Today 7th July 2021 (Aani 23) is Rohini nakshathiram
– masa thirunakshathiram of Thiruppanazhwaar. Every Rohini there would be
chinna mada veethi purappadu of Sri Parthasarathi Perumal; and periya mada
veethi for Azhwar / Acaryar sarrumurai but for Karthigai Rohini, mostly there
would be no purappadu.
பஞ்சமம்; புறநீர்மை; அந்தாளிக்குறிஞ்சி; தக்கேசி; செவ்வழி; வியாழக் குறிஞ்சி; கெளசிகம்; செந்துருத்தி; பழம்
பஞ்சுரம்; கொல்லி; விபஞ்சி; சீவனி; காஞ்சி; சதாக்கியம்; வருணம்; யாமை; புங்காளி; செருந்தி - இன்னமும் பலபல.. என்ன என்று அறிவீரா ? - இவை சில பண்கள் -
இவற்றுக்கு இணையான இராகங்கள் கர்நாடக இசையில் உள்ளன. பண் என்பது இனிய இசை. பண் இசைப்பவர்
பாணர் எனும் குலத்தவர்.
திருப்பாணாழ்வார், ஸ்ரீரங்கம் பெரியபெருமாளைப் பாதாதிகேசம்
வருணிக்கும் "அமலனாதிபிரான்' என்ற அற்புத பிரபந்தத்தை நமக்கு அருளியவர்.
சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாகிய உறையூரில் நெற்பயிர்கள் நிறைந்த வயலில் அவதரித்தவர்.
முனிவாஹனர் என்று ப்ரஸித்தி பெற்ற இவர் பாணர் என்ற இசை மரபு குலத்தில்
பிறந்தவர். காவிரிக் கரையில் இருந்தே தனது பக்தியை வீணை வாசிப்பாக வெளிப்படுத்தி
பின்னர் எம்பெருமானை நன்கு சேவித்து அவருடன் கலந்தவர். இவர் பெருமாளின் ஸ்ரீவத்ஸம்
எனும் மருவின் அம்சம்.
இனிய இசையைப் பண் என்ற பெயரால் குறிப்பிடுவர். பண் என்ற சொல் காரணப் பெயர்ச்சொல். பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று. முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி, அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கபடுவது பண். இசையொலிக் கூறுகள் சுரம் என்றும், நரம்பு என்றும் வழக்கப்படும். சங்க இலக்கியங்களில் பண்கள் பற்றிய குறிப்புகள் காணப் பெறுகின்றன. ஆம்பல் பண், காஞ்சிப் பண், குறிஞ்சிப் பண், நைவளம் போன்ற பண்களைப் பற்றிய குறிப்புகள் உள. நைவளம் எனும் பண் பகற்பொழுதில் இசைக்க வேண்டிய பண் என்றும், பாணன் யாழிசையுடன் பாடினான் என்றும், இப்பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது.
Generally, Karthigai
would fall on ‘karthigai nakshathiram’ – after which there would be no
purappadu. Thiruppanazhwaar’s sarrumurai
is Rohini in the month of Karthigai, a day after Thirukarthigai. However, in few years, karthigai deepam would
fall on the next day of Karthigai nakshathiram and on those special years only
there would be Thirukarthigai chokkapanai and Thiruppanar sarrumurai – a grand periya mada
veethi purappadu of Sri Parthasarathi Perumal and Thirupanazhwar.
At
Uraiyur divyadesam, the presiding deity is
Azhagiya Manavaalan in standing posture possessing ‘Conch [Thiruvazhi]
and Chakra in His hands. ThiruppanaAzhwar totally immersed
with bakthi, refers to the Lord as Vimalan, glorifying His blemishlessness and
magnanimity – bowled over by the beauty of Emperuman, he describes that
Azhagiya Manavalan has taken over his heart. Here is
one of his immortal verses:
உவந்த
உள்ளத்தனாய் உலகமளந்து அண்டமுற
நிவந்த
நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை
கவர்ந்த
வெங்கணைக்காகுத்தன் கடியார்பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல்சென்ற தாமென் சிந்தனையே,
எம்பெருமான் மகாபலியை ஆட்கொண்டு, உலகளந்த பிரபாவம் அனைவரும் அறிந்ததே. உலகளக்கும்போது அடியாரோடு அஹங்காரிகளோடு வாசியற எல்லார் தலையிலும் திருவடியைவைத்து அவர்களை தந்யராக்கப்போகிறோமென்று எம்பெருமான திருவுள்ளத்திற்கொண்ட உகப்பை வெளியிடுகிறார் நம் பாணர் இங்கே " உவந்த உள்ளத்தனாய்" என்று உகப்பதன் மூலம். எம்பெருமான் தாமே, மகிழ்ச்சியோடு கூடிய மனத்தையுடையவனாய்க் கொண்டு, மூவுலகங்களையும் அளந்து அண்டகடாஹத்தளவுஞ் சென்று முட்டும்படி உயர்த்தியை அடைந்த பெரிய திருமுடியையுடையவனாய் முற்காலத்தில் எதிர்த்துவந்த ராக்ஷஸர்களை, உயிர்வாங்கின கொடிய அம்புகளையுடைய இராமபிரானாய், மணம் மிக்க சோலைகளையுடைய திருவரங்கத்திலே எழுந்தருளியிருப்பவனான எம்பிரானுடைய திருவரையில் சாத்திய அழகிய சிவந்த பீதாம்பரஆடையின் மேல் எனது சிந்தனையானது சென்று பதிந்தது. எம்பெருமானிடத்தே இருந்து என் நினைவுகள் மீளவே இல்லை. அவனிடமே அடிமை கொண்டது என பெருமைப்படுகிறார் ஆழ்வார்.
Here are some photos of Sri Parthasarathi Perumal /
Thiruppanazhwar purappadu and Thirukarthigai purappadu at Thiruvallikkeni
divaydesam on 6th Dec 2014.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
7th July 2021
பாசுர விளக்கம் : ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி - ஒப்பற்ற ஸ்ரீவைணவ கலைக்களஞ்சியம் திராவிட வேதா இணையம்.
No comments:
Post a Comment