021 - எனக்குற்ற செல்வம் இராமானுசனென்று

Today 9th July 2021 is Thiruvathirai in the month of  Aani  – masa thirunakshathiram of our Swami Emperumanar Ramanujar. Today is Amavasai too.. .. ..

‘Ananthah sarasi dhere  Ramye  Bhoothapurivare’ – on the bank of Ananthasaras the temple pushkarini, is the temple of Sri Adhi Kesavar.   Boothapuri, better known now as Sri Perumpudur is the most divine place for us –  the place where our Greatest Acharyar “Emperumanaar, Bashyakarar” the reincarnation of Aadi Sesha and Sri Lakshmanar was born,  in the year 1017  to Kesava Somayaji and Gandhimathi couples.  

It is astounding to learn, try to understand the path of Bhagawat Ramanuja – who thousand years ago, came to this earth for enlightening us all.    The ethical side of Vaishanavism emphasises absolute self-surrender to Sriman Narayana -  its mystical aspect presents God as the personification of love and bhakti, as longing for communion with Him.  

In those golden days when Swami Emperumanar walked on the streets of Thiruvarangam and other Divyadesams – tens of thousands of his disciples and hundreds of Jeeyars followed him hailing “Ramanujo Vijayathe – Yathiraja Rajaha”  We fall at the feet of the Great preceptor Ramanujacharya, praying that whole humanity is protected from all evils including the dreaded Covid 19 and people live forever in peace and harmony.




ஸ்வாமி எம்பெருமானர்  ஒரு க்ருபாகடாக்ஷசீலர்.   கல்யாண குண ப்ரவாஹமாகிற கடலைபோன்ற காருண்ய சீலம் கொண்டவர். எம்பெருமானரிடத்திலே அளவற்ற பற்று கொண்டவர்.  திருவரங்கத்து அமுதனார் தமது  இராமாநுச நூற்றந்தாதி பிரபந்தத்தில், ஒவ்வொருபாட்டிலும் இராமாநூசனது திருநாமங்களை, அவரது பெருமைகளையும் சொல்லி மகிழ்கிறார். திருவரங்கத்து அமுதனாரின் இராமானுச நூற்றந்தாதி - எம்பெருமானாரின் சிறப்புகளை அழகிய பாசுரங்களில் உரைப்பது.  இதோ இங்கே ஒரு பாசுரம். :

எனக்குற்ற செல்வம்  இராமானுசனென்று இசையகில்லா

மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்

தனக்குற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றுமென்பா

இனக்குற்றம்  காணகில்லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே. 

பாடுபொருளை அடிப்படையாகக் கொண்டே இலக்கியங்கள் வகைமைப் படுத்தப்பட்டன.  வெண்பா இலக்கியங்கள்,விருத்தப்பா இலக்கியங்கள் என்று யாப்பு வகை கொண்டும் இலக்கியங்கள் வகைப்படுத்தப்பட்டன.   பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றைக் குறிக்கும் ஒரு பொதுப்பெயர் ஆகும். சமஸ்க்ருதத்தில் பிரபந்தம் என்னும் சொல், "கட்டப்பட்டது" எனப் பொருள்படும்.   பிரபந்தம் எனும் சொல் தமிழில் ஒரே நேரத்தில் இலக்கியம் எனவும், தொகை எனவும் வழங்கப்பட்டு  வந்தது.

ஒருவர் பாட்டு  எழுதினால் அதில் குறை கண்டே பெருமை பெறுவோரும் உண்டு ! உலகத்தில் ஓரு பிரபந்தம் பிறந்தால் அதனைத் தூஷிப்பார் பலரும், பூஷிப்பார் சிலரும் ஏற்படுவது வழக்கம். உண்மையில் தோஷங்கள் இல்லாதிருந்தாலும் எதையாவது சொல்லித் தூஷித்தே தீருவர்கள்; குற்றங் குறைகள் இருந்துவிட்டால் தூஷகர்களின் ஆர்வம் மிகையாகவே இருக்கலாம்.  அறிவிலியான  நான் இயற்றும் இந்நூலில் தோஷங்கள் தான் மிகையாக இருக்கக்கூடும்; அவற்றைக்கண்டு சிலர் நிந்திப்பர்களாகில், அன்னவருடைய தூஷணம் நமக்கு பூஷணமேயா மித்தனை என்கிறார், எம்பெருமானரிடத்திலே மிகவும் அன்பு பூண்ட திருவரங்கத்து அமுதனார். .

‘பிறருடைய பழிப்பு நமக்கு அப்ரயோஜகம்’ என்று சொல்லவேண்டியிருக்க, அவர்களுடைய பழிப்புத்தானே நமக்குப் புகழாம் என்கைக்குக் கருத்தென்? அவர்களது பழிப்பு இவர்க்கு எப்படி புகழாய் விடும்? என்று சிலர் சங்கிக்கக்கூடும். அமுதனாராம் ஒருவர்; அவர் இராமாநுச நுர்ற்றந்தாதி என்றொரு பிரபந்தம் பாடினாராம்; அதில் ஒவ்வொருபாட்டிலும் இராமாநூசன் என்று சொன்னதையே சொல்லிக்கொண்டுகிடக்கிறார். தவிரவும் சாஸ்திரங்களில் புருஷார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ள ஐச்வர்யம் முதலானவற்றை இகழ்ந்துரைக்கிறார்; ஸகல புருஷார்த்தங்களும் தமக்கு உடையவர் தானாம்; எம்பெருமானைக்கூட அவர் கண்ணெடுத்துப் பார்க்கமாட்டாராம். என்றிவை போல்வன சிலவார்த்தைகளைச் சொல்லிப் பழிப்பார்கள். வாஸ்தவத்தில் இவையெல்லாம் குணமேயாதலால் குணகீர்த்தநத்தில் சேர்ந்து புகழ்ச்சியேயாய்முடியக் குறையில்லையென்க. எம்பெருமானைப்பழித்ரு சிசுபாலாதிகளும் பர்யாயேண குணகீர்த்தநம் பண்ணினார்களாகவன்றோ உய்ந்துபோனது - என பெருமைப்பட்டவர் நம் அமுதனார். 

நமக்கு  வாய்த்த அற்புதமான செல்வம் சுவாமி எம்பெருமானாரே’ என்று பெருமை கொண்டிருக்கமாட்டாத   கெட்ட எண்ணங்களை மனதில் கொண்ட மனுஷர்கள் இந்த இராமானுச நூற்றந்தாதி நூலையும், இயற்றிய அமுதனாரையும் பழிப்பார்களே ஆனால் - அந்த மானிடரின்  பழிப்பே இதற்குப்  புகழாய்விடும்; அவ்வெம்பெருமானாருடைய  நித்யஹித்தமான கல்யாணகுணங்களுக்கு  தகுதியான அன்பையுடையவர்களான மஹான்கள்  இந்நூலானது பக்தியோடு கூடின ப்ரவ்ருத்தியையுடையதென்று  திருவுள்ளம் கொண்டு,  அவ்விராமாநுசனுடைய   திருநாமங்களைக் சொல்லுகின்ற  இந்தப் பாசுரமாலைகளிலுள்ள குற்றங்மளைக் காணமாட்டார்கள், என்கிறார் திருவரங்கத்தமுதனார்.

Life has changed for the Globe – 2020 & 2021 have been far different – nothing prevents us in reminiscing and celebrating the Birth of Swami Ramanujar at home forgetting Covid and thinking of Acarya alone !  Here are some photos of Swami Ramanujar on silver yanai vahanam on 8th May 2016. 

Azhwar Emperumanar Jeeyar thiruvadigale saranam. 

~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
9th   July  2021

பாசுர விளக்கம் : ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி - ஒப்பற்ற ஸ்ரீவைணவ கலைக்களஞ்சியம் திராவிட வேதா இணையம்.   







No comments:

Post a Comment