Swami Nammalwar Sarrumurai 2021
- வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே !!
Today 25.5.2021 is celebrated as Sri Narasimha Jayanthi and being Vaikasi Vishakam – we celebrate the birth of Swami Nammazhwar (photo as at Avatharasthalam) . .. .. .. but sadly, as was the case last year – we do not have access to Temple. At Thiruvallikkeni the thirumanjanam and goshti is webcast for devotees to have solace of darshan.
ஆழ்வார்கள் அருளிச்செய்த நம் சம்பிரதாய ரத்னங்களான திவ்யப்ரபந்தங்களை சேவிக்கும் முன் அந்தந்த பிரபந்தங்கள் தனியன்கள் சேவிக்கப்பெறுகின்றன. ஆசார்யர்களையும் ஆழ்வார்களையும் முதலில் வணங்கி, பிறகு திவ்ய ப்ரபந்தங்களை அனுஸந்திப்பது நம் ஸம்ப்ரதாயம். தன் ஆசாரியனை அல்லது அவரது நூலைப் போற்றி புகழ்ந்து அதன் சாரத்தை தனியன்கள் கூறும். இது அந்த நூலுடன் சேராமல் தனித்து நிற்கும் செய்யுள் அல்லது ஸ்லோகம். இவை திவ்யப்ப்ரபந்தங்களிலிருந்து தனித்து நிற்பதால், தனியன் என்று பெயர் பெற்றன. . தமிழில் வரும் தனியன்கள் வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைவது வழக்கம். இன்றயை பதிவை நாயகன் ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி தனியனோடு துவங்குவோம் ! இந்த தனியன் சுவாமி நாதமுனிகள் அருளிச்செய்தது :
பக்தாம்ருதம் விஸ்வஜநானுமோதனம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம்
ஸஹஸ்ர சாகோபநிஷத் ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
ஸ்ரீமன் நாரணனின் பக்தர்களுக்கு பருகதற்கினிய அமுதம் போன்றதும் பக்தர்களை இறைவனுக்கு அமுதமாக்குவதும்,
பயிலும் எல்லா மக்களுக்கும் பெருமகிழ்ச்சியைத் தருவதும், வேண்டியவற்றை எல்லாம் தருவதும்,
மாறன் சடகோபனாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழியாக இருப்பதும், ஆயிரக்கணக்கான பகுதிகள்
கொண்ட வேத உபநிடதங்களுக்கு நேரான ஆகமமானதும், தமிழ் வேதக்கடலை அடியேன் வணங்குகிறேன்.
As we
travel from Thirunelveli towards Tiruchendur – approx. 25 km away – on the
banks of Tamirabarani, is this beautiful divyadesam Thiru
Kurugur. The temple is ‘Aathinadhar Azhwar Thirukovil’. It was one of the
largest towns of Pandya dynasty. The presiding deity is Aathippiran and
Utsavar is PolinthuNinraPiran. Thayar is Aathinaayaki and
ThirukurugurNayaki.
உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்*
உண்டோ சடகோபர்க்கு
ஒப்பொருவர் – உண்டோ*
திருவாய்மொழிக்கு
ஒப்பு தென்குருகைக்குண்டோ*
ஒருபார் தனில் ஒக்குமூர்**
Great words of our Acharyar Sri Manavala Maamunigal when hailing the birth of Swami Nammazhwar. Acharyan Manavalamaamunigal in his ‘Upadesa Rathinamalai’ says : there is no other day matching Vaikasi Visakam; there is none matching Sadagopar; there is nothing equivalent to ‘Thiruvaimozhi’ and there is no place on earth which can be treated on par to Thirukurugai – the birthplace of Swami Nammalwar.
" ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த
எந்தை யேகமூர்த்திக்கே" ~ என ஸர்வேச்வரானாயும்,
ஜகத்துக்கு ஸர்வப்ரகார ரக்ஷகனாயும், அந்தத் தன்மையினால் என்னை யீடுபடுத்திக் கொண்டவனாயும்
அத்விதீயமான திருமேனியையுடையவனாயுமிருக்கிற எம்பெருமான் திருவுள்ளம் பற்றுவதே! என
நமக்கு உபதேசித்த அற்புத ஆசார்யர் ஆழ்வார் ஸ்வாமி நம்மாழ்வார் அவதரித்த
நன்னாள் இந்நாள் .
திருக்கச்சியிலே ஸ்வாமி நம்மாழ்வார் சன்னதிக்கு தேவப்பெருமாள் எழுந்து அருள்வது விசேஷம். நம் திருவல்லிக்கேணியில் ஆழ்வார் சாற்றுமுறை அன்று ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாளுடன் பெரிய வீதி புறப்பாடு நடைபெறும். ஆயினும் ஆழ்வார் உத்சவம் ஸ்ரீஅழகிய சிங்கர் ப்ரஹ்மோத்சவத்தில் வரும் போது ஆழ்வார் அழகியசிங்கருடன் புறப்பாடு கண்டு அருள்வார். சென்ற 2019 வருஷம் இரண்டாம் நாள் இரவு சிம்ம வாஹனம். ஒரு அசந்தர்ப்பத்தாலே திருவீதி புறப்பாடு நடைபெறவில்லை. ஸ்ரீதெள்ளியசிங்கர் நம்மாழ்வார் சன்னதியிலேயே இரவு முழுதும் தங்கி இருந்து திருவாய்மொழி சாற்றியவருடன் உசாவி இருந்தார். மறுநாள் அவருடனேயே திருமஞ்சனம் கண்டருளி அருளிச்செயல் இசைக்கப்பெற்று, சாயங்காலம் 4 மணி அளவில் கருடசேவை புறப்பாட்டிலே உடன் செல்லும் பிரபாவம். திருவல்லிக்கேணியில் அப்படி ஒரு திவ்யசேவை. இந்த வருஷமும் (2021) சென்ற வருடம் [2020] போன்றே கொரோனாவால் புறப்பாடு இல்லை என்பது வருத்தமே !
Of the Nava Thirupathi
divyadesams, ThirukKurugoor is hailed as “AzhwarThirunagari”- as
this is the Avatharasthalam of Swami
Nammalwar. Madura Kavigal saw the leading light from Thiru
Ayodhya, travelled all the way to Kurugoor, identified Nammazhwar in the
Puliyamaram [tamarind tree]. Mathurakavigal was so attached to
Nammazhwaar that he sang only in praise of Nammazhwaar and considered his duty
to spend life devoted to Nammazhwaar.
நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள "உறங்கா' புளிய மரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது. இன்றும் கோவில் உள்ளே இந்த மரத்தை சேவிக்கலாம்.
The Greatest among Alwars preached to us – “ ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ,வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,” – that when we do kainkaryam to Lord (to Him at Thiruvenkadam), we must do service by being with HIM throughout our life and do as a slave would serve his master. Swami Nammazhwaar was born on the auspicious poornima day of Tamil Vaikasi month in Visakha nakshathiram at Thirukurugur, now famously known as ‘Azhwar Thirunagari’. He was born to Kari and Udayanangai. Nammazhwaar has greatly contributed and his works are Thiruvaimozhi (1102 verses), Thiruvirutham (100), Thiruvasiriyam (7) and Periya Thiruvanthathi (87)
வைகாசி
விசாக நட்சத்திரத்தில் காரி மாறனுக்கும் உடயநங்கைக்கும் (இவர் திருவண்பரிசரத்தில் பிறந்தவர்) -
நம்மாழ்வார் அவதரித்தார். இவர் பிறந்த போது அழவே இல்லையாம். சடம் என்றால் காற்று. வாயுவை முறித்ததனால் சடகோபன் என பெயர்
பெற்றாராம். இந்த சடகோபர் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள புளிய
மர பொந்தில் எந்த அசைவுகளும் இல்லாமல் வாசம் செய்தார்.
ஸ்ரீமந் நாராயணனால் தன் விஷயமான மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் நம்மாழ்வார். அருளிய அற்புத பிரபந்தங்கள் : திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி. திருவாய்மொழி ஸாமவேதத்தின் ஸாரமாகக் கருதப்படுகிறது. மோக்ஷத்தை விரும்புபவனான முமுக்ஷு அறிந்து கொள்ள வேண்டிய முக்யமான விஷயங்கள், நன்கு விளக்கப்பட்டுளன. திருவாய்மொழிக்கு நம்பிள்ளை அருளிய ஈடு வ்யாக்யானம் திருவாய்மொழியின் அர்த்தங்களை நன்கு விளக்குகிறது.
ஆழ்வார்திருநகரி எனப்படும் திருக்குருகூர் – நவதிருப்பதிகளில் ஒன்றான அழகான திவ்யதேசம். நம்மாழ்வார் இத்திருத்தலத்தை 11 பாசுரங்களால் 'ஸ்ரீமன் நாராயணனையே பற்றுதல்பற்றி அறுதியிட்டு மங்களாசாசனம் செய்து உள்ளார்.
திருவாய்மொழி தனியனில்:-
“திருவழுதிநாடென்றும் தென்குருகூரென்றும், மருவினிய வண்பொருநல் என்றும்,” - என
பாண்டியநாட்டு தாமிரபரணிநதியின் பெருமையும் குருகூர் திவ்யதேசத்தின் பெருமையும் விளக்கப்படுகிறது. இத்தலம்
நம்மாழ்வார் அவதரித்த தலமானதால் “ஆழ்வார்திருநகரி” என்றழைக்கப்படுகிறது. திருவாய்மொழி
திராவிட வேதசாகரம் என போற்றப்படுகிறது. ஸ்ரீமன் நாராயணனின் பரத்வத்தையும் அவனுக்கு மட்டுமே கைங்கர்யம் செய்ய வேண்டியதையும் மிக சிறப்பாக
அழுத்தமாக ஆழ்வார் நிலை நாட்டியுள்ளார். இதோ இங்கே ஒரு துளி :
கொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,*
வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீர்காள்,*
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் கோதில்,என்*
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.
குப்பையைக் கிளறினாற்போல் குற்றம் குறைகளே தோற்றும்படியான செல்வமுடைய அற்பரைக் குறித்து, வள்ளல் என்றும் உயர்ந்தவன் என்றும் போற்றுவதால் நீங்கள் பெறும்பலன் சிறிதுமில்லை. உங்கள் வாய்மையை இழப்பதை தவிர; நீங்கள் பாடுகிற துதிமொழிகளுக்கு மிகப்பொருத்தமானவன் - பக்தர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தந்தருள்பவனும் எவ்வித குறைகளும் இல்லாதவன் ஆன மிக சிறப்பான நீலமணிவண்ணனுமான மணிவண்ணன் மட்டுமே; நம் நா அவனை மட்டுமே எவ்வெப்பொதும் துதிபாட வேண்டும் !
தனியனில் ஆரம்பித்து - நம் ஆசார்யர் சுவாமி மணவாள மாமுனிகள் அருளிய திருவாய்மொழி நூற்றந்தாதியுடன் முடிப்போம் இன்று. திருவாய்மொழி 100 பதிகங்கள் கொண்டது. முதல் பத்து, இரண்டாம் பத்து என பத்து பத்துக்களாகவும் அவற்றுள் முதல் திருவாய்மொழி, இரண்டாம் திருவாய்மொழி என பாடல்களும் அமைக்கப்பெற்றுள்ளன. திருவாய்மொழியில் உள்ள ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்கள் மணவாள மாமுனிகள் இயற்றிய நூற்றந்தாதியில் உள்ளன. ஒவ்வொரு பதிகத்திலுமுள்ள தொடக்கச் சொல்லை அப்பதிக வெண்பாவின் முதற்சொல்லாகவும், பதிகத்தின் இறுதிப் பாடலிலுள்ள இறுதிச் சொல்லை வெண்பாவின் ஈற்றுச் சொல்லாகவும் அமைத்து வெண்பாவிலேயே அந்தாதி -அதிலும் ஒவ்வொரு பாடலிலும் எ\ஒரு பத்து பாசுரங்களின் தொகுப்பு விளக்கம் என அற்புதமாக அமைந்துள்ளது இது.
முதல் பத்தில் மூன்றாம் திருவாய்மொழி - எம்பெருமானது எளிமையான சௌலப்ய குணத்தை கூறும் பாசுரங்கள் - 'பத்துடை அடியவர்க்கு எளியவன்' தொடங்கி 'அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் தன்னை' பாசுரம் ஈற்றாக உள்ள பதிகத்தின் மாமுனிகள் பாசுரம் இங்கே :
பத்துடையோர்க்கு
என்றும் பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி
தரும் மாநிலத்தீர்! மூண்டவன் பால் – பத்தி செய்யும்
என்றுரைத்த மாறன் தனின் சொல்லால் போம் நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை.
ஆழ்வாரின் இனிய வார்த்தைகளான “ஸர்வேச்வரன் தன்னுடைய அடியவர்களால் எளிதில் அடையப்படுபவன்; தன்னுடைய அவதாரங்கள் மூலமாக அவர்களுக்கு மோக்ஷத்தை அளிப்பவன்; இந்தப் பெரிய உலகில் வாழ்பவர்களே! கனிந்த அன்புடன் அவனிடத்தில் பக்தி செய்யுங்கோள்” என்பதை அனுஸந்திப்பவர்களுக்கு, நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் பிறவி எனும் கட்டு விலகும்.
ஆனதிருவிருத்தம் நூறு மருளினான் வாழியே !!
ஆசிரியமேழு பாட்டளித்த பிரான் வாழியே !!
ஈனமறவந்தாதி யெண்பத்தேழீந்தான் வாழியே !!
இலகு திருவாய்மொழியாயிரத்தொரு நூற்றிரண்டுரைத்தான் வாழியே !!
வானணியும்மாமாடக் குருகைமன்னன் வாழியே !!
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே !!
சேனையர் கோனவதாரஞ் செய்தவள்ளல் வாழியே !!
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே. !!
Blessed are We to be born as
Srivaishnavas, singing the glory of Alwars, Acaryas and
Emperuman. Glory to the feet of Swami Nammalwar – here are 10 photos
of Swami Nammalwar as worshipped on 10 days of Irapathu (photos not of the same
year ! and hence Nachiyar thirukolam getting repeated !)
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
25th May 2021.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம். Very nice.
ReplyDelete